Tuesday, March 8, 2016

நமது பொருளாதாரத் தன்னிறைவை எட்ட வைக்கும் தேய்பிறை சிவராத்திரி (அண்ணாமலை) கிரிவலம்!!!


மஹாசிவராத்திரியில் இருந்து தொடர்ந்து 12 தேய்பிறை சிவராத்திரிகளுக்கு அண்ணாமலை கிரிவலம் சென்றால்,நமது ஜனன ஜாதகத்தில் அமைந்திருக்கும் எப்பேர்ப்பட்ட தோஷங்களும் நசிந்து போய்,பொருளாதாரத்தில் தன்னிறைவை எட்டிவிடுவோம்;அண்ணாமலையாரின் அருட்பார்வை அப்பேர்ப்பட்ட சக்தியுடையது;

அசைவம் சாப்பிடுவதால்,நாம் செய்யும் வழிபாடு,மந்திரஜபம்,அன்னதானம்,ருத்ராட்சதானம்,கோதானம்,
உழவாரப்பணி போன்றவைகளின் பலன் நம்மை வந்து சேராது;மது அருந்துவதாலும்,தொடர்ந்து போதைப் பொருட்களைப் பயன்படுத்துவதாலும் இதே நிலைதான்;

இவைகளைக் கைவிட்டுவிட்டு,தேய்பிறை சிவராத்திரி கிரிவலம் செல்வது அவசியம்;

அடுத்த ஒராண்டுக்கான தேய்பிறை சிவராத்திரி நாட்களை இங்கே பட்டியலிட்டிருக்கிறோம்;இவைகளை பிரிண்ட் அல்லது சேவ் செய்து கொண்டு விடாமுயற்சியாக அண்ணாமலை சென்று கிரிவலம் முடிக்கவும்;
இரட்டைப்பிள்ளையார் கோவிலில் இரண்டு தேங்காய்களை சூறைத் தேங்காயாக விட்டுவிட்டு,அவர்களை(இரண்டு விநாயகர்கள் அல்லவா?) வழிபட்டுவிட்டு,தேரடி முனீஸ்வரர் ஆலயத்திற்கு வரவேண்டும்;அவரை வழித்துணைக்கு அழைத்துக் கொண்டு(மனதால் நினைத்து அவரிடம் வேண்டவேண்டும்) கிழக்குக் கோபுர வாசலில் நின்று அண்ணாமலையாரிடம் மனம் உருகி வேண்டிக் கொள்ள வேண்டும்;பிறகே கிரிவலம் செல்லவேண்டும்;பூத நாராயணப் பெருமாள் கோவிலில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்;இது ஒரு கிரிவல முறை;


சித்தர்கள் கூறும் கிரிவலமுறை: தெற்குக் கோபுர வாசலில் அருகில் அமைந்திருக்கும் பிரம்ம லிங்கத்தில் கிரிவலத்தைத் துவங்க வேண்டும்;

தெற்குக் வாயில் வழியாக வெளியே வரவேண்டும்;கிரிவலம் வந்து,அனைத்து லிங்கங்களையும் 15 நிமிடம் வரையில் மனப்பூர்வமாக வழிபடவேண்டும்;அனைத்து லிங்கங்களின் வாசலில் இருந்து அண்ணாமலையை தரிசித்து நமது கோரிக்கைகளை நினைத்துக் கொள்ள வேண்டும்;பூத நாராயணப் பெருமாள் சன்னதியில் கிரிவலத்தை நிறைவு செய்ய வேண்டும்;(இந்த கோவில் இரட்டைப் பிள்ளையார் கோவிலுக்கு மிக அருகில் அமைந்திருக்கின்றது)

கிரிவலத்தை முடித்தப் பின்னர்,கோவிலில் மூலவரின் உள்பிரகாரத்தில் இருக்கும் துர்வாசமகரிஷியை வணங்கவேண்டும்;அவரிடம் முறைப்படி கிரிவலம் முடித்துவிட்டு வந்துள்ளதாக மானசீகமாகத் தெரிவிக்க வேண்டும்;அதன் பிறகே,அண்ணாமலையாரையும்,உண்ணாமுலையம்மாளையும் தரிசிக்க வேண்டும்;இப்படிச் செய்தால்,துர்வாசரின் அருள் நமக்குக் கிட்டும்;

கிரிவலம் வராமல் அண்ணாமலையாரையும்,உண்ணாமுலையம்மனையும் தரிசனம் செய்தால்,முழுப்பலன் கிட்டாது;

சில நாட்களில் தேய்பிறை சிவராத்திரி பகல் பொழுதிலேயே தோன்றி இரவுப் பொழுது வரும் முன்பே நிறைவாகி விடும்;அந்த நாளில் பகலில் தான் கிரிவலம் செல்ல வேண்டும்;

5.4.16 செவ்வாய் இரவு 9.48 முதல் 6.4.16 புதன் இரவு 7.38 வரை;(செவ்வாய் இரவு கிரிவலம் செல்லலாம்;அல்லது புதன் இரவு 7.38க்குள் கிரிவலத்தை நிறைவு செய்துவிடவேண்டும்)

5.6.16 வியாழன்

3.6.16 வெள்ளி

2.7.16 சனி இரவு 9.10 முதல் 3.7.16 ஞாயிறு இரவு 7.26 வரை

1.8.16 விடிகாலை 4.16 முதல் நள்ளிரவு(பின்னிரவு)3.48 வரை

29.8.16 திங்கள் மாலை 4.05 முதல் 30.8.16 செவ்வாய் மாலை 3.16 வரை

28.9.16 புதன் பின்னிரவு(வியாழன் அதிகாலை)3.46 முதல் 29.9.16 வியாழன் பின்னிரவு(வெள்ளி அதிகாலை) 4.28 வரை

28.10.16 வெள்ளி இரவு 7.35 முதல் 29.10.16 சனி இரவு 9.05 வரை

27.11.16 ஞாயிறு மதியம் 1.44 முதல் 28.11.16 திங்கள் மதியம் 3.52 வரை

27.12.16 செவ்வாய் காலை 9.18 முதல் 28.12.16 புதன் காலை 11.12 வரை

26.1.17 வெள்ளி

24.2.17 வெள்ளி இரவு 9.12 முதல் 25.2.17 சனி இரவு 9.14 வரை

26.3.17 ஞாயிறு

கிரிவலம் துவங்கியதில் இருந்து,கிரிவலம் நிறைவு செய்து அண்ணாமலையாரையும், உண்ணாமுலையம்மனையும் தரிசனம் செய்து முடிக்கும் வரையிலும் ஓம் அருணாச்சலாய நமஹ என்றோ அல்லது ஏதாவது ஒரு சிவமந்திரத்தையோ ஜபித்துக் கொண்டே வரவேண்டும்;

ஓம் அருணாச்சலாய நமஹ என்று ஒருமுறை ஜபித்தால்,3,00,00,000 முறை ஒம் நமச்சிவாய ஜபித்தைமைக்கான புண்ணியம் கிட்டும் என்பது அண்ணாமலயாரின் வாக்கு!!!


No comments:

Post a Comment