Tuesday, March 20, 2018

சத்குருவின் வாழ்வியல் உபதேசம்=பகுதி 2



படிப்பில் அதிக மதிப்பெண்கள் பெற:

ஆங்கில வழிக்கல்வியில் 10 ஆம் வகுப்பு முன்பாக படித்தால் யாராக இருந்தாலும் சராசரி மதிப்பெண் தான் பெற முடியும்;10 ஆம் வகுப்பு வரை தாய்மொழியில் கல்வி கற்றால் மட்டுமே அவரது தனித் திறமைகள் வெளிப்படும்;தன்னம்பிக்கை அதிகரிக்கும்;பெற்றோரையும்,மற்றவர்களையும் மதிக்க வைக்கும்;நமது ஜாதிப் பண்பாட்டினை மனப்பூர்வமாக உணர வைக்கும்;ஆங்கில வழிக் கல்வியை தமிழ்நாட்டில் பரவலாக்கிய முத்தமிழை வித்தவரின் தமிழ் இனத்திற்குரிய துரோகம் இது;


வியாழக்கிழமைகளில் காலை 6 முதல் 7 க்குள் அல்லது மதியம் 1 முதல் 2 க்குள் தட்சிணாமூர்த்தி சுவாமியின் சின் முத்திரை காட்டும் வலது கர விரல்களுக்கு குழந்தைகள் தானாகவே அரைத்த சந்தனத்தை பொட்டாக இட்டு வர வேண்டும்;கூடவே பின்வரும் பாடலை 9 முறை ஜபிக்க வேண்டும்;


கல்லாலின் புடை அமர்ந்து நான்மறை ஆறு அங்கம் முதல் கற்ற கேள்வி
வல்லார்கள் நால்வருக்கும் வாக்கிறந்த பூரணமாய் மறைக்கு அப்பாலாய்
எல்லாமாய் அல்லதுமாய் இருந்ததனை இருந்தபடி இருந்து காட்டிச்
சொல்லாமற் சொன்னவரை நினையாமல் நினைந்துபவத் தொடக்கை வெல்வாம்


முறையற்ற காமம் அல்லது பேராசை அல்லது கோபம் அல்லது பொறாமை நீங்கிட:

நின்ற நிலையில் இருக்கும் விநாயகர் சன்னதிக்குச் சென்று 108 முறை தோப்புக்கரணம் போட்டு வர வேண்டும்;

அல்லது

விஜய கணபதி சன்னதியில் 108 முறை தோப்புக்கரணம் இட வேண்டும்; தினமும் என்று 11 நாட்கள் அல்லது வாரம் ஒரு நாள் என்று 11 வாரங்கள் இப்படிச் செய்து வர மனநிலையில் மாற்றம் உண்டாகும்;


தீய கனவுகள் ஏற்படாமல் இருக்கவும்,வருடக் கணக்கில் இருக்கும் மன வேதனைகள் தீரவும்:

திருப்புங்கூர்,திருப்பூந்துருத்தி,ஏனனூர்,பட்டீஸ்வரம் மற்றும் தமிழ்நாட்டில் பல சிவாலயங்களில் முலவரை நோக்கி இல்லாமல் நந்தி விலகி இருக்கின்றார்;இப்படிப்பட்ட ஆலயங்களில் விளக்கெண்ணெயால் தீபம் 19 ஏற்ற வேண்டும்;வேர்க்கடலைகளை நந்திக்கு படையல் இட்டு மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ள வேண்டும்;பிறகு,சிறுவர்களுக்கு தானமாக தர வேண்டும்;
வேர்க்கடலை தானம் செய்ய இயலாதவர்கள் வேர்க்கடலை மாலையை நந்திக்கு அணிவிக்க வேண்டும்;


மனச்சஞ்சலங்களும்,சபலங்களும் தீர:

நவக்கிரக சன்னதியில் உங்கள் ஜன்ம நட்சத்திரம் வரும் நாளன்று சந்திரனுக்கு எண்ணெய் காப்பு இட வேண்டும்;வில்வத்தால் அர்ச்சனை செய்ய வேண்டும்;மாதம் ஒரு முறை வீதம் 36 முறை செய்து வர மனம் தெளிவு பெறும்;சபலங்கள் நீங்கிடும்;



காவியுடையை யாரெல்லாம் அணியலாம்?


ஒரே ஒரு தீய எண்ணமும் எழாமல் இருக்கும் மனோபாவம் யாருக்கு இருக்கின்றதோ அவர் மட்டுமே காவியை அணிய வேண்டும்;காவி உடையை அணிந்துவிட்டால் அதையே காலம் முழுவதும் அணிய வேண்டும்;காவி உடை கிழிந்துவிட்டாலோ அல்லது திரும்பவும் பயன்படுத்த முடியாத அளவுக்கு நைந்துவிட்டாலோ அதை ஒரு போதும் புதைக்கவோ,எரிக்கவோ கூடாது;

காவி உடை அணிந்தவாறு பல திரைப்படங்களில் சர்வ சாதாரணமாக காட்சிகளை வைக்கின்றார்கள்;இது அந்த இயக்குநர்களுக்கு கடுமையான சாபத்தைத் தரும்;

காவி உடை அணிந்து கொண்டு கெட்டவார்த்தையில் திட்டுதல்,பீடி,சிகரெட்,மது அருந்துதல் செய்தால் அதனால் உண்டாகும் பாவ வினை உடனே பல கோடி மடங்காகப் பெருகிவிடும்;
நமது சனாதன தர்மத்தில் காவி என்பது தியாகத்தினை குறிக்கும் நிறம் ஆகும்;அதை சாதாரணமாக நினைப்பதும்,காவி என்ற வார்த்தையைச் சொல்லி கேலி செய்வதும்,திட்டுவதும் கூட பலத்த சாபத்தை தரும்;



ஒரு போதும் பிறர் பயன்படுத்திய ஆடையை,பொருளை(சோப்,ஷாம்பு,பல்பொடி,பற்பசை) பயன்படுத்த கூடாது;அவர்களுடைய தீவினைகள் உடனே நமக்கு வந்து சேரும்;

யோகா மாஸ்டர்,இந்தி மாஸ்டர்,10 ஆம் வகுப்பு பாடங்கள் அல்லது 12 ஆம் வகுப்பு பாடங்கள்,ஸ்போகன் இங்கிலீஷ்,ப்ராணயாமா,ஜோதிடம்,வாஸ்து,மாந்திரீகம்,சித்த மருத்துவம்,மூலிகை மருத்துவம்,சரக்கலை,வாசியோகம் போன்றவைகளை ஒரு இடத்தில் இருந்து சொல்லித் தர வேண்டும்;எக்காரணம் கொண்டும் மாணவரின் வீடு/இருப்பிடம் சென்று சொல்லித் தரக் கூடாது;அப்படி சொல்லித் தந்தால் அடுத்த பிறவியில் இதே துறையில் ஆசானாக முடியாது;வித்தைக்குரிய தேவியின் சாபம் இது என்பதை மறக்காதீர்கள்;

தீராத பணக்கஷ்டம் தீர(வியாபாரத்திலும்,வீட்டிலும்):-

தொடர்ந்து 48 நாட்கள் மஹாலக்ஷ்மிக்கு எட்டு முழு வெள்ளைத் தாமரை மலர்களால் அர்ச்சனை செய்து வர வேண்டும்;அர்ச்சனை செய்யும் போதோ அல்லது முடிந்த பின்னரோ மஹாலக்ஷ்மி அஷ்டகம் எட்டு முறை ஜபிக்கலாம்;பிறகு குறைந்த பட்சம் இரண்டு ஏழைச் சுமங்கலிகளுக்கு தாமரைமலர்களுடன் அன்னதானம் செய்து வர வேண்டும்;

வீண்பழி வராமல் இருக்க:தெற்கு நோக்கி பல் துலக்கக் கூடாது; தெற்கு நோக்கி சாப்பிடக் கூடாது;

ஓம் சத்குரு ஸ்ரீலஸ்ரீ வேங்கடராமசுவாமிகளின் திருவடிகளே சரணம்! சரணம்!! சரணம்!!!



No comments:

Post a Comment