உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் அனைத்தையும் நிர்வகித்து வருபவர் கால தேவன்
என்று அழைக்கப்படும் மஹா காலபைரவப் பெருமான்;அவருக்கு அப்படி நிர்வகிக்கும் சக்தியை
அருளிக் கொண்டிருப்பது அன்னை அரசாலை(வராகி)!!!
அரசாலை என்பது வராகியின் 1000 திருநாமங்களில் ஒன்று;
அரசாலை அம்மன் என்பது பள்ளூர் என்ற இடத்தில் வராகியின் பெயர் ஆகும்;காஞ்சிபுரத்திற்கும்,அரக்கோணத்திற்கும்
நடுவே அமைந்திருக்கும் சிற்றூர் பள்ளூர் ஆகும்;இங்கே அரசாலையம்மனாக அன்னை வராகி அருளாட்சி
புரிந்து கொண்டிருக்கிறாள்;
தொடர்ந்து 16 தேய்பிறை பஞ்சமி இரவுகளில் 1 மணி நேரம் வரை அன்னை அரசாலை(வராகி)யை
வீட்டிலேயே வழிபட்டு வந்தால்,அன்னையின் கருணையால் நமது அனைத்து முற்பிறவி கர்மவினைகளும்
கரைந்து காணாமல் போய்விடும்;
எப்படி அன்னை அரசாலை(வராகி)யை வழிபடுவது?
பின் வரும் அன்னையின் பெயர்களை வீட்டில் ஜபிப்பதுதான்;
அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச்
சேர்த்தால் 13 பெயர்கள்!!!)
ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ
சந்தர்ப்பமும்,பூர்வபுண்ணியமும் இருந்தால் இந்த 16 தேய்பிறை பஞ்சமி நாட்களிலும்
மாலை 6 மணிக்கு மேல் இரவு 11 மணிக்குள் அருகில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் 1 மணி
நேரம் ஜபிக்கலாம்;
27.2.16 சனி
28.3.16 திங்கள்
26.4.16 செவ்வாய்
26.5.16 வியாழன்
9.6.16 வியாழன்
24.6.16 வெள்ளி
24.7.16 வெள்ளி
22.8.16 திங்கள்
20.9.16 செவ்வாய்
19.10.16 புதன்
18.11.16 வெள்ளி
18.12.16 ஞாயிறு
16.1.17 திங்கள்
15.2.17 புதன்
17.3.17 வெள்ளி
வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!
No comments:
Post a Comment