திருக்காளஹஸ்தி கோவில்கோபுரம்:முழு விளக்கம்
கிருஷ்ணதேவராயர் அவர்களின் பல போர்களின் வெற்றிக்குக் காரணம் திருக்காளஹஸ்தி சிவபெருமானே காரணம் என நம்பினார்.அதன் விளைவாக கி.பி.1510 ஆம் ஆண்டில் இந்த கோபுரத்தைக் கட்டினார்.இந்த கோபுரத்தில் கி.பி.1960 ஆம் ஆண்டில் ஒரு சிறுவிரிசல் ஏற்பட்டது.அதை அப்போதே சரி செய்தனர்.அதன்பிறகு சிறுசிறுவிரிசல்கள் ஏற்பட்டுக்கொண்டே இருந்தாலும்.,அதை சரிசெய்துகொண்டே இருந்தாலும்,தற்போது இரண்டாகப்பிளந்து இடிந்துவிழுந்துவிட்டது.
வேதசாஸ்திரங்களில் கைதேர்ந்தவரான சேஷாத்திரிநாத சாஸ்திரிகள் கோபுரம் இடிந்துவிழுந்தது பற்றி கேட்டபோது அவர் விளக்கமளித்தார்:
மக்களை ஆள்வோர் தவறான வழியை மேற்கொண்டால் உற்பாதம் நிகழும் என வேதநூல்கள் கூறுகின்றன.
காரணம் இல்லாமல் திடீர் திடீரென நிகழும் பேரழிவுகள் மற்றும் வினோதமான சம்பவங்களைத்தான் உற்பாதம் என்பார்கள்.
கோவில்களில் உள்ள சிலைகளில் வியர்வை வழிவது, கோபுரங்களில் விரிசல் கண்டு உடைவது,சிலைகள் அசைவது ஆகிய விஷயங்களின் மூலம் “நாட்டில் ஆள்வோருக்கும் மக்களுக்கும் கெட்ட விஷயங்கள் நடக்க இருக்கின்றன.பெரிய அளவில் பேரழிவுகள் நடக்க இருக்கின்றன.” என்பதை முன்கூட்டியே தெய்வீக சக்தி குறிப்பால் உணர்த்துவதாக அர்த்தம்.
தவறு செய்வது மன்னனாக இருந்தாலும்,மக்களாக இருந்தாலும் தன்னை உடனே திருத்திக்கொள்ள வேண்டும்.
தனிமனித ஒழுக்கம் முக்கியமானது.தனி மனித ஒழுக்கம் இல்லாமல் போனால் சமுதாயமே சீர்கெட்டுவிடும்.
அப்படி சீர்கெட்ட சமுதாயத்திலிருந்துதான் நம்மை ஆள்வோரைத் தேர்ந்தெடுக்கிறோம்.ஆள்பவர்கள் ஒழுக்கக்கேடாக இருந்தால் நிச்சயம் உற்பாதம் நிகழும்.
கோவில் கோபுரமே இடிந்துவிழுந்ததாக இதுவரை சரித்திரம் கிடையாது.ஏனெனில்,கோபுரங்களின் கட்டிட சாஸ்திர அமைப்பு(சில்ப சாஸ்திரத்தின் ஒரு பகுதி) அத்தனை பாதுகாப்பானது.மொத்த எடையும் அடிப்பாகம் தாங்கும் வகையில் அமைக்கப்படும்.காளஹஸ்தி கோபுரம் மேலிருந்து கீழ்வரை ஒட்டுமொத்தமாகச் சிதைந்துவிழுந்ததால்,அந்தளவுக்கு அதர்மம் நடந்திருக்கிறதோ? என்றுதான் அர்த்தம்.
நன்றி: ஜீனியர் விகடன்,2.6.2010,பக்கம் 6,7.
No comments:
Post a Comment