Friday, November 6, 2009

ENGLISHGRAMMER

தமிழும் ஆங்கிலமும் ஒரு ஒப்பீடு

நம் தாய்மொழியாம் தமிழில் இருக்கும் பல சிறப்பியல்புகள் ஆங்கிலத்தில் இருப்பதில்லை;ஆனாலும், தமிழ்நாட்டின் தலைநகராம் சென்னையில் தமிழ் மொழியைக் காணவில்லை!!?
அப்பா அம்மா தவிர அனைத்து உறவுமுறைகளும் ஆங்கிலத்தில் தொடர்மொழிகளே!
அதாவது நாம் அண்ணன் என்பதை மூத்த சகோதரன் என்றும்,
தம்பி என்பதை இளைய சகோதரன் என்றும்,
அம்மான் என்பதை தாயுடன் பிறந்தவன் என்றும்,
அத்தை என்பதை தந்தையுடன் பிறந்தவள் என்றும் இங்கனம் தொடர்மொழிகளாகவே ஆங்கிலத்தில் வழங்குகின்றனர்.(அங்கேதான் இப்படிப்பட்ட உறவுமுறையே கிடையாதே!)
நாம் வந்திலன்,சென்றிலன் என ஒரு சொல்லாய் வழங்கும் எதிர்மறை முற்றுக்களை ஆங்கிலத்தில் பேச/எழுத 3 சொற்கள் வேண்டும்.தெரிநிலையும் குறிப்புமான ஒவ்வொரு வினையாலணையும் பெயரையும் ஆங்கிலத்தில் பல சொற்களின்றி அமைக்கலாகாது.
வந்தாய்க்கு என்பதை வந்தானாகிய உனக்கு எனப்பொருள்படுவதாய் 4 சொற்களால் அமைக்க வேண்டும்.அடியேனுக்கு என்னும் குறிப்பு வினையாலணையும் பெயரை அமைக்க 6 சொற்கள் ஆங்கிலத்தில் வேண்டும்.
நம்முடைய பெயரெச்சம்,வினையெச்சங்களும் சொல் சுருங்குவதற்கு அனுகூலமாக இருக்கின்றன.
வந்த மனிதன் என்பதை அமைக்க அவர்களுக்கு 4 சொற்கள் வேண்டும்.அவன் வந்து போனான் என்னும் ஒரு வாக்கியத்தை அவர்கள் இரண்டு வாக்கியமின்றி உரைக்க இயலாது.
அவர்களுக்கு வேற்றுமைத் தொகை,வினைத் தொகை,உவமைத் தொகை,அன்மொழித்தொகை இல்லை.
தமிழ் வினைகளின் விகுதிகளே திணை,பால்,எண் மூன்றையும் ஒருங்கே காட்டி விடுகின்றன.ஆங்கிலத்தில் வினைகளின் எண்களை மாத்திரம் எளிதில் அறியலாம்.பெருபான்மையாய் எழுவாயின் பொருளறியாமல் முடிபின் திணை பால்களை அறியலாகாது.
சாதாரண பேச்சில் நம் எழுவாயில்லாமல் கருத்தை வெளிப்படுத்த முடியும்.ஆங்கிலத்தில் அது முடியாது.உலக வழக்கில் நாம் செயப்பாட்டு வினைகளை எல்லாம் செய்வினைகளாக வழங்குகின்றோம்.அவர்களுக்குப் பெரும்பான்மையாய் இயலாது.
தான் வியாதியாக இருக்கிற விஷயத்தைப் பிறரிடம் கூற ‘நான் வியாதியாய் இருக்கிறேன்’ என்பதே ஆங்கில மரபு.
நம் தமிழில் ‘எனக்கு உடம்பு சரியில்லாமல் இருக்கிறது’என்பதே மரபு.இப்படிச் சொல்லுவதால் ஆங்கில மரபு ‘அகம்’பாவத்தை(ஈகோ) உணர்த்துவதாக இருக்கிறது.தமிழ் மரபோ ‘தேக தேகி’ பாவத்தைத் தழுவி ஞானசாரமாக இருக்கின்றது.
தமிழில் பெரியோர்களைப் பலர் பாலால் வழங்குகின்ற மரியாதை ஆங்கிலத்திலும் வேறு எந்த மொழியிலும் இல்லை.பெரியோர்களின் செயல்களை ‘அவர் வந்தருளினார்,செய்தருளினார்’ எனக் கவுரவமாகக் கூறும் விதமும், ஏவுகின்ற வினையின் இறுமாப்பைக்குறைக்கும் வியங்கோள்களின் அழகும் தமிழுக்கே உரியவை.
நன்றி:திருமணம்.செல்வக்கேசவராய முதலியார் எழுதிய ‘தமிழ்’ என்ற கட்டுரையிலிருந்து.

No comments:

Post a Comment