Wednesday, November 2, 2016

திருவீழிமிழலையின் பெருமைகள் பக்திப்பகுதி 2


எப்பேர்ப்பட்ட கருமவினைகள் இருந்தாலும்,அதைக் கரைத்து காணாமல் போக வைப்பது இந்த பதிகம்;

சைவத் திருமுறைகளில் மொத்தம் 12,000 பாடல்கள் இருக்கின்றன;63 நாயன்மார்களும் தமிழ்நாடு முழுவதும் பயணித்து பழமையான 300 சிவாலயங்களில் பாடியுள்ளார்கள்;


விலைவாசி அதிகரிக்கும் வேகத்திற்கு ஈடாக வருமானம் நமக்கு அதிகரிக்கின்றதா?
இன்றும் கூட நேர்மையாக சம்பாதித்து வாழவேண்டும் என்ற ஒற்றைக்கொள்கையால் தான் பல கோடி இந்துக்குடும்பங்கள் வருமானத்திற்கும்,கடனுக்கும் இடையே இருந்து அல்லாடிக்கொண்டு இருக்கின்றன;

அவர்களின் அல்லாடல் தீரவே இந்த திருவீழிமிழலையில் திருஞானசம்பந்தர் வளமான வாழ்வு கிடைக்க பாடிய பதிகத்தை தங்களுக்கு திரு.வீழிநாதர் அருளால் வழங்குகிறோம்;

ஒருமுறை இப்பாடலை உங்கள் நோட்டில் எழுதி வைத்து விட்டு,அதன் பிறகு பாடத்துவங்குவது சிறப்பு;

தினமும் உங்கள் ஊரில் இருக்கும் சிவாலயத்தில் காலை மற்றும் இரவில் அல்லது ஏதாவது ஒருமுறையாவது பாடுவது அல்லது ஜபிப்பது நன்று;



திருச்சிற்றம்பலம்

வாசி தீரவே காசு நல்குவீர்;
மாசின் மிழலையீர்;ஏசலில்லையே

இறைவ ராயினீர்,மறைகொண் மிழலையீர்
கறைகொள் காசினை,முறைமை நல்குமே

செய்ய மேனியீர்,மெய்கொண் மிழலையீர்
பைகொ ளரவினீர்;உய்ய நல்குமே;

நீறு பூசினீர்,ஏற தேறினீர்;
கூறுமிழலையீர்;பேறு மருளுமே;

காமன் வேவவோர்,தூமக் கண்ணினீர்
நாம மிழலையீர்,சேம நல்குமே;

பிணிகொள் சடையினீர்;மணி கொள் மிடறினீர்;
அணிகொள் மிழலையீர்.பணி கொண் டருளுமே;

மங்கை பங்கினீர்; துங்க மிழலையீர்;
கங்கை முடியினீர்; சங்கை தவிர்மினே;

அரக்க னெரிதர, இரக்க மெய்தினீர்;
பரக்கு மிழலையீர்;கரக்கை தவிர்மினே;

அயனு மாலுமாய்,முயலு முடியினீர்
இயலு மிழலையீர்;பயனு மருளுமே;

பறிகொள் தலையினார்;அறிவ தறிகிலார்
வெறிகொண் மிழலையீர்;பிறிவ தரியதே

காழி மாநகர்;வாழி சம்பந்தன்
வீழி மிழலைமேல், தாமு மொழிகளே;

திருச்சிற்றம்பலம்

தமிழ் மீடியத்தில் படித்தவர்களுக்கே இப்பாடல்,இந்தக் காலத்தில் வாசிக்க தடுமாற்றம் வரத்தான் செய்யும்;


சில நாட்களுக்கு மட்டும் தான் இந்தத் தடுமாற்றம் இருக்கும்;அதன் பிறகு,ஈசனின் அருளை உணரத் துவங்குவீர்கள்;


தினமும் காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் என்று பாடி வர வற்றாத செல்வ வளம் நம்மைத் தேடி வரும்;

ஓம் அகத்தீசாய நம




No comments:

Post a Comment