Tuesday, March 20, 2018

சத்குருவின் வாழ்வியல் உபதேசம்=பகுதி 5





பித்ரு தர்ப்பணத்தின் நன்மைகள்:-


அ) உத்தம நிலைகளை அடைந்திருக்கும் பித்ருக்களுக்கு மேலும் பல உன்னதமான ஆன்மீக உயர்வுகளை அளிக்கக்கூடியது;

ஆ)கொடிய செயல்கள்,தீவினைகள் செய்த சில முன்னோர்களின் தீய கர்மவினைகளுக்கு பரிகாரம் இது மட்டுமே

இ)நடப்பு வாழ்க்கையில் தர்ப்பணம் அளிப்பவர் செய்த் தீயச் செயல்களுக்கு உரிய பரிகாரத்தை பித்ருக்கள் மூலமாகப் பெறுவது;

எதையும் திருடும் குணம் விலகிட:

பலருக்கு சிறு சிறு பொருட்களைத் திருடும் சுபாவம் இருக்கின்றது;இதுவும் ஒருவிதமான மன வியாதியே;ஆனால்,இதனால் உண்டாகும் சிக்கல்களால் கவுரவ இழப்பு உருவாகின்றது;இதைச் சரி செய்ய,திங்கட்கிழமைகளில் விஷ்ணு துர்கைக்கு ராகு காலத்தில் கொய்யாப் பழ மாலையை அணிவித்து,சோக நிவாரண அஷ்ட்கம் வாசிக்க வேண்டும்;குறைந்த பட்சம் ஒரு முறையாவது வாசிக்க வேண்டும்;

திருமணத் தடைகள் நீங்கிட:

வியாழக்கிழமை அன்று குரு ஓரையானது காலை 6 முதல் 7 வரையும்;மதியம் 1 முதல் 2 வரையும்,இரவு 8 முதல் 9 வரையும் வருகின்றது;இந்த நேரத்தில் உங்களுக்கு வசதிப்படும் ஒரு நேரத்தில் பழனிமலையில் தவம் செய்யும் போகர் ஜீவசமாதியில் சாம்பிராணி தூபம் இட்டு வர வேண்டும்;திருமணத் தடை நீங்கும்வரை தொடர்ந்து செய்துவர  வேண்டும்;

வடதமிழ்நாட்டில் வாழ்ந்து வருபவர்கள் பூண்டி மகான் ஜீவசமாதியில் அல்லது நாகப்பட்டிணம் அருகில் இருக்கும் கோரக்கர் ஜீவசமாதியிலும் இவ்வாறு செய்து திருமணத் தடையை நீக்கலாம்;திருவாரூரில் கமலமுனி சித்தரின் ஜீவசமாதியும்,மயிலாடுதுறையில் குதம்பை சித்தரின் ஜீவசமாதியும்,கும்பகோணத்தில் அகத்தியமகரிஷியின் ஜீவசமாதியும் மற்றும் பல ஊர்களில் பல சித்தர் பெருமக்களின் ஜீவசமாதியும் அமைந்திருக்கின்றது;அங்கே இவ்வாறு செய்து வர நல்ல வாழ்க்கைத் துணை அமையும்;

கணினி அறிவில் எக்ஸ்பர்ட் ஆகிட:

புதன் கிழமைகளில் அல்லது புனர்பூசம் நட்சத்திரம் வரும் நாட்களில் வரும் புதன் ஓரையில் ஸ்ரீஹயக்ரீவருக்கு 108 அரிசி நெய்க் கொளுக்கட்டைகளையும்     அவித்த கொள்ளினையும் படையல் இட வேண்டும்;நமது பெயர்,நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்;பிறகு,அதை குதிரைக்கு தானமாக தர வேண்டும்;  கொளுக்கட்டைகளை அங்கே வருபவர்களுக்கு பிரசாதமாக தரலாம்;25 முறை தொடர்ந்து இவ்வாறு செய்து வர கணினி அறிவில் எக்ஸ்பர்ட் ஆகிவிடலாம்;கணினி படிப்புக்கு ஸீட் கிடைக்கவும் இதே வழிபாட்டைப் பின்பற்றலாம்;

தீராத ருணம்(கடன் மற்றும் வழக்கு) தீர; 

திருநெடுங்களம் சிவலிங்கத்திற்கு சிகப்பு மாதுளை முத்துக்களால் காப்பு இட வேண்டும்;ருண விமோசன பதிகம் ஜபிக்க வேண்டும்;பிறகு,அந்த மாதுகளை முத்துக்களை ஏழைகளுக்கு தானமாக தர வேண்டும்;

கணவனின் கெட்டப் பழக்கங்கள் மறைய:

அருள்மிகு லலிதாம்பிகை திருமீயச்சூரில் அருள்பாலித்து வருகின்றாள்;இவள் சன்னதியில் ஒரு முறையாவது ஸ்ரீலலிதா சகஸ்ராம ஸ்தோத்திரத்தை ஜபிக்க வேண்டும்;அப்படி ஜபித்தால் மட்டுமே அதன் பலன் பூரணமாக நமக்கு கிட்டும்;இதே ஆலயத்தில் சுயமாக குங்குமம் தயாரிக்க வேண்டும்;தயாரித்து எல்லா பெண்மணிகளுக்கும் தானம் தர வேண்டும்;இதன் மூலமாக மாங்கல்ய விருத்தி உண்டாகும்;

ஓம்  சத்குரு  ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமிகளின் திருவடிகளே சரணம்! சரணம்!! சரணம் !!!


No comments:

Post a Comment