15.10.16 சனிக்கிழமை அன்று வரும் புரட்டாசி பவுர்ணமிக்கு ஜன்ம நட்சத்திர
ஆராதனை பவுர்ணமி என்று பெயர்;இந்த நாளில் விருதுநகர் மாவட்டம்,ராஜபாளயம் தாலுகா,சோழாபுரம்
கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்நிறை குழல்வாய்மொழி அம்பாள் சமேத விக்கிரபாண்டீஸ்வரர்
திருக்கோவிலில் ஜன்ம நட்சத்திர ஆராதனை பவுர்ணமி விழா நடைபெற இருக்கின்றது;
இங்கே,அருள்நிறை
குழல்வாய்மொழி அம்பாள் சன்னதிக்கு அருகில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சித்தர் ஜீவசமாதியாகி
உள்ளார்;இவரது பெயர் மஹாதேவசித்தர் !
இவரது அருளாணையின் படி இந்த ஜன்ம நட்சத்திர ஆராதனை பவுர்ணமி விழா நடைபெற
இருக்கின்றது;யாரெல்லாம் இந்த விழாவில் கலந்து கொள்கின்றார்களோ,அவர்களுடைய அனைத்து
கர்மவினைகளும் நீங்கிவிடும்;
இந்த விழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் தமது பெயர்,ஜன்ம நட்சத்திரம்,தற்போது
வசிக்கும் ஊர் ஆகிய விபரங்களை 9629439499 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்.அனுப்பி முன்
பதிவு செய்து கொள்ள வேண்டும்;எந்த விதமான கட்டணங்களும் கிடையாது;சாதாரண எஸ்.எம்.எஸ்.அனுப்பும்
படி வேண்டிக் கொள்கின்றோம்;
15.10.16 சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை 1 ஆம் திருமுறை ஓதுதல்(ஐந்து
முக ருத்ராட்சம் இரண்டு கொண்டு வருக;சைவத் திருமுறை ஒதும்போது இரு உள்ளங்கைகளிலும்
தலா ஒரு ருத்ராட்சம் வைத்து கைகளை மடக்கி வைத்து பாடுவது மிகவும் நன்று;)
காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை வேள்வி பூஜை
மதியம் 11.30 மணி முதல் 12 மணி
வரை பஞ்சவாத்தியங்கள் முழங்க ஜன்ம நட்சத்திர மரக்கன்றுகள் நடுதல்
மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை
மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை அன்னதானம் வழங்குதல்(தொலைதூர மாநிலங்களிலும்,அயல்நாடுகளிலும்
வசிப்பவர்கள் அன்னதானத்தில் பங்கேற்கலாம்.இது தொடர்பாக மேலும் விபரம் அறிய வாட்ஸ் அப்
எண்:9092116990 ஐ தொடர்பு கொள்ளவும்)
மதியம் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரை ஓய்வு
மாலை 4 மணி முதல் 5 மணி வரை சாயரட்சை பூஜை
மாலை 5 மணி முதல் 6 வரை திருமுறைப்பதிகங்கள் பாடுதல்
மாலை 6.30 முதல் 7.30 வரை இரவு அன்னதானத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்;
நிகழ்ச்சி நிறைவடைந்ததும்,வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும்,வேறு எவர்
வீட்டிற்கும் செல்லாமலும் அவரவர் வீடுகளுக்குச் செல்வது அவசியம்;இதன் மூலமாக ஜன்ம நட்சத்திர
ஆராதனை விழாவின் முழு சிவபுண்ணியமும் கலந்து கொள்பவர்களுக்கு கிட்டும்;
குறிப்பு:கோவிலுக்கு அருகில் எந்தவிதமான கடைகளும் கிடையாது;கிராமப்புறத்தில்
இருக்கும் ஆலயம் என்பதால்,வருபவர்கள் அதற்கு ஏற்றாற்போல தயாராகி வருக!
கோவிலின் இருப்பிடம்:
தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் இருந்து வருபவர்களுக்கு:
மதுரை டூ ராஜபாளையம்
ராஜபாளையம் டூ சங்கரன் கோவில் சாலையில்(புதிய பேருந்து நிலையம் வழியாக)
8 கி.மீ.பயணித்தால் சோழாபுரம் கிராமத்தை அடையலாம்;
தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இருந்து வருபவர்களுக்கு:
சங்கரன் கோவில் வந்துவிடவேண்டும்;அங்கிருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில்
கரிவலம் வந்த நல்லூர் கடந்து முறம்பு என்ற கிராமத்தை அடைய வேண்டும்;அங்கிருந்து ராஜபாளையம்
சாலையில் ஒரு கி.மீ.தொலைவில் பாலத்திற்கு மேற்குப்புறம் ஆலயம் அமைந்திருக்கின்றது;
$இந்தியா முழுவதும் இருந்து இந்த அரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏராளமான
அன்பர்கள் முன்பதிவு செய்துள்ளார்கள்;அவர்கள் அனைவரையும் வருக! வருக! வருக!!! என்று
மஹாவில்வம் பவுண்டேஷன் வரவேற்கின்றது;
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் மஹாதேவாய நமஹ
No comments:
Post a Comment