Monday, February 22, 2016

பாரதம் சிலிர்த்தெழுகிறது;வறுமையும் வேலையின்மையும் குறையத் துவங்குகிறது!!!=பாகம் 1


ஒரு நாட்டின் வளர்ச்சியில் தொழில் வளம் மிக முக்கியப் பங்காற்றுகிறது.தொழில் வளம் பெருக,உற்பத்தி பெருக வேண்டும்.உற்பத்தி பெருக திறமையான தொழிலாளர்கள் அவசியம்;

திறமையான தொழிலாளிகள் பரம்பரை பரம்பரையாக தம் குலத் தொழிலை கற்று அறிந்தவர்களாக இருந்து வந்தார்கள்;இந்நிலை, கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் நம் நாட்டை அடிமைப்படுத்தும் வரை இருந்து வந்தது;

ஆனால்,அவர்களின் ஆதிக்கம் ஆரம்பித்தவுடன் நம் நாட்டுத் தொழில் நுட்பங்களையும்,தொழிலாளர்களின் தொழில் திறனையும் சிறுமைப்படுத்த ஆரம்பித்தனர்.இதனால்,நம் நாட்டு கைவினைஞசர்கள் தம் தன்னம்பிக்கையை இழந்தனர்;தத்தம் குஅல்த் தொழிலைச் செய்வதையே கேவலமாக கருதினர்;(இந்த மனோபாவத்தை இவர்களிடம் நாடு முழுக்க உருவாக்கிட கிறிஸ்தவ ஆங்கிலேயனுக்கு 200 ஆண்டுகள் ஆயின)அதன் விளைவால்,அவர்களது சந்ததியினருக்கு தம் குலத் தொழிலை கற்றுத் தர கூச்சப்பட்டனர்;

இதனால்,தலைமுறை தலைமுறையாக் நாம் கற்றறிந்த தொழிற்திறன் இரண்டு நூற்றாண்டுகளில் அழிந்து போனது;(அந்த அழிவின் மீதுதான் ஊழலும்,லஞ்சமும்,தரமற்ற பொருட்களை உற்பத்தி செய்வதும் வளரத் துவங்கின)


அதன் பலனாக,பாரதம் சுதந்திரம் அடைந்த போது,தொழிற்கல்வியை நாம் கற்க அந்நியரின் உதவியை நாட வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது;

தொடர்ந்து இந்த நாட்டை ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு சுதேசிய சித்தாந்தங்கள் புரிந்திருக்கவில்லை என்பதால் தொழில் திறன் மேம்பாடு,தொழில் முனைவு என்பதில் எல்லாம் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.அந்நியர்களின் கொள்கைகளையே தம் கொள்கையாக காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசு ஏற்றுக் கொண்டு வந்தது.

இவர்களுடைய சிந்தனைப் போக்கின் விளைவாகத்தான் ராஜாஜி அவர்கள் கொண்டு வந்த ‘குலக்கல்வித்திட்டத்திற்கு’ கடும் எதிர்ப்பு எழுந்து,அந்தத் திட்டமே கைவிடப்படவேண்டியதாகிவிட்டது.

ஆனால்,மக்களிடம் இருந்து எழுந்த தலைவரான நரேந்திர மோடிஜி அவர்களது தெளிவான சுதேசி சிந்தனை விளைவாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்திறனுடைய, கைவினைஞர்களால் எவ்வாறு நம் பாரதநாடு உலகின் மிகப் பெரிய பணக்கார நாடாக இருந்ததோ அதே நிலைக்கு பாரதத்தினை உயர்த்திட மத்திய அரசு தொழிற்திறன் மேம்பாட்டுக் கொள்கை 2015 என்ற கொள்கையை வகுத்துள்ளது.
இக்கொள்கையில் வழக்கமாக மோடி அரசு நிர்வாக நடவடிக்கைகளில் காணப்படும் “மோடி டச்” நிறையவே காணப்படுகிறது.

இக்கொள்கை பலனை எதிர்நோக்கிய திட்டமாக திறன் மேம்பாட்டுத் திட்டத்தை காண்கிறது.

நன்றி:சுதேசிச் செய்தி,பக்கங்கள் 7,8 வெளியீடு      செப்டம்பர் 2015

இரண்டாம் பாகம் தொடரும். . .

No comments:

Post a Comment