ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Tuesday, May 25, 2010
மரக்கன்று நடுவது எப்படி? நமது பூமியைக் காப்போம்
மரக்கன்று நடுவது எப்படி?
அடிக்கிற வெயிலைப் பார்த்தால்,ஐ.நா.சபை., மத்திய அரசு,மாநில அரசுகள்,அரசியல் கட்சிகள் பூமி நலனுடன் எந்த ஒரு உருப்படியான சுற்றுச்சூழல் காரியத்தையும் செய்யாது;/செய்ய முடியாது என தெள்ளத் தெளிவாக தெரிகிறது.ஆகவே,நாம் ஒவ்வொருவரும் எப்படி மரக் கன்று நடுவது என்பதை இங்கு பார்ப்போம்:
சாலையோரம்,தெருவின் ஓரங்கள்,நமது வீட்டின் ஓரங்கள்,புழைக்கடை என நாம் விரும்பும் எந்த இடத்திலும் மரக்கன்று நடலாம்.
மரக்கன்றை நடுவதற்குரிய இடத்தை நாம் தேர்ந்தெடுத்தப்பிறகு,அங்கு 1 முதல் 3 அடி வரை குழி தோண்ட வேண்டும்.
தோண்டி உடனே மரக்கன்றை நட்டால், அந்த மரக்கன்று பட்டுப்போய்விடும்.ஏன்?
ஏன் எனில், நாம் குழி தோண்டியதும், பக்கவாட்டுமண்ணிலிருந்து வெப்பம் வெளியேறத்துவங்கும்.எனவே, குழி தோண்டி 24 மணிநேரம் கழித்து, நாம் மரக்கன்றைக் கொண்டுவந்து இணுக்கு வெளியே தெரியுமளவுக்கு மரக்கன்றை மண்ணைப்போட்டு மூட வேண்டும்.மூடிய பிறகு,மரக்கன்றை ஒட்டி தண்ணீர் ஊற்றாமல்,ஒரு சதுர அடி தள்ளி தண்ணீரை ஊற்ற வேண்டும்.இரண்டாம் நாளிலிருந்து 20 நாள் வரையிலும் மரக்கன்றினை ஒட்டியே தண்ணீர் ஊற்றலாம்.
நமது பிறந்த நட்சத்திரப்படி உரிய மரக்கன்றை வாங்கி ஊன்றலாம்; அரசு,வேம்பு,ஆல்,மஞ்சணத்தி போன்ற உபயோகமான மரக்கன்றை நடலாம்.
மரக்கன்றை நடுவதில் 10 வருட அனுபவமுள்ள எனது நண்பர் சொன்னது.
நாம் மரக்கன்றுகளை நடுவோம்;நமது மகன்,மகள்,பேரன்,பேத்தியின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கும்,நமது நாட்டின் இயற்கைவளம் பெருகுவதற்கும்.
மரக்கன்றை நடுவதற்கும்,நடுவதற்கான குழி தோண்டுவதற்கும் ஏற்ற நேரம் காலை 6 மணி முதல் 8 மணிக்குள்;மற்றும்/அல்லது மாலை 5 மணி முதல் இருட்டுவதற்குள்.
7,00,000 மரக்கன்றுகளை நடுவதை தனது லட்சியமாகக் கொண்டுள்ள போத்தீஸ் ஜவுளி நிறுவனம்(ஸ்ரீவில்லிபுத்தூர்,மதுரை,சென்னை) இந்த நேரத்தில் பாராட்டுவதற்குரியது.
இதற்காக மட்டுமே டிவியில் விளம்பரம் கொண்டுவந்துள்ள போத்தீஸ் முதலாளிகளின் கால்களில் விழுந்து அவர்களின் பூமிப்பாசத்திற்காக நான் எனது கண்ணீரால் அவர்களின் பாதங்களைக் கழுவுவேன்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment