மயிலாடுதுறையில் இருந்து திருவாரூர் செல்லும் வழியில் பூந்தோட்டம் ரயில்
நிலையம் அமைந்திருக்கின்றது;இதன் அருகில் சென்று,திருவீழிமிழலைக்கு வழி விசாரித்துச்
செல்ல வேண்டும்;டவுண் பஸ் வசதி கூட இல்லாத ஊர் இது;
பிரபஞ்சத்தின் தந்தையாகிய பரமேஸ்வரனும்,தாயாகிய அம்பிகையும் திருமணக்
கோலத்தில்,நின்ற நிலையில் இருக்கும் உலகின் ஒரே ஆலயம் திருவீழிமிழலை!
இவர்களை அமாவாசை அல்லது பவுர்ணமி அல்லது சிவராத்திரி அல்லது பிரதோஷம்
அல்லது திருவாதிரை அன்று யார் தரிசிக்கின்றார்களோ அவர்களுக்கு விரைவில் திருமணம் நடைபெறும்
என்பது பல நூற்றாண்டுகளாக நிரூபிக்கப்பட்ட உண்மை;
சுதர்ஸனச் சக்கரம் பெறுவதற்காக மஹாவிஷ்ணு,சிவவழிபாடு செய்த இடம் இந்த
திருவீழிமிழலை;
பிரம்மா ஒருமுறை தமது முழுத்திறனையும் பயன்படுத்தி ஒரு பெண்ணைப் படைத்தார்;அந்தப்
பெண் அழகின் மனித வடிவமாக இருந்தது;அந்தப் பெண்ணின் பெயர் திலோத்தமை! உலகில் அதுவரை
வாழ்ந்து வந்த பெண்களுடைய அழகுகளை மொத்தமாக உருவகப்படுத்தி உருவாக்கினார்;அதனாலேயே,பிரம்மாவுக்கே
சபலம் வந்துவிட்டது;எனவே,திலோத்தமையை துரத்த ஆரம்பித்துவிட்டார்;அவள் சிக்கவில்லை;இதனால்,பிரம்மா
இந்திரியத்தை விட்டுவிட்டார்;இதனால்,அவருக்கு படைப்புத் தொழில் கைகூடவில்லை;மனிதர்களின்
இந்திரியத்தை பகலில் ஒருபோதும் வெளியிடக் கூடாது என்பது இல்லறவிதி;இறை பதவியான பிரம்மாவே
அப்படிச் செய்தமையால் அவருக்கு பாவம் உண்டாகிவிட்டது;தமது பாவம் தீர சித்தர்களின் தலைவரான
அகத்தியரிடம் ஆலோசனை கேட்டார்;அகத்தியரின் ஆலோசனைப்படி,திருக்கையிலாயம் சென்று பரமேஸ்வரனிடம்
விண்ணபித்தார்;
பரமேஸ்வரனின் வழிகாட்டுதல் படி,திருவீழிமிழலைக்கு வருகை தந்து ஒரு லிங்கத்தை
நிறுவி தினமும் சிவலிங்க வழிபாடு செய்து வந்தார்;ஒரு கோடி ஆண்டுகள் கடந்தன;அதன் பிறகு
தான் அவரது சாபம் விலகி,படைப்புத் திறன் மீண்டும் அவருக்கு கிட்டியது;
பின்வரும் பதிகத்தை திருஞானசம்பந்தர் திருவீழிமிழலையில் அருள்பாலித்து
வரும் ஸ்ரீசுந்தர குசாம்பிகை சமேத ஸ்ரீவீழிநாதசுவாமியின் சன்னதியில் பாடியுள்ளார்;
திருவீழிமிழலை - திருவிராகம் நட்டபாடை
தினமும் காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் என்று ஆயுள் முழுவதும்
பாடி வந்தால் வாழ்க்கையில் இதுவரை இருந்து வந்த அனைத்து கர்மவினைகளும் கரைந்து புகையாக
போய்விடும்;
கல்வியில் வளர்ச்சி;சரியான வேலை;எதிர்பார்க்கும் சம்பளம்;எதிர்பார்க்கும்
அரசுத்துறையில் பணி,மறுபிறவி இல்லாத முக்தி;தரிசிக்க நினைக்கும் ஆலயங்களை தரிசிக்கும்
சந்தர்ப்பம் என்று அனைத்தையும் அருளும் இந்தப் பதிகத்தை தூத்துக்குடியில் அருள்பாலித்து
வரும் ஸ்ரீபாகம்பிரியாள் அன்னையின் அருளால் சமர்ப்பிக்கின்றோம்;
திருச்சிற்றம்பலம்
1. தட நிலவிய மலை நிறுவி, ஒரு தழல் உமிழ்தரு பட அரவுகொடு,
அடல் அசுரரொடு அமரர்கள், அலைகடல் கடைவுழி எழும்
மிகு சின
விடம் அடைதரும் மிடறு உடையவன்; விடைமிசை வருமவன்;
உறை பதி
திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை
திரு மிழலையே.
அடல் அசுரரொடு அமரர்கள், அலைகடல் கடைவுழி எழும்
மிகு சின
விடம் அடைதரும் மிடறு உடையவன்; விடைமிசை வருமவன்;
உறை பதி
திடம் மலிதரு மறை முறை உணர் மறையவர் நிறை
திரு மிழலையே.
2. தரையொடு திவிதலம் நலிதரு தகு திறல் உறு சலதரனது
வரை அன தலை விசையொடு வரு திகிரியை அரி பெற அருளினன்;
உரை மலிதரு சுரநதி, மதி, பொதி சடையவன்; உறை பதி மிகு
திரை மலி கடல் மணல் அணிதரு பெறு திடர் வளர்
திரு மிழலையே.
வரை அன தலை விசையொடு வரு திகிரியை அரி பெற அருளினன்;
உரை மலிதரு சுரநதி, மதி, பொதி சடையவன்; உறை பதி மிகு
திரை மலி கடல் மணல் அணிதரு பெறு திடர் வளர்
திரு மிழலையே.
3. மலைமகள் தனை இகழ்வு அது செய்த மதி அறு சிறுமனவனது உயர்
தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன்
உறை பதி
கலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு,
சிலை மலி மதில் புடை தழுவிய, திகழ் பொழில் வளர்,
திரு மிழலையே.
தலையினொடு அழல் உருவன கரம் அற முனிவு செய்தவன்
உறை பதி
கலை நிலவிய புலவர்கள் இடர் களைதரு கொடை பயில்பவர் மிகு,
சிலை மலி மதில் புடை தழுவிய, திகழ் பொழில் வளர்,
திரு மிழலையே.
4. மருவலர் புரம் எரியினில் மடிதர ஒரு கணை செல நிறுவிய
பெரு வலியினன், நலம் மலிதரு கரன், உரம் மிகு பிணம் அமர் வன
இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன், இனிது
உறை பதி
தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே.
பெரு வலியினன், நலம் மலிதரு கரன், உரம் மிகு பிணம் அமர் வன
இருள் இடை அடை உறவொடு நட விசை உறு பரன், இனிது
உறை பதி
தெருவினில் வரு பெரு விழவு ஒலி மலிதர வளர் திரு மிழலையே.
5. அணி பெறு வட மர நிழலினில், அமர்வொடும் அடி இணை
இருவர்கள்
பணிதர, அறநெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி
மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல்
அணி,
திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல்,
திரு மிழலையே.
இருவர்கள்
பணிதர, அறநெறி மறையொடும் அருளிய பரன் உறைவு இடம் ஒளி
மணி பொருவு அரு மரகத நிலம் மலி புனல் அணை தரு வயல்
அணி,
திணி பொழில் தரு மணம் மது நுகர் அறுபதம் முரல்,
திரு மிழலையே.
6. வசை அறு வலி வனசர உரு அது கொடு, நினைவு அருதவம் முயல்
விசையன திறல் மலைமகள் அறிவு உறு திறல் அமர் மிடல்கொடு
செய்து,
அசைவு இல படை அருள் புரிதருமவன் உறை பதி அது மிகு தரு
திசையினில் மலர் குலவிய செறி பொழில் மலிதரு
திரு மிழலையே.
விசையன திறல் மலைமகள் அறிவு உறு திறல் அமர் மிடல்கொடு
செய்து,
அசைவு இல படை அருள் புரிதருமவன் உறை பதி அது மிகு தரு
திசையினில் மலர் குலவிய செறி பொழில் மலிதரு
திரு மிழலையே.
7. நலம் மலிதரு மறைமொழியொடு, நதி உறுபுனல், புகை, ஒளி முதல்,
மலர் அவைகொடு, வழிபடு திறல் மறையவன் உயிர் அது
கொள வரு
சலம் மலிதரு மறலிதன் உயிர்கெட, உதைசெய்த அரன் உறை பதி
"திலகம் இது!" என உலகுகள் புகழ்தரு, பொழில் அணி,
திரு மிழலையே.
மலர் அவைகொடு, வழிபடு திறல் மறையவன் உயிர் அது
கொள வரு
சலம் மலிதரு மறலிதன் உயிர்கெட, உதைசெய்த அரன் உறை பதி
"திலகம் இது!" என உலகுகள் புகழ்தரு, பொழில் அணி,
திரு மிழலையே.
8. அரன் உறைதரு கயிலையை நிலை குலைவு அது செய்த தசமுகனது
கரம் இருபதும் நெரிதர விரல் நிறுவிய கழல் அடி உடையவன்;
வரல் முறை உலகு அவை தரு, மலர் வளர், மறையவன்
வழி வழுவிய
சிரம் அதுகொடு பலி திரிதரு சிவன்; உறை பதி திரு மிழலையே.
கரம் இருபதும் நெரிதர விரல் நிறுவிய கழல் அடி உடையவன்;
வரல் முறை உலகு அவை தரு, மலர் வளர், மறையவன்
வழி வழுவிய
சிரம் அதுகொடு பலி திரிதரு சிவன்; உறை பதி திரு மிழலையே.
9. அயனொடும் எழில் அமர் மலர் மகள் மகிழ் கணன், அளவிடல்
ஒழிய, ஒரு
பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர,
வரல்முறை,
"சய சய!" என மிகு துதிசெய, வெளி உருவிய அவன் உறை பதி
செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே.
ஒழிய, ஒரு
பயம் உறு வகை தழல் நிகழ்வது ஒரு படி உரு அது வர,
வரல்முறை,
"சய சய!" என மிகு துதிசெய, வெளி உருவிய அவன் உறை பதி
செயம் நிலவிய மதில் மதி அது தவழ்தர உயர் திரு மிழலையே.
10. இகழ் உருவொடு பறி தலை கொடும் இழி தொழில் மலி
சமண்விரகினர்,
திகழ் துவர் உடை உடல் பொதிபவர், கெட, அடியவர் மிக அருளிய
புகழ் உடை இறை உறை பதி புனல் அணி கடல் புடை தழுவிய
புவி
திகழ் சுரர்தரு நிகர் கொடையினர் செறிவொடு திகழ்
திரு மிழலையே.
சமண்விரகினர்,
திகழ் துவர் உடை உடல் பொதிபவர், கெட, அடியவர் மிக அருளிய
புகழ் உடை இறை உறை பதி புனல் அணி கடல் புடை தழுவிய
புவி
திகழ் சுரர்தரு நிகர் கொடையினர் செறிவொடு திகழ்
திரு மிழலையே.
11. சினம் மலி கரி உரிசெய்த சிவன் உறைதரு திரு மிழலையை, மிகு
தன மனர், சிரபுரநகர் இறை தமிழ்விரகனது உரை ஒருபதும்
மன மகிழ்வொடு பயில்பவர், எழில் மலர் மகள், கலை மகள்,
சய மகள்,
இனம் மலி புகழ்மகள், இசை தர, இரு நிலன் இடை இனிது அமர்வரே.
தன மனர், சிரபுரநகர் இறை தமிழ்விரகனது உரை ஒருபதும்
மன மகிழ்வொடு பயில்பவர், எழில் மலர் மகள், கலை மகள்,
சய மகள்,
இனம் மலி புகழ்மகள், இசை தர, இரு நிலன் இடை இனிது அமர்வரே.
திருச்சிற்றம்பலம்
ஓம் அகத்தீசாய நம
Sivayanama... Arumai..veelinathar sundara kusambikai ambal potri.......
ReplyDelete