Tuesday, March 20, 2018

சத்குருவின் வாழ்வியல் உபதேசம்=பகுதி 6



ஆன்மீக சக்தி உடலில் தினமும் சேர: 

செயற்கை உரங்கள் மற்றும் ஆங்கில மருந்துகளால் உடலின் ஆத்ம பலம் குறைகின்றது;இதைச் சரி செய்ய தினமும் பின்வரும் ஆன்மீக உணவுகளை சேர்க்க வேண்டும்;
கறிவேப்பிலை,ஆராக்கீரை,அருகம்புல்,துளசி,கரிசலாங்கண்ணி,அகத்திக்கீரை=இவைகளை குழம்பு அல்லது ரசமாக சேர்த்துக் கொண்டே வர வேண்டும்;

பிரிந்து சென்ற மருமகள் திரும்பி வர: 

ஸ்ரீகற்பக விநாயகருக்கு கொய்யாப் பழ ஊறுகாய் மற்றும் உளுந்து சேர்த்த தோசை அல்லது ஊத்தப்பத்தை படையலிட வேண்டும்;விநாயகர் அகவல் ஆறு முறை ஜபிக்க வேண்டும்;மருமகள் பெயர்,நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்;பிறகு,அந்த படையலை தானமாக தர வேண்டும்; 12 முறைக்குக் குறையாமல் செய்துவர மருமகள் வீடு திரும்புவாள்;

பில்லி சூனியம் அகல: முள்ளு முருங்கை இலைகளால் அடை செய்து ஸ்ரீஅனுமனுக்கு படையல் இட வேண்டும்;அனுமன் சாலிசா 9 முறை ஜபிக்க வேண்டும்;இதை செவ்வாய்க்கிழமைகளில் 17 வாரங்கள் செய்து வர வீட்டில் இருக்கும் பில்லி,சூனியம்,ஜின் ஓடிவிடும்;அல்லது நிர்மூலமாகிவிடும்;

திடீர் அதிர்ஷ்டம் கிட்டிட;

அசைவம்,மது,போதைப் பழக்கங்கள் உள்ளவர்களுக்கு இந்த வழிபாட்டினால் பலனைப்பெற முடியாது;ரத்த உறவுகளுக்கு தர வேண்டிய சொத்துபாகத்தைத் தராதவர்களுக்கும்,ஆபத்துக் காலத்தில் கூட தனது மகன்/ள் குடும்பத்தை என்ன ஏது என்று எட்டிகூட பார்க்காமல் இருப்பவர்களுக்கும் இது பலன் தராது;


சங்கு,சக்கரத்துடன் முருகக் கடவுள் தமிழ்நாட்டில் பல ஊர்களில் அருள் பாலித்து வருகின்றார்;இவருக்கு செவ்வாய்க்கிழமைகளிலும்,சஷ்டி திதி வரும் நாட்களிலும்,விசாகம் நட்சத்திர நாட்களிலும் பால் பாயாசம் படையல் இட்டு,கந்தரலங்காரம் ஒரு முறையாவது ஜபிக்க வேண்டும்/கூட்டுப் பாடல் போல (ஒருவர் முதலில் பாட அதைக் கேட்டு மற்றவர்கள் திருப்பிப் பாடுதல்) பாடிய பின்னர் பிரசாதமாக தர வேண்டும்;தொடர்ந்து 12 முறை செய்து வர தொழிலில் அதிர்ஷ்டம் நிறைந்த பண வரவு கிட்டும்; விருப்பமான ப்ரமோஷனும் இதனால் கிட்டும்;



 பெற்ற அன்னையின் மீது அன்பு பெருகவும்,தாய்க்கு உரிய சேவைகள் ஆற்றிடவும்,தாயின் சாபம் தீர்ந்திடவும்:

“அது வேண்டுமென நான்கேட்கு முன்னே வந்து
இது வேண்டுமா எனக்கேட்டு மங்களாம்பிகையே யென்றும்
எதுவெனக்கு நலந்தருமோ அதையே நினைத் தருளல் வேண்டும்
பதுமையாய்த் திருக்கோயிலகத்தே யிருக்கும் பராசக்தியே!”

இந்த அங்காளி அந்தாதியை தினமும் 20 முறைக்குக் குறையாமல் ஜபித்து வர, பெற்ற  தாய் தவறாகப் புரிந்து கொண்டிருந்தால் அந்த நிலை மகன்/ளுக்கு மாறும்;

பெற்ற தாய் இறந்திருந்தால்,அனாதையாக இருக்கும் வயதானவர்களுக்கு சரீரப் பணி புரிந்து,தேவையான உதவிகள் செய்ய வேண்டும்;

நினைவாற்றல் பெருகிட:


தினமும் இரவில் ஸ்ரீஹயக்ரீவருக்கு காரட் சாற்றில் தேனும்,பாலும் கலந்து படையல் இட வேண்டும்;ஸ்ரீஹயக்ரீவர் சன்னதியில் 21 முறை அவரது காயத்ரி தூங்கும் முன்பு ஜபிக்க வேண்டும்;பிறகு,இந்த படையலை பிரசாதமாக பெற்று அருந்த வேண்டும்;காரட் வெளிநாட்டு காய்கறி அல்ல;நமது நாட்டின் பாரம்பரிய காய்கறிகளில் ஒன்று;

விபத்து வராமல் இருக்க:


செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஒரையில் நவக்கிரகத்தில் இருக்கும் செவ்வாய்க்கிரகத்திற்கு சிகப்பு நிற ஆடைகளை சாத்த வேண்டும்;நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;பிறகு,அதை ஏழைகளுக்கு தானம் செய்ய வேண்டும்;குறைந்தது 9 செவ்வாய்க்கிழமைகளுக்கு இப்படிச் செய்து வர வேண்டும்;

வயிற்றுநோய்கள் தீர:

கோணியம்மன்(கோயம்புத்தூர்) சன்னதியில் அங்கூரா பூந்தியை படையல் இட வேண்டும்;நமது பெயருக்கு அர்ச்சனை செய்ய வேண்டும்;பிறகு,அந்த அங்கூரா பூந்தியை ஏழைகளுக்கு தானம் செய்து வர வேண்டும்; ஆறு முறைகளுக்குக் குறையாமல் செய்து வர வேண்டும்;

கடலைமாவுக் கலவையுடன் சர்க்கரைப்பாகு கலந்து செய்யும் முறைக்கு அங்கூரா பூந்தி என்று பெயர்.

விபத்தைத் தடுக்கும் கோமுக நீர்:


சனிக்கிழமைகளில் காலை 11 முதல் 12 மணிக்குள் அல்லது மாலை 6 முதல் 7 மணிக்குள் (புதன் ஓரையில்)      பெருமாள் கோவில் அல்லது க்ருஷ்ணன் கோவிலில் கோமுகம் வழியாக வெளிவரும் கோமுக நீரை செம்பு பாத்திரத்தில் பிடிக்க வேண்டும்;(மரப் பாத்திரம்/வெள்ளிப்பாத்திரத்திலும் பிடிக்கலாம்)
அதை அந்த நேரம் முடிவதற்குள் நமது வாகனத்தின் மீது தெளிக்க வேண்டும்;இதை மாதம் ஒருமுறை வீதம் வாழ்நாள் முழுவதும் செய்து வரலாம்;

 வைத்தியத் துறையில்(ஆயுர்வேதம்,மூலிகை மருத்துவம்,இயற்கை மருத்துவம்) பிரகாசிக்க

கொல்லிமலையில் அறப்பளீஸ்வரர் திருக்கோவில் அமைந்திருக்கின்றது;இந்த ஆலயத்தின் அருகில் இருக்கும் அருவிப்பகுதிக்கு வைத்தியத்தை தொழிலாக செய்து வருபவர்கள் ஆயில்யம் நட்சத்திர நாட்களில் வரவேண்டும்;

சூரிய உதயமான நேரத்தில் இருந்து 3 மணி நேரம் இந்த அருவியில் தலையில் தண்ணீர் கொட்டும் விதமாக குளிக்க வேண்டும்;அப்படி குளிக்கும் போது அகத்திய மகரிஷியையும்,போகரையும் எண்ணி வேண்டிக்கொண்டே  இருக்க வேண்டும்;


மாதம் ஒரு முறை வீதம் 36 முறைகளுக்கு குறையாமல் இப்படிச் செய்து வர வைத்தியத் துறையில் பிரகாசம் பெறுவார்கள்;

ஓம் சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சுவாமிகளின் திருவடிகளே சரணம்! சரணம்!! சரணம்!!!

No comments:

Post a Comment