Wednesday, November 9, 2016

அனைத்து கஷ்டங்களையும் சில வாரங்களிலேயே தீர்த்துவைக்கும் பதிகம்!!!



உங்களது வாழ்க்கை இன்று முதல் அடியோடு மாறிட நீங்கள் செய்ய வேண்டியது ஒன்றே ஒன்றுதான்;அசைவம்,மது இரண்டையும் கைவிடவேண்டும்;புரோட்டாவும்,முட்டை வகைகளும் அசைவமே;ஜீவகாருண்யம் என்ற சைவ உணவுப் பழக்கத்திற்கு தயாராகுங்கள்;சைவ உணவுப்பழக்கத்துடன் பின்வரும் பதிகத்தை தினமும் காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் வீட்டில் ஜபித்து வரவேண்டும்;


முடிந்தால் அருகில் இருக்கும் சிவாலயத்தில் காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் இதை பாடலாம் அல்லது ஜபிக்கலாம்;

அல்லது 

காலையில் வீட்டிலும்,இரவில் அருகில் இருக்கும் சிவாலயத்திலும் ஜபிக்கலாம் அல்லது பாடலாம்;


தொடர்ந்து 108 நாட்கள் விடாமல்(பெண்கள் எனில் மாதவிலக்கு நாட்கள் தவிர்த்து) ஜபித்து அல்லது பாடி வருக! இதுவரை இருந்து வந்த அனைத்து சோகங்களும்,கடனும்,சிக்கல்களும்,அவமானங்களும்,துயரங்களும்,கண்ணீரும் ஓடியே போய்விடும்;டெஸ்ட் செய்து பாருங்கள்;

கடந்த 20,000 ஆண்டுகளாக பல லட்சம் சிவபக்தி கொன்டவர்கள் தினமும் இதைப் பாடி நிம்மதியான வாழ்க்கையைப் பெற்றுள்ளார்கள்;


இன்றைய கால கட்டத்தில் முதல் ஒருவாரம் வரை இந்த 10 பாடல்களை வாசிப்பது சிரமமாகத் தான் இருக்கும்;பரவாயில்லை;விடாமுயற்சியை வைராக்கியத்துடன் தொடருங்கள்;ஈசனுடைய அருளால் அனைத்து நலனும் தேடி வரும்;

பதிகம்:நமச்சிவாயத் திருப்பதிகம்

பண்:காந்தாரப் பஞ்சமம்

பாடியவர்:திருநாவுக்கரசர்

இங்கே அடுத்த வரியில் இருந்து பாட அல்லது ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;(பதிகங்களை திருச்சிற்றம்பலம் என்று கூறியே துவக்க வேண்டும்;திருச்சிற்றம்பலம் என்று கூறித்தான் நிறைவு செய்ய வேண்டும்)

திருச்சிற்றம்பலம்

சொற்றுணை வேதியன் சோதி வானவன்
பொற்றுணைத் திருந்தடி பொருந்தக் கைதொழக்
கற்றுணைப் பூட்டி ஓர் கடலினுள் பாய்ச்சினும்
நற்றுணை ஆவது நமச்சிவாயவே.                     1

பூவினுக்கு அருங்கலம் பொங்கு தாமரை
ஆவினுக்கு அருங்கலம் அரன் அஞ்சு ஆடுதல்
கோவினுக்கு அருங்கலம் கோட்டம் இல்லது
நாவினுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.                  2

விண்ணுற அடுக்கிய விறகின் வெவ் அழல்
உண்ணிய புகில் அவை ஒன்றும் இல்லையாம்
பண்ணிய உலகினில் பயின்ற பாவத்தை
நண்ணி நின்று அறுப்பது நமச்சிவாயவே.                 3

இடுக்கண்பட்டு இருக்கினும் இரந்து யாரையும்
விடுக்கிற் பிரான் என்று வினவுவோம் அல்லோம்
அடுக்கற் கீழ்க் கிடக்கினும் அருளின் நாமுற்ற
நடுக்கத்தைக் கெடுப்பது நமச்சிவாயவே.                 4 

வெந்தநீறு அருங்கலம் விரதிகட்கு எலாம்
அந்தணர்க்கு அருங்கலம் அருமறை ஆறங்கம்
திங்களுக்கு அருங்கலம் திகழும் நீள்முடி
நங்களுக்கு அருங்கலம் நமச்சிவாயவே.                  5 

சலமிலன் சங்கரன் சார்ந்தவர்க்க்கு அலால்
நலமிலன் நாள்தொறும் நல்குவான் நலன்
குலம் இலராகிலும் குலத்திற்கு ஏற்பது ஓர்
நலம் மிக கொடுப்பது நமச்சிவாயவே.                 6   

வீடினர் உலகினில் விழுமிய தொண்டர்கள்
கூடினார் அந்நெறி கூடிச் சென்றலும்
ஓடினேன் ஓடிச்சென்று உருவம் காண்டலும்
நாடினேன் நாடிற்று நமச்சிவாயவே.                   7

இல்லக விளக்கது இருள் கெடுப்பது
சொல்லக விளக்கது சோதி உள்ளது
பல்லக விளக்கது பலரும் காண்பது
நல்லக விளக்கது நமச்சிவாயவே.                    8

முன்னெறி ஆகிய முதல்வன் முக்கணன்
தன்னெறியே சரணாதல் திண்ணமே
அந்நெறியே சென்று அங்கு அடைந்தவர்க்கு எலாம்
நன்னெறியாவது நமச்சிவாயவே.                    9  

மாப்பிணைத் தழுவிய மாதுஓர் பாகத்தன்
பூப் பிணை திருந்தடி பொருந்தகக் கைத் தொழ
நாப்பிணை தழுவிய நமச்சிவாயப் பத்து
ஏத்த வல்லார் தமக்கு இடுக்கண் இல்லையே.           10 

திருச்சிற்றம்பலம்


பொதுவாக இம்மாதிரியான பதிகங்களை ஒருமுறை பார்த்து எழுதி வைத்துக்கொள்ள வேண்டும்;அதன்பிறகு,தாம் எழுதியதை ஜபிக்க பயன்படுத்த வேண்டும்;


 ஓம் அகத்தீசாய நம

ஓம் அருணாச்சலாய நம





No comments:

Post a Comment