120 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ஜன்ம நட்சத்திர ஆராதனை பவுர்ணமி விழா
15.10.16 சனிக்கிழமை அன்று விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையம் தாலுகா,சோழாபுரம் கிராமத்தில்
அமைந்திருக்கும் அருள்மிகு குழல்வாய்மொழி அம்பாள் சமேத விக்கிரபாண்டீஸ்வரர் திருக்கோவிலில்
காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை இனிதே நிறைவு பெற்றது;
தத்புருட சிவம்,சிவபூசைச் செல்வர்,செந்தமிழ் வேள்வி வித்தகர்,சிவ.கணேசன்
சிவாச்சாரியார் அவர்கள் தலைமையில் சிவவேள்வியும்,திருமுறை ஓதுதலும் நடைபெற்றது;கலசங்கள்
ஏந்தி சிவசக்தியை பக்தர்கள் வலம் வந்து,ஜன்ம நட்சத்திர மரக்கன்றுகளை தமிழ்நாடு முழுவதும்
வந்திருந்த பக்தர்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் நட்டார்கள்;(ஒரே நட்சத்திரத்தில்
பலர் வந்திருந்தமையால்,அவர்களில் ஒருவர் வீதம் 20 நட்சத்திரக்காரர்கள் 20 பேர் தேர்வு
செய்யப்பட்டார்கள்)
பஞ்சவாத்தியங்கள் முழங்க உச்சிக்கால பூசையும்,சாயரட்சை பூசையும் சிறப்பாக
நடைபெற்றது;பாரத தேசம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தந்திருந்தார்கள்;வர இயலாதவர்கள்,தமது
பெயர்,ஜன்ம நட்சத்திரம்,வசிக்கும் ஊர் மற்றும் நிறுவனங்களின் பெயரை சொல்லி அர்ச்சனை
செய்ய வேண்டியிருந்தார்கள்;தினப்பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6 மணி வரையிலும் அவர்களுக்கும்,இந்த
விழாவில் முன்பதிவு செய்துவிட்டு கலந்து கொண்டவர்களுக்கும் பெயர்,ஜன்ம நட்சத்திரம்,வசிக்கும்
ஊர் சொல்லி அர்ச்சனை செய்யப்பட்டது;சிலருக்கு ஜன்ம நட்சத்திரமும்,ராசியும் தெரியாமல்
இருந்தது;அவர்களது பெயரும்,வசிக்கும் ஊரும் சொல்லி அர்ச்சனை செய்யப்பட்டது;7 நட்சத்திரங்களுக்கு
மட்டும் இந்த 15.10.16 தாராபலம் இல்லாத நாளாக இருந்தபடியால்,இந்த 7 நட்சத்திர மரக்கன்றுகள்
மட்டும் வேறு ஒரு நாளில் நட முடிவு செய்யப்பட்டுள்ளது;
120 வருடங்களுக்குப் பிறகு வந்த
இந்த ஜன்ம நட்சத்திர ஆராதனை விழாவின் கதிர்வீச்சு 16.10.16 முதல் அடுத்த 9 நாட்கள்
வரை தினமும் 10% குறைந்து கொண்டே வரும்;இதில் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் 7 நட்சத்திரங்களுக்கு
மட்டும் தாராபலம் அதிகரிக்கும்;அந்த நாளில் மீதி 7 ஜன்ம நட்சத்திர மரக் கன்றுகள் நடப்படும்;
மதியமும்,இரவிலும் அன்னதானம் வழங்கப்பட்டது;நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை
மஹாவில்வம் பவுண்டேசன் உறுப்பினர்களும்,தன்னார்வலர்களும் சிறப்பாக செய்திருந்தார்கள்;
ஓம் மஹாதேவசித்த குரு போற்றி! போற்றி!! போற்றி!!!
No comments:
Post a Comment