இந்தியாவுக்கு தரமற்ற ஆயுதங்களை வழங்குகிறது அமெரிக்கா: இராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் புகார்
தரமற்ற ஆயுதங்களை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்குவதாக இந்திய இராணுவ தலைமை தளபதி வி.கே.சிங் புகார் தெரிவித்துள்ளார்.
இந்திய இராணுவத்திற்கு தேவையான ஆயுதங்களை மத்திய அரசுக்காக அமெரிக்கா அரசு வாங்கி விற்பனை செய்து வருகிறது. இதற்காக குறிப்பிட்ட தொகையை அமெரிக்கா அரசு கமிஷனாகவும் பெறுகிறது.
டெண்டர் விடப்படாமல் அரசுகளுக்கு இடையேயான உடன்பாடுகள் மூலம் ஆயுதங்கள் விற்பனை செய்யப்படுவதில் முறைகேடுகள் நடப்பதாக இராணுவம் குற்றம்சாற்றியுள்ளது.
தரமற்ற ஆயுதங்களை இந்தியாவுக்கு அமெரிக்கா வழங்குவதாக புகார் தெரிவித்துள்ள இந்திய இராணுவ தலைமை தளபதி வி.கே.சிங், இந்த மோசடி குறித்து விழிப்புடன் இருக்குமாறு பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோணிக்கு கடிதம் எழுதி இருப்பதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.
கடந்த 2002ஆம் ஆண்டு அமெரிக்காவிடம் இருந்து வாங்கப்பட்ட ரேடார் கருவிகள் உடனடியாக பழுது அடைந்துவிட்டதாக குறிப்பிட்டுள்ள தலைமை தளபதி வி.கே.சிங், இது குறித்த புகார்களை அமெரிக்க அரசு அலட்சியப்படுத்தி விட்டதாகவும் குற்றம்சாற்றியுள்ளார்.
3 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 145 கோவிட்டர் பீரங்கிகளையும், 10 ஆயிரம் கோடி ரூபாய்க்கு 10 பேர் விமானங்களையும் அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்குவதற்கு முன் சர்வதேச சட்ட நிபுணர்களிடம் ஆலோசனை பெற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
you have 100 crore people with you,why are you not able to build your world class weapons,You had siddhar ,RSS,hindu rishis,hindu science and astrology .then why is not passible for you??
ReplyDeleteஅமெரிக்காவின் ரேடாரில் சிக்காத விமானம்,உலகை அச்சுறுத்தும் அணுகுண்டு,லேசர் குண்டு,எலக்ட்ரானிக் குண்டு,செக்ஸ் வெறியைத் தூண்டும் குண்டு அனைத்தும் இந்தியாவின் புராதன அறிவுக்களஞ்சியத்திலிருந்தே திருடப்பட்டவை.இதை உருவாக்கிய எங்கள் பாரத மாதாவுக்கு ஒரு சிறந்த தலைமையை உருவாக்கிடத் தெரியாதா என்ன?
ReplyDeleteIt is useless to say USA is doing the damage - the damage is done by India's leaders like Sonia and Congress Leaders. Wipe them (the inside foxes) out and see how India will prosper - Rajathilagam
ReplyDelete