Wednesday, November 30, 2016

உங்கள் கடனைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தநேரம் 2016 டூ 2017


கலியுகத்தில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருமே கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது நிம்மதியின்மை=இவைகளில் ஏதாவது ஒன்றில் சிக்க வேண்டும் என்பது பூர்வகர்மவிதியாகும்;தகுந்த குருவை கண்டறிந்து அவரைச் சரணடைந்தாலோ அல்லது தினமும்/வாரம் ஒருமுறை குலதெய்வ வழிபாடு செய்வதன் மூலமாகவோ இவைகளில் இருந்து சிக்காமல் வாழவும் முடியும்.

ஒருபோதும் பிறருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொந்தரவு தராமல் இருப்பவர்களுக்கு பெரிய சிக்கல்கள் வராது;அப்படி இருக்கப் பழகுவது கொஞ்சம் சிரமம் தான்;

2009 ஆம் வருடம் முதல் வருடம் தோறும் மைத்ரமுகூர்த்தம் நேரத்தை கணித்து வெளியிட்டுவருகிறோம்;இந்த நேரத்தில் நாம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியைத் திருப்பித் தர வேண்டும்;அப்படி ஒருமுறை செய்தால் நமதுகடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அந்தக் கடன் தீர்ந்துவிடும்;

உதாரணமாக மாரிமுத்து என்பவரிடம் நீங்கள் ரூ.1,00,000/-கடன் வாங்கி இருக்கிறீர்கள்;கடன் வாங்கி 6 ஆண்டுகள் ஆகிவிட்டன;இப்போது என்ன நினைப்பீர்கள்? இந்த 6 ஆண்டுகளாக நாம் கொடுத்த வட்டித்தொகையை நினைத்து பிரமித்துப் போவீர்கள்;ஆனால்,கடனை அடைக்க வழியே தெரியாது;இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்தில் ரூ.1000/-அளவுக்காவது பணத்தைக் கொண்டு போய் மாரிமுத்துவிடம் கொடுத்து,இந்தப் பணத்தை அசலில் வரவு வைத்துக் கொள்ளுங்கள்;என்று வேண்ட வேண்டும்;அவரும் அவரது வரவு செலவு ஏட்டில் வரவு வைக்க வேண்டும்;அப்படி ஒரே ஒரு முறை செய்தாலே அதன் பிறகு மீதி ரூ.99,000/-கடன் வெகு விரைவில் தீர்ந்துவிடும்;

கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்படி ஏராளமானவர்களின் கடன் கள் இந்த மைத்ரமுகூர்த்தத்தைப் பயன்படுத்தியதால் தீர்ந்தது.இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நேரம் இந்தியாவின் தென் மாநிலங்கள்,ஸ்ரீலங்கா,மாலத்தீவு,அந்தமான் தீவுகள் வரை வாழ்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அயல்நாடுகளில் வசிப்பவர்கள் இந்தியாவில் கடனை தீர்க்க விரும்பினால்,இந்திய நேரத்தில் அயல்நாட்டில் இருந்து பணத்தை அனுப்பலாம்;
வங்கிக் கடன் வாங்கியிருப்பவர்களும் இந்த நேரத்தைப் பயன்படுத்தலாம்;

கந்துவட்டி வாங்குபவர்களுக்கு இது பொருந்தாது;


10.12.16 சனி மதியம் 2.24 முதல் 4.24 வரை

25.12.16 ஞாயிறு காலை 5.20 முதல் 7.20 வரை

26.12.16 திங்கள் காலை 5.24 முதல் 7.24 வரை

27.12.16 செவ்வாய் காலை 5.28 முதல் 7.28 வரை

6.1.17 வெள்ளி  மதியம் 1.14 முதல் 3.14 வரை

3.2.17 வெள்ளி காலை 10.40 முதல் 12.40 வரை

18.2.17 சனி இரவு 10.24 முதல் 12.24 வரை

2.3.17 வியாழன் காலை 8.52 முதல் 10.52 வரை

25.3.17 சனி காலை 7.44 முதல் 9.44 வரை

25.3.17 சனி மதியம் 1.44 முதல் 3.44 வரை

25.3.17 சனி இரவு 7.44 முதல் 9.44 வரை

30.3.17 வியாழன் காலை 7.04 முதல் 9.04 வரை

இப்படிக்கு கை அருணமுனி. . .ஸ்ரீவில்லிபுத்தூர் 9092116990   9364231011

Friday, November 25, 2016

தினசரி வாழ்க்கையில் இன்றியமையாதவைகள் அனைத்தும் (செல்வ வளம் உள்பட) பெற தினமும் ஜபிக்க வேண்டிய பதிகம்!!!

திருநாகைக்காரோணம் 
கொல்லிக்கௌவாணம்
திருச்சிற்றம்பலம்
1 பத்து ஊர் புக்கு, இரந்து, உண்டு, பலபதிகம் பாடி, பாவையரைக் கிறி பேசிப் படிறு ஆடித் திரிவீர்;
செத்தார் தம் எலும்பு அணிந்து சே ஏறித் திரிவீர்; செல்வத்தை மறைத்து வைத்தீர்; எனக்கு ஒரு நாள் இரங்கீர்;
முத்து ஆரம், இலங்கி-மிளிர் மணிவயிரக் கோவை-அவை, பூணத் தந்து அருளி, மெய்க்கு இனிதா நாறும்
கத்தூரி கமழ் சாந்து பணித்து அருள வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
2 வேம்பினொடு தீம் கரும்பு விரவி எனைத் தீற்றி, விருத்தி நான் உமை வேண்ட, துருத்தி புக்கு அங்கு இருந்தீர்;
பாம்பினொடு படர் சடைகள் அவை காட்டி வெருட்டிப் பகட்ட நான் ஒட்டுவனோ? பல காலும் உழன்றேன்;
சேம்பினோடு செங்கழு நீர் தண் கிடங்கில்-திகழும் திரு ஆரூர் புக்கு இருந்த தீவண்ணர் நீரே;
காம்பினொடு நேத்திரங்கள் பணித்து அருள வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
3 பூண்டது ஓர் இள ஆமை; பொருவிடை ஒன்று ஏறி, பொல்லாத வேடம் கொண்டு, எல்லாரும் காணப்
பாண் பேசி, படுதலையில் பலி கொள்கை தவிரீர்; பாம்பினொடு படர் சடை மேல் மதி வைத்த பண்பீர்;
வீண் பேசி மடவார் கை வெள்வளைகள் கொண்டால், வெற்பு அரையன் மடப்பாவை பொறுக்குமோ? சொல்லீர்
காண்பு இனிய மணி மாடம் நிறைந்த நெடுவீதிக் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
4 விட்டது ஓர் சடை தாழ, வீணை விடங்கு ஆக, வீதி விடை ஏறுவீர்; வீண் அடிமை உகந்தீர்;
துட்டர் ஆயின பேய்கள் சூழ நடம் ஆடிச் சுந்தரராய்த் தூ மதியம் சூடுவது சுவண்டே?
வட்டவார் குழல் மடவார் தம்மை மயல் செய்தல் மா தவமோ? மாதிமையோ? வாட்டம் எலாம் தீரக்
கட்டி எமக்கு ஈவது தான் எப்போது? சொல்லீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
5 மிண்டாடித் திரி தந்து, வெறுப்பனவே செய்து, வினைக்கேடு பல பேசி, வேண்டியவா திரிவீர்;
தொண்டாடித் திரிவேனைத் தொழும்பு தலைக்கு ஏற்றும் சுந்தரனே! கந்தம் முதல் ஆடை ஆபரணம்
பண்டாரத்தே எனக்குப் பணித்து அருள வேண்டும்; பண்டு தான் பிரமாணம் ஒன்று உண்டே? நும்மைக்
கண்டார்க்கும் காண்பு அரிது ஆய்க் கனல் ஆகி நிமிர்ந்தீர் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
6 இலவ இதழ் வாய் உமையோடு எருது ஏறி, பூதம் இசை பாட, இடு பிச்சைக்கு எச்சு உச்சம் போது,
பல அகம் புக்கு, உழிதர்வீர்; பட்டோடு சாந்தம் பணித்து அருளாது இருக்கின்ற பரிசு என்ன படிறோ?
உலவு திரைக் கடல் நஞ்சை, அன்று, அமரர் வேண்ட உண்டு அருளிச் செய்தது, உமக்கு இருக்க ஒண்ணாது இடவே;
கலவ மயில் இயலவர்கள் நடம் ஆடும் செல்வக் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
7 தூசு உடைய அகல் அல்குல்-தூமொழியாள் ஊடல் தொலையாத காலத்து ஓர் சொல்பாடு ஆய் வந்து,
தேசு உடைய இலங்கையர் கோன் வரை எடுக்க அடர்த்து, திப்பிய கீதம் பாட, தேரொடு வாள் கொடுத்தீர்;
நேசம் உடை அடியவர்கள் வருந்தாமை அருந்த, நிறை மறையோர் உறை வீழிமிழலை தனில் நித்தல்
காசு அருளிச் செய்தீர்; இன்று எனக்கு அருள வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
8 மாற்றம் மேல் ஒன்று உரையீர்; வாளா நீர் இருந்தீர்; “வாழ்விப்பன்” என ஆண்டீர்; வழி அடியேன், உமக்கு;
ஆற்றவேல்-திரு உடையீர்; நல்கூர்ந்தீர் அல்லீர்; அணி ஆரூர் புகப் பெய்த அரு நிதியம் அதனில்-
தோற்றம் மிகு முக்கூற்றில் ஒரு கூறு வேண்டும்; தாரீரேல், ஒரு பொழுதும் அடி எடுக்கல் ஒட்டேன்;
காற்று அனைய கடும் பரிமா ஏறுவது வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
9 மண்ணுலகும் விண்ணுலகும் உ(ம்)மதே ஆட்சி; மலை அரையன் பொன் பாவை, சிறுவனையும், தேறேன்;
எண்ணிலி உண் பெரு வயிறன் கணபதி ஒன்று அறியான்; எம்பெருமான்! இது தகவோ? இயம்பி அருள் செய்வீர்!
திண்ணென என் உடல் விருத்தி தாரீரே ஆகில், திருமேனி வருந்தவே வளைக்கின்றேன்; நாளை,
“கண்ணறையன், கொடும்பாடன்” என்று உரைக்க வேண்டா கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
10 மறி ஏறு கரதலத்தீர்; மாதிமையேல் உடையீர்; “மா நிதியம் தருவன்” என்று வல்லீராய் ஆண்டீர்;
கிறி பேசி, கீழ்வேளூர் புக்கு, இருந்தீர்; அடிகேள்! கிறி உம்மால் படுவேனோ? திரு ஆணை உண்டேல்,
பொறி விரவு நல் புகர் கொள் பொன் சுரிகை மேல் ஓர் பொன் பூவும் பட்டிகையும் புரிந்து அருள வேண்டும்;
கறி விரவு நெய்சோறு முப்போதும் வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீரே! .
11 “பண் மயத்த மொழிப் பரவை சங்கிலிக்கும் எனக்கும் பற்று ஆய பெருமானே! மற்று ஆரை உடையேன்?
உள் மயத்த உமக்கு அடியேன் குறை தீர்க்க வேண்டும்; ஒளி முத்தம், பூண் ஆரம், ஒண் பட்டும், பூவும்,
கண் மயத்த கத்தூரி, கமழ் சாந்தும், வேண்டும் கடல் நாகைக்காரோணம் மேவி இருந்தீர்!” என்று
அண் மயத்தால் அணி நாவல் ஆரூரன் சொன்ன அருந்தமிழ்கள் இவை வல்லார் அமருலகு ஆள்பவரே .
திருச்சிற்றம்பலம்

தம்பதிகளிடையே இருக்கும் மனக்கசப்புகள் நீங்கிட தினமும் ஒரு முறை பாடவேண்டிய அல்லது ஜபிக்க வேண்டிய பதிகம்!!!

திருவாஞ்சியம் - இந்தளம்
திருச்சிற்றம்பலம்
1. வன்னி கொன்றை மதமத்தம் எருக்கொடு கூவிளம்
பொன் இயன்ற சடையில் பொலிவித்த புராணனார்,
தென்ன என்று வரிவண்டு இசைசெய் திரு வாஞ்சியம்,
என்னை ஆள் உடையான், இடம் ஆக உகந்ததே. 1

2. காலகாலர், கரிகான் இடை மாநடம் ஆடுவர்,
மேலர், வேலைவிடம் உண்டு இருள்கின்ற மிடற்றினர்,
மாலை கோல மதி மாடம் மன்னும் திரு வாஞ்சியம்
ஞாலம் வந்து பணியப் பொலி கோயில் நயந்ததே. 2

3. மேவில் ஒன்றர், விரிவுஉற்ற இரண்டினர், மூன்றும் ஆய்
நாவில் நாலர், உடல் அஞ்சினர், ஆறர், ஏழ் ஓசையர்,
தேவில் எட்டர் திரு வாஞ்சியம் மேவிய செல்வனார்;
பாவம் தீர்ப்பர், பழி போக்குவர், தம் அடியார்கட்கே. 3

4. சூலம் ஏந்தி வளர் கையினர்; மெய் சுவண்டுஆகவே
சால நல்ல பொடி பூசுவர்; பேசுவர், மாமறை;
சீலம் மேவு புகழால் பெருகும் திரு வாஞ்சியம்,
ஆலம் உண்ட அடிகள் இடம் ஆக அமர்ந்ததே. 4

5. கை இலங்கு மறி ஏந்துவர், காந்தள் அம்மெல்விரல்
தையல் பாகம் உடையார், அடையார் புரம் செற்றவர்,
செய்யமேனிக் கரிய மிடற்றார் திரு வாஞ்சியத்து
ஐயர்; பாதம் அடைவார்க்கு அடையா, அருநோய்களே 5

6. அரவம் பூண்பர்; அணியும் சிலம்பு ஆர்க்க அகம்தொறும்
இரவில் நல்ல பலி பேணுவர் நாண் இலர்; நாமமே
பரவுவார் வினை தீர்க்க நின்றார் திரு வாஞ்சியம்
மருவி ஏத்த மடமாதொடு நின்ற எம் மைந்தரே. 6

7. விண்ணில் ஆன பிறை சூடுவர், தாழ்ந்து விளங்கவே;
கண்ணினால் அநங்கன் உடலம் பொடி ஆக்கினார்;
பண்ணில் ஆன இசைபாடல் மல்கும் திரு வாஞ்சியத்து
அண்ணலார் தம் அடி போற்ற வல்லார்க்கு இல்லை,
அல்லலே. 7

8. மாடம் நீடு கொடி மன்னிய தென் இலங்கைக்கு மன்
வாடி ஊட வரையால் அடர்த்து அன்று அருள்செய்தவர்,
வேடவேடர், திரு வாஞ்சியம் மேவிய வேந்தரைப்
பாட நீடு மனத்தார் வினை பற்றுஅறுப்பார்களே 8

9. செடி கொள் நோயின் அடையார்; திறம்பார், செறு தீவினை;
கடிய கூற்றமும் கண்டு அகலும்; புகல்தான் வரும்
நெடிய மாலொடு அயன் ஏத்த நின்றார், திரு வாஞ்சியத்து
அடிகள், பாதம் அடைந்தார் அடியார், அடியார்கட்கே. 9

10. பிண்டம் உண்டு திரிவார், பிரியும் துவர் ஆடையார்,
மிண்டர் மிண்டு(ம்) மொழி மெய் அல; பொய் இலை,
எம் இறை;
வண்டு கெண்டி மருவும் பொழில் சூழ் திரு வாஞ்சியத்து
அண்டவாணன் அடி கைதொழுவார்க்கு இல்லை,
அல்லலே. 10

11. தென்றல் துன்று பொழில் சென்று அணையும் திரு
வாஞ்சியத்து
என்றும் நின்ற இறையானை உணர்ந்து அடி ஏத்தலால்,
நன்று காழி மறை ஞானசம்பந்தன செந்தமிழ்
ஒன்றும் உள்ளம் உடையார் அடைவார், உயர்வானமே. 11
திருச்சிற்றம்பலம்

பெண் சாபம் நீக்கும் பதிகம்!

தினமும் ஒருமுறை வீட்டில் அல்லது அருகில் இருக்கும் சிவாலயத்தில் பாடவும் அல்லது ஜபிக்கவும்.

திருவியலூர் - நட்டபாடை

திருச்சிற்றம்பலம்

1. குரவம் கமழ் நறு மென் குழல் அரிவை அவள் வெருவ,
பொரு வெங்கரி பட வென்று, அதன் உரிவை உடல் அணிவோன்,
அரவும், அலைபுனலும், இளமதியும், நகுதலையும்,
விரவும் சடை அடிகட்கு இடம் விரி நீர் வியலூரே.
2. ஏறு ஆர்தரும் ஒருவன், பல உருவன், நிலை ஆனான்,
ஆறு ஆர்தரு சடையன், அனல் உருவன், புரிவு உடையான்,
மாறார் புரம் எரியச் சிலை வளைவித்தவன், மடவாள்
வீறு ஆர்தர நின்றான், இடம் விரி நீர் வியலூரே.
3. செம் மென் சடை அவை தாழ்வு உற, மடவார் மனை தோறும்,
“பெய்ம்மின், பலி!” என நின்று இசை பகர்வார் அவர் இடம் ஆம்
உம்மென்று எழும் அருவித்திரள் வரை பற்றிட, உறை மேல்
விம்மும் பொழில் கெழுவும், வயல் விரி நீர் வியலூரே.
4. அடைவு ஆகிய அடியார் தொழ, அலரோன் தலை அதனில்
மடவார் இடு பலி வந்து உணல் உடையான் அவன் இடம் ஆம்
கடை ஆர்தர அகில், ஆர் கழை முத்தம் நிரை சிந்தி,
மிடை ஆர் பொழில் புடை சூழ் தரு விரி நீர் வியலூரே.
5. எண் ஆர்தரு பயன் ஆய், அயன் அவனாய், மிகு கலை ஆய்,
பண் ஆர்தரு மறை ஆய், உயர் பொருள் ஆய், இறையவனாய்,
கண் ஆர்தரும் உரு ஆகிய கடவுள் இடம் எனல் ஆம்
விண்ணோரொடு மண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே.
6. வசை வில்கொடு வரு வேடுவன் அவனாய், நிலை அறிவான்,
திசை உற்றவர் காண, செரு மலைவான் நிலையவனை
அசையப் பொருது, அசையா வணம் அவனுக்கு உயர் படைகள்
விசையற்கு அருள் செய்தான் இடம் விரி நீர் வியலூரே.
7. “மான், ஆர் அரவு, உடையான்; இரவு, உடையான், பகல் நட்டம்;
ஊன் ஆர்தரும் உயிரான்; உயர்வு இசையான்; விளை பொருள்கள்
தான் ஆகிய தலைவன்;” என நினைவார் அவர் இடம் ஆம்
மேல் நாடிய விண்ணோர் தொழும் விரி நீர் வியலூரே.
8. “பொருவார் எனக்கு எதிர் ஆர்!” எனப் பொருப்பை எடுத்தான் தன்
கரு மால் வரை கரம், தோள், உரம், கதிர் நீள் முடி, நெரிந்து,
சிரம் ஆயின கதற, செறி கழல் சேர் திருவடியின்
விரலால் அடர்வித்தான் இடம் விரி நீர் வியலூரே.
9. வளம்பட்டு அலர் மலர் மேல் அயன், மாலும், ஒரு வகையால்
அளம்பட்டு அறிவு ஒண்ணா வகை அழல் ஆகிய அண்ணல்,
உளம்பட்டு எழு தழல் தூண் அதன் நடுவே ஓர் உருவம்
விளம்பட்டு அருள் செய்தான், இடம் விரி நீர் வியலூரே.
10. தடுக்கால் உடல் மறைப்பார் அவர், தவர் சீவரம் மூடிப்
பிடக்கே உரை செய்வாரொடு, பேணார் நமர் பெரியோர்;
கடல் சேர்தரு விடம் உண்டு அமுது அமரர்க்கு அருள் செய்த
விடை சேர்தரு கொடியான் இடம் விரி நீர் வியலூரே.
11. விளங்கும் பிறை சடை மேல் உடை விகிர்தன் வியலூரை,
தளம் கொண்டது ஒரு புகலித் தகு தமிழ் ஞானசம்பந்தன்
துளங்கு இல் தமிழ் பரவித் தொழும் அடியார் அவர், என்றும்
விளங்கும் புகழ் அதனோடு, உயர் விண்ணும் உடையாரே.

திருச்சிற்றம்பலம்


Thursday, November 24, 2016

பேச்சு வராத குழந்தைகளுக்கு பேச்சு வரவும்,திக்கித் திக்கிப் பேசுபவர்கள் சரளமாகப் பேசவும்,பேச்சாற்றலை வளர்த்துக் கொள்ள விரும்புவோர்களும் தினமும் ஒருமுறை ஜபிக்க வேண்டிய பதிகம்!!!

திருக்கோலக்கா - தக்கராகம்
திருச்சிற்றம்பலம்
1. மடையில் வாளை பாய, மாதரார் குடையும் பொய்கைக் கோலக்கா உளான் சடையும், பிறையும், சாம்பல் பூச்சும், கீள் உடையும், கொண்ட உருவம் என்கொலோ?
2. பெண்தான் பாகம் ஆக, பிறைச் சென்னி கொண்டான், கோலக்காவு கோயிலாக் கண்டான், பாதம் கையால் கூப்பவே, உண்டான் நஞ்சை, உலகம் உய்யவே.
3. பூண் நல் பொறி கொள் அரவம், புன்சடை, கோணல் பிறையன், குழகன், கோலக்கா மாணப் பாடி, மறை வல்லானையே பேண, பறையும், பிணிகள் ஆனவே.
4. தழுக் கொள் பாவம் தளர வேண்டுவீர்! மழுக் கொள் செல்வன், மறி சேர் அம் கையான், குழுக் கொள் பூதப்படையான், கோலக்கா இழுக்கா வண்ணம் ஏத்தி வாழ்மினே!
5. மயில் ஆர் சாயல் மாது ஓர் பாகமா, எயிலார் சாய எரித்த எந்தை தன் குயில் ஆர் சோலைக் கோலக்காவையே பயிலா நிற்க, பறையும், பாவமே.
6. வெடிகொள் வினையை வீட்ட வேண்டுவீர்! கடி கொள் கொன்றை கலந்த சென்னியான், கொடி கொள் விழவு ஆர் கோலக்காவுள் எம் அடிகள், பாதம் அடைந்து வாழ்மினே!
7. நிழல் ஆர் சோலை நீலவண்டு இனம், குழல் ஆர், பண் செய் கோலக்கா உளான் கழலால் மொய்த்த பாதம் கைகளால் தொழலார் பக்கல் துயரம் இல்லையே.
8. எறி ஆர் கடல் சூழ் இலங்கைக் கோன்தனை முறை ஆர் தடக்கை அடர்த்த மூர்த்தி தன் குறி ஆர் பண் செய் கோலக்காவையே நெறியால் தொழுவார் வினைகள் நீங்குமே.
9. நாற்றமலர்மேல் அயனும், நாகத்தில் ஆற்றல் அணை மேலவனும், காண்கிலா, கூற்றம் உதைத்த, குழகன்-கோலக்கா ஏற்றன்-பாதம் ஏத்தி வாழ்மினே!
10. பெற்ற மாசு பிறக்கும் சமணரும், உற்ற துவர் தோய் உரு இலாளரும், குற்ற நெறியார் கொள்ளார் கோலக்காப் பற்றிப் பரவ, பறையும், பாவமே.
11. நலம் கொள் காழி ஞானசம்பந்தன், குலம் கொள் கோலக்கா உளானையே வலம் கொள் பாடல் வல்ல வாய்மையார், உலம் கொள் வினை போய், ஓங்கி வாழ்வரே.
திருச்சிற்றம்பலம்
அன்னை ஸ்ரீபாகம்பிரியாளுக்கு சமர்ப்பணம்!

கடன் தீர தினமும் சிவாலயத்தினுள் ஜபிக்க வேண்டிய பதிகம்!

திருஆவடுதுறை - நாலடிமேல் வைப்பு - காந்தாரபஞ்சமம்

திருச்சிற்றம்பலம்

1. இடரினும், தளரினும், எனது உறு நோய்
தொடரினும், உன கழல் தொழுது எழுவேன்;
கடல்தனில் அமுதொடு கலந்த நஞ்சை
மிடறினில் அடக்கிய வேதியனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு
இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 1
2. வாழினும், சாவினும், வருந்தினும், போய்
வீழினும், உன கழல் விடுவேன் அல்லேன்;
தாழ் இளந் தடம்புனல் தயங்கு சென்னிப்
போழ் இளமதி வைத்த புண்ணியனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு
இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 2
3. நனவினும், கனவினும், நம்பா! உன்னை,
மனவினும், வழிபடல் மறவேன்; அம்மான்!
புனல் விரி நறுங்கொன்றைப்போது அணிந்து,
கனல் எரி-அனல் புல்கு கையவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு
இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 3
4. தும்மலொடு அருந்துயர் தோன்றிடினும்,
அம் மலர் அடி அலால் அரற்றாது, என் நா;
கைம் மல்கு வரிசிலைக் கணை ஒன்றினால்
மும்மதில் எரி எழ முனிந்தவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு
இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 4
5. கையது வீழினும், கழிவு உறினும்,
செய் கழல் அடி அலால் சிந்தை செய்யேன்;-
கொய் அணி நறுமலர் குலாய சென்னி
மை அணி மிடறு உடை மறையவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு
இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 5
6. வெந்துயர் தோன்றி ஓர் வெரு உறினும்,
எந்தாய்! உன் அடி அலால் ஏத்தாது, என் நா;
ஐந்தலை அரவு கொண்டு அரைக்கு அசைத்த
சந்த வெண்பொடி அணி சங்கரனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு
இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 6
7. வெப்பொடு விரவி ஓர் வினை வரினும்,
அப்பா! உன் அடி அலால் அரற்றாது, என் நா;
ஒப்பு உடை ஒருவனை உரு அழிய
அப்படி அழல் எழ விழித்தவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு
இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 7
8. பேர் இடர் பெருகி, ஓர் பிணி வரினும்,
சீர் உடைக் கழல் அலால் சிந்தை செய்யேன்;
ஏர் உடை மணி முடி இராவணனை
ஆர் இடர் பட வரை அடர்த்தவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு
இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 8
9. உண்ணினும், பசிப்பினும், உறங்கினும், நின்
ஒண் மலர் அடி அலால் உரையாது, என் நா;கண்ணனும், கடி
கமழ் தாமரை மேல்
அண்ணலும், அளப்பு அரிது ஆயவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு
இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 9
10. பித்தொடு மயங்கி ஓர் பிணி வரினும்,
அத்தா! உன் அடிஅலால் அரற்றாது, என் நா;
புத்தரும் சமணரும் புறன் உரைக்க,
பத்தர்கட்கு அருள்செய்து பயின்றவனே!
இதுவோ எமை ஆளும் ஆறு? ஈவது ஒன்று எமக்கு
இல்லையேல்,
அதுவோ உனது இன் அருள்? ஆவடுதுறை அரனே! 10
11. அலை புனல் ஆவடுதுறை அமர்ந்த
இலை நுனை வேல்படை எம் இறையை,
நலம் மிகு ஞானசம்பந்தன் சொன்ன
விலை உடை அருந்தமிழ்மாலை வல்லார்,
வினை ஆயின நீங்கிப் போய், விண்ணவர் வியன் உலகம்
நிலை ஆக முன் ஏறுவர்; நிலம்மிசை நிலை இலரே. 11

திருச்சிற்றம்பலம்

அன்னை ஸ்ரீபாகம்பிரியாளுக்கு சமர்ப்பணம்!

பரமேஸ்வரனின் அருளால் பொருளாதாரத்தில் தன்னிறைவை எட்ட தினமும் பாட வேண்டிய பதிகம்!

திருஓணகாந்தன்தளி
இந்தளம்


திருச்சிற்றம்பலம்

1 நெய்யும் பாலும் தயிரும் கொண்டு நித்தல் பூசை செய்யல் உற்றார்;
கையில் ஒன்றும் காணம் இல்லை, கழல் அடீ தொழுது உய்யின் அல்லால்;
ஐவர் கொண்டு இங்கு ஆட்ட ஆடி, ஆழ் குழிப்பட்டு அழுந்துவேனுக்கு,
உய்யும் ஆறு ஒன்று அருளிச் செய்யீர் ஓணகாந்தன் தளி உளீரே! .
2 திங்கள் தங்கு சடையின் மேல் ஓர் திரைகள் வந்து புரள வீசும்
கங்கையாளேல், வாய் திற(வ்)வாள்; கணபதி(ய்)யேல், வயிறு தாரி;
அம் கை வேலோன் குமரன், பிள்ளை; தேவியார் கொற்று அடியாளால்;
உங்களுக்கு ஆட் செய்ய மாட்டோம் ஓணகாந்தன் தளி உளீரே! .
3 பெற்றபோழ்தும் பெறாத போழ்தும், பேணி உன் கழல் ஏத்துவார்கள்
“மற்று ஓர் பற்று இலர்” என்று இரங்கி, மதி உடையவர் செய்கை செய்யீர்;
அற்ற போழ்தும் அலந்த போழ்தும், ஆபற் காலத்து, அடிகேள்! உம்மை
ஒற்றி வைத்து இங்கு உண்ணல் ஆமோ? ஓணகாந்தன் தளி உளீரே! .
4 வல்லது எல்லாம் சொல்லி உம்மை வாழ்த்தினாலும், வாய் திறந்து ஒன்று
இல்லை என்னீர்; உண்டும் என்னீர்; எம்மை ஆள்வான் இருப்பது என், நீர்?
பல்லை உக்க படுதலையில் பகல் எலாம் போய்ப் பலி திரிந்து இங்கு
ஒல்லை வாழ்க்கை ஒழிய மாட்டீர் ஓணகாந்தன் தளி உளீரே! .
5 கூடிக்கூடித் தொண்டர் தங்கள் கொண்ட பாணி குறைபடாமே,
ஆடிப் பாடி, அழுது, நெக்கு, அங்கு அன்பு உடையவர்க்கு இன்பம் ஓரீர்;
தேடித்தேடித் திரிந்து எய்த்தாலும் சித்தம் என்பால் வைக்க மாட்டீர்;
ஓடிப் போகீர்; பற்றும் தாரீர் ஓணகாந்தன் தளி உளீரே! . வார் இருங்குழல், மை வாள் நெடுங்கண், மலைமகள் மது விம்மு கொன்றைத்-
தார் இருந் தடமார்பு நீங்காத் தையலாள் உலகு உய்ய வைத்த,
கார் இரும் பொழில், கச்சி மூதூர்க் காமக்கோட்டம் உண்டாக, நீர் போய்
ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே? ஓணகாந்தன் தளி உளீரே!
6 . வார் இருங்குழல், மை வாள் நெடுங்கண், மலைமகள் மது விம்மு கொன்றைத்-
தார் இருந் தடமார்பு நீங்காத் தையலாள் உலகு உய்ய வைத்த,
கார் இரும் பொழில், கச்சி மூதூர்க் காமக்கோட்டம் உண்டாக, நீர் போய்
ஊர் இடும் பிச்சை கொள்வது என்னே? ஓணகாந்தன் தளி உளீரே!
7 பொய்ம்மையாலே போது போக்கிப் புறத்தும் இல்லை; அகத்தும் இல்லை;
மெய்ம்மை சொல்லி ஆளமாட்டீர்; மேலை நாள் ஒன்று இடவும் கில்லீர்;
எம்மைப் பெற்றால் ஏதும் வேண்டீர்; ஏதும் தாரீர்; ஏதும் ஓரீர்;
உம்மை அன்றே, எம்பெருமான்? ஓணகாந்தன் தளி உளீரே!
8 வலையம் வைத்த கூற்றம் ஈர்வான் வந்து நின்ற வார்த்தை கேட்டு,
சிலை அமைத்த சிந்தையாலே திருவடீ தொழுது உய்யின் அல்லால்,
கலை அமைத்த காமச் செற்றக் குரோத லோப மதவர் ஊடு ஐ-
உலை அமைத்து இங்கு ஒன்ற மாட்டேன்-ஓணகாந்தன் தளி உளீரே!
9 வாரம் ஆகித் திருவடிக்குப் பணி செய் தொண்டர் பெறுவது என்னே?
ஆரம் பாம்பு; வாழ்வது ஆரூர்; ஒற்றியூரேல், உ(ம்)மது அன்று;
தாரம் ஆகக் கங்கையாளைச் சடையில் வைத்த அடிகேள்! உம்தம்
ஊரும் காடு(வ்); உடையும் தோலே ஓணகாந்தன் தளி உளீரே!
10 ஓ வணம்(ம்) ஏல் எருது ஒன்று ஏறும் ஓணகாந்தன் தளி உளார் தாம்
ஆவணம் செய்து, ஆளும் கொண்டு(வ்), அரை துகி(ல்)லொடு பட்டு வீக்கி,
கோவணம் மேற்கொண்ட வேடம் கோவை ஆக ஆரூரன் சொன்ன
பா வணத் தமிழ் பத்தும் வல்லார்க்குப் பறையும், தாம் செய்த பாவம் தானே.

திருச்சிற்றம்பலம்

அன்னை ஸ்ரீபாகம்பிரியாளுக்கு சமர்ப்பணம்!

Wednesday, November 23, 2016

நவக்கிரகங்களால் ஏற்படும் தோஷங்களை நீக்கிட தினமும் பாடவேண்டிய பதிகம்!

நம்மில் பெரும்பாலானவர்களுக்கு ஒரு கிரகம் அல்லது இரண்டு கிரகங்கள் மட்டுமே யோகங்கள் தருவதாக இருக்கும்;


மற்ற ஏழு கிரகங்களில் ஒன்றிரண்டைத் தவிர,அனைத்தும் நமது பூர்வ ஜன்மங்களின் வினைப்படி தீங்குகள் தரும்;அனைத்து கிரகங்களும் தரும் தீங்குகளே,வராக் கடனாகவும்,வாழ்க்கைத்துணையிடம் வாழ முடியாமலும்,சொத்துக்கள் இருந்தும் அனுபவிக்க முடியாமலும்,சொந்தமாக வீடு கட்ட முடியாமலும்,அனைவராலும் அவமானப்படும் விதமாகவும் நம்மில் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள்;அவர்களுக்காக அன்னை ஸ்ரீபாகம்பிரியாளின் அருளால் இதை தங்களுக்குச் சமர்ப்பிக்கின்றோம்;


தினமும் காலையில் ஒருமுறையும்,இரவில் ஒருமுறையும் ஜபித்து வரவேண்டும்;


சிவாலயத்தில் ஜபித்தால் மிகவும் விரைவான பலனை உணரலாம்;


திருக்கோளிலி - பழந்தக்கராகம்


திருச்சிற்றம்பலம்


1.நாள் ஆய போகாமே, நஞ்சு அணியும் கண்டனுக்கே
ஆள் ஆய அன்பு செய்வோம்; மட நெஞ்சே! அரன் நாமம்
கேளாய்! நம் கிளை கிளைக்கும் கேடு படாத் திறம் அருளிக்
கோள் ஆய நீக்குமவன்-கோளிலி எம்பெருமானே.
2.ஆடு அரவத்து, அழகு ஆமை, அணி கேழல் கொம்பு, ஆர்த்த
தோடு அரவத்து ஒரு காதன், துணை மலர் நல் சேவடிக்கே
பாடு அரவத்து இசை பயின்று, பணிந்து எழுவார் தம் மனத்தில்
கோடரவம் தீர்க்குமவன்-கோளிலி எம்பெருமானே.
3.நன்று நகு நாள்மலரால், நல் இருக்கு மந்திரம் கொண்டு,
ஒன்றி வழிபாடு செயல் உற்றவன் தன் ஓங்கு உயிர்மேல்
கன்றி வரு காலன் உயிர் கண்டு, அவனுக்கு அன்று அளித்தான்-
கொன்றைமலர் பொன் திகழும் கோளிலி எம்பெருமானே.
4.வந்த மணலால் இலிங்கம் மண்ணியின் கண் பால் ஆட்டும்
சிந்தை செய்வோன் தன் கருமம் தேர்ந்து சிதைப்பான் வரும் அத்
தந்தைதனைச் சாடுதலும், “சண்டீசன்” என்று அருளி,
கொந்து அணவும் மலர் கொடுத்தான்-கோளிலி எம்பெருமானே.
5.வஞ்ச மனத்து அஞ்சு ஒடுக்கி, வைகலும் நல் பூசனையால்,
“நஞ்சு அமுது செய்து அருளும் நம்பி” எனவே நினையும்
பஞ்சவரில் பார்த்தனுக்குப் பாசுபதம் ஈந்து உகந்தான்-
கொஞ்சுகிளி மஞ்சு அணவும் கோளிலி எம்பெருமானே.
6.தாவியவன் உடன் இருந்தும் காணாத தற்பரனை,
ஆவிதனில் அஞ்சு ஒடுக்கி, “அங்கணன்” என்று ஆதரிக்கும்
நா இயல் சீர் நமி நந்தியடிகளுக்கு நல்குமவன்-
கோ இயலும் பூ எழு கோல் கோளிலி எம்பெருமானே.
7.கல்-நவிலும் மால்வரையான், கார் திகழும் மாமிடற்றான்,
சொல்-நவிலும் மாமறையான், தோத்திரம் செய் வாயின் உளான்,
மின் நவிலும் செஞ்சடையான்; வெண்பொடியான், அம் கையினில்
கொல்-நவிலும் சூலத்தான்-கோளிலி எம்பெருமானே.
8.அந்தரத்தில்-தேர் ஊரும் அரக்கன் மலை அன்று எடுப்ப,
சுந்தரத் தன் திருவிரலால் ஊன்ற, அவன் உடல் நெரிந்து,
மந்திரத்த மறை பாட, வாள் அவனுக்கு ஈந்தானும்
கொந்து அரத்த மதிச் சென்னிக் கோளிலி எம்பெருமானே.
9.நாணம் உடை வேதியனும் நாரணனும் நண்ண ஒணாத்
தாணு, எனை ஆள் உடையான், தன் அடியார்க்கு அன்பு உடைமை
பாணன் இசை பத்திமையால் பாடுதலும் பரிந்து அளித்தான்-
கோணல் இளம்பிறைச் சென்னிக் கோளிலி எம்பெருமானே.
10.தடுக்கு அமரும் சமணரொடு தர்க்க சாத்திரத்தவர் சொல்
இடுக்கண் வரும் மொழி கேளாது, ஈசனையே ஏத்துமின்கள்!
நடுக்கம் இலா அமருலகம் நண்ணலும் ஆம்; அண்ணல் கழல்
கொடுக்ககிலா வரம் கொடுக்கும் கோளிலி எம்பெருமானே.
11.நம்பனை, நல் அடியார்கள் “நாம் உடை மாடு” என்று இருக்கும்
கொம்பு அனையாள் பாகன், எழில் கோளிலி எம்பெருமானை,
வம்பு அமரும் தண் காழிச் சம்பந்தன் வண் தமிழ் கொண்டு
இன்பு அமர வல்லார்கள் எய்துவர்கள், ஈசனையே.


திருச்சிற்றம்பலம்


ஸ்ரீபாகம்பிரியாள் அர்ப்பணம்

Sunday, November 20, 2016

ஒரு மாதத்திற்கு பணச்சிக்கல்களைத் தீர்த்து,பணப்புழக்கத்தை அதிகரிக்கும் ஒரு நாள்(தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்) வழிபாடு!!!





கார்த்திகை தேய்பிறை அஷ்டமி 21.11.16 திங்கட்கிழமை காலை 8 மணி முதல் 22.11.16 செவ்வாய்க்கிழமை காலை 7.46 வரை


 தேய்பிறை அஷ்டமியானது ஒவ்வொரு மாதமும் வருகிறது;  ஒரே நேரத்தில் ஈசனின் அருளையும்,அவரது அவதாரங்களில் முதன்மையான பைரவப் பெருமானின் அருளையும் பெறும் படியாக இந்தத் தேய்பிறை அஷ்டமி அமைந்திருக்கின்றது;


துலாம்,விருச்சிகம்,தனுசு,மேஷம்,சிம்மம் ராசியினர் சனியின் தாக்கத்தால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்;


துலாம் ராசியினர் 70% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
விருச்சிக ராசியினர் 100% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
தனுசு ராசியினர் 50% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
மேஷ ராசியினர் 40% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
சிம்ம ராசியினர் 25% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
விருச்சிகச் சனியால கஷ்டப்பட்டுக்கொண்டும்,கண்ணீர்ச் சிந்திக் கொண்டும் இருக்கின்றனர்;இதில் பலர் தினசரி ஒருவேளை சாப்பிடக் கூட வழியில்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்;



எனவே, வரும் தேய்பிறை அஷ்டமிக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்குச் சென்று வழிபடுவதன் மூலமாக ஒருமாதம்  வரை சனிபகவானின் தாக்கத்தில் இருந்து விடுபடுவார்கள்;



தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின்  உள்பிரகாரத்தில்


2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)


3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில்  மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்




5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)


6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)


8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்


12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)


13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.

17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்


19.ஸ்ரீசெல்வவிநாயகர்  கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்


20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)


21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை


23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

                                                        26.26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.


27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

                                                          28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.



30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.

31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

32.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

33.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

34.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.


இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது


ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ






அடுத்த தேய்பிறை அஷ்டமி:சதுர்முகி வருடம்,மார்கழி மாதம் 21.12.16 புதன் கிழமை

வீட்டிலேயே தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபட விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்; வாட்ஸ் அப்: 9092116990



வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்