Monday, February 15, 2016

நமது லட்சியங்களை நிறைவேற்றித் தரும் சோடேச சிவதரிசனம்!!!


தென்னாடுடைய சிவனே போற்றி!
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி!! என்பது கடந்த 20,00,000 ஆண்டுகளாக நமது பாரத தேசம் முழுவதும் தினமும் போற்றப்படும் போற்றியாகும்;

இராமாயண காலத்தில் ஸ்ரீராமபிரான் வனவாசகாலத்தில் ஒவ்வொரு ஆண்டும் தனது தந்தையாகிய தசரதருக்கு தர்ப்பணம் கொடுத்திருக்கிறார்;அப்படி தர்ப்பணம் கொடுத்த ஆலயங்களில் பெரும்பாலான ஆலயங்கள் நமது தமிழ்நாட்டில் தான் இருக்கின்றன;
அவைகளில் முக்கியமானது மயிலாடுதுறையில் இருந்து மணல்மேடு செல்லும் வழியில் அமைந்திருக்கும் உள்ளடங்கிய கிராமக் கோவில் கொறுக்கை ஆகும்;

இங்கேதான் மன்மதனை ஈசன் தனது நெற்றிக் கண்ணைத் திறந்து சாம்பாலாக்கினார்;கொறுக்கை வீரட்டேஸ்வரர் ஆலயத்துக்கு அருகில் ஒரு தென்னந்தோப்பில் இன்றும் அந்த சாம்பல் மேடு அமைந்திருக்கிறது;கடந்த மூன்று பிறவிகள் முழுவதும் சிவவழிபாடு அல்லது பைரவ வழிபாடு செய்துள்ளவர்களால் மட்டுமே இந்த இடத்தைச் சென்றடைய முடியும்;

தமிழ்நாடு,ஸ்ரீலங்கா,மலேஷியா,சிங்கபூர்,பர்மா என்ற மியான்மர்,பங்களாதேஷ் இவைகளில் ஏராளமான சிவாலயங்கள் இன்றும் தெய்வீக அருளாற்றல் நிரம்பி சிவக் கதிர்வீச்சை பரப்பிக் கொண்டே இருக்கின்றன;நாம் வாழும் ஊரில் அமைந்திருக்கும் பழமையான சிவாலயத்தின் மூலமாகவே நமது நீண்ட கால லட்சியங்களை நிறைவேற்றிக் கொள்ள முடியும்;

அசைவம் சாப்பிடுவதை நிறுத்தினால் மட்டுமே,நமது வழிபாடு,பூஜை,மந்திரஜபம் பலன் தரும்;சைவம் என்பது சமயம் மட்டும் அல்ல;உண்ணும் முறையும் கூட!
அசைவம் சாப்பிடுவதால்,நமக்குக் கிடைக்க வேண்டிய வரமானது நமது சூட்சும உடலுக்குள் நுழையாமல் வெளியிலேயே தங்கிவிடுகிறது.அப்புறம்,எந்த ஜோசியரும் சொன்னது பலிக்கலை;எத்தனையோ பரிகாரம் செஞ்சும் என் கஷ்டம் தீரலை;என்று புலம்ப வேண்டியதுதான்;

நாம் வாழ்ந்து வரும் ஊரில் திங்கட்கிழமையன்று மாலை 4.30 முதல் 6 மணிக்குள் சிவாலயம் சென்று சிவதரிசனம் செய்ய வேண்டும்;கோவிலுக்குள் நுழைந்தது முதல் கோவிலை விட்டு வெளியே வரும் வரை ஓம் ரீங் சிவசிவ என்று ஜபிக்க வேண்டும்;இப்படி தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் செய்யவேண்டும்;16 திங்கட்கிழமைகளும் ஒரே சிவாலயம் சென்று இப்படி மந்திரம் ஜபிக்க வேண்டும்;அடுத்த 90 நாட்களில் நமது லட்சியம் நிறைவேறத் துவங்கும்;

எங்கள் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்.இங்கே எங்கள் ஊரை தனது அருட்பார்வையால் நிர்வாகித்து வருபவர் அருள்மிகு சிவகாமி அம்பாள் உடனுறை வைத்தியநாதசுவாமி! ஸ்ரீவில்லிபுத்தூர் ராஜபாளையம் சாலையில் ஸ்ரீவில்லிபுத்தூரில் தெற்கு எல்லையில் அருள்மிகு மடவார்வளாகம் ஆலயம் அமைந்திருக்கின்றது;நாங்கள் இங்கே தொடர்ந்து 16 திங்கட்கிழமைகள் வருகை தந்தோம்;கோவிலின் வாசலில் கால் வைத்தது முதல் கோவிலை விட்டு வெளியேறும் வரை ஓம் ரீங் வைத்தியநாதா,வைத்தியநாதா என்று ஜபித்தவாறு கோவிலை வலம் வந்தோம்;16 திங்கட்கிழமைகள் தொடர்ந்து பல்வேறு கஷ்டங்களுக்கு இடையே வெளியூர் பயணங்களைத் தவிர்த்துவிட்டு,சிவகடாட்சம் பெற முயற்சித்தோம்;அருள்மிகு வைத்தியநாதசுவாமியின் அருளும்,மூலஸ்தானத்தினுள் அமைந்திருக்கும் மனோன்மணியின் ஆசியும் எங்கள் அனைவருக்கும் கிட்டியது;

ஒம் ரீங் என்ற வார்த்தைக்குப் பின்னால் கோவிலில் குடிகொண்டிருக்கும் ஈசனின் பெயரை இரண்டுமுறை ஜபிப்பதன் மூலமாக நமது ஆழ்மனதின் மூலமாக ஈசனின் பாதத்தை மனதால் தொடுவதாக அர்த்தம்;

ஓம் ரீங் சிவசிவ


No comments:

Post a Comment