Tuesday, March 15, 2016

இளைய தலைமுறையினருக்கு இந்து தர்மம் பாகம் 1


உலகம் தோன்றிய போதே நமது சனாதனதர்மம் எனப்படும் இந்து தர்மம் தோன்றிவிட்டது;உலகம் தோன்றி சுமாராக 5,00,00,000 ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை நவீன அறிவியல் ஆய்வுகளும் நிரூபித்துவிட்டன;

நமது இந்து தர்மத்தின் பெருமைகளை சித்தர்கள்,மகான் கள்,துறவிகள்,சாதுக்கள்,புலவர்கள்,துறவு வாழ்க்கை வாழ்ந்த மன்னர்கள் முற்காலத்தில் ஓலைச்சுவடிகளாகவும்,கல்வெட்டுக்களாகவும்,கோவில் சிற்பங்களாகவும்,கோவில்களாகவும் படைத்துவைத்தனர்;

2,000 ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்ட திருக்குறளின் கருத்துக்கள் இன்றைய நம்முடைய வாழ்க்கைக்கும் பொருந்தி வருகின்றது;அதனால் தான் பிரிட்டனின் நிர்வாகப் படிப்புகளிலும் பகவத் கீதையோடு திருக்குறளையும் சேர்த்துள்ளனர்;

2,00,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டின் எல்லை அண்டார்டிகா வரை பரவியிருந்தது;அதற்கு லெமூரியா என்றும்,குமரிக் கண்டம் என்றும் பெயர் வைத்தோம்;200 ஆண்டுகளில் தொடர்ந்து 6 முறை வந்த ஆழிப்பேரலையால்,லெமூரியக் கண்டம் படிப்படியாக அழிந்தது; இந்த 200 ஆண்டுகளில் ஒரு பகுதி லெமூரியத் தமிழர்கள் கிழக்கு நோக்கி ஓடினர்;அவர்கள் இன்றும் ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் பழங்குடியினராக வாழ்ந்துவருகின்றனர்;

ஒரு பகுதியினர் மேற்கு நோக்கி இடப்பெயர்ச்சியாகி,இன்றைய எகிப்தில் குடியேறினர்;அவர்களே பிரமீடுகளை கட்டினர்;மதுரை மீனாட்சி அம்மனின் ஆணையின் பேரில் என்று கூறியவாறே எகிப்தில் ஆட்சி செய்துள்ளனர்;வடக்கே இடப்பெயர்ச்சி ஆனவர்கள் இன்றைய இலங்கை,தமிழ்நாடு,கேரளாவில் குடியேறினர்;தெற்கு நோக்கிச் சென்றவர்கள் அளவற்ற குளிரினால் மாண்டனர்;

குமரிக்கண்டத்தில் இருந்து இந்த மக்கள் மூலமாக எகிப்துக்குப் பயணித்த சில பல கலைகள் இன்று பரமரகசியமாக ஒரே ஒரு குழுவினரால் மட்டும் பாதுகாக்கப்படுகின்றன; அங்கே இருந்து கற்றுக் கொண்ட சிலபல கலைகளைக் கொண்டே இன்று ஒரு சிறு குழுவினர் ஒட்டு மொத்த உலகத்தையும் நிழலாக ஆட்டிப் படைக்கின்றனர்;இதற்கான ஆதாரங்கள் இன்று பழையபுத்தகக் கடைகளில் மக்கிக் கொண்டிருக்கின்றன;

ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளாய்டை வைத்துக் கொண்டு நாம் தேடும் கருத்தை கூகுளில் தேடுவதோடு சரி;ஒருவரது தேடல் ஞானம் முடிந்துவிட்டது;ஆனால்,அது மட்டும் ஒருவரை எக்ஸ்பர்ட் ஆக்கிவிடாது;என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்;

20 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் அல்லது 30 ஆண்டுகளாக ஏதாவது ஒரு துறை சார்ந்த அறிவைத் தேடி நேரடியாகத் தேடலில் ஈடுபட்டு,அதற்குரிய கருத்தரங்கு,பயிற்சி முகாம்,ஆஸ்ரமத்தில் கற்றுக் கொண்ட ஞானம் இவைகளை(ஜோதிடம்,சரக்கலை,பஞ்சபட்சி சாஸ்திரம்,சம்ஸ்க்ருதம்,வாசியோகம்,நோக்கு வர்மம்,வர்மக் கலை,மூலிகைகள் பற்றிய அறிவை வெளிப்படுத்தும் சித்த மருத்துவம்,ஆயுர்வேதம்,வாஸ்து சாஸ்திரம்,இயற்கை மருத்துவம்,இயற்கை நலவாழ்வு,மாடித் தோட்டம்,சிற்பக் கலை,கரகாட்டம்,சமையற்கலை,சித்தர்களின் கல்லாடம் என்ற கலை,சிலம்பக் கலை,145 விதமான தியான முறைகள்,ஆல்பா மைண்டு பவர்,அஸ்டிரால் ட்ராவல்,டாரட் ஜோதிடம்,ஹீலிங் பவர்,அக்யூ ஹீலிங்,ஆவியுலக ஆராய்ச்சிகள்,முற்பிறப்பினை அறியும் கலை. . .) கொண்டு உரிய துறையில் பல லட்சம் தமிழர்கள்  வருமானம் பார்த்து வருகின்றனர்;

தமது அனுபவங்களை இந்தத் துறையில் இருப்பவர்கள் 1970 கள் வரையிலும் அவ்வளவு சுலபமாக பிறரிடம் பகிர்ந்து கொள்வது கிடையாது;ஏனெனில்,அப்போது விசுவாசம் நிறைந்த சீடர்கள் கிடைத்தார்கள்;பொறுப்புள்ள குரு நாதர்களும் இருந்தார்கள்;

தற்போது அப்படி இல்லை;எனவே,தமது அனுபவங்களை மிக எளிமையாக எழுதி வலைப்பூவிலும், முகனூலும்  வெளியிட்டுவருகின்றனர்;இதன் மூலமாக ஜோதிடம்,சித்தமருத்துவம்,இயற்கை மருத்துவம்,வாஸ்து,மந்திர ஜபம்,பக்தியுணர்வு,மாந்திரீகம்,நல்ல மாந்திரீகம்(அஷ்ட கர்மாக்கள்) போன்றவைகளை தமது தொழிலாகக் கொண்டவர்களும்,ஆர்வமாகக் கொண்டவர்களும் அறிமுகமாகத் துவங்கினர்;

ஆனால்,அந்தந்தத் துறை சார்ந்த கருத்துக்களின் ஆழத்தை உணர்ந்தவர்கள் ஒரு லட்சம் முகனூல் வாசகர்களில் ஒருவர் கூட இல்லை என்பது தான் சோகம்;

இவைகள் அனைத்தையும் ஒருவரால் கூகுள் மூலமாக மட்டுமோ அல்லது முகனூல் மூலம் மட்டுமோ அல்லது யுட்யூப் வீடியோ மூலமாக மட்டுமோ ஒருபோதும் கற்றுக் கொள்ள முடியாது;அதற்குரிய கலையில் எக்ஸ்பர்டாக இருப்பவரிடம் நேரடியாகச் சென்று அவருடன் சில மாதங்கள் அல்லது வருடங்கள் தங்கிக் கற்றுக் கொண்டால் மட்டுமே அக்கலையை கற்றுக் கொள்ள முடியும்.

ஆனால்,2000 முதல் நேரடியாக ஒருவரை ஒருவர் சந்திப்பதை குறைக்கும் விதமான கருவிகள் தான் புழக்கத்தில் வர ஆரம்பித்துள்ளன;முகம் பார்த்துப் பேசும் செல்போன் வந்தப் பின்னர் ‘சக மனிதனைப் புரிந்து கொள்வது’ குறையத் துவங்கியிருக்கின்றது;

எது உண்மையான கல்வி?
மாதச் சம்பளம் ரூ.2,00,000/- கிடைக்க எதைப் படிக்கிறோமோ அதுவா உண்மையான கல்வி?
இல்லவே இல்லை!

அது பொருளாதாரத்தில் சுதந்திரத்தை மட்டும் தான் தரும்;அல்லது பொருளாதாரத்தில் தன்னிறைவைத் தரும்;

சக மனிதர்களைப் புரிந்து கொள்வதை எந்தப் பாடத்திட்டம் புகட்டுகிறதோ,அதுவே உண்மையான கல்வி!சென்னை அடையாறு பகுதியில் இருக்கும் தி ஸ்கூல் என்ற தனியார் அமைப்பில் மட்டுமே இப்படிப்பட்ட கல்வி இன்று இருக்கின்றது;

கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படிப்பட்ட கல்வியே நமது பாரததேசம் முழுவதும் இருந்தது;இன்றோ இப்படிப்பட்ட கல்வி இங்கிலாந்திலும்,ஜெர்மனியிலும் மட்டுமே இருக்கின்றது;இப்படிப்பட்ட கல்வி நமது நாட்டின் கல்வித் திட்டத்திற்குள் நுழைந்துவிடாமல் தடுப்பதை இந்த நாடுகள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன;அளவற்ற பணம்,என்.ஜி.ஓக்கள்,தமக்கு ஆதரவான மதவாதிகள்,பணம் கொடுத்தால் எதையும் செய்யும் அரசியல்வாதிகள் போன்றவர்களைக் கொண்டு தரமான கல்வி நமது நாட்டு மக்களுக்குக் கிடைக்காமல் செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்கின்றனர்;

இன்றைய அரசியல் குழப்பம்,ஜாதிக் கட்சிகள்,லஞ்ச லாவண்யம்,மதத் தீவிரவாதம்,ஜாதி வெறி,திடீர் என்று உருவாகும் மாணவத் தலைவர்கள் போன்றவர்கள் நமது நாட்டின் வேர்களை அழிக்கும் வேலையைத் தான் செய்கின்றனர்;

சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்கள் அடங்கிய தொகுப்புக்கள் இன்று பல்வேறு தலைப்புக்களில் கிடைக்கின்றன;அவற்றில் மிகவும் முக்கியமானது விவேகானந்த கேந்திரம் வெளியிட்டிருக்கும் விழிமின்;எழுமின் என்ற புத்தகமே!


கல்வித்துறையில் சீர்திருத்தம் செய்ய விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் இந்த நூலை பலமுறை வாசித்தப் பின்னரே தனது கல்விக் கொள்கையை உருவாக்கிட சுலபமாக இருக்கும்;

No comments:

Post a Comment