உலகத்தில் பிறந்த ஒவ்வொருவரும் ஐந்து முக ருத்ராட்சம் ஒன்றை கழுத்தில்
அணிவது அவசியம்;இப்படி அணிந்திருக்கும் ருத்ராட்சத்தை எக்காரணம் கொண்டும் வாழ்நாள்
முழுவதும் கழற்றக் கூடாது;ஒரே ஒரு ருத்ராட்சம் அணிவதற்கு ஒரே ஒரு ஆச்சாரம்(கட்டுப்பாடு)
உண்டு;அதுதான் அசைவம் சாப்பிடாமல் இருப்பது;
ஐந்து முக ருத்ராட்சங்கள் 108 கொண்ட ஒரு மாலையை நாம் ஒவ்வொருவரும் சிவ
வழிபாட்டின் போது அணிந்திருக்க வேண்டும்;
அண்ணாமலை கிரிவலம் செல்லும் போதும்
பர்வதமலை கிரிவலம் செல்லும் போதும்
வெள்ளியங்கிரி கிரிவலம் செல்லும் போதும்
திருக்கையிலாய பயணத்தின் போதும்
அமர்நாத் பனிலிங்கப் பயணத்தின் போதும்
நர்மதா பரிக்ரமா செல்லும் போதும்
ஆலயத்தில் நடைபெறும் பிரதோஷ பூஜையில் கலந்து கொள்ளும் போதும்
வீட்டில் தினசரி கணபதி பூஜை/முருக பூஜை/சிவ பூஜை/பைரவ பூஜை/வராகி பூஜை/மஹாலக்ஷ்மி
பூஜை/சத்திய நாராயண பூஜை/குபேர பூஜை என்று எந்த ஒரு பூஜை செய்தாலும் அவ்வாறு பூஜை செய்யும்
போதும்
அன்னதானம் செய்யும் போதும்
பித்ரு தர்ப்பணம் செய்யும் போதும்
திலா ஹோமம் செய்யும் போதும்
யாகத்தில் கலந்து கொள்ளும் போதும்
சதுரகிரி பயணத்தின் போதும்(அடிவாரமான தாணிப்பாறையில் இருந்து சதுரகிரி
சென்றடையும் வரை)
ஆடை தானம் செய்யும் போதும்
இஷ்ட தெய்வ மந்திர ஜபம் செய்யும் போதும்
ப்ராணயாமம் செய்யும் போதும்
குலதெய்வ வழிபாட்டின் போதும்
கும்பாபிஷேகம் செய்யும் போதும்/கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ளும் போதும்
கோபூஜை செய்யும் போதும்
கோசாலையில் மந்திரம் ஜபிக்கும் போதும்
ஐந்து முக ருத்ராட்சங்கள் 108 கொண்ட மாலையை அணிந்திருக்க வேண்டும்;
இம்மாலையை அணிந்து கிரிவலம் செல்லும் போது,இயற்கை உபாதை ஏற்பட்டால் கழற்ற வேண்டும்;அதன் பிறகு,மீண்டும் கழுத்தில் அணிந்து கொள்ளலாம்;
இம்மாலையை அணிந்திருக்கும் போது,எக்காரணம் கொண்டும் யாரையும் திட்டக் கூடாது;ஆபாசமான வார்த்தையை ஒரு போதும் பேசக் கூடாது;அது கடுமையான சாபங்களைத் தரும் என்பதை மறக்காதீர்கள்;
ருத்ராட்சக் குளியல் செய்து வருவதன் மூலமாகவும் ஈசனின் அருள் கடாட்சத்தை
பெறலாம்;
தினமும் குளிக்கும் நீரில் இந்த ஐந்து முக ருத்ராட்சங்கள் 108 உள்ள மாலையை
குறைந்தது 30 நிமிடங்கள் வரை ஊற வைக்க வேண்டும்;அதன் பிறகு,குளியலறைக்குள் புகுந்து
கிழக்கு நோக்கி நிற்க வேண்டும்;(நிற்க இயலாதவர்கள் அமர்ந்து கொள்ளலாம்)
வாளி தண்ணீரில்
புதைந்திருக்கும் ருத்ராட்ச மாலையை எடுத்து தலைமீது வைத்துக் கொள்ள வேண்டும்;சுருட்டியும்
வைக்கலாம்;சுருட்டாமலும் வைத்துக் கொள்ளலாம்;அவ்வாறு வைத்துக் கொண்டு உங்களுக்குத்
தெரிந்த சிவமந்திரம் ஒன்றை 12 முறை ஜபிக்க வேண்டும்; ஜபித்துமுடித்தப் பின்னர் மீண்டும்
தண்ணீர் வாளிக்குள் ருத்ராட்ச மாலையை போட்டுவிட்டு அந்த தண்ணீரால் குளிக்க வேண்டும்;
இதை பெண்கள் மாதவிலக்கு நாட்களிலும்,துக்க வீடுகளுக்கு சென்று வந்த நாட்களிலும்
கூட செய்யலாம்;
தினமும் இந்த ருத்ராட்சக் குளியலைச் செய்து வரலாம்;
தினமும் செய்ய இயலாதவர்கள் அமாவாசை,சிவராத்திரி,திருவாதிரை,ப்ரதோஷ நாட்களிலும்,அவரவர்
ஜன்ம நட்சத்திர நாட்களிலும் செய்யலாம்;
ஏதாவது ஒரு அமாவாசை அன்று ருத்ராட்சக் குளியல் செய்யத் துவங்கி 90 நாட்கள் தொடர்ந்து செய்யலாம்;(சில பல தடைகள் வந்தாலும் விட்டுவிட்டாவது 90 நாட்கள் நிறைவு செய்யலாம்)
இப்படிச் செய்து வருவதால்,ஆத்ம பலம் அதிகரிக்கும்;பிறர் நமக்கு எதிராக
செய்த,செய்துவிட்ட,செய்ய இருக்கின்ற எல்லாவிதமான மாந்திரீகத் தீங்குகளும் நம்மையும்,நமது
இருப்பிடத்தையும் விட்டு விலகிச் சென்றுவிடும்;
உணவு,உடை,இருப்பிடம்,காற்று,நீர் என்று அனைத்திலும் செயற்கையான கண்டுபிடிப்புகள்
அதிகரித்துவருகின்றன;அதனால்,நமது ஆன்மீக பலம் குறைந்துவருகின்றது;அதை ஈடுசெய்யக் கூடியதுதான்
இந்த ருத்ராட்சக் குளியல்!!!
தினசரி வாழ்க்கையில் ப்ளாஸ்டிக் மற்றும் எவர்சில்வர் பயன்பாடு அதிகரித்துவிட்டதால்,நம்
அனைவருக்கும் சராசரியைக் கடந்த சிற்றின்ப உணர்ச்சிகள் அதிகரித்துவிட்டன;அதைச் சமப்படுத்தும்
செயல் தான் இந்த ருத்ராட்சக் குளியல்!!!
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ