Monday, November 16, 2009

THIRUMOOLAR


திருமூலர் செய்த சித்து அதிசயங்கள்

காலம்,தேசம், அண்டம் என்ற பரிமாணங்களைத் தாண்டியவர்கள் சித்தர்கள்!

ஒருமுறை திருமூலர் ஆகாய மார்க்கமாகப் பறந்து அண்டம் (உதாரணமாக மில்கிவே என்பது நமது அண்டம்.நமக்கு அருகில் இருக்கும் அண்டத்தின் பெயர் அண்ட்ரோமேடா.நம்மிடமிருந்து 2000 ஒளி ஆண்டுகள் தூரத்தில் இருக்கிறது.அதாவது விநாடிக்கு 3 லட்சம் கி.மீ.வேகத்தில் செல்லும் ராக்கெட்டில் இங்கிருந்து புறப்பட்டால், அங்கே செல்ல 2000 வருடங்கள் தான் ஆகும்.நாம் வாழும் சூரியக்குடும்பம் இருப்பது பால்வழித்திரள் எனப்படும் மில்கிவே அண்டத்தில் அதாவது கேலக்ஸியில்.நமது வீடான பால்வழித்திரளின் அகலம் 1,00,000 ஒளி ஆண்டுகள் தான்.நமது பால்வழித்திரளின் ஒரு முனையிலிருந்து மறுமுனைக்கு ஒளிவேகத்தில் பயணித்தால் 1,00,000 ஆண்டுகள்தான் ஆகும்.பிரமிப்பாக இருக்கிறதா?இந்தத்தகவல்களை மதிப்பிட்டுக்கூறியிருப்பது நமது வானியல் விஞ்ஞானிகள்.ஆக,இந்த விஞ்ஞானிகளையும்,உங்களையும்,என்னையும் படைத்த கடவுள் எப்பேர்ப்பட்டவராக இருப்பார்!?!)விட்டு அண்டம் செல்ல உதவும் ‘சொரூப மணி’ என்னும் பாதரஸ மணியினை வாயிலும், ‘கமலி’ என்ற மணியினைக் கையிலும் எடுத்துக் கொண்டு ஜோதியே வடிவான அண்டவெளியில் பாய்ந்தாராம்.

பலப் பல அண்டங்களில் பலப் பல சித்தர்கள் வாழ்வதைப் பார்த்து வியந்து அவர்களிடம் ஆசி பெற்றுச் செல்லும் போது ஒரு சம்பவம் நடந்தது.
ஒரு அண்டத்தில் இருந்த சித்தர்களில் ஒருவர் திருமூலரின் கவுனமணிக் குளிகையைப் பார்த்துவிட்டுத் தருவதாகக் கேட்டிருக்கிறார்.

திருமூலரும் அதை நம்பி அவரிடம் கவுனமணிக்குளிகையைத் தந்தார்.அவர் அதைப் பயன்படுத்தி பல அண்டங்களுக்கு ஓடி மறைய முயன்றார்.திருமூலரும் தன்னிடமிருக்கும் மற்றொரு குளிகைமூலமாக மிகவும் சிரமப்பட்டு விரட்டிப் பிடித்து அந்த கவுனமணிக் குளிகையை திரும்பப் பெற்றார்.அவரை அந்த அண்டத்திலேயே விட்டுவிட்டுத் திரும்பிவிட்டார்.

திருமூலர் தான் பயணித்த அண்டங்களைப் பற்றி பல பாடல்களில் விவரிக்கிறார்.
ஒரு அண்டத்தில் பல சித்தர்களைக் கண்டிருக்கிறார்.அவர்களைக் கையால் தொட்டால் கைகளில் தட்டாமல் கை உடலுக்குள் சென்று வந்திருக்கிறது.மற்றொரு அண்டத்தில் உள்ளவர்கள் வெண்சங்கு நிறத்தில் இருக்கிறார்கள்.இன்னொரு அண்டத்தில் தண்ணீருக்குள் வாழ்ந்து வருகிறார்கள்.இவ்வளவு அண்டங்களையும் சுற்றிப்பார்த்த திருமூலர் நமது பூமியில் ஜீவசமாதியானது நாம் செய்த புண்ணியமே!



திருமூலர் தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் வட்டம் ஆடுதுறைக்கு அருகில் இருக்கும் சாத்தனூர் என்ற இடத்தில் உள்ள ஐயனார் கோவிலில் அமர்ந்திருந்தார்.அங்கிருக்கும் அரசமரத்தடியில் அமர்ந்து திருமந்திரம் எழுதியுள்ளார்.இந்தக் கோவிலின் பின்புறம் ஜீவசமாதியாகியுள்ளார்.

இவ்விடத்தைப் புதுப்பிக்க சில அன்பர்கள் முயன்றபோது,பூமியின் உள்ளே தண்ணீர் நிரப்பப் பட்ட கமண்டலம் ஒன்றும்,யோக தண்டம் ஒன்றும்,ருத்ராட்ச மாலை ஒன்றும் இருந்ததாகவும் கூறுகிறார்கள்.தற்போது இந்த இடத்தில் சில அன்பர்கள் தியான மண்டபம் கட்ட முயன்றுவருகிறார்கள்.திருமூலர் புரட்டாசி மாதம் அவிட்டம் நட்சத்திரத்தில் பிறந்தார்.
இவரது குருநாதர் நந்தீசர்.
இவரது சீடர் போகர்.
நன்ரி:ஜோதிட பூமி பக்கம் 49,50,மார்ச் 2008.

3 comments:

  1. நன்றி அருமையானப் பதிவு! சித்தர்களைப் பற்றி மேலும் எழுதுங்கள் நன்றி !!

    ReplyDelete
  2. Very very thanks to your details about Guru Thirumoolar. We come to know about him due to our punniams. Please give more about thirumanthiram.

    ReplyDelete