Tuesday, March 13, 2012

பங்குனிமாத தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவோம்;







கர வருடத்தின் பங்குனி மாத தேய்பிறை அஷ்டமியானது,பங்குனி 2 ஆம் நாள்(15.3.12 வியாழன்) அன்று வருகிறது.இந்த நாளில் ராகு காலம் மதியம் 1.30 முதல் 3 மணி வரை அமைந்திருக்கிறது.
மனிதர்களுக்கு செல்வச் செழிப்பை மஹா விஷ்ணுவின் உத்தரவுப்படி தருவது அஷ்டலட்சுமிகள் ஆவர்.இப்படி செல்வச் செழிப்பைத் தருவதால்,இவர்களின் சக்தி குறைந்துகொண்டே வரும்;எனவே, இவர்கள்  தமது சக்தியை அதிகரிக்க,ஒவ்வொரு தமிழ் மாதமும் வரும் தேய்பிறை அஷ்டமியன்று ராகு காலத்தில் செல்வத்தின் பிரபஞ்ச அதிபதியாகிய ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை வழிபடுவார்கள்.இதே நேரத்தில் நாமும் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரை அவரது சன்னிதியில் வழிபாடு செய்தால்,ஒரே நேரத்தில் நமது கர்ம வினைகள் குறையும்;அதே சமயத்தில் நமது செல்வ வளம் அதிகரிக்கும்;


தமிழ்நாட்டில் ஒரு சில இடங்களில் மட்டுமே ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் சன்னிதிகள் இருக்கின்றன.அவைகள் வருமாறு:சென்னை அருகில் உள்ள படப்பையில் இருக்கும் ஸ்ரீஜெயதுர்கா பீடம்.(தாம்பரம் டூ வேலூர் செல்லும் சாலையில்,படப்பையிலிருந்து 3 கி.மீ.தூரத்தில்)
சென்னையின் ஒரு பகுதியான வானகரம் என்னும் இடத்தில் இருக்கிறார்.

சிதம்பரத்தில் அஷ்ட பைரவர்களில் ஒருவராக ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர்  இருக்கிறார்.

காஞ்சிபுரம் அருகில் இருக்கும் அழிபடைதாங்கியில்.
திருஅண்ணாமலையில் இருந்து காஞ்சி(காஞ்சிபுரம் அல்ல) செல்லும் வழியில்  பெரியகுளம் என்னும் ஊரில்(அண்ணாமலையில் இருந்து 11 கி.மீ.தூரத்தில்=அடி அண்ணாமலையைக் கடந்ததும் பிரியும் சாலையில் இருந்து 9 கி.மீ.தூரம்)காகா ஆஸ்ரமம் இருக்கிறது.இந்த காகா ஆஸ்ரமத்தினை கொல்லிமலை சித்தர்,ஸ்ரீகாகபுஜண்டர் தருமலிங்க சுவாமிகள் 3.9.2010 அன்று நிறுவியிருக்கிறார்.இங்கே காகாஸ்ரமம் ஸ்ரீ ஸ்வர்ண கால பைரவர் என்ற பெயரில் ஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளியிருக்கிறார்.இந்த பைரவர்,சித்தர் வழிபாட்டுமுறைப்படி ஸ்தாபிக்கப்பட்டுள்ளதால்,இவர் மிகுந்த சக்தி வாய்ந்தவராக இருக்கிறார்.


திருச்சி மலைக்கோட்டைக்கு அருகில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் கோவில் ஒன்று இருக்கிறது.


திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்லும் வழியில் 45வது கி.மீ.தூரத்தில் தபசுமலை அமைந்திருக்கிறது.இங்கே ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் மலை மீது எழுந்தருளியுள்ளார்.பல சித்தர்கள் இன்றும் இங்கே சூட்சுமமாக வந்து,வழிபட்டுச் செல்கின்றனர்.


காரைக்குடியிலிருந்து மாத்தூர் செல்லும் வழியில் 3 வது கி.மீ.தூரத்தில் இருக்கும் இலுப்பைக்குடியில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.


பிள்ளையார்பட்டிக்கு அருகில் இருக்கும் வயிரவன் பட்டியில் ஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.கி.பி.700களில் இந்த கோவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

பொள்ளாச்சியிலிருந்து பழனிக்குச் செல்லும் வழியில் 9 வது கி.மீ.தூரத்தில் ஒரு கோவில் இருக்கிறது.இங்கே ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் எழுந்தருளியிருக்கிறார்.

திண்டுக்கல் அருகே இருக்கும் தாடிக்கொம்பு என்னும் கிராமத்தில் ஸ்ரீ சவுந்தர ராஜப்பெருமாள் கோவில் இருக்கிறது.இந்தக் கோவிலின் காவல் அதிகாரியாக ஸ்ரீ ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.


இந்தக் கோவில்களில் ஏதாவது ஒருகோவிலுக்கு 15.3.12 வியாழக்கிழமையன்று சென்று,மதியம் 1.30 முதல் 3 மணிக்குள் வழிபட,நமது வருமானம் அதிகரிக்கும்;கடுமையான கர்மவினை குறையும்.


ஓம்சிவசிவஓம்







Monday, March 12, 2012

பைரவர் என்ற பெயரின் பொருள்



சிவம் என்ற சொல்லுக்கு மங்களம் என்றும்,என்றும் இருப்பது என்றும் பொருள் உண்டு.முருகன் என்பதற்கு அழகு,இளமை என்று பொருள் உண்டு.அது போலவே பைரவர் என்ற சொல்லுக்கும் பொருள் உண்டு.
“ப” என்பது காத்தலைக் குறிக்கும்; “ர” என்பது அச்சத்தால் உணர்த்துதலைக் குறிக்கும்; “வ” என்பது படைத்தலைக் குறிக்கும்.முத்தொழிலையும்(படைத்தல்,காத்தல்,அழித்தல்)       இச்சொல் உணர்த்துகிறது.
இதேபோல் “ப” என்பது பரணத்தை(உயிர்களைப் படைக்கும் தொழிலை)க் குறிக்கும்; “ர” என்பது ரமணத்தை(உயிர்களைக் காப்பதை)க் குறிப்பிடுகிறது; “வ” என்பது வமனத்தை(உயிர்கலின் இயக்கத்தை அழித்து,பின் தன்னுள் ஒடுக்கிக் கொள்வதை) உணர்த்துகிறது.
பைரவம் என்னும் சொல்லுக்கு தன்னை உபாசிப்பவனைக் காப்பவன் என்ற பொருளையும், தன் அடியார்களை துன்புறுத்துவோர்களை பயமுறுத்தி அழிப்பவன் என்ற இருவேறுபட்ட பொருள்களையும் குறிக்கும்.
மூவர்க்கும் தேவர்க்கும் காண்பதற்கரிய இறைவன்,காதலாகிக் கசிந்துருகி,அன்புருவாய் மாறும் அடியவர்க்கு,இறங்கி வந்து காட்சி தந்து கருணை புரியும் சிவ வடிவமே மஹாபைரவர் ஆகும்.
கலியுகத்தில் பேசும் தெய்வமே காலபைரவர் ஆவார்.


நன்றி:பைரவ ரகசியம்,பக்கம்2,எழுதியவர்:கொல்லிமலை சித்தர் ஸ்ரீகாகபுஜண்டர் தருமலிங்க சுவாமிகள்






கேட்டதையெல்லாம் தந்தருளும் வயல்வெளி அஷ்டபுஜ பைரவர்,வேலூர்





தமிழ்நாட்டின் வடக்கு எல்லையில் அமைந்திருக்கும் கல்வி நகரம் வேலூர் ஆகும்.இங்கு வேலூர் டூ சென்னை செல்லும் நெடுஞ்சாலையில் ,வேலூரிலிருந்து 3 கி.மீ.தூரம் சென்றால் ஒருங்கிணைந்த மாவட்ட நீதிமன்ற வளாகம் வரும்;இந்த நீதிமன்றத்தைக் கடந்து ஒரு கி.மீ.தூரத்தில் ரங்காபுரம் என்னும் கிராமம் அமைந்திருக்கிறது.இந்த கிராமத்தின் வழியாக செங்காநத்தம் என்னும் மலையோர கிராமத்துக்கு 4 கி.மீ.தூரத்துக்குப் பயணிக்க வேண்டும்.இந்த கிராமத்திற்கு அருமையான சாலை வசதி மலைமீது கொண்டை ஊசிவளைவுகளோடு அமைக்கப்பட்டுள்ளது;இந்த கிராமத்தின் நுழைவாயிலில் வயல்வெளி வழியாக சுமார் 1 கி.மீ.தூரம் பயணித்தால்,இருப்பவரே வயல்வெளி அஷ்டபுஜ கால பைரவர் கோவில் ஆகும்.இவருடன் வயல்வெளி முனீஸ்வரரும்,மற்ற ஆவரண தேவதைகளும் இருக்கின்றனர்.இங்கு பூசாரி கிடையாது;கோவிலுக்குப் பின்னால் வறண்ட ஓடையை ஒட்டி இருக்கும் புற்றுமண்ணே இங்கு விபூதிப் பிரசாதமாக வழங்கப்படுகிறது.நாமே பூஜை செய்ய வேண்டியதுதான்!!!


தினமும் ஒருமுறை வீதம் 3 நாட்கள் அல்லது வாரம் ஏதாவது ஒரு நாள் என்று 3 வாரத்துக்கு வந்து இவரை வழிபடுபவர்களுக்கு அவர்களின் கடும் சிக்கல்கள் உடனடியாகத் தீர்ந்துவிடுகின்றன;தவிர,இங்கு வரும் பெண் பக்தைகள் திடீரென பரவசமடைந்து சாமியாடுவதும் உண்டு.கேட்டவரம் எதுவாக இருந்தாலும் இவர் தருவதால்,இவரை நோக்கி படையெடுத்துவரும் பக்தர்கள்,பக்தைகள் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துவருகிறது.


நாமும் ஒருமுறை போய் வரம் வாங்கி வருவோமா?


இந்தப்புகைப்படங்களை நமக்குத் தந்து உதவிய நமது வேலூர் ஆன்மீகக்கடல் வாசகர் திரு. பாலக்ருஷ்ணன் அவர்களுக்கு கூகுள் நன்றிகள்!!!


ஓம்சிவசிவஓம்
 link: this web



Wednesday, March 7, 2012

வாஸ்து சாஸ்திரமும் ஒரு விஞ்ஞானக் கலையே!


ஒரு ஜோதிடக் கேள்வி  பதில் பகுதியில் இருந்து:
?:ஒரு வீட்டின் வாஸ்து அமைப்பைப் பார்த்து அந்த வீட்டில் வசிப்பவர்களது கடந்த காலத்தையும்,வருங்காலத்தையும் கூற இயலுமா?

!!! ஏன் முடியாது? வாஸ்து நிபுணர் மதிப்பிற்குரிய கவுரு திருப்பதி ரெட்டி அவர்களுக்கு 9.6.1994 ஆம் தேதி அமெரிக்காவில் இருந்து ஒரு தொலைபேசி வந்தது.ராமகிருஷ்ண பாலெபு என்பவர் தொடர்பு கொண்டார்.
“எங்கள் தொழிற்சாலை கிழக்கு,மேற்கு,வடக்கு ஆகிய மூன்று திசைகளில் மூடப்பட்டு தெற்கில் நூறு அடிக்குமேல் வெற்றிடம் உள்ளது” என்று கூறினார்.அதற்கு,எப்போது அந்தத் தொழிற்சாலை கட்டப்பட்டது? என்று கேட்டபோது,கி.பி.1974 இல் ரூபாய் 30 கோடி மதிப்பில் கட்டப்பட்டது என்றார்.
“அப்படியானால் நீங்கள் கட்டியதில்லை;வாங்கியது” என்றார். அதற்கு க்ருஷ்ண பாபுலே “ஆமாம்,நான் வாங்கியதுதான்” என்று ஆச்சரியத்துடன் பதிலளித்தார்.

தெற்கில் அவ்வளவு காலி இடமுள்ள தொழிற்சாலை,வீடு ஏதாவது 12 வருடங்களில் கண்டிப்பாக அது உரிமையாளரை மாற்றும்.இந்த விஷயம் வாஸ்துவில் அனுபவமுள்ள அனைவருக்கும் தெரியும்.
கலையில் நம்பிக்கை இல்லாமல் வயிற்றுப்பிழைப்புக்காக அல்லது வெறும் கேலியும் கிண்டலும் செய்வதற்காகவும் வாஸ்து வித்யா என்னும் இந்த புனித கலையைக் கற்கும் யாரும் பிரபஞ்ச சூட்சுமங்களை புரிந்து கொள்ளமுடியாது.

நன்றி: ஜோதிட அரசு,பக்கம் 63,மார்ச் 2012.

ஜீவ சமாதிகளின் வகைகள் (Types of final conscious Exit)


பதஞ்சலி மகரிஷியின் அட்டாங்க யோகக் கூற்றுப்படி சமாதி என்பது ஆதிக்கு சமமாதல் என்று பொருள்படுகிறது.அதாவது பார்ப்பவன்,பார்க்கப்படும் பொருள்,பார்த்தல் என்று செயல் மூன்றும் ஒன்றாகிய நிலை சமாதி ஆகும்.

மேலும் சமாதி எனும் சொல் ஒரு யோகியினுடைய உணர்வுடன் கூடிய ஒடுக்க நிலையையும் குறிக்கிறது.இதன்படி சமாதிக்குச் செல்லும் யோகி தன்னுடைய ஒடுக்க நாளை முன்கூட்டியே தெரிவிக்கிறார்.அதாவது தன்னுடைய யோக பலத்தால் தன் சமாதி நாளைத் தானே அறிவித்து,தன்னை சமாதியில் இருத்திக்கொள்ளுதல் ஆகும்.


சாதாரண மரணத்தில் உடம்பில் இருந்து கழிவுகளாக மலம்,மூத்திரம்,விந்துநாதம் வெளிப்பட்டு மரணம் சம்பவிக்கும்.ஆனால்,சமாதியடையும்போது இவ்வகைக் கழிவுகள் வெளிவராமல் உயிர்ச் சக்தியாகிய விந்துவானது உச்சந்தலையில் ஒடுங்கிவிடும்.யோகியினுடைய உடல் இயக்கமும்,மன இயக்கமும் நிறுத்தப்பட்டுவிடும்.இந்த உடம்பு மற்ற உடம்பைப் போல மண்ணில் அழியாது;காலா காலத்திற்கும் காக்கப்படும்.

1.நிர்விகற்ப சமாதி: பிரம்மத்தில் லயம் பெற்ற மறுபிறப்பற்ற நிலை : உதாரணம்:போகர்

2.விகற்ப சமாதி:மனதில் இருமை நிலையோடு கூடிய சமாதி .மறுபிறப்புக்கு வழியுண்டு.

3.சஞ்சீவினி சமாதி:உடலுக்கு சஞ்சீவித் தன்மையை மண்ணிலும்,மனதின் சஞ்சீவித் தன்மையை விண்ணிலும் கொடுக்கும் நிலை.மறுபிறப்பில்லாத நிலை.உதாரணம்:சந்த ஞானேஷ்வர் சமாதி,ஆலந்தி,பூனா.


4.காய கல்ப சமாதி:சமாதிக்குப் பின் உடலை மட்டும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள உதவும் சமாதி நிலை.மறுபிறப்புக்கு வழியுண்டு.சமாதி அடைந்த யோகி நினைத்தால் மீண்டும் அவ்வுடலுக்கு வர முடியும்.உதாரணம்:சச்சிதானந்தர் சமாதி,சச்சிதானந்தர் ஆசிரமம்,கொடுவிலார்பட்டி,தேனி மாவட்டம்.
5.ஒளி சமாதி அல்லது ஒளி ஐக்கியம்: யோகியானவன் தொடர்ச்சியான யோகப்பயிற்சியின் மூலம் பருவுடலை ஒளி தேகமாக ஆக்கி,உடல் சூட்டினை அதிகரித்து இந்தப்பருவுடலை பூமிக்குக் கொடுக்காமல் ஒளியாக்கி மறைந்துவிடுதலே ஒளி சமாதி ஆகும்.


உதாரணம்:காக புஜண்டரின் ஒளி ஐக்கியம்.இந்த சித்தர் பருவுடல் தாங்கி பூமியில் இருப்பார்;பூமியில் நீர்,நெருப்பு,காற்று,நிலநடுக்கம் என்று பிரளயம் வந்தால் காக உருவம் தாங்கி மரங்களிலும் வாழ்வார்.நீர்ப்பற்றாக்குறை,கடும் வறட்சியால் மரங்களும் அழிய நேர்ந்தால் ஒளியாகி,அவிட்ட நட்சத்திரமாகி வாழ்வார் என சித்தர் பாடல்கள் தெரிவிக்கின்றன.அவிட்ட நட்சத்திரத்தில் பிறந்தவர்கள்,உங்களின் லக்னாதிபதி அவிட்டத்தில் நிற்கப் பிறந்தவர்கள் காகபுஜண்டரை வழிபட நல்லது மட்டுமே நடக்கும்.
ஒளி சமாதிக்கு வடலூர் வள்ளலார்,திரு அண்ணாமலையில் விட்டோபா சுவாமிகள்,எடப்பள்ளி சத்குருநாதர்,விருத்தாசலம் குமாரத்தேவர் ஆகியோர் உதாரணங்கள் ஆகும்.
 நன்றி:சித்தர்கள் களஞ்சியம் ,பக்கங்கள்52,53;ஆசிரியர்;பல சித்தர்களோடு பல ஆண்டுகள் வாழ்ந்தவர் யோகி கைலாஷ்நாத்

ஓம்சிவசிவஓம்

பாரதத்தின் இறையாண்மையைச் சிதைக்கும் “இஸங்கள்”


இந்தியாவின்  ஒருமைப்பாடும்,இறையாண்மையும் உலகளாவிய மூன்று பெரும் பகாசுர சக்திகளால் அச்சுறுத்தலுக்கு ஆளாகியுள்ளன.1)பாகிஸ்தானை மையமாகக் கொண்டு  இந்தியாவெங்கும் இயங்கும் இஸ்லாமிய தீவிரவாதம் 2)சீனாவை மையமாகக்கொண்டு இந்தியாவில் செயல்பட்டுவரும் மாவோயிஸ்டுகள் மற்றும் இதர மார்க்சிய அமைப்புகள் 3)மேற்கத்திய நாடுகளால் மனித உரிமை என்ற பெயரில் ஊட்டி வளர்க்கப்படும் திராவிட,தலித் பிரிவினைவாதம்.இவற்றில் மூன்றாவதைப் பற்றி விரிவான ஆய்வுகளையும்,அலசல்களையும் உள்ளடக்கியது இந்நூல்.(புத்தகத்தின் பெயர்: உடையும் இந்தியா? ஆரிய திராவிடப் புரட்டும் அந்நியத் தலையீடுகளும் ஆசிரியர்கள்:ராஜிவ் மல்ஹோத்ரா=அரவிந்தன் நீலகண்டன்,வெளியீடு:கிழக்கு பதிப்பகம்,பக்கங்கள்:768 விலை:ரூ.425/-)


அமெரிக்க,ஐரோப்பிய கிறிஸ்தவ நிறுவனங்களின் பணபலத்துடன் இந்தியாவுக்குள் திராவிட,தலித்பிரிவினை வாதத்தை வளர்க்க களமிறக்கப்படும் மனித உரிமை அமைப்புக்கள்,கல்வியாளர்கள்,சிந்தனை வட்டங்கள்,மத அமைப்புகள் ஆகியவை நிழலுருவில் செயல்படும்விதம் குறித்து விரிவான ஆய்வுகளை இந்த நூல் அளிக்கிறது.ஆரிய திராவிட இனவாதம் உருவான வரலாறு,புனித தாமஸ்  பற்றிய கட்டுக்கதையை மையமாக வைத்து உருவாக்கப்படும் ‘திராவிட கிறிஸ்தவம்”ஆகியவை பற்றியும் இந்த நூல் விரிவாகப் பேசுகிறது.தலித்களை இந்தியாவின் மற்ற அனைத்து சமூகங்களிலிருந்தும் வேறுபட்ட,எதிரிடையான இனமாக சித்தரிக்கும் விஷ வித்துக்களை விதைக்கும் அமைப்புகள் குறித்தும்,உலகளவில் தங்களுக்குள் ஒன்றுக்கொன்று போட்டிபோடும் அதிகார சக்திகள் இந்தியாவுக்கு எதிராக எப்படி குயுக்தியுடன் ஒன்றிணைந்து வேலை செய்கின்றன என்பது குறித்தும் நூல் அம்பலப்படுத்துகிறது.நூலாசிரியர்கள் இது பற்றி கடந்த ஆறு ஆண்டு காலமாக தீவிர ஆய்வுகள் மேற்கொண்டனர்.அந்த ஆய்வுகளின் விளைவாக இந்த நூல் வெளிவந்திருக்கிறது.


மேற்கத்திய நாடுகளால் தூண்டிவிடப்பட்ட ஆனால் பெரும்பாலும் உலகின் பார்வையிலிருந்து மறைக்கப்பட்ட, மறக்கப்பட்ட விஷயங்களையும்,குறுகிய காலத்திலேயே மேற்கத்திய சக்திகள் விரும்பிய பலனை அளித்ததோடு மட்டுமல்லாமல் நீண்டகால நோக்கில் இந்தியாவைப் பிளவுபடுத்தி வைக்கக் கூடிய புரட்டு வாதமான ஆரிய திராவிட இனப்பாகுபாட்டுக் கொள்கை எவ்வாறு உருப்பெற்று வளர்ந்திருக்கிறது என்பதையும்,இதனால் எதிர்காலத்தில் நம் இறையாண்மைக்கும்,தேச ஒருமைப்பாட்டிற்கும் வரப்போகிற ஆபத்துக்களையும் இந்த நூல் தக்க ஆதாரங்களுடன் விரிவாக அலசுகிறது.



மாக்ஸ் முல்லர் “ஆரியன்” என்பதை மொழியியல் வகைப்படுத்தலாகத்தான் முன்வைத்தார்.ஆனால்,கிறிஸ்தவ ஆங்கிலேயன் அதை ஒரு இனமாகவே மாற்றிவிட்டான்.இதன் மூலம் பாரம்பரியமான இந்து மக்களை பாகுபடுத்தினான்.ஆரியரல்லாதோரை புறக்கணிக்கப்பட்டோராகவும்,விளிம்புநிலை மக்களாகவும் காட்டினான்.மேலும் ஜெர்மனியர் ஆரியரை விட மேன்மையானதோர் இனமாக அடையாளப்படுத்தினான்.அதே சமயத்தில் தென் இந்தியாவில் கிறிஸ்தவ சபைகள் திராவிட இன அடையாளங்களை உருவாக்கின;தமிழ்ப் பண்பாட்டை அனைத்து இந்திய பண்பாட்டிலிருந்து திட்டமிட்டு துண்டித்தன” என்பதையும் எடுத்துரைக்கின்றனர் ஆசிரியர்கள்.

ராபர்ட் கால்டுவெல்லை முன்னோடியாகக் கொண்டு பல மதபோதகர்கள் இந்தியர்களை மொழியியல் ரீதியாகவும்,மதரீதியாகவும் பிரித்து,பிராந்தியம் சார்ந்த இன அடையாளம் தந்து,தமிழர்களிடம் தமிழ் பண்பாடு தனித்தன்மை வாய்ந்தது அது ;இந்தியாவின் பிறபகுதிகளிடமிருந்து வேறுபட்டது என்று கூறினார்கள்.இதுவே பிற்கால இனவாத அரசியலுக்கு அடிப்படையானது என்பதையும் தெளிவாக வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளனர்.


இப்புத்தகத்தில் ஆசிரியர்கள் இந்துக்களை மதம் மாற்ற பன்னாட்டு நிறுவனங்கள் எப்படி செயல்படுகின்றன என்று அற்புதமாக விளக்கியுள்ளனர்.முதலில் இந்துக்களை பல துண்டுகளாகப் பிரிக்க வேண்டும்;அப்பிரிவுகளின் பலவீனங்கள் என்ன? அந்த பலவீனங்களை எப்படி பயன்படுத்துவது? மதமாற்றத்துக்கு எதிராக ஒவ்வொரு பிரிவிலும்(ஜாதியிலும்!) எவை தடையாக உள்ளன.அவற்றை எப்படி உடைக்கலாம்? என ஒரு பன்னாட்டு நிறுவனம் சந்தையை எப்படி அணுகுமோ,அதுபோல இவை இந்து மத மக்களை அணுகி,தங்களது சதித் திட்டத்தை சாமர்த்தியமாக நிறைவேற்றிய வரலாற்றினை அம்பலப்படுத்துகின்றனர்.
இத்தகைய பிரிவினை வாத நிறுவனங்கள் இந்தியாவிலிருந்து இயங்கும் அறிவியக்கவாதிகள்,போலி மதச்சார்பின்மை அரசியல்வாதிகள் போன்றோரின் உதவிகளையும் பெற்று வருவது குறித்தும் தமது கவலைகளைப் பகிர்ந்து கொள்கின்றனர் ஆசிரியர்கள்.

மறுத்துச் சொல்ல முடியாத திட்டவட்ட ஆதாரங்களுடன் இந்தியாவை உடைக்க முயலும் அந்நிய சக்திகளின் சதிகளை அரங்கேற்றியிருக்கும் இந்நூல்,ஒவ்வொரு தமிழரும்,இந்துவும்,தேசத்தை நேசிக்கும் இந்தியரும் கட்டாயம் படிக்க வேண்டிய ஆய்வு ஆவணத் தொகுப்பு.


நன்றி:சுதேசிச் செய்தி,பக்கம் 31,32;மார்ச் 2012.
ஓம்சிவசிவஓம்

சுதேசி கேள்வி பதில் பகுதி(மார்ச் 2012)யிலிருந்து


?:பன்னாட்டு கல்வி நிறுவனங்கள் நம் நாட்டிற்கு வந்தால் சர்வதேச தரம் வாய்ந்த கல்வி நமக்கு கிடைக்காதா? ஏன் இதை நாம் எதிர்க்க வேண்டும்?
!!:இதைப் பற்றி நாம் ஏற்கனவே விலாவாரியாக சொல்லியிருக்கிறோம்.நன்மைகள் மட்டும் வருவதில்லை;அந்தப்பேக்கேஜ்களுடன் வேண்டாதவைகளும் வரும்.அதை விடுங்கள்.நீங்கள் கூறும் சர்வதேச தர கல்விச்சாலைகளில் முதல் வரிசையில் நிற்கும் ஆக்ஸ்ஃபோர்ட் பற்றிய செய்தி.

ஆக்ஸ்ஃபோர்டில் பட்டம்பெற்று வெளியேறியவர்களின் வேலைப் பின்னணி பற்றிய ஒரு ஆய்வை அந்தப் பல்கலைக் கழகமே வெளியிட்டுள்ளனர்.அதன்படி,சார்ட்டடு அக்கவுண்டண்ட்,மெக்கானிக்கல் என் ஜினியர்கள் பணியில் சேருவதை விட அதிகமான ஆக்ஸ்ஃபோர்ட் பட்டதாரிகள்,ஆண்,பெண் வெயிட்டர்களாகவும்(மேசைப் பணியாளர்கள்),மதுபானக்கடைகளில்(பார்) சிப்பந்திகளாகவும் சேர்கின்றனர் என்கிறது ஆக்ஸ்ஃபோர்டின் சொந்த ஆய்வு. வேண்டுமா இன்னமும் கண்மூடித்தனமான வெளிநாட்டுக் கல்வி மோகம்
ஆன்மீகக்கடலின் கருத்து:வெளிநாட்டுப் பல்கலைக்கழகங்கள் இந்தியாவுக்கு வந்தால்,மாணவ விடுதி,மாணவியர் விடுதி என தனித்தனியாக இராது.

?:அமெரிக்க அவுட்சோர்ஸிங் நிறுவனங்களுகு அதிகவரி விதிக்கப்படும் என்று ஒபாமா அறிவித்திருக்கிறாரே?
!:’சுதேசியம்’ பேசுகிறது ஒபாமா.அமெரிக்காவை காப்பாற்ற நினைப்பது புரிகிறது.மன்மோகன் அரசும் அமெரிக்காவை காப்பாற்ற நினைப்பதுதான் புரியவில்லை.
?:மான்யங்கள் அதிகரிப்பு எனது தூக்கத்தைத் துரத்துகிறது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜியின் புலம்பல் நியாயமா?
!:பன்னாட்டுக் கம்பெனிகளுக்கான சலுகைகளை விலக்கி விட்டால்,மான்ய இழப்புகளை வருமானமாக மாற்றிவிட முடியும்.தூக்கம் கெட்டதற்குக்காரணம், பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு அளிக்கப்படும் சலுகைகளுக்கு இவை தடையாக உள்ளனவே என்பதுதான்.