ஆங்கிலத்தேதி 8 அல்லது 17 அல்லது 26 ஆம் தேதியில் பிறந்தவர்கள் மூலமாகவே
சனிபகவான் இந்த பூமியில் முக்கியமான திருப்புமுனைச் சம்பவங்களை நடத்துகின்றார்;
8 ஆம் தேதி பிறந்தவர்கள் மடாதிபதிகளாவார்கள்;அல்லது இன்றைய காலகட்டத்தில்
ஆன்மீக அமைப்பின் தலைவராக இருப்பார்கள்;
17 ஆம் தேதி பிறந்தவர்கள் சீர்திருத்தக்காரர்கள்;இவர்களது சீர்திருத்தம்
சமுதாயத்தின் மீது மகத்தான தாக்கத்தை உருவாக்கும்;அந்தத் தாக்கம் பல ஆண்டுகளுக்கு நீடிக்கும்;
26 ஆம் தேதி பிறந்தவர்கள் மாதச்சம்பளக் காரர்கள்;
மூன்று தேதியிலும் பிறந்தவர்களை சரியாக புரிந்து கொண்டவர்கள் ஓருவர்
அல்லது இருவர் மட்டுமே (அவர்களது வாழ்நாளில் )இருப்பார்கள்;
கும்ப லக்னம் அல்லது ராசி;மகர லக்னம் அல்லது ராசியில் பிறந்து 8 அல்லது
17 அல்லது 26 ஆம் தேதிகளில் பிறந்தவர்கள்,குறிப்பிட்ட ஆன்மீகச் சீர்திருத்ததிற்காக
இந்த பூமிக்கு அனுப்பப்பட்டவர்கள் என்று ஜோதிட சூட்சுமம் தெரிவிக்கின்றது;
மதம் சார்ந்த விஷயத்தில் இந்த தேதியில் பிறந்தவர்கள் ஈடுபட்டால்,கடும்
எதிர்ப்பின் மூலமாக பிரபலம் அடைவார்கள்;
இவர்களது செயல்பாடுகளால் இவர்களின் நண்பர்களின் தினசரி அணுகுமுறையே அடியோடு
மாறிவிடும்;
தனிமையை அதிகம் விரும்புவார்கள்;எல்லோராலும் தவறாகவே புரிந்து கொள்ளப்படுவார்கள்;
8 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு 17 அல்லது 26 ஆம் தேதி பிறந்தவர்களும்,
17 ஆம் தேதியில் பிறந்தவர்களுகு 8 அல்லது 26 ஆம் தேதியில் பிறந்தவர்களும்;
26 ஆம் தேதியில் பிறந்தவர்களுக்கு 17 அல்லது 8 ஆம் தேதியில் பிறந்தவர்களும்
மகத்தான உதவி செய்வார்கள்;
தமிழ்நாடு முழுவதும் மதிய உணவுத் திட்டத்தை பரவலாக்கியவர் எம்.ஜி.ஆர்
அவர்கள்:அவர்களது பிறந்த தேதி ஜனவரி 17;இதனால் பல கோடி ஏழைக்குழந்தைகள் பட்டினியால்
மரணம் ஆகாமல் காப்பாற்றப்பட்டது;
நான் கோவிலுக்குச் செல்வதில்லை என்று ஒருவர் சொன்னால் நீ என்ன நாத்திகவாதியா?
என்று கேட்பது இன்றும் தொடர்கின்றது;1964 வரை வாழ்ந்த ஈ.வே.ரா.வின் நாத்திகப்பிரச்சாரம்
இன்றும் சமுதாயத்தின் மீது தாக்கத்தை செலுத்துகின்றது என்பதற்கு இதுவே ஆதாரம்;
ஆர்.எஸ்.எஸ். என்ற பெயரில் ஒரு இயக்கம் 1925 முதல் இந்தியா முழுவதும்
செயல்பட்டு வருகின்றது;எண்கணிதப்படி,ஆர்.எஸ்,எஸ். என்ற வார்த்தைகளின் கூட்டணி 8 ஆக
வருவதால் மிகவும் அதிகமான விமரிசனத்தை இந்த இயக்கம் 1925 முதல் இன்று வரையிலும் எதிர்கொண்டு
வருகின்றது;இதன் தாக்கம் மக்கள் மத்தியில் மகத்தான மாற்றத்தை கொண்டு வருகின்றது;தெய்வ
பக்தியாக மட்டும் வாழ்ந்தால் இனி நமது நாட்டில் நிம்மதியாக வாழ முடியாது;தேசபக்தியும்
தெய்வபக்தியும் இந்தியாவில் பிறந்த ஒவ்வொரு இந்துவுக்கும் தேவை என்பதை மக்களின் உணர்வில்
ஊட்டிக் கொண்டே இருக்கின்றது;
எந்த ஒரு நாட்டிலும் அந்த நாட்டின் அரசாங்கத்திற்கு எதிராகப் போராடுபவர்களுக்கு
வேறு ஒரு நாடு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ஆதரவு தந்தே தீரும்;ஆனால்,யாருடைய ஆதரவையும்
ஏற்காமல் தனி ஆளாகப் போராடியவர் இலங்கைத் தமிழ் மக்களுக்காகப் போராடியவர் பிரபாகரன்
அவர்கள்;இவர் பிறந்ததும் அக்டோபர் 17
இவருக்கு பக்கபலமாக இருந்த தமிழ்நாட்டின் அரசியல்வாதி வைகோ அவர்களின்
பிறந்த தேதி 8
ஒரு சாதாரண மனிதன்,திடீரென முதல் அமைச்சர் ஆனால்,இந்த மாநிலம் எப்படி
அதை எதிர்கொள்ளும் என்பதை திரைப்படமாக இயக்கி வெளியிட்டவர் டைரக்டர் ஷங்கர்;இவரது பிறந்த
தேதி 17;இப்படமும்,இவரது பல திரைப்படங்களும் சமுதாயத்தில் பெரும் தாக்கத்தை உருவாக்கி
வருகின்றன;
அதிகம் பேசாமலும்,அதிகம் விளக்கம் தராமலும் தமது அமைதியான செயல்பாடுகளால்
நமது நாட்டிற்கு என்று ஒரு சுயமரியாதையை உருவாக்கி வருபவர் நமது இன்றைய பிரதமர் மோடி
அவர்கள் பிறந்ததும் நவம்பர் 17;
இவர் உருவாக்கும் சீர்திருத்தம்,நமது நாடு பற்றி தவறாகப்
புரிந்து கொண்டிருந்த உலக நாடுகள்,இனி மரியாதையாகப் பார்க்க ஆரம்பித்திருக்கின்றன;இந்த
மாற்றம் நமது நாட்டை வல்லராசகவும்,நம் ஒவ்வொருடைய வருமானத்தை பல மடங்கு அதிகப்படுத்தும்
விதமாகவும் இருக்கப் போகின்றது;
அக்டோபர் 8,2016 ஆம் தேதி சனிக்கிழமை வருவதால்,அதை மனதில் கொண்டு எட்டாம்
எண்காரர்களுக்காவே எழுதப்பட்டது இந்த கட்டுரை!
எண்கள் உலகை ஆளுகின்றன என்பது நியூமராலஜிப் பழமொழி!
எண்களில் பிறக்கும் ஆத்மாக்கள் மூலமாக நவக்கிரகங்கள் தமது பணியைத் துல்லியமாகச்
செய்கின்றன என்பதே ஆன்மீக மற்றும் ஜோதிடச் சூட்சுமம்!
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ
No comments:
Post a Comment