Tuesday, March 20, 2018

சத்குருவின் வாழ்வியல் உபதேசம்=பகுதி 1



பிரிவினை எண்ணத்தால் வீட்டை விட்டு வெளியேறியிருக்கும் அப்பா வீடு திரும்ப:

அருள்மிகு உஜ்ஜீவநாதர் திருக்கோவில்,உய்யக் கொண்டான் மலை,திருச்சியில் அமைந்திருக்கின்றது;
இங்கிருக்கும் முருகனுக்கு கார்த்திகை நட்சத்திரம் அல்லது விசாகம் நட்சத்திரம் அல்லது சஷ்டி திதி வரும் நாட்களில் அபிஷேகம் செய்து அன்னதானம் செய்து வரவேண்டும்;இப்படி தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு செய்து வர பிரிந்தவர் கூடுவர்;காணாமல் போன அப்பா வீடு திரும்புவர்;குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும்;

சிறு வியாபாரிகளின் துயரங்கள் நிரந்தரமாக நீங்கிட:

ஸ்ரீசரபேஸ்வரர் சன்னதி இருக்கும் கோவில்களுக்கு ஞாயிறு தோறும் அல்லது மாதாந்திர ஞாயிறு தோறும் செல்ல வேண்டும்;தாமே அரைத்த சந்தனத்தை ஸ்ரீசரபேஸ்வரருக்கு பூச வேண்டும்;(முறைப்படி அனுமதி பெற்று);அப்படி பூசும் போது பின்வரும் ஸ்ரீசரபேஸ்வரர் மந்திரத்தை 51 முறை ஜபித்து வர வேண்டும்;
ஜபித்து முடித்த பின்னர்,கோவில் வளாகம் மற்றும் கோவில் நந்தவனத்தில் ரவை+நவதானியங்கள்+சீனி இவைகளை அரைத்த மாவை தூவ வேண்டும்;குறைந்தது ஐந்து கிலோவாக இருக்க வேண்டும்;ஓராண்டுக்கு குறையாமல் இப்படிச் செய்து வர தொழிலில் வளர்ச்சி அபாரமாக இருக்கும்;
ஓம் வீரசரபாய நமஹ
ஓம் சதாசிவாய நமஹ
ஓம் மஹாதேவாய நமஹ
ஓம் பசூனாம் பதயே நமஹ
ஓம் குக்ஷ்மாய நமஹ
ஓம் சுலபாய நமஹ



சனியின் தாக்கம்(ஏழரைச்சனி,அஷ்டமச்சனி,கண்டச்சனி,பாதகாதிபதியாக சனி வந்து அதன் திசை நடைபெறும் போது) தீர:

தினமும் 1008 முறை ஓம் ஸம்ஹார பைரவாய நமஹ என்று ஜபித்து வரலாம்;இக்காலம் முழுவதும் அசைவம் சாப்பிடவோ,மது அருந்தவோ கூடாது;துறவிகள்,வறியவர்கள்,ஊனமுற்றோர்களுக்கு சனிக்கிழமையில் வரும் சனி ஓரையில்
அன்னதானம் செய்தாலும் சனியின் தாக்கம் தீரும்;

வன்னி மரத்தை சனிக்கிழமைகளில் சனி ஓரையில் 80 முறை வலம் வர வேண்டும்;சனி ஓரை என்பது சனிக்கிழமைகளில் காலை 6 முதல் 7 வரை;மதியம் 1 முதல் 2 வரை;இரவு 8 முதல் 9 வரை;

அமாவாசை தோறும் சிவாலயங்களில் வன்னி மரத்தை நட்டு 3 ஆண்டுகளுக்குக் குறையாமல் பராமரித்தாலும் சனியின் தாக்கம் தீரும்;குறைந்தது 3 மரங்கள்,அதிகபட்சம் 8 மரங்கள் நட்டு தினமும் நீரூற்றி வளர்க்க வேண்டும்;

உடல் ஊனமுற்றோர்களுக்கு ஊனத்தை நீக்கும் கருவிகள் வாங்கி தானமாக தந்தாலும் சனியின் தாக்கம் தீரும்;

பித்ருக்களின் ஆசிர்வாதம் எளிதாக கிட்டிட:

வாழை இலையின் இளம் குருத்தினை சிறு சிறு துண்டுகளாக்க வேன்டும்;அதை பருப்புடன் சேர்த்து சமைக்க வேண்டும்;சமைத்ததை கீரை சாதத்துடன் கலக்க வேண்டும்;இந்த படையலை விநாயப் பெருமானுக்கு படையல் இட்டு கணபதி அஷ்டகம் அல்லது அவரது துதியை ஜபிக்க வேண்டும்;அர்ச்சனை செய்யலாம்;இந்த படையலை ஏழைக் குழந்தைகளுக்கு தானம் செய்து வர வேண்டும்;குறைந்தது மூன்று ஆண்டுகள் வரை இப்படி ஒவ்வொரு தேய்பிறை சதுர்த்திக்கும் செய்து வர பித்ருக்களின் ஆசி கிட்டும்;அம்மா வழி பித்ருக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைவார்கள்;

டூ வீலர்,கார்,லாரி வியாபாரிகள் தொழிலில் சிறக்க:

சிவலிங்கத்திற்கு மாணிக்கக் கற்களால்  செவ்வாய்க்கிழமை வரும் குளிகை காலமான மதியம் 12 முதல் 1.30க்குள் அர்ச்சனை செய்ய வேண்டும்;சிகப்பு நிற ஆடைகளை தானம் செய்ய வேண்டும்;இப்படி 52 செவ்வாய்க்கிழமைகள் செய்து வர தொழிலில் கொடிகட்டிப் பறக்கலாம்;


மாமியார் மருமகள் சண்டைகள் நிற்கவும்,ஓரகத்திகளின் மனக்கசப்புகள் தீரவும்,சகோதரிகளுக்கு இடையே இருக்கும் கருத்து வேறுபாடுகள் தீரவும்:

செவ்வாய்க்கிழமைகளில் வரும் செவ்வாய் ஓரையான காலை 6 முதல் 7 வரை அல்லது மதியம் 1 முதல் 2 வரை அல்லது இரவு 8 முதல் 9 வரையிலான ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து கொள்ளள வேண்டும்;
அஷ்டபுஜ துர்கைக்கு சிகப்பு நிற உணவினை படையல் இட்டு,துக்க நிவாரண அஷ்டகம் 8 முறை ஜபிக்க வேண்டும்; அல்லது துர்கை அஷ்டகம் 8 முறை ஜபிக்க வேண்டும்;பிறகு,அந்த சிகப்பு நிற உணவினை (காரட் சாதம் அல்லது தக்காளி சாதம்) தானம் செய்ய வேண்டும்;16 செவ்வாய்க்கிழமைகள் தொடர்ந்து (விட்டுவிட்டாவது) செய்து வர பெண் வழி உறவுச்சிக்கல்கள் தீர்ந்துவிடும்;

உடல் குற்றங்களுக்கு பிராயச்சித்தம் பெற:

ஆலயங்களில் உள்ள நிர்மால்ய பூக்களை தாமே சுமந்து சென்று அருகில் இருக்கும் கடல் அல்லது குளத்தில் விட்டுவிட வேண்டும்;அல்லது / மேலும் கோவிலில் உழவாரப் பணி தொடர்ந்து செய்துவர  உடல் குற்றங்களுக்கு பிராயச்சித்தம் கிட்டும்;அதன் பிறகு மீண்டும் உடல் குற்றங்களைச் செய்யாமல் இருக்க வேண்டும்;


வாக்கு சுத்தி பெருகவும்,உடல் குற்றங்கள்,மனக் குற்றங்கள் தணிய:

தினமும் ஆலம்பட்டையை வேக வைத்த நீர்க் கஷாயத்தினால் வாய் கொப்பளிக்க வேண்டும்;


காமத்தினால்,குரோதத்தால்,பொறாமையால்(செவ்வாய் வக்கிரம் அடைந்தவர்கள்,செவ்வாய் நீசமும் வக்கிரமும் ஆனவர்களும் செய்ய வேண்டியது) செய்த குற்றங்களுக்கு பிராயச் சித்தம் பெற:

11 கர கணபதி சன்னதி,ஆவுடையார் கோவிலுக்கு 22 சதுர்த்தி நாட்களுக்குச் செல்ல வேண்டும்;சதுர்த்தசி நாட்களுக்கும் செல்லலாம்;ஏகாதசி திதி நாட்களிலும் செல்லலாம்;12 பெரிய கொளுக்கட்டைகள் செய்து அவருக்கு படையல் இட வேண்டும்;விநாயகர் அகவல்  4 முறை ஜபிக்க வேண்டும்;பிறகு,அதில் 11 ஐ ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும்;12 வதை குளத்து மீன்களுக்கு இட்டு வர வேண்டும்;மீண்டும் அதே தவற்றினைச் செய்யாமல் இருந்தால் மட்டுமே பிராயச்சித்தம் கிட்டும்;


 முறையற்ற காம இச்சைகள் நீங்கிட:

ஐயாறப்பர் திருக்கோவில்,திருவையாறு செல்ல வேண்டும்; வாரம் ஒரு நாள் ஒரு மணி நேரம் வரை சாம்பிராணி தூபம் இட வேண்டும்; அல்லது மாதம் ஒரு நாள் சென்று ஐந்து மணி நேரம் சாம்பிராணி தூபம் இட்டு வர வேண்டும்; 108 வாரங்கள் இப்படிச் செய்து வர முறையற்ற காம இச்சைகள் விலகிச் சென்று விடும்;சாம்பிராணி தூபம் இடும் போது சிவ மந்திரம் அல்லது சிவபுராணம் அல்லது திருவெம்பாவை அல்லது ஐயாரப்பர் பதிகம் ஜபிக்க வேண்டும்;வாய்விட்டுப் பாடக்கூடாது;

ஓம் சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சுவாமிகளின் திருவடிகளே சரணம்! சரணம்!! சரணம் !!!


No comments:

Post a Comment