Friday, May 20, 2016

அரிய சிவலிங்க வழிபாடு!


பலா மரத்தின் வடக்கு வேர் கொண்டு சிவலிங்கம் செய்ய வேண்டும்;
இந்த சிவலிங்கத்தைக் கொண்டு பகலில் தினமும் பூஜை செய்ய வேண்டும்;
தொடர்ந்து 12 ஆண்டுகள் செய்து வர,சிவகணமாகும் வழிமுறை நம்மைத் தேடி வரும்;

2000 ஆண்டுகளுக்கு முன்பு வரை இந்த பலாமரசிவலிங்கம் செய்யும் முறை உலகம் முழுக்கவும் இந்த அரிய சிவலிங்க வழிபாடு மனிதர்களால் பின்பற்றப்பட்டு வந்தது;

1000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலும் நமது பாரத நாடு முழுவதும் (காஷ்மீர் முதல் குமரிக்கண்டம் வரை;குஜராத் முதல் இன்றைய தாய்லாந்து வரை) இந்த அரிய சிவலிங்க வழிபாடு பரவியிருந்தது;

தற்போது கேரளமாநிலத்தில் வெகு சிலரால் மட்டுமே பின்பற்றப்பட்டு வருகின்றது;

சிவமந்திர ஜபம் + அண்ணாமலை கிரிவலம் + அன்னதானம்+ ருத்ராட்ச தானம் = முக்திக்கு ஒரு சுலபவழியாக சித்தர் பெருமக்கள் உபதேசித்துள்ளனர்;16,000 கோடி சிவ மந்திரங்கள் உள்ளன;ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிறப்பு வாய்ந்தவை;


உதாரணமாக, 28 கோடி முறை சிவாய நம என்று ஜபித்துவிட்டு,செம்பைப்பார்த்தால்,அது தங்கமாக மாறிவிடும்;

1 கோடி முறை ஓம்சிவசிவஓம் என்று ஜபித்து முடித்தால்,ஜபித்து முடித்தவரை ஆசிர்வதிக்க 18 சித்தர்களும் ஒன்றாக வருவர் என்று நாடி கிரந்தங்கள் தெரிவிக்கின்றன;

சில சிவமந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால்,நோய்களைத் தீர்க்கும் ஆற்றல் உருவாகும்;யாரெல்லாம் கடந்த ஐந்து முற்பிறவிகளில் ஜபித்தார்களோ,அவர்களே இப்பிறவியில் கைராசி டாக்டர்களாக வாழ்ந்து வருகின்றனர்;

சில சிவமந்திரத்தை தொடர்ந்து ஜபித்தால்,ஈசனே குருவாக அமைவார்;அப்படிப் பட்டவர்களே இன்று பழமையான சிவாலயத்தில் சிவாச்சாரியார்களாக இருக்கின்றனர்;


சில சிவமந்திரங்களை தொடர்ந்து(சில பல பிறவிகளாக) ஜபித்து வந்தால்,தமது 18 வயது முதல் வாழ்நாளின் கடைசி நாள் வரை அரசாங்கத்தில் மிகப் பெரிய பதவி(தலைமைச் செயலகத்தில் சாதாரண பதவியில் பணி சேர்ந்து,துறைச் செயலாளர் ஆன பின்னர்,பணி ஓய்வு வயதை அடைகின்றனர்)யில் பணிபுரிந்து வருகின்றனர்;

இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்;



ஓம் அருணாச்சலாய நமஹ

Thursday, May 19, 2016

செல்வ வளம் தரும் சனிப்பவுர்ணமி கிரிவலம்!!!


சைவத்தின் தலைநகரம் அண்ணாமலை;ஒவ்வொரு பவுர்ணமி அன்றும் (சித்திரை பவுர்ணமி,வைகாசி பவுர்ணமி. . .) கிரிவலம் வந்தால் என்ன மாதிரியான பலன் மற்றும் புண்ணியம் நமக்குக் கிட்டும்;அப்படி புண்ணியம் கிட்டுவதற்கு எந்த விதமான முறையில் கிரிவலம் செல்ல வேண்டும் என்பதைப் பற்றி அகத்தியமகரிஷி விரிவாகவே உபதேசித்துள்ளார்;


அதே போல,திங்கட்கிழமையன்று கிரிவலம் வந்தால் என்ன பலன்? செவ்வாய்க் கிழமையன்று கிரிவலம் வந்தா, என்ன மாதிரியான புண்ணியம் நமக்குக் கிட்டும்? புதன் கிழமை கிரிவலம் நமக்கு எப்படி நன்மை செய்யும்? என்று ஒவ்வொரு கிழமைவாரியாகவும் கிரிவலத்தின் மகிமைகளை விவரித்துள்ளார்;


அதே போல,பிரதமை திதியன்று கிரிவலம் சென்றால் என்னவிதமான புண்ணியம் கிட்டும்? துவிதியை திதியன்று கிரிவலம் சென்றால் என்னவிதமான புண்ணியம் நமக்குச் சேரும்? த்ரிதியை திதியன்று கிரிவலம் சென்றால் எப்படிப்பட்ட புண்ணியம் நமக்கு வரும்? என்று திதிவாரியாகவும் விவரித்துள்ளார்;


அதே போல,சித்திரை 1 ஆம் நாளில் இருந்து சித்திரை 2,சித்திரை 3 என்று 12 மாதங்களில்(வைகாசி,ஆனி,ஆடி,ஆவணி,புரட்டாசி,ஐப்பசி,
கார்த்திகை,மார்கழி,தை,மாசி,பங்குனி)ஒவ்வொரு நாளும் கிரிவலம் சென்றால் என்ன மாதிரியான பலன் கிட்டும்? எப்படி கிரிவலம் சென்றால் அந்த புண்ணியங்கள் சேரும்? என்பதையும் விவரித்துள்ளார்;


அதே போல,தமிழ் ஆண்டுகள் 60 ஆண்டுகளுக்கும் ஒவ்வொரு நாளும் கிரிவலப் பலன் களை எழுதியுள்ளார்;


12 தேய்பிறை சிவராத்திரிகளுக்கு அண்ணாமலை கிரிவலம் சென்றால்,நமது அனைத்து கர்மவினைகளும் தீர்ந்து பொருளாதாரத் தன்னிறைவை எட்டிவிடுவோம் என்பது தமிழ்முனியின் வாக்கு!


சனிக்கிழமையும் பவுர்ணமியும் சேர்ந்து வரும் நாளில் யார் அண்ணாமலை கிரிவலம் வருகின்றார்களோ,அவர்கள் செல்வ வளத்தை அடைவார்கள் என்பதும் கும்பமுனியின் வாக்கு ஆகும்;


21.5.2016 சனிக்கிழமை விடிகாலை 1.33(முதல் நாள் வெள்ளிக்கிழமை பின்னிரவு) முதல் 22.5.2016 ஞாயிற்றுக்கிழமை விடிகாலை(சனிக்கிழமை பின்னிரவு) 3.17 வரை சனிக்கிழமை பவுர்ணமி திதி அமைந்திருக்கின்றது;

(சனிக்கிழமை பகல் முழுவதும்)

இந்த பவுர்ணமியன்று அண்ணாமலை கிரிவலம் செல்வோம்;அகத்தியரின் உபதேசப்படியும்,அருணாச்சலேஸ்வரின் ஆசியாலும் செல்வ வளத்தைப் பெறுவோம்;



ஓம் அண்ணாமலையே போற்றி!!!

Tuesday, May 17, 2016

நமது தலைவிதியை அடியோடு மாற்றும் மந்திரஜபம்!!!


க்ருதயுகம்,திரேதாயுகம்,துவாபரயுகம்,கலியுகம் என்று நான்கு யுகங்களாக காலத்தை நமது முன்னோர்கள் பிரித்துள்ளனர்;இது அறிவியல் பூர்வமான உண்மை என்பதை எதிர்கால விஞ்ஞானம் நிரூபிக்கும்;அப்படி நிரூபிக்கும் போது உலகமே இந்துமயமாகிவிடும்;

நாம் வாழ்ந்து வரும் பாரத நாட்டில் பிறப்பதற்கே பெரும் புண்ணியம் செய்திருக்க வேண்டும்;இது நம்மில் பெரும்பாலானவர்களுக்குப் புரிவதில்லை;காரணம் அவர்களுக்கு கிடைக்கும் மிதமிஞ்சிய செல்வ வளம் அல்லது மிதமிஞ்சிய துன்பங்களும்,துயரங்களுமே!


ஒருபோதும் “கடவுளே என்னை அடுத்த பிறவியிலாவது வெளிநாட்டில் பிறக்க வைத்துவிடு என்று வேண்டிக் கொள்ளாதீர்கள்;ஒருமுறை வெளிநாட்டில் பிறக்க ஆரம்பித்துவிட்டால்,மீண்டும் நமது ஆன்மீக பூமியான பாரதத்தில் பிறக்கும் சந்தர்ப்பம் கிடைக்காமலேயே போய்விடலாம்” என்று சித்தர்களின் தலைவரும்,தமிழினத்தின் தந்தையும்,பூமியில் தமிழ் மொழியை பரப்பியவருமாகிய அகத்திய மகரிஷி நம்மை எச்சரித்திருக்கின்றார்;


க்ருதயுகத்தில் 10 ஆண்டுகள் முயற்சி செய்து பெறும் புண்ணியத்தை,திரேதாயுகத்தில் ஓர் ஆண்டு வரை விடாமுயற்சி செய்து பெற்றுவிடலாம்;அதையே,துவாபரயுகத்தில் ஒரு மாதத்தில் பெற்றுவிடமுடியும்;ஆனால்,கொடூரமானது என்று சொல்லக் கூடிய கலியுகத்தில் ஒரே ஒரு நாளில் அத்தைகைய புண்ணியத்தைப் பெற்றுவிடலாம்;

யோகநிஷ்டை/வேள்விகள்,அர்ச்சனைகளின் அவசியமின்றி அன்னை அரசாலையின் 12 பெயர்களை உச்சரித்ததுமே அந்தப் பலன்கள் அனைத்தும் கிட்டிவிடும்;(வராகியின் அருளைப் பெற்றுத் தரும் சித்தரின் பெயர் வாத்தியாரைய்யா! இவர் சிங்கம்புணரி என்ற கிராமத்தில் 250 ஆண்டுகளுக்கு முன்பு ஐக்கியமாகி அருள்பாலித்து வருகின்றார்;இவரது இயற்பெயர் அருள்நிறை முத்துவடுகநாதர் ஆகும்)



ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரி
சமயசங்கேதா
வராகி
போத்ரிணி
சிவை
வார்த்தாளி
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரி
அரிக்னி
என்பவையே அந்த 12 பெயர்கள்; 

திருமந்திரம் என்ற நூலில் திருமூலர், ‘உரு ஏறத் திரு ஏறும்’ என்று தெரிவித்துள்ளார்;இதற்கு என்ன அர்த்தம்?

தொடர்ந்து ஒரு இறைசக்தியின் பெயரை உச்சரிக்க,உச்சரிக்க,உச்சரிப்பவரின் முகத்தில் வசீகரம் அதிகரிக்கும் என்று அர்த்தம்!!!

மேலும்,துவாதசி திதி அன்று அண்ணாமலையில் செய்யப்படும் அன்னதானத்தின் மூலமாகவும் பெற்றுவிடலாம்;யாருடைய முன்னோர்கள்,பித்ருக்களின் உலகத்தில் கடுமையான ஜபம் செய்திருந்தார்களோ,அவர்கள் மட்டுமே இப்பிறவியில் ஒரே ஒரு முறை அண்ணாமலையில் கிரிவலம் வரமுடியும்! அல்லது துவாதசி திதி அன்று அன்னதானம் செய்ய முடியும்!!


அண்ணாமலையாரின் பெருமைகளையும்,அண்ணாமலை கிரிவலத்தின் பெருமைகளையும் விவரிக்க 100 ஆண்டுகள் போதாதது;ஏனெனில்,ஈரேழு பதினாலு உலகங்களின் இணைப்பு மையமாகவும்,பிறவியற்ற முக்தியை விரும்புவர்களாலும் மட்டுமே அண்ணாமலை கிரிவலம் வந்து அதன் அருமை பெருமையை உணர்ந்திடமுடியும்;

என்ன தான் பக்கம் பக்கமாக எழுதினாலும் நேரடியாக முகம் பார்த்து உபதேசிப்பதற்கு ஈடாகுமா?

ஓம் அருணாச்சலாய நமஹ


ஓம் வராகி சிவசக்தி ஓம்

Wednesday, May 11, 2016

யாருக்கு அன்னை அரசாலையின் அருள் கிட்டும்?


எல்லோரும் நன்றாக இருந்தால்,நாமும் நமது குடும்பமும் நன்றாக இருக்கும் என்ற கொள்கையின் அடிப்படையில் தான் பலர் பொதுநலவாதிகளாக இன்றும் வாழ்ந்து வருகின்றனர்;

பிறருக்கு வலியச் சென்று உதவிகள் செய்கின்றனர்;முடிவில்,யாருக்கு உதவிகள் செய்தார்களோ,அவர்களால் புறக்கணிக்கப்படுகின்றனர்;அவமானப்படுத்தப்படுகின்றனர்;

அடுத்தவர்களுக்கு உதவி செய்து,உதவி செய்தே தன்னையும்,தனது குடும்பத்தையும்,தனது பொருளாதாரத் தன்னிறைவையும் எட்டாமல் விட்டு,பரம ஏழையாகவோ அல்லது போதுமான அளவில் சம்பாத்தியம் செய்யாமலேயே தமது இளமையை வீணடித்துவிடுகின்றனர்;

கூடவே இருந்து,குழிபறிக்கும் துரோகிகளுக்கு எதிராக பதிலடி தரத் தெரியாமல் தவிக்கும் நேர்மையாளர்கள் இன்றும் தமிழ்நாடு முழுவதும்,இந்தியா முழுவதும்,உலகம் முழுவதும் கோடிக்கணக்கானவர்கள் ஒவ்வொரு ஊரிலும்,ஒவ்வொரு தொழிலிலும்,ஒவ்வொரு தொழிற்சாலையிலும்,ஒவ்வொரு ஜாதியிலும்,ஒவ்வொரு தெருவிலும்,ஒவ்வொரு துறையிலும் இருக்கத்தான் செய்கின்றனர்;

இப்படிப்பட்டவர்களுக்கு கண்கண்ட தெய்வம் ஒன்று இருக்கின்றது;அந்த தெய்வம் தான் ஆதி வராகி என்ற அரசாலை என்ற ப்ருகத் வராகி என்ற வார்த்தாளி!

பிறருக்காக தன்னையும்,தனது வாழ்க்கையையும் அர்ப்பணிப்பது போல நடிப்பவர்களும் லட்சக்கணக்கில் வாழ்ந்து வருகின்றனர்;அவர்களுக்கு ஒரே ஒரு முறை மட்டுமோ அல்லது ஒரே ஒரு விநாடி மட்டுமோ அன்னை அரசாலை வரம் தரவும் மாட்டாள்;அருள் பார்வை பார்க்கவும் மாட்டாள்;


எந்தக் கடவுளாக இருந்தாலும்,அந்தக் கடவுளுக்கு உரிய பூஜை,யாகம்,அபிஷேகம் இவைகளை ஒருவன்/ள் செய்தால்,அதன் பிறகு அவன்/ளுக்கு அந்தக் கடவுள் வரம் தந்துதான் ஆக வேண்டும்;

ஆனால்,திடீரென அன்னை அரசாலையை வழிபடத் துவங்கியதும்,அந்த பிரபஞ்ச அன்னை,வழிபடுபவரின் ஆழ்மனதுக்குள் நுழைந்து, “இவன்/ள் எதற்காக திடீரென நம்மை வழிபடத் துவங்குகிறான்? இவன் நல்லவனா? கெட்டவனா? அடுத்தவருக்கு மனதால் கூட தீங்கு நினைக்காமல்,இவன்/ள் பிறரின் சதிகளால்,துரோகங்களால் பாதிக்கப்பட்டு,மிகவும் சிரமப்படுகின்றானா?” என்று கவனிப்பாள்;

ஒருபோதும் பிறருக்குத் தீங்கு நினைக்காமல் நேர்மையாக வாழ்ந்து வருபவராகவும்,பொதுநலவாதியாகவும் இருப்பவர்களுக்கு மட்டுமே அன்னை அரசாலை வரம் தருவாள்;ஓடோடி வந்து உரிய பாதுகாப்பு தருவாள்;

ஒரு வருடத்திற்கு(சித்திரை 1 முதல் பங்குனி 30 வரைதான் ஒரு வருடம்!) பூசம் நட்சத்திரமும்,வியாழக்கிழமையும் சிலமுறை மட்டுமே சேர்ந்து வரும்;(12.5.2016)


அந்த நாளில் அன்னை  அரசாலையை வழிபடத் துவங்குவதன் மூலமாக பொருளாதாரத் தன்னிறைவை எட்டும் விதமாக வரங்களை அள்ளித் தருவாள்;


ஏற்கனவே,அன்னை அரசாலையை வழிபட்டுக் கொண்டிருப்பவர்கள்,இந்த நாளில் கூடுதலாக ஒரு முறை அல்லது கூடுதலாக ஒரு மணி நேரம் அன்னையின் 12 பெயர்களை ஜபிப்பது அவசியம்;


பிரபஞ்சத்தில் வாழ்ந்து வரும் அனைத்து உயிர்களுக்கும் வரங்களை அள்ளித்தரும் அன்னை,இந்த சுபநாளில் அளவற்ற வரங்களை தரத் தயாராக இருப்பாள்;யார் இன்று அன்னை அரசாலையை அதிகநேரம் அல்லது ஆழ்ந்த மனதுடன் துதிக்கின்றார்களோ,அவர்களுக்கு உடனடி நிவாரணம்,அவளின் அருட்பார்வையால் கிட்டும்;


பின்வரும் 12 பெயர்களை அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!) ஜபிக்க வேண்டும்;


ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமி
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரி
சமயசங்கேதா
வராகி
போத்ரிணி
சிவை
வார்த்தாளி
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரி
அரிக்நி


இந்தப் பெயர்களுக்கு முன்பாக ஒம் என்ற மந்திரமும்,பின்பாக நமஹ என்ற மந்திரமும் அவசியமில்லை;அப்படியே இந்தப் பெயர்களை ஜபித்தாலே போதுமானது;



வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!

Sunday, May 8, 2016

அட்சய த்ரிதியை அன்று(9.5.16 திங்கள்) நாம் செய்ய வேண்டியவை


அட்சய த்ரிதியை அன்று தங்கம் வாங்கினால்,அது வாழ்நாள் முழுவதும் தங்கம் வாங்கிக் கொண்டே இருப்போம் என்று ஜோதிடர்களும்,தங்கக் கடை வியாபாரிகளும் இணைந்து தமிழ்நாட்டில் இரு புது ட்ரெண்டை உருவாக்கிவிட்டார்கள்;


அட்சய த்ரிதியை அன்று நாம் செய்யும் எந்த ஒரு புண்ணியக் காரியமும் அடுத்த ஒருவருடம் வரை=அடுத்த வருட அட்சய த்ரிதியை வரை=வளர்ந்து கொண்டே செல்லும் என்பதுதான் புராதன நூல்களில் இருக்கும் கருத்து;

தங்கம் வாங்குவதற்கு அட்சய த்ரிதியை அன்றுதான் நல்ல நாள் என்று நம்புவதே தப்பு;ஒவ்வொரு நாளும் லக்னத்தில் குரு இருக்கும் போது,அதாவது ஆடி 18 வரை(2.8.16 வரை) சிம்ம லக்னம் இருக்கும் போது தங்கம் வாங்கிட,அப்புறம் காலம் பூரா தங்கம் வாங்கிக் கொண்டே இருக்கலாம்;

அது சரி;நாம் காலம் பூரா தங்கம் வாங்கி என்ன செய்யப் போகிறோம்?

அதற்குப் பதிலாக பின்வரும் புண்ணியக் காரியங்களில் ஒன்றை மட்டுமாவது செய்வது நன்று;

தெரியாத்தனமாக கலியுகத்தில் பிறந்துவிட்டோம்;இருக்கும் கர்மவினைச் சுமைகளை கரைக்க இந்த நாளைப் பயன்படுத்திக் கொள்வோமே!

1.அன்னதானம் சிவாலயத்தின் வாசலில் செய்தல்;முடியாவிட்டால், பசியோடு இருக்கும் ஏழை எளியவர்களுக்கு அவர்கள் எங்கிருந்தாலும் அன்னதானம் செய்தல்(சாப்பாடு பார்சல் வாங்கிக் கொடுக்கலாம்)

2.சிவாலயத்தை சுத்தப்படுத்துதல்(உழவாரப் பணி)

3.ருத்ராட்ச தானம் செய்தல்

4.குலதெய்வம் கோவிலுக்கு அரிசி,எண்ணெய்,காய்கறி,பருப்புவகைகள் வாங்கித் தருதல்

5.குடும்பத்தோடு குலதெய்வம் கோவிலுக்குச் செல்லுதல் அல்லது அண்ணாமலை கிரிவலம் செல்லுதல் அல்லது உள்ளூரில் இருக்கும் சிவாலயம் செல்லுதல்

6.கோவில் வாசலில் அமர்ந்திருக்கும் சாதுக்கள்,வறியவர்களுக்கு ஆடை தானம் செய்தல்

7.பசுவுக்கு கீரை,வாழைப்பழம் தருதல்

8.பசுமடத்தில் சுத்தம் செய்தல்

9.பசுவை குளிக்க வைத்து,சீராட்டுதல்

10.வில்வக் கன்று நடுதல்

11.வீட்டிலேயே காசிவில்வம் நட்டு வளர்க்கத் துவங்குதல்

12.ஏழை மாணவ,மாணவிகளுக்கு கல்விக்கட்டணம் செலுத்துதல் அல்லது புத்தகம்,நோட்டு வாங்கித் தருதல்

13.ஏழைப் பெண்ணுக்குத் திருமணம் செய்யத் தேவையான தாலி தங்கத்தில் செய்து தானம் தருதல்

14.மதமாற்றத்தைத் தடுத்து நிறுத்திட நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ செயல்படுதல்

15.மதமாற்றத்திற்கு எதிராகப் போராடுபவர்களை ஆதரித்தல்

16.நமது தெருவில் திருவிளக்கு பூஜை செய்தல்;செய்பவர்களுக்கு பக்கபலமாக இருப்பது;

17.விவேகானந்த கேந்திரம் நடத்தும் பண்பாட்டு பயிற்சி வகுப்புகளை நமது பகுதியில் நடத்துதல்;அந்த வகுப்புகளுக்கு நமது மகன்/ளைஅனுப்புதல்

18.தேவாரப் பதிகங்கள் அச்சடித்து விநியோகித்தல்

19.உண்மையான விபூதி தயார் செய்து விநியோகித்தல்/ஏற்கனவே தயார் செய்பவர்களிடம் வாங்கி ஒரு கால பூஜை நடைபெறும் சிவாலயங்களுக்கு மாதம் தோறும் அன்பளிப்பாக வழங்குதல்

20.பாழடைந்த சிவாலயத்தைக் கண்டறிந்து ஒரு கால பூஜைக்கு ஏற்பாடு செய்தல்;அந்தக் கோவிலைப் புனர்நிர்மாணம் செய்தல்,பிரபலப் படுத்துதல்;

21.ஆன்மீக சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்தல்;

22.ஆலயத்தைச் சுற்றிலும் மரக்கன்றுகள் நடுதல்;

23.ஜோதிடர்களுக்கு அண்ணாமலை கிரிவலப்பாதையில் அமைந்திருக்கும் ஸ்ரீலோபமுத்ரை சமேத அகத்தியர் ஆசிரம வெளியீடுகளை மொத்தமாக வாங்கி அன்பளிப்பாக வழங்குதல்

24.சிவமந்திரங்களின் பெருமைகளை அச்சடித்து வெளியிடுதல்;


ஓம் அருணாச்சலாய நமஹ

ஆன்மீகமும்,பக்தியும்,ஆன்மீகப் படைப்புகள் அனைத்தும் இளைய தலைமுறைக்கே!!


மூங்கிலானது பசுமையாக இருக்கும்போது எளிதாக வளைத்துவிடலாம்;முற்றிப் போனால் அதை வளைப்பது முடியாத காரியம்;

அதுபோலத்தான்,நம் மனமும்!

சிறுவயதில் தெய்வீக நாட்டத்தை ஏற்படுத்துவது மிகவும் எளிது; சிறுவயதிலேயே நமது குழந்தைகளை கோவிலுக்கு அழைத்துச் செல்ல வேண்டும்;

ஒருபோதும் காதலையோ,தாம்பத்தியத்தையோ முழுமையாக தவிர்த்துவிட்டு,ஆன்மீகத்தேடலில் யாரும் இறங்கக்கூடாது;இல்லறத்தில் இருந்து கொண்டே தான் ஆன்மீக முயற்சிகளைச் செய்ய வேண்டும் என்பதை மறக்காதீர்கள்;ஒரு கோடி மனிதர்களில் ஒருவருக்கு மட்டுமே காதலையும்,காமத்தையும் தவிர்த்துவிட்டு நேரடியான துறவு வாழ்க்கை வாழமுடியும்;அவரே ரமண மகரிஷி,சுவாமி விவேகானந்தருக்கு இணையானவர்கள்;


லிங்கோத்பவரின் மிகவும் பழைய பெயர் அண்ணாமலை ஆகும்;பல தமிழ்நாட்டு சிவாலயங்களில் லிங்கோத்பவர் சன்னதி இருப்பதில்லை;இந்த ஆலயங்கள் அனைத்தும் 6000 ஆண்டுகளுக்கு முற்பட்டவை;

எப்படியெனில்,பூமியில் விஷ்ணு வழிபாடு உருவாகி 6000 ஆண்டுகள் தான் ஆகின்றன என்பதை இந்த ஆலயங்கள் மறைமுகமாகத் தெரிவிக்கின்றன;

அண்ணாமலையில் அருணாச்சலத்தின் அடிமுடியைத் தேடி பிரம்மனும்,விஷ்ணுவும் போனது 6000 ஆண்டுகளுக்கு முன்புதான்;

இந்த தெய்வீகச் சம்பவம் நிகழ்ந்தப் பின்னரே,சிவாலயங்களில் லிங்கோத்பவர் சன்னதியை உருவாக்கத் துவங்கினர்;

சண்டேஸ்வரரை தரிசித்து,மெதுவாக கைத் தட்ட வேண்டும்;இப்படிச் செய்தால் தான் சிவாலயத்திற்கு நாம் வருகை தந்தது அந்த ஆலயத்தில் இருக்கும் ஈசனுக்கு தகவலாகச் செல்லும்;பலர் அறியாமையால் சண்டேஸ்வரரை வழிபடுவதில்லை;இதனால்,அந்த சிவாலயத்திற்குச் சென்ற புண்ணியம் அவர்களுக்கு சூட்சுமமாக வந்து சேருவதில்லை;


பல சிவாலயங்களில் துர்கையின் கையில் சங்கும்,சக்கரமும் இருக்கும்;கூர்ந்து கவனித்தால் தான் இதை நாம் புரிந்து கொள்ள முடியும்;இம்மாதிரியான துர்கைக்கு விஷ்ணு துர்கை என்று பெயர்;


கங்காளநாதர் என்ற பெயரில் ஒரு சன்னதி இருக்கின்றது;இவரை எப்படி வழிபடவேண்டும்? எதற்கு வழிபடவேண்டும்? என்று ஒரு நடைமுறையே இருக்கின்றது;

வீரபத்திரர் வழிபாடு முழுவதும் நேர்மையாக வாழ்பவர்களால் மட்டுமே பின்பற்றிட முடியும்;வீரபத்திரர் வழிபாட்டின் மூலமாக எப்பேர்ப்பட்ட நோய்,கடன்,வறுமை,சிக்கல்களையும் தீர்க்க முடியும்;அதன் பிறகு,வீரபத்திரர் உபாசகர் எந்த ஒரு அன்பளிப்பும் வாங்காமல் இருக்க வேண்டும்;இதனால் தான்,இன்றைக்கு வீரபத்திரர் வழிபாடு செய்பவர்களைத் தேட வேண்டியிருக்கின்றது;

அறுபத்து மூன்று நாயன்மார்களை கண்டிப்பாக சிவமந்திரம் ஜபித்து வழிபடவேண்டும்;

பாரத தேசம் முழுவதுமே எல்லா சிவாலயங்களும் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கும்;சில சிவாலயங்கள்(சுமாராக 150 சதுர கி.மீ,.க்கு ஒரு சிவாலயம்) மேற்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கின்றன;இவைகள் அனைத்துமே பரிகார சிவாலயங்கள்! இங்கே செய்யப்படும் அனைத்துப் பரிகாரங்களும் உடனடியாக பலன் தரும்;(அசைவம்,மது இவைகளைக் கைவிட்டிருந்தால்!)

சில சிவாலயங்களில் ஈசன் கிழக்கு நோக்கியும்,அம்பாள் தெற்கு நோக்கியும் அமைக்கப்பட்டிருக்கும்;இங்கே நமது கடினமான கர்மவினைகளைப் போக்கும் வழிபாட்டுமுறைகளையும்,பரிகாரங்களையும் செய்யலாம்;

பல முற்பிறவிகளாக ஈசனை மட்டும் வழிபட்டுவந்தவர்களுக்கு,இப்பிறவியில் குறிப்பிட்ட அளவுக்கு சிவமந்திரம் ஜபித்தப் பின்னர்,சிவாலயத்தினுள் இருக்கும் சிவலிங்கங்கள் லிங்கமாகத் தெரியாது;அதனுள் புதைந்திருக்கும் தெய்வீக சக்தியாக,உருவமாக,அளவற்ற பிரகாசம் நிறைந்த ஒளியாக அல்லது தேவ உருவாகத் தெரியும்;

லெமூரியா என்ற குமரிக் கண்டத்தில் மிகவும் பிரம்மாண்டமான சிவாலயங்கள் இருந்திருக்கின்றன;இங்கே நாம் கற்பனை செய்ய முடியாத சில தெய்வீக சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கின்றன;இவைகளை ஒருமுறை தரிசித்தாலே,நம்மால் கனவில் இந்த பிரபஞ்சம் முழுவதையும் பயணித்து வரமுடியும்;

ஓம் அருணாச்சலாய நமஹ

ஓம் சிவாய நம


ஓம் ரீங் சிவசிவ

உபன்னியாசம் கேட்பதால் நமக்குக் கிட்டும் பலன்


கோவில் இருக்கும் வழியாக சென்றாலும் பலன் உண்டு;கோவிலின் உள்ளே வந்தால் அதிக சக்தி வாய்ந்த பலன் உண்டு;கோவிலினுள் நடக்கும் உபன்னியாசத்தை(ஆன்மீக சொற்பொழிவு) நின்று கொண்டு கேட்டாலும் பலன் உண்டு;அமர்ந்து கொண்டு கேட்டாலும் பலன் உண்டு;


கோவிலினுள் அல்லது கோவில் சார்பாக கோவிலுக்கு அருகில்(கோவிலுக்கு வெளியே) நடைபெறும் உபன்னியாசத்தை நின்று கொண்டு(வேட்டி/பேண்ட்/ஜீன்ஸ் அழுக்காகிவிட்டால் என்ன செய்ய? என்ற நல்லெண்ணம் தான்) வேறு ஒருவரிடம் சென்று, “பணம் தேவை;எனக்கு இந்தப் பொருள் தேவை” என்று கையேந்தும் நிலை வரவே வராது;

உபன்னியாசத்தை அமர்ந்து கேட்டால்,பலருக்கும் அள்ளிக் கொடுக்கும் அளவிற்கு மகத்தான செல்வந்தனாகும் யோகம் தேடி வரும்;

இன்று உபன்னியாசம் செய்வதற்குரிய ஆட்கள்(ஆன்மீகப் பேச்சாளர்கள்) குறைந்து கொண்டே வருகின்றனர்;இதை மாற்றிவிட யாராவது ஆன்மீகப் பேச்சாளர்கள் பயிற்சி மையம் ஆரம்பித்து நடத்துவது நன்று;



ஓம் அகத்தீசாய நமஹ