Saturday, March 17, 2018

உங்கள் மாந்திரீகப் பிரச்சினைகள் முடிவுக்கு வர



உலகத்தில் பிறந்த ஒவ்வொரு மனிதனும் பஞ்ச பூதங்களின் விகிதாச்சாரத்தில் உருவாக்கப்பட்டவனே! அதை ,அந்த விகிதாச்சாரத்தை குழப்பி விட்டால் ஐம்புலன்களையும் செயலிழக்கச் செய்துவிடலாம்;அல்லது ஐம்புலன்களில் ஒன்றை மட்டும் எதிராகச் செயல்பட வைத்து ஒருவரை பைத்தியமாக்கிவிட முடியும்;இதுதான் மாந்திரீகத்தின் அடிப்படை;

இதில் இருந்து நிரந்தரமாக மீள 1008 முறை அண்ணாமலை கிரிவலம் செல்ல வேண்டும்;அது எல்லோருக்கும் சாத்தியப்படாத போது ,மாற்று ஏற்பாடாக சகஸ்ரலிங்கத்தை குறிப்பிட்ட நாளில் அபிஷேகம் செய்து வழிபட்டால் போதுமானது;

எல்லா சிவாலயங்களிலும் சகஸ்ரலிங்கம் இருப்பதில்லை;ருத்ர ரேகை என்ற ரேகைகள் பூமியில் செல்லும் இடங்களில் தாமாகவே தோன்றும் சுயம்பு லிங்கங்கள் தான் சகஸ்ரலிங்கங்கள்!!!

எந்த சிவாலயத்தில் சகஸ்ரலிங்கம் இருக்கின்றதோ,அங்கே அசுபதி நட்சத்திரமும்,செவ்வாய்க்கிழமையும் சேரும் நாளில்  மூலவருக்கு முதலில் அபிஷேகம் செய்ய வேண்டும்;பிறகு அம்பாளுக்கு இரண்டாவதாக அபிஷேகம் செய்ய வேண்டும்;மூன்றாவதாக சகஸ்ரலிங்கத்திற்கு அபிஷேகம் செய்ய வேண்டும்; சகஸ்ரலிங்கத்திற்கு அபிஷேகம் செய்யும் போது பின்வரும் ஸ்ரீ சரபேஸ்வரர் 108 போற்றியை ஆறு முறை ஜபிக்க வேண்டும்;தக்காளிச் சாதம் படையல் இட வேண்டும்;அபிஷேகத்தின் முடிவில் தக்காளிச் சாதத்தை பிரசாதமாக அனைவருக்கும் பகிர்ந்து தர வேண்டும்;நாமும் சாப்பிட வேண்டும்;

20.3.2018 செவ்வாய்க்கிழமை அன்று அசுபதி நட்சத்திரம் வருகின்றது;அன்று காலை 11 மணிக்குள் அல்லது மாலை 4.30 முதல் 6 மணிக்குள் இவ்வாறு செய்ய வேண்டும்;

ஸ்ரீசரபேஸ்வரர் 108 போற்றி



மனக்குழப்பம் தீரும்;பொறாமை,கண்திருஷ்டி விலகும்;வரவேண்டிய வருமான வாய்ப்புகள் பெருகும்;

அசைவம்,மது இவை இரண்டையும் கைவிட்டிருக்க வேண்டும்;இது முதன்மையான மற்றும் முக்கியமான சுயக்கட்டுப்பாடு ஆகும்;

1.ஓம் ஐம் விண்ணவா போற்றி
1.ஓம் ஐம் விளங்கு உயர்வீரா போற்றி
3.ஓம் ஐம் திண்ணவா போற்றி
4.ஓம் ஐம் அணிமாமலர்ப் பறவை அரசே போற்றி
5.ஓம் ஐம் ருத்ர அக்னியே போற்றி
6.ஓம் ஐம் மந்திரத் துதி தேவா போற்றி
7.ஓம் ஐம் அணிமா மலர் நாகலிங்க சக்தியே போற்றி
8.ஓம் ஐம் சர்வ வியாபியே போற்றி
9.ஓம் ஐம் சங்கரா போற்றி
10.ஓம் ஐம் காலகாலனை நடுங்கச் செய்தவனே போற்றி
11.ஓம் ஐம் காலமெல்லாம் கருத்தில் நிறைந்தவனே போற்றி
12.ஓம் ஐம் பிறவிப் பயம் அறுத்தவனே போற்றி
13.ஓம் ஐம் நிரந்தரமானவனே போற்றி
14.ஓம் ஐம் நியாயத்தீர்ப்பு வழங்குபவனே போற்றி
15.ஓம் ஐம் வீர பத்திரனே போற்றி
16.ஓம் ஐம் ஆயிரம் நாமம் உடையாய் போற்றி
17.ஓம் ஐம் மகாதேவா போற்றி
18.ஓம் ஐம் நரசிம்மரை அடக்கிய அழகா போற்றி
19.ஓம் ஐம் நான்மறை ஆனாய் போற்றி
20.ஓம் ஐம் சூலினி உடனுறை தேவா போற்றி
21.ஓம் ஐம் அதர்வண காளியை அடைந்தவா போற்றி
22.ஓம் ஐம் கம்பத்தில் சிகண்டி சித்தரால் நிற்பவனே போற்றி
23.ஓம் ஐம் மந்திரதந்திரங்களை ஆள்பவனே போற்றி
24.ஓம் ஐம் கோபக்கனலாய்ச் சுடர்விடுபவனே போற்றி
25.ஓம் ஐம் கூரிய நகங்களைக் கொண்டவனே போற்றி
26.ஓம் ஐம் லிங்க பதியே போற்றி
27.ஓம் ஐம் இருபத்தோரு முக ருத்ராட்சம் அணிந்தவனே போற்றி
28.ஓம் ஐம் சத்திய துணையே போற்றி
29.ஓம் ஐம் சாந்தி அருள்பவனே போற்றி
30.ஓம் ஐம் சத்திய சாட்சியே போற்றி
31.ஓம் ஐம் சத்திய உருவே போற்றி
32.ஓம் ஐம் ஆக்கல்,காத்தல்,அழித்தல் தலைவா போற்றி
33.ஓம் ஐம் புவனம் பல்லாயிரம் கோடியும் படைத்தாய் போற்றி
34.ஓம் ஐம் அனைத்தையும் ஆட்டிப் படைப்பாய் போற்றி
35.ஓம் ஐம் அறம்பொருள் இன்பம் அளிப்பாய் போற்றி
36.ஓம் ஐம் அம்ருத அரசே போற்றி
37.ஓம் ஐம் சித்தர்கள் சிந்தையில் புகுந்தவனே போற்றி
38.ஓம் ஐம் ருத்திர மூர்த்தியே போற்றி
39.ஓம் ஐம் காலகாலமாய் இருப்பவனே போற்றி
40.ஓம் ஐம் சிந்தாமணியின் ஜீவசிவனே போற்றி
41.ஓம் ஐம் சித்தாந்த பக்தி சித்தனே போற்றி
42.ஓம் ஐம் பரமாத்மனே போற்றி
43.ஓம் ஐம் பரப்பிரம்மனே போற்றி
44.ஓம் ஐம் பரப்பிரம்ம ஜோதியே போற்றி
45.ஓம் ஐம் கைலாசவாசா போற்றி
46.ஓம் ஐம் திருபுவனேசா போற்றி
47.ஒம் ஐம் நடுக்கம் தீர்ப்பாய் போற்றி
48.ஓம் ஐம் நம்பினோர்க்கு நலம் அருள்வாய் போற்றி
49.ஓம் ஐம் ஏவல் தீர்ப்பாய் போற்றி
50.ஓம் ஐம் பில்லி சூன்யம் அழிப்பாய் போற்றி
51.ஓம் ஐம் எதிரிகள் கொடுமை தீர்ப்பாய் போற்றி
52.ஓம் ஐம் எண்ணியவாறு எமக்கு அருள்வாய் போற்றி
53.ஓம் ஐம் திண்ணிய நெஞ்சம் தருவாய் போற்றி
54.ஓம் ஐம் திடமாய்க் காரியம் செய்ய வைப்பாய் போற்றி
55.ஓம் ஐம் தீயவர் தொல்லை தீர்ப்பாய் போற்றி
56.ஓம் ஐம் திருவருள் தருவாய் சரபேஸ்வரா போற்றி
57.ஓம் ஐம் வழித்துணையாய் வருவாய் போற்றி
58.ஓம் ஐம் வலம் சுழித்து எட்டுத்திசையும் காப்பாய் போற்றி
59.ஓம் ஐம் நஞ்சை புஞ்சை நலமுடன் காப்பாய் போற்றி
60.ஓம் ஐம் நம்பி வருவோர்க்கு அருள்வாய் போற்றி
61.ஓம் ஐம் நமசிவாயத் திருவே போற்றி
62.ஓம் ஐம் சிவ சூரியா போற்றி
63.ஓம் ஐம் சிவச் சுடரே போற்றி
64.ஓம் ஐம் அட்சர காரணனே போற்றி
65.ஓம் ஐம் ஆதிசிவனே போற்றி
66.ஓம் ஐம் காலபைரவரே போற்றி
67.ஓம் ஐம் திகம்பரா போற்றி
68.ஓம் ஐம் ஆனந்தா போற்றி
69.ஓம் ஐம் காலகாலனே போற்றி
70.ஓம் ஐம் காற்றெனக் கடுகி உதவும் தேவா போற்றி
71.ஓம் ஐம் காத்து கருப்புகளை அழிப்பவனே போற்றி
72.ஓம் ஐம் கர்ப்பப் பையைக் காப்பவனே போற்றி
73.ஓம் ஐம் ஓம் எரி ஓம்பலின் அவிசை ஏற்பவனே போற்றி
74.ஓம் ஐம் கல்லாலின் கீழ் அமர்ந்த தேவா போற்றி
75.ஓம் ஐம் வல்லார்கள் நால்வரும் தோத்தரித்த தேவா போற்றி
76.ஓம் ஐம் எல்லாமாய் அல்லதுமாய் இருந்த சரபா போற்றி
77.ஓம் ஐம் முக்திக்கு வித்தாகும் மூலகுருவே போற்றி
78.ஓம் ஐம் தெவிட்டாத சின்மயச் சுடரே போற்றி
79.ஓம் ஐம் விரும்பி நல் விளக்கு தீபத்தில் வருபவனே போற்றி
80.ஓம் ஐம் அமரர் படையுடைத் தலைவா போற்றி
81.ஓம் ஐம் நீலக்கையில் மான் தூக்கி நின்றோனே போற்றி
82.ஓம் ஐம் சிவந்த மழுவும் தூக்கிச் சிறந்தோனே போற்றி
83.ஓம் ஐம் எங்கிருந்து அழைத்தாலும் வருவோனே போற்றி
84.ஓம் ஐம் சூலினித் தாயின் சுகத்தோனே போற்றி
85.ஓம் ஐம் பிரத்தியங்கரா தேவியின் பரப்பிரம்மமே போற்றி
86.ஓம் ஐம் செம்பொன் அம்பலத்திலே ஆடும் அரசே போற்றி
87.ஓம் ஐம் நகமே ஆயுதமாய்க் கொண்ட நமசிவாயமே போற்றி
88.ஓம் ஐம் பெருமாளுக்கும் நான்முகனுக்கும் நலம் தரும் தெய்வமே போற்றி
89.ஓம் ஐம் உள்ளுவார் உள்ளத்தில் உறைவாய் போற்றி
90.ஓம் ஐம் சிந்தைக்கினிய செல்வனே போற்றி
91.ஓம் ஐம் திருவுக்கும் திருவான சிவனே போற்றி
92.ஓம் ஐம் யாவையும்,யாவரும் ஆனாய் போற்றி
93.ஓம் ஐம் வேதமெல்லாம் தொழும் தெய்வமே போற்றி
94.ஓம் ஐம் வாழி வாழி சாலுவேசா வாழி போற்றி
95.ஓம் ஐம் நோய்கள் தீர்க்கும் நெடியாய் போற்றி
96.ஓம் ஐம் மூலவர்க்கெல்லாம் மூலவா போற்றி
97.ஓம் ஐம் பிரத்தியங்கரா ப்ராணநாதா போற்றி
98.ஓம் ஐம் சூலினியின் சூட்சும தேவா போற்றி
99.ஓம் ஐம் கவச ஜாலூஷா குருதேவா போற்றி
100.ஓம் ஐம் இதூஷா மாதா புத்ர சேவித தேவா போற்றி
101.ஓம் ஐம் மூவர்க்கும் முந்திய முதல்வா போற்றி
102.ஓம் ஐம் முக்தர்கள் ஜீவ ஒளியே போற்றி
103.ஓம் ஐம் முழுதுமாய் எம்மைக் காப்பாய் போற்றி
104.ஓம் ஐம் அடியார்க்கு அருளும் அடியாராய் இருக்கும் ஈசனே போற்றி
105.ஓம் ஐம் அங்கமெல்லாம் அருட்ஜோதி அருட்கூட்டும் சுயஞ்ஜோதியே போற்றி
106.ஓம் ஐம் வெள்ளிக்கு மரணமிலா வழி தந்த விடிவு ஜோதியே போற்றி
107.ஓம் ஐம் குருவுக்கு உருதந்த உயர்ஜோதியே போற்றி

108.ஓம் ஐம் பூரண சரபேசா போற்றி! போற்றி!! போற்றி!!! 

இதன் மூலமாக மாந்தீரீகக் கட்டுக்கள் அனைத்தும் உடைந்துவிடும்;பிறர் செய்த அனைத்து தீமைகளும் விலகிவிடும்;

இன்னொரு வழிமுறையும் உண்டு;சகஸ்ர லிங்கம் இருக்கும் சன்னதியில் அமாவாசை அன்று துவங்கி பவுர்ணமி வரையிலும் தினமும் மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்தில் ஆறு முறை இந்த ஸ்ரீசரபேஸ்வரர் 108 போற்றியை ஜபித்தும் வரலாம்;

சிவையை நம

No comments:

Post a Comment