Monday, February 22, 2016

பாரதம் சிலிர்த்தெழுகிறது;வறுமையும்,வேலையின்மையும் குறையத் துவங்குகிறது = பாகம் 3




+2வில் தொழிற்கல்வி பாடத்தினைப் படித்தவர்கள் தொழில் நுட்ப உயர்கல்வி வரை பயில வழிவகை செய்யப்படும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, மேலை நாடுகளில் பெரிய பதவிகளில் உள்ளவர்களும் பெரும் பணக்காரர்களும் தங்கள் வீட்டு பராமரிப்பு வேலைகளையும்,பழுது பார்ப்பு வேலைகளையும் தாங்களே செய்து கொள்கின்றனர்;அதனை அவர்கள் பெருமையுடன் செய்கின்றனர்;

ஆனால்,நம் நாட்டில் இதை கேவலமாக நினைப்பதால்,வீட்டில் ஏற்படும் சாதாரணப் பழுதுகளுக்கும் வெளி ஆட்களை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.இதனால்,கீழ் நிலை பணிகளுக்கு நிறைய ஆட்களை தயார் செய்ய வேண்டியுள்ளது.அதனால்,உயர் நிலை தொழில் நுட்பத்தைக் கற்றவர்கள் குறைவாக இருக்கிறது,இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து,சாதாரணர்களுக்கும்,சிறு தொழில் நுட்பப் பயிற்சி அளிக்க கொள்கையில் வழி வகுக்கப்பட்டுள்ளது.


இந்தத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த பஞ்சாப் முதல்வர் பாதல் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட உபகுழு தொழில் கல்வியை எட்டாம் வகுப்பில் இருந்து அறிமுகப்படுத்தவும் இந்தப் பணியில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகப்படுத்தவும்,பயிற்சிகளை மாநிலம்,மாவட்டம் மற்றும் வட்டம் ஆகிய 3 நிலைகளில் செயல்படுத்தவும் பாரதிய ஜனதா கட்சி ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது போல தொழில் திறன் பெறும் உரிமைச்சட்டத்தினை இயற்றிடவும் பரிந்துரை செய்துள்ளது.

தனி நபர் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்ற கருத்தில் மிகுந்த நம்பிக்கையுடைய மத்திய அரசு, இத்திட்டத்தை அதற்கேற்றாற் போல வகுத்திருந்தாலும் தனி நபர் முன்னேற்றம் என்பது ஊதியத்திற்கு வேலை செய்ய ஒரு தொழிலைக் கற்றுக் கொள்வது மட்டுமல்ல;கற்ற திறனை சுய தொழில் ஆரம்பிக்கவும் பயன்படுத்தப் படவேண்டும் என்பதிலும் மத்திய அரசு கவனமாக உள்ளது.

சுய தொழிலுக்கான திறனை வளர்த்துக்  கொள்ளுதல்,அந்தத் திறனின் அடிப்படையில் சுயதொழிலை ஆரம்பிக்க மத்திய அரசு ஆரம்பித்துள்ள முத்ரா வங்கியைப் பயன்படுத்திக் கொள்ளுதல் என இரண்டு அம்சங்களும் இணையும் போது நம் இளைஞர்கள்,இளம் பெண்களின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் அமையும் என்பது உறுதி.

திறன் மேம்பாட்டுக் கொள்கை அமலாக்கம் என்பது 3 வழிகளில் அமையும்.பள்ளியில் இருந்தும்,கல்லூரியில் இருந்தும் படித்துவிட்டு fresher ஆக வெளிவருபவர்களுக்கு என ஒரு வகைப் பயிற்சியளிக்கப்படும்.இதற்காக Labour Market Information System மூலம் நாட்டில் வேலைவாய்ப்புச் சந்தையில் புதிதாக வருபவர்கள் எண்ணிக்கை மற்றும் எதிர்காலத்தில் இருக்கக் கூடிய தொழில்களின்  போக்கு,அதற்குத் தேவையான திறன் கள்,தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றினைப் பற்றிய புள்ளிவிவரங்களை உலக மட்டம்,தேசிய மட்டம்,மாநில மட்டம் என வகைப்படுத்தி ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கைகள் உதவும்.

அடுத்ததாக,மாறிவரும் சூழ்நிலையில் வழக்கொழிந்து போன தொழில் நுட்பங்களில் திறன் படைத்தவர்களை புதுத் திறன் களை கற்றுக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.

இவ்வாறு திறன் பெற்றவர்கள் வேலையில் சேரும் பொருட்டு தேசிய அளவில் ஒரே சீரான முறையில் சான்றிதழ் வழங்கப்படும்.
முக்கியமாக +2வில் தொழிற்கல்வியை ஊக்கப்படுத்துவதாக இக்கொள்கை அமையும்.

தொழிற்பயிற்சி பெறுபவர்கள் வேலையில் சேர்கிறார்களா? என்பதை கண்காணிக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திடும்;மேலும் பிரதம மந்திரியினால் நேரடியாக ஒரு அலுவலர் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிக்கப்படுவர்;அவ்வாறு நியமிக்கப்பட்டு,திட்ட அமலாக்கம் கண்காணிக்கப்படப் போவதாலும் இந்தத் திட்டம் மோடிஜி அவர்களது ஆட்சியில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு,பாரதம் உலகத்தின் தொழில் திறன் தலைநகராகும் கனவு வெகு விரைவில் நனவாகும்;


நன்றி:சுதேசிச் செய்தி,பக்கங்கள் 8,9,10,வெளியீடு செப்டம்பர் 2015

No comments:

Post a Comment