Wednesday, November 9, 2016

விரும்பிய வாழ்க்கைத் துணை அமையவும்,சர்ப்பதோஷம் நீங்கவும் பாடவேண்டிய பதிகம்!

தினமும் காலையில் ஒருமுறையும் இரவில் ஒருமுறையும் வீட்டில் பாடி வரவேண்டும்;(மனதிற்குள்ளும் ஜபிக்கலாம்)
திருமருகல் இந்தளம்
திருச்சிற்றம்பலம்
1.சடையாய்! எனுமால்; "சரண் நீ!" எனுமால்;
"விடையாய்!" எனுமால்; வெருவா விழுமால்;
மடை ஆர் குவளை மலரும் மருகல்
உடையாய்! தகுமோ, இவள் உள் மெலிவே?
2.சிந்தாய்! எனுமால்; "சிவனே!" எனுமால்;
"முந்தாய்!" எனுமால்; "முதல்வா!" எனுமால்;
கொந்து ஆர் குவளை குலவும் மருகல்
எந்தாய்! தகுமோ, இவள் ஏசறவே?
3.அறை ஆர் கழலும், அழல் வாய் அரவும்,
பிறை ஆர் சடையும், உடையாய்! பெரிய
மறையார் மருகல் மகிழ்வாய்! இவளை
இறை ஆர் வளை கொண்டு, எழில் வவ்வினையே?
4.ஒலிநீர் சடையில் கரந்தாய்! உலகம்
பலி நீ திரிவாய்! பழி இல் புகழாய்!
மலி நீர் மருகல் மகிழ்வாய்! இவளை
மெலி நீர்மையள் ஆக்கவும் வேண்டினையே?
5.துணி நீலவண்ணம் முகில் தோன்றியன்ன
மணி நீலகண்டம்(ம்) உடையாய், மருகல்!
கணி நீலவண்டு ஆர் குழலாள் இவள்தன்
அணி நீலஒண்கண் அயர்வு ஆக்கினையே?
6.பலரும் பரவப்படுவாய்! சடைமேல்
மலரும் பிறை ஒன்று உடையாய், மருகல்!
புலரும்தனையும் துயிலாள், புடை போந்து
அலரும் படுமோ, அடியாள் இவளே
7.வழுவாள்; "பெருமான்கழல் வாழ்க!" எனா
எழுவாள்; நினைவாள், இரவும் பகலும்;
மழுவாள் உடையாய்! மருகல் பெருமான்!
தொழுவாள் இவளைத் துயர் ஆக்கினையே?
8.இலங்கைக்கு இறைவன் விலங்கல் எடுப்ப,
துலங்க விரல் ஊன்றலும், தோன்றலனாய்;
வலம்கொள் மதில் சூழ் மருகல் பெருமான்!
அலங்கல் இவளை அலர் ஆக்கினையே?
9.எரி ஆர் சடையும், அடியும், இருவர்
தெரியாதது ஒர் தீத்திரள் ஆயவனே!
மரியார் பிரியா மருகல் பெருமான்!
அரியாள் இவளை அயர்வு ஆக்கினையே?
10.அறிவு இல் சமணும்(ம்) அலர் சாக்கியரும்
நெறிஅல்லன செய்தனர், நின்று உழல்வார்;
மறி ஏந்து கையாய்! மருகல் பெருமான்!
நெறி ஆர் குழலி நிறை நீக்கினையே?
11.வயஞானம் வல்லார் மருகல் பெருமான்
உயர் ஞானம் உணர்ந்து, அடி உள்குதலால்,
இயல் ஞானசம்பந்தன பாடல் வல்லார்,
வியன்ஞாலம் எல்லாம் விளங்கும், புகழே.
திருச்சிற்றம்பலம்
பலருக்கு தாம் விரும்பியவரையே வாழ்க்கைத் துணையாக அமைய இந்த பதிகம் உதவியிருக்கின்றது;
தினமும் அருகில் இருக்கும் சிவாலயத்தில் இரவு மட்டுமாவது ஜபித்து வருவதன் மூலமாக விரைவான பலனைப் பெறலாம்;
ஓம் அகத்தீசாய நம
அன்னை ஸ்ரீபாகம்பிரியாளுக்கு சமர்ப்பணம்

No comments:

Post a Comment