Thursday, November 19, 2009

SWADESHI JAGKRAN Q AND A


சுதேசி கேள்வி பதில்கள்:ஜனவரி 2007 சுதேசிச் செய்தி

1)தேசப்பிதா மகாத்மா அவர்களுடைய கொள்கைகளுக்கும், சுதேசி விழிப்புணர்வு இயக்கத்தின் கொள்கைகளுக்கும் வேறுபாடு உள்ளதா? இடதுசாரிகளுடன் நாம் இணைந்து செயல்படலாமா?


ஏறக்குறைய ஒன்றானாலும் காலங்கள் மாறியதால் தற்போதுள்ள சூழ்நிலைக்கேற்ப சுதேசி இயக்கத்தின் செய்முறைகள்தான் மாறியிருக்கின்றன.ஆனால், இடதுசாரிக் கட்சிகள் தொழில்களின் உடைமையை தேசியமயமாக்க வேண்டும் என்ற சித்தாந்தத்தினால் விழிப்புணர்வு இயக்கத்திலிருந்து முற்றிலும் மாறுபட்டிருக்கின்றன.எனினும் எங்கெங்கு ஒத்த கருத்து உள்ளதோ அங்கு சேர்ந்து போராடுவதில் தவறில்லை.பதிலளித்தவர்;திரு.முரளிதர் ராவ், அகில பாரத அமைப்பாளர், சுதேசி விழிப்புணர்வு இயக்கம்.


2)அப்சலை தூக்கிலிட மறுக்கும் மத்திய அரசுக்கு எதிராக தாங்கள் பெற்ற விருதுகளை திருப்பி ஒப்படைத்துள்ள ராணுவ வீரர்களின் குடும்ப உறுப்பினர்களின் செயல் பற்றி?
ஆண்மையான செயல்!! அரசு அலித்தனமாக நடந்துவருகிறது.ராணுவ வீரர்களின் அதிருப்தி பெருகுவது நல்லதற்கான அடையாளம் அல்ல.

3)திடீரென தமிழக மக்களுக்கு பெரியார் பாசம் மீண்டும் தோன்றியுள்ளதே?1

அப்படி எதுவும் இல்லை.ஆளும்கட்சி சாதகமாக உள்ளது.அவ்வளவுதான்.எங்கெங்கு பெரியார் சிலைகள் உள்ளனவோ அவை அரசின் ஆதரவோடு நிறுவப்பட்டுள்ளன.எங்கெங்கு கோவில்கள் உள்ளனவோ அவை மக்களால் நிறுவப்பட்டவை.
பெரியார் திரைப்படம் எடுப்பவர் கூட அரசு போடும் பிச்சைப் பணத்தில்தான் படமெடுக்கிறார்.வாழ்க சுயமரியாதை.

4) வெளிநாட்டுடன் கையெழுத்திடும் ஒப்பந்தங்களின் சாதக பாதக அம்சங்களை புறக்கணிக்க அமெரிக்காவின் இரு அவைகளுக்கும் உரிமை இருப்பது போல நமது நாட்டில் இல்லாதிருப்பது குறைபாடுதானே?

ஜனநாயகம் என்ற பெயரில் கட்சிநாயகம் நடத்திக்கொண்டிருக்கிறோம் நாம்.கட்சியின் கொறடா உத்தரவு என்ற நிலை மாறினால்தான் உண்மையான ஜனநாயகம் மலரும்.இவ்விஷயத்தில் அரசியல் அமைப்புச் சட்டத்திருத்தம் அவசியம் தேவை.க்கம்.
ர்;திரு.முரளிதர் ராவ், அகில பாரத அமைப்பாளர், சுதேசி விழிப்புணர்வு இய்ுத்து உள்ளதோ அங்கு சேர்ந்து போராடுவதில் தவறில்லை.பதி

No comments:

Post a Comment