Thursday, April 7, 2016

ஆன்மீக லட்சியம்

வெறும் ஐந்து ஆண்டுகள் மக்களின் வாக்கின் மூலமாக ஒரு ஊரை நிர்வாகிக்கும் பொறுப்பு(பதவி அல்ல;) நம்மில் வெகு சிலருக்கு வந்து சேருகின்றது;

8,00,00,000 தமிழர்களை 235 பேர்கள் நிர்வாகிக்கின்றனர்;அதுவும் அவர்களின் ஆயுள் முழுக்க அல்ல;வெறும் ஐந்து ஆண்டுகள்! இந்த ஐந்து ஆண்டு அதிகாரத்திற்கே இப்படி பெருமைப்பட்டு,தன்னை முன்னிலைப்படுத்துகின்றனர் வெற்றி பெற்றவர்கள்!

எத்தனையோ பிறவிகளாக சேமித்த புண்ணியத்தால்,இந்தியாவில் அதுவும் தமிழ்நாட்டில் பிறந்திருக்கின்றோம்;அடுத்த பிறவி இன்னும் உயர்வாக அமைய வேண்டுமா? அல்லது இனி இந்த பூமியில் பிறக்காமலேயே இருக்க வேண்டுமா?

பின்வரும் காரியங்களை உங்கள் வாழ்நாளில் செய்து முடித்துவிடுங்கள்;உங்களின் ஆன்மீக லட்சியம் அல்லது ஆன்மீக நோக்கங்கள் நிறைவேறும்;

சுய கட்டுப்பாட்டு விதி எண் 1.அசைவம்,மது இவைகளைத் தவிர்த்துவிட்டு இவைகளைச் செய்தால் மட்டுமே நிறைவேறும்;

சுய கட்டுப்பாட்டு விதி எண் 2:உங்களுக்கு உபதேசம் செய்பவரைத் தவிர வேறு எவரிடமும் இது தொடர்பாக கலந்து ஆலோசனை செய்ய வேண்டாம்;அப்படிச் செய்தால்,குழப்பமே மிஞ்சும்;

பத்து ஆண்டுகளில் 1000 முறை அண்ணாமலை கிரிவலம் சென்று வரவும்;இதைச் செய்ய முடியாதவர்கள் திருவாதிரை நட்சத்திரம் வரும் இரவில் கிரிவலம் செல்லவும்;அப்படி 108 திருவாதிரை நட்சத்திர நாட்களில் அண்ணாமலை கிரிவலம் செல்வது அவசியம்;

உங்கள் பிறந்த ஜாதகப்படி,உங்களுக்கு என்றே இருக்கும் ஒரு கோவிலுக்கு ஒரு வருடத்தின் குறிப்பிட்ட நாளில் சென்று அபிஷேகம் செய்யவும்;

ஒரு தமிழ் வருடத்திற்குள்(சித்திரை 1 முதல் பங்குனி 30க்குள்) அட்டவீரட்டத் திருத்தலங்களுக்கு ஒரு முறை பயணித்து வரவும்;

ஒரு பசுவை உங்கள் ஜாதகப்படி அமைந்திருக்கும் ஆலயத்திற்கு தானமாகத் தரவும்;

3,00,000 முறை அஷ்ட கணபதி மந்திரம் ஜபித்து மந்திர ஸித்தி அடையவும்;

குறைந்தது 1000 நாட்கள் அதிகபட்சமாக 3000 நாட்கள் தினமும் காலையில் 30 நிமிடமும்,இரவில் 30 நிமிடமும் ஆதிவராகி வழிபாடு+மந்திரஜபம்+தானம்+அர்ப்பணம்(தர்ப்பணம் அல்ல) செய்து வரவும்;

மாதம் ஒரு நாள் உள்ளூரில் இருக்கும் சிவாலயத்தின் வாசலில் அன்னதானம் அல்லது அதற்கு இணையான தானம் செய்யவும்;

மாதம் ஒரு நாள் குலதெய்வ வழிபாடு செய்யவும்;

உங்களுடைய ஜனன நட்சத்திர சித்தரை தரிசிக்க முயற்சிக்கவும்;

இவைகள் அனைத்தையும் உங்களுடைய 15 வது வயதில் இருந்து 65 வது வயதிற்குள் பூர்த்தி செய்யவேண்டும்;


மற்றவை தங்களை நேரில் சந்திக்கும் போது. . . கை.வீரமுனி. . .ஸ்ரீவில்லிபுத்தூர். 9092116990

நாமும் நமது ஊரில் இயற்கை உணவுக்கான ஆர்கானிக் கடையை ஆரம்பிக்க இவர்களை நாடுவோமா?

சமைக்காத உணவு சாப்பிட்டு வந்த நமது முன்னோர்கள் பல ஆண்டுகளாக ஆரோக்கியமாக (நோய்கள் இன்றி) வாழ்ந்து வந்துள்ளனர்;

இதை இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப மாற்றியமைத்து மருத்துவமுறையாக மாற்றியுள்ளனர் நமது முன்னோர்கள்;அதுதான் இயற்கை மருத்துவம்;

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஊரிலும் இயற்கை மருத்துவர்கள் உருவாகி வருகின்றனர்;

விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் தலைமைத் தபால் நிலையம் அருகில் அமைந்திருப்பது தாய் வழி இயற்கை மருத்துவக் கடை ஒன்று திரு.மாறன் ஜி அவர்கள் தலைமையில் கடந்த 17 ஆண்டுகளாக இயங்கிவருகின்றது;

சிவகாசியில் இயற்கை உணவுகள் பற்றிய விழிப்புணர்ச்சியை உருவாக்குவதோடு,இயற்கை உணவுகளை தினமும் விற்பனை செய்தும் வருகின்றனர்;

தவிர,இயற்கை விவசாயத்தை தமிழ்நாட்டில் உருவாக்கி பரப்பிய திரு.கோ.நம்மாழ்வார் அவர்களின் வழிகாட்டுதலால் இவர்கள் சிற்பி வாழ்வியல் மையம் என்ற அமைப்பை நடத்தி வருகின்றனர்;

இந்த சிற்பி வாழ்வியல் மையமானது இயற்கை உணவுகளை எப்படித் தயாரிப்பது? எப்படி ஒரு ஊரில் இயற்கை உணவுகளை வர்த்தக ரீதியில் தயாரிப்பது,விழிப்புணர்ச்சியை உருவாக்குவது,சந்தைப்படுத்துவது,விற்பனை செய்வது என்பதைப் பற்றி பயிற்சி முகாம்கள் மூலமும்,நேரடி உதவி மூலமாகவும் பயிற்றுவித்து வருகின்றனர்;

நாமும் நமது ஊரில் இயற்கை உணவுக்கான ஆர்கானிக் கடையை ஆரம்பிக்க இவர்களை நாடுவோமா?

சர்க்கரை நோய்,மூட்டுவலி,முதுகு வலி,ஆஸ்த்மா,புற்று நோய் என்று எந்த நோயாக இருந்தாலும் இயற்கை உணவுகள் மூலமாக முழுமையாக குணப்படுத்த முடியும்;
ஒருமுறை நேரடியாகச் சென்று(முன் அனுமதி பெற்றுத்தான்) மருத்துவ ஆலோசனை பெறவும்;

திரு.மாறன் ஜி அவர்களின் செல் எண் தேவைப்படுவோர் தொடர்பு கொள்ளவும்;


பாரம்பரியம் காப்போம்;ஆரோக்கியமாக வாழ்வோம்;

ஜோதிட நினைவூட்டல் எச்சரிக்கை!


26.2.16 அன்று விருச்சிகராசிக்குள் பெயர்ச்சியான செவ்வாய்,இம்முறை வக்கிரமடைவதால் 19.9.16 வரை அங்கேயே இருக்கப் போகிறார்;ஏற்கனவே,அதே விருச்சிகராசியில் சனிபகவான் இருப்பதாலும் இருவரும் ஒரே ராசியில் 19.9.16 வரை சஞ்சாரித்து வருவதாலும்,12 ராசிக்காரர்களும் இந்த 6 மாதத்தில் மன நிம்மதியிழக்கும் சூழ்நிலை உருவாகியிருக்கின்றது;
இந்த ஜோதிட அமைப்பினால் நாம் ஒவ்வொருவரும் ஏதாவது ஒருவிதத்தில் பாதிப்பிற்குள்ளாகிக் கொண்டிருக்கின்றோம்;


தினமும் 30 நிமிடம்(காலையிலும்,இரவிலும்) ஏதாவது ஒரு கடவுளின் பெயரை ஜபித்து வருவதால் இந்த யுத்தக் கிரகங்களின் பாதிப்பு நம்மை நெருங்காது;


தினமும் குலதெய்வம் கோவிலுக்குச் சென்று வருபவர்களுக்கு 26.2.16 முதல் 19.9.16 வரை மன உறுதியோடு இருப்பார்கள்;


தினமும் அருகில் இருக்கும் சிவாலயத்திற்குச் செல்பவர்கள்,ஈசனின் அருட்பார்வையால் இந்த யுத்தக் கிரகப் பாதிப்பிலிருந்து தப்பிவிடுவர்;


தினமும் அன்னதானம் செய்பவர்கள் எப்போதும் நிம்மதியான மனநிலையில் வாழ்ந்து வருவர்;

தினமும் அண்ணாமலை கிரிவலம் செல்பவர்கள் இந்த கிரகச்சேர்க்கையால் பாதிக்கப்படமாட்டார்கள்;

தினமும் மனவளக்கலை மன்றதியானம் அல்லது ஏதாவது ஒரு தியானம் செய்பவர்களுக்கு இந்த பாதிப்பு வராது;

தினமும் பசுவுக்கு அகத்திக்கீரை அல்லது வாழைப்பழம் தானம் செய்பவர்கள் யுத்தக்கிரகப் பாதிப்பிலிருந்து விலகி வாழ்வார்கள்;

தினமும் அன்னை அரசாலை(ஆதிவராகி)யின் 12 பெயர்களை காலையில் 30 நிமிடமும்,இரவில் 30 நிமிடமும் ஜபித்து வருபவர்கள் வளமான வாழ்க்கையையும்,நிம்மதியான நாட்களையும் அனுபவிப்பார்கள்;


அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)


ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா

பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி
போத்ரிணி
சிவை
வார்த்தாளி
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரி
அரிக்னி

இவைகள் தான் அந்த 12 பெயர்கள்;இவைகளை தினமும் ஜபிப்பதன் மூலமாக ஆதிவராகி என்ற மங்கள மகாகாளியின் அருளைப் பெறுவர்;

19.9.16 வரை அனைத்து ராசிக்காரர்களும் ஒருமுறைக்கு இருமுறை எதையும் யோசித்து செய்யவும்;

ஓம் வராகி சிவசக்தி ஓம்


Wednesday, March 30, 2016

ஏன் மந்திரஜபம் ஜபிக்க வேண்டும்?


ஏன் என்றால் நமது பிறவிகளின் எண்ணிக்கையைக் குறைக்கும் ஆன்மீக நடவடிக்கைகளில் முக்கியமான நடவடிக்கை மந்திரஜபம்!

நமது மனித உடலில் நாடியும்,நரம்பும் 1,00,000 மையங்களில் இருந்து நம்மை இயக்கிக் கொண்டு இருக்கின்றது;அதனால் தான் நாம் நோய் நொடி இன்றி வாழ்ந்து வருகிறோம்;இந்த 1,00,000 மையங்களிலும் நாம் ஏதாவது ஒரு மந்திரத்தை அல்லது மந்திரத் தொகுப்பை ஒரு முறை ஜபத்தின் மூலமாக பதிய வைக்க வேண்டும்;அப்படிச் செய்வதற்குத்தான் ஒரு நாளுக்கு காலையில் ஒரு மணி நேரம்,இரவில் ஒரு மணி நேரம் என்று மந்திரத்தை ஜபிக்கும் படி வலியுறுத்துகிறோம்;

இப்படித் தொடர்ந்து செய்து வந்தால்,ஒரு வருடத்திற்குள் (சிலருக்கு இரண்டு அல்லது மூன்று ஆண்டுகளுக்குள்) அந்த மந்திரம் அல்லது மந்திர தொகுப்பு சித்தி ஆகிவிடும்;அதன் பிறகு,அடுத்த கட்ட மந்திரம் உபதேசமாக நம்மைத் தேடி வரும்;

சில மந்திரங்களை ஒரு லட்சத்துக்கும் மேல் ஜபிக்க வேண்டியிருக்கும்;அப்படி ஜபிக்க வேண்டியிருக்கும் சூழ்நிலையில் முதல் 1,00,000 தடவை ஜபித்தாலே நமது சிந்தனை சீராகிவிடும்;செயல் துல்லியமாகிவிடும்;கர்மவினை அல்லது நவக்கிரகத்தினால் வர இருக்கும் தீமைகள் 1% அளவுக்கு குறைந்துவிடும்;அதன் பிறகு,வாழ்க்கையே வாழ்க்கையின் போக்கே ஆன்மீகமயமாகிவிடும்;

ஆமாம்!

இன்று முதல் அன்னை ஆதிவராகி என்ற அரசாலையின் மந்திர ஜபத்தை ஆரம்பிப்போமா?

அசைவம் சாப்பிடுவதை நிறுத்திவிட்டு,மது அருந்துவதையும் தவிர்த்துவிட்டு,காலையில் 15 நிமிடம்(காலை 6 மணிக்குள்);இரவில் 15 நிமிடம்(மாலை 6 மணிக்கு மேல் இரவு 12 மணிக்குள்) பின்வரும் அன்னை அரசாலையின் 12 பெயர்களை வீட்டில் ஜபித்து வரவும்;ஜபிக்கும் போது பச்சை நிறத்துண்டின் மீது அமர்ந்து கொள்வது மிகவும் நன்று;

நம்முடைய பணக்கஷ்டம் நீங்கிட இந்த பச்சைத்துண்டு ஜபம் கைகொடுக்கும்;

சுமாராக ஒரு வருடம் வரை ஒரு நாள் கூடவிடாமல் ஜபித்துவரவும்;

இன்று முதல் ஒரு மாதம் வரை காலையில் 15 நிமிடம்;இரவில் 15 நிமிடம் வரை ஜபிக்க வேண்டும்;

31 வது நாள் முதல் 60 வது நாள் வரை காலையில் 30 நிமிடம்;இரவில் 30 நிமிடம் வரை ஜபிக்க வேண்டும்;(வாய்விட்டுச் சொல்லக் கூடாது;மனதுக்குள் சொன்னால் போதும்)

61 வது நாள் முதல் 90 வது நாள் வரை காலையில் 45 நிமிடம்;இரவில் 45 நிமிடம் வரை ஜபிக்க வேண்டும்;

91 வது நாள் முதல் 360 வது நாள் வரை காலையில் 60 நிமிடம்;இரவில் 60 நிமிடம் வரை ஜபிக்க வேண்டும்;

சிலருக்கு காலையில் 30 நிமிடம்;இரவில் 30 நிமிடம் வரை ஜபிக்கும் போதே தலைவலி வரலாம்;உடல் சூடாகலாம்;அவர்கள் 360 வது நாள் வரையிலும் தினமும் காலையில் 30 நிமிடம்,இரவில் 30 நிமிடம் வரை ஜபித்து வந்தால் போதுமானது;

இதோ அன்னை ஆதிவராகி என்ற மங்கள மகா காளியம்மனின் 12 பெயர்கள்:


அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)



ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி
போத்ரிணீ
சிவை
வார்த்தாளி
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ


இவைகளை பக்தி சிரத்தையுடன்,நமது பிரபஞ்ச அன்னையை நினைத்து தினமும் ஜபித்து வரவும்;

அடுத்த நிலைக்குச் செல்ல விரும்புவோர் ஒரு முறை எம்மை நேரில் சந்திக்கவும்;

Tuesday, March 15, 2016

நாட்டின் பாரம்பரியத்தை மாற்றிய சிந்தனைவாதிகள்!


நேருவின் ஆட்சிக்காலத்தில்,நேரு பின்பற்றிய வறட்டுத்தனமான சோஷலிஷ சித்தாந்தத்தால் நாட்டின் பொருளாதாரம் நாசமானது ஒரு பக்கம் இருக்க,மறுபக்கம் ஊடகம்,ஒவ்வொரு மாநிலத்திலும் மாவட்ட அளவிலும்,நகர அளவிலும் இருக்கும் இலக்கிய அமைப்புகள்,கல்வி நிறுவனங்களிலும் இடதுசாரிகள் “முற்போக்குவாதிகள்” என்ற முகமூடியுடன் ஊடுருவினர்;ஊடுருவி இந்த நாட்டின் கல்வி மற்றும் பண்பாட்டை சீரழித்தனர்;

அதற்கு உதாரணம்:டெல்லியில் அமைந்திருக்கும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தைத் துவக்கிய போது,வரலாற்று உண்மைகளைத் தொகுத்து வெளியிடப் போகிறோம்;எனவே,அதற்குரிய ஆவணங்களான செப்புப் பட்டயங்கள்,ஒலைச்சுவடிகள்,கல்வெட்டுக்களை எம்மிடம் தாருங்கள் என்று டெல்லி முழுக்க அறிவித்தனர் இந்த இடதுசாரி கல்வியாளர்கள்;டெல்லி மக்களும் பல நூற்றாண்டுகளாக தமது பரம்பரைப் பொக்கிஷமாக பாதுகாத்துவந்த ஒலைச்சுவடிகள்,பட்டயங்களை டெல்லிப் பல்கலைக்கழகத்தில் குவித்தனர்;

இந்த இடதுசாரி கல்வியாளர்கள் என்ன செய்தார்கள் தெரியுமா?

அனைத்தையும் படி எடுக்காமலேயே,பிரதி எடுக்காமலேயே எரித்துவிட்டனர்;அழித்துவிட்டனர்;அதில் எப்பேர்ப்பட்ட வரலாற்று உண்மைகள் அழிந்தனவோ!!!

கிறிஸ்தவ ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் சூழ்ச்சியினால் பாரத நாட்டின் பெரும் வரலாற்றுத் தலைவர்களான சாணக்கியர்,குப்தர்கள்,மராட்டிய மாநிலத்தில் பிறந்து தேசபக்தியையும்,தெய்வபக்தியையும் தமது நாட்டின் ஒவ்வொரு குழந்தைக்கும் ஊட்டும் விதமாக வாழ்ந்து காட்டிய வீரசிவாஜியின் வீரதீர சாகசங்கள் போன்றவை சிறுமைப்படுத்தப்பட்டு,முகலாய அரசர்களான அக்பர்,ஷாஜகான்,அவுரங்கசீப் போன்றவர்களின் வரலாறும்,திப்பு சுல்தான்,ஹைதர் அலி போன்றவர்களின் வரலாறும் எவ்வாறு பெரிதுபடுத்தப்பட்டதோ அதையே தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி இடதுசாரிகள் சுதந்திர இந்தியாவில் இந்த மண்ணுக்கே உரிய கலாச்சாரம்,பண்பாடு மற்றும் வரலாற்றை நாம் அறிந்து கொள்ளவிடாமல் செய்துவிட்டனர்;அப்படி இவர்கள் செய்து 70 ஆண்டுகள் ஓடிவிட்டன;

கூடவே கிறிஸ்தவப் பிரசங்கங்களும் மறைமுகமாக நுழைக்கபப்ட்டது;அது எப்படி என்றால்,கிறிஸ்துவ மிஷனர்களின் சேவை பெரிதுபடுத்திக் காட்டப்பட்டது;கிறிஸ்துவப் பாதிரிமார்களே அன்பின் உறைவிடமாகவும் கருணைக் கடலாகவும் இருப்பது போலவும் சித்தரிக்கப்பட்டு லட்சக்கணக்கான கதைகள்,கவிதைகள்,கட்டுரைகள்,விளம்பரங்கள்,திரைப்படங்கள்,விளம்பர வாசகங்கள்,விளம்பர போட்டோக்களில் திணிக்கப்பட்டன;70 ஆண்டுகளாக!!!

கிறிஸ்துவர்களான ஆங்கிலேயனின் ஆட்சியில் ஒவ்வொரு ஊரிலும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களை கல்விச் சேவைப்பணிக்காகவும்,சிறுபான்மையினர் நலனுக்காகவும் என்று இலவசமாகப் பெற்று,அதில் கட்டப்பட்ட பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு அரசு உதவி என்ற பெயரில் சம்பளமும் வழங்கப்பட்டதை வசதியாக மறைத்துவிட்டனர்;உண்மையில்,கிறிஸ்துவ ஆங்கிலேயன் வருவதற்கு முன்னர் தமிழ்நாட்டில் மட்டும் ஒரு லட்சம் திண்ணைப்பள்ளிக்கூடங்கள் இருந்தன என்பது நமக்கு மறைக்கப்பட்டது;

கிறிஸ்துவப் பாதிரிமார்கள் பற்றி ஆக்கபூர்வமாக ஊடகங்களிலும்(மாத இதழ்,வார இதழ்,தினசரி செய்தித்தாள்,வானொலி விளம்பரம்,டிவி விளம்பரம்,பிட் நோட்டீஸ் விளம்பரம்)கதை,கவிதை,கட்டுரை,தொடர்கதை,நெடுங்கதை
போன்றவைகளிலும் சித்தரிக்கப்பட்டு வந்த அதே நேரத்தில்,இந்து ஆன்மீகவாதிகள் பிற்போக்குத்தனத்தின் இருப்பிடமாகவும் சித்தரிக்கப்பட்டனர்;

ஆனால்,உண்மையில் கிறிஸ்துவர்கள் கூட,கிறிஸ்து பாதிரிமார்கள் அன்பின் உறைவிடமாக இருப்பவர்கள் என்பதை ஒத்துக் கொள்வதில்லை;பிற தொழில்களைப் போல,பாதிரித் தொழிலும் ஒரு தொழில் அவ்வளவுதான்;சிரத்தையுடன் தொழில் செய்பவர்கள் உண்மையிலேயே அந்தப் பதவிக்கு உரிய கண்ணியத்துடன் இருக்கிறார்கள்;ஆனால்,பெரும்பாலான பாதிரிமார்கள் அப்படி இருப்பதில்லை;


நன்றி:கல்விக்கூடங்களா? கயவர் கூடங்களா? என்ற கட்டுரையில் இருந்து;பக்கம் 8,சுதேசிச் செய்தி,வெளியீடு  மார்ச் 2016

இளைய தலைமுறையினருக்கு இந்து தர்மம் பாகம் 1


உலகம் தோன்றிய போதே நமது சனாதனதர்மம் எனப்படும் இந்து தர்மம் தோன்றிவிட்டது;உலகம் தோன்றி சுமாராக 5,00,00,000 ஆண்டுகள் ஆகிவிட்டன என்பதை நவீன அறிவியல் ஆய்வுகளும் நிரூபித்துவிட்டன;

நமது இந்து தர்மத்தின் பெருமைகளை சித்தர்கள்,மகான் கள்,துறவிகள்,சாதுக்கள்,புலவர்கள்,துறவு வாழ்க்கை வாழ்ந்த மன்னர்கள் முற்காலத்தில் ஓலைச்சுவடிகளாகவும்,கல்வெட்டுக்களாகவும்,கோவில் சிற்பங்களாகவும்,கோவில்களாகவும் படைத்துவைத்தனர்;

2,000 ஆண்டுகளுக்கு முன்பு படைக்கப்பட்ட திருக்குறளின் கருத்துக்கள் இன்றைய நம்முடைய வாழ்க்கைக்கும் பொருந்தி வருகின்றது;அதனால் தான் பிரிட்டனின் நிர்வாகப் படிப்புகளிலும் பகவத் கீதையோடு திருக்குறளையும் சேர்த்துள்ளனர்;

2,00,000 ஆண்டுகளுக்கு முன்பு வரை தமிழ்நாட்டின் எல்லை அண்டார்டிகா வரை பரவியிருந்தது;அதற்கு லெமூரியா என்றும்,குமரிக் கண்டம் என்றும் பெயர் வைத்தோம்;200 ஆண்டுகளில் தொடர்ந்து 6 முறை வந்த ஆழிப்பேரலையால்,லெமூரியக் கண்டம் படிப்படியாக அழிந்தது; இந்த 200 ஆண்டுகளில் ஒரு பகுதி லெமூரியத் தமிழர்கள் கிழக்கு நோக்கி ஓடினர்;அவர்கள் இன்றும் ஆஸ்திரேலியாவின் மேற்குப் பகுதியில் பழங்குடியினராக வாழ்ந்துவருகின்றனர்;

ஒரு பகுதியினர் மேற்கு நோக்கி இடப்பெயர்ச்சியாகி,இன்றைய எகிப்தில் குடியேறினர்;அவர்களே பிரமீடுகளை கட்டினர்;மதுரை மீனாட்சி அம்மனின் ஆணையின் பேரில் என்று கூறியவாறே எகிப்தில் ஆட்சி செய்துள்ளனர்;வடக்கே இடப்பெயர்ச்சி ஆனவர்கள் இன்றைய இலங்கை,தமிழ்நாடு,கேரளாவில் குடியேறினர்;தெற்கு நோக்கிச் சென்றவர்கள் அளவற்ற குளிரினால் மாண்டனர்;

குமரிக்கண்டத்தில் இருந்து இந்த மக்கள் மூலமாக எகிப்துக்குப் பயணித்த சில பல கலைகள் இன்று பரமரகசியமாக ஒரே ஒரு குழுவினரால் மட்டும் பாதுகாக்கப்படுகின்றன; அங்கே இருந்து கற்றுக் கொண்ட சிலபல கலைகளைக் கொண்டே இன்று ஒரு சிறு குழுவினர் ஒட்டு மொத்த உலகத்தையும் நிழலாக ஆட்டிப் படைக்கின்றனர்;இதற்கான ஆதாரங்கள் இன்று பழையபுத்தகக் கடைகளில் மக்கிக் கொண்டிருக்கின்றன;

ஸ்மார்ட்போன் அல்லது டேப்ளாய்டை வைத்துக் கொண்டு நாம் தேடும் கருத்தை கூகுளில் தேடுவதோடு சரி;ஒருவரது தேடல் ஞானம் முடிந்துவிட்டது;ஆனால்,அது மட்டும் ஒருவரை எக்ஸ்பர்ட் ஆக்கிவிடாது;என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்;

20 ஆண்டுகள் அல்லது 25 ஆண்டுகள் அல்லது 30 ஆண்டுகளாக ஏதாவது ஒரு துறை சார்ந்த அறிவைத் தேடி நேரடியாகத் தேடலில் ஈடுபட்டு,அதற்குரிய கருத்தரங்கு,பயிற்சி முகாம்,ஆஸ்ரமத்தில் கற்றுக் கொண்ட ஞானம் இவைகளை(ஜோதிடம்,சரக்கலை,பஞ்சபட்சி சாஸ்திரம்,சம்ஸ்க்ருதம்,வாசியோகம்,நோக்கு வர்மம்,வர்மக் கலை,மூலிகைகள் பற்றிய அறிவை வெளிப்படுத்தும் சித்த மருத்துவம்,ஆயுர்வேதம்,வாஸ்து சாஸ்திரம்,இயற்கை மருத்துவம்,இயற்கை நலவாழ்வு,மாடித் தோட்டம்,சிற்பக் கலை,கரகாட்டம்,சமையற்கலை,சித்தர்களின் கல்லாடம் என்ற கலை,சிலம்பக் கலை,145 விதமான தியான முறைகள்,ஆல்பா மைண்டு பவர்,அஸ்டிரால் ட்ராவல்,டாரட் ஜோதிடம்,ஹீலிங் பவர்,அக்யூ ஹீலிங்,ஆவியுலக ஆராய்ச்சிகள்,முற்பிறப்பினை அறியும் கலை. . .) கொண்டு உரிய துறையில் பல லட்சம் தமிழர்கள்  வருமானம் பார்த்து வருகின்றனர்;

தமது அனுபவங்களை இந்தத் துறையில் இருப்பவர்கள் 1970 கள் வரையிலும் அவ்வளவு சுலபமாக பிறரிடம் பகிர்ந்து கொள்வது கிடையாது;ஏனெனில்,அப்போது விசுவாசம் நிறைந்த சீடர்கள் கிடைத்தார்கள்;பொறுப்புள்ள குரு நாதர்களும் இருந்தார்கள்;

தற்போது அப்படி இல்லை;எனவே,தமது அனுபவங்களை மிக எளிமையாக எழுதி வலைப்பூவிலும், முகனூலும்  வெளியிட்டுவருகின்றனர்;இதன் மூலமாக ஜோதிடம்,சித்தமருத்துவம்,இயற்கை மருத்துவம்,வாஸ்து,மந்திர ஜபம்,பக்தியுணர்வு,மாந்திரீகம்,நல்ல மாந்திரீகம்(அஷ்ட கர்மாக்கள்) போன்றவைகளை தமது தொழிலாகக் கொண்டவர்களும்,ஆர்வமாகக் கொண்டவர்களும் அறிமுகமாகத் துவங்கினர்;

ஆனால்,அந்தந்தத் துறை சார்ந்த கருத்துக்களின் ஆழத்தை உணர்ந்தவர்கள் ஒரு லட்சம் முகனூல் வாசகர்களில் ஒருவர் கூட இல்லை என்பது தான் சோகம்;

இவைகள் அனைத்தையும் ஒருவரால் கூகுள் மூலமாக மட்டுமோ அல்லது முகனூல் மூலம் மட்டுமோ அல்லது யுட்யூப் வீடியோ மூலமாக மட்டுமோ ஒருபோதும் கற்றுக் கொள்ள முடியாது;அதற்குரிய கலையில் எக்ஸ்பர்டாக இருப்பவரிடம் நேரடியாகச் சென்று அவருடன் சில மாதங்கள் அல்லது வருடங்கள் தங்கிக் கற்றுக் கொண்டால் மட்டுமே அக்கலையை கற்றுக் கொள்ள முடியும்.

ஆனால்,2000 முதல் நேரடியாக ஒருவரை ஒருவர் சந்திப்பதை குறைக்கும் விதமான கருவிகள் தான் புழக்கத்தில் வர ஆரம்பித்துள்ளன;முகம் பார்த்துப் பேசும் செல்போன் வந்தப் பின்னர் ‘சக மனிதனைப் புரிந்து கொள்வது’ குறையத் துவங்கியிருக்கின்றது;

எது உண்மையான கல்வி?
மாதச் சம்பளம் ரூ.2,00,000/- கிடைக்க எதைப் படிக்கிறோமோ அதுவா உண்மையான கல்வி?
இல்லவே இல்லை!

அது பொருளாதாரத்தில் சுதந்திரத்தை மட்டும் தான் தரும்;அல்லது பொருளாதாரத்தில் தன்னிறைவைத் தரும்;

சக மனிதர்களைப் புரிந்து கொள்வதை எந்தப் பாடத்திட்டம் புகட்டுகிறதோ,அதுவே உண்மையான கல்வி!சென்னை அடையாறு பகுதியில் இருக்கும் தி ஸ்கூல் என்ற தனியார் அமைப்பில் மட்டுமே இப்படிப்பட்ட கல்வி இன்று இருக்கின்றது;

கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு வரை இப்படிப்பட்ட கல்வியே நமது பாரததேசம் முழுவதும் இருந்தது;இன்றோ இப்படிப்பட்ட கல்வி இங்கிலாந்திலும்,ஜெர்மனியிலும் மட்டுமே இருக்கின்றது;இப்படிப்பட்ட கல்வி நமது நாட்டின் கல்வித் திட்டத்திற்குள் நுழைந்துவிடாமல் தடுப்பதை இந்த நாடுகள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றன;அளவற்ற பணம்,என்.ஜி.ஓக்கள்,தமக்கு ஆதரவான மதவாதிகள்,பணம் கொடுத்தால் எதையும் செய்யும் அரசியல்வாதிகள் போன்றவர்களைக் கொண்டு தரமான கல்வி நமது நாட்டு மக்களுக்குக் கிடைக்காமல் செய்வதில் மிகுந்த கவனத்துடன் இருக்கின்றனர்;

இன்றைய அரசியல் குழப்பம்,ஜாதிக் கட்சிகள்,லஞ்ச லாவண்யம்,மதத் தீவிரவாதம்,ஜாதி வெறி,திடீர் என்று உருவாகும் மாணவத் தலைவர்கள் போன்றவர்கள் நமது நாட்டின் வேர்களை அழிக்கும் வேலையைத் தான் செய்கின்றனர்;

சுவாமி விவேகானந்தரின் பேச்சுக்கள் அடங்கிய தொகுப்புக்கள் இன்று பல்வேறு தலைப்புக்களில் கிடைக்கின்றன;அவற்றில் மிகவும் முக்கியமானது விவேகானந்த கேந்திரம் வெளியிட்டிருக்கும் விழிமின்;எழுமின் என்ற புத்தகமே!


கல்வித்துறையில் சீர்திருத்தம் செய்ய விரும்பும் ஒவ்வொருவரும் அவசியம் இந்த நூலை பலமுறை வாசித்தப் பின்னரே தனது கல்விக் கொள்கையை உருவாக்கிட சுலபமாக இருக்கும்;

முழு முதற்கடவுள் உருவான உண்மை வரலாறு!!!


பார்வதிதேவியின் அழுக்கில் இருந்து விநாயகர் பிறந்தார் என்று இதுவரை கேள்விப்பட்டிருக்கிறோம்;இது இடைச்செருகல்!

மயிலாடுதுறைக்கும் திருவாரூருக்கும் நடுவே அமைந்திருக்கும் கிராமம் வழுவூர்;யானை வடிவில் அசுரன் ஒருவனை சம்ஹாரம் செய்ய சிவனும்,பார்வதிதேவியும் யானை வடிவம் எடுத்து வந்து அவனுடன் போரிட்டு சம்ஹாரம் செய்தனர்;

சம்ஹாரத்தின் முடிவில் சிவனும்,பார்வதிதேவியும் இணைந்து உதயமானவர் தான் விநாயகப் பெருமான்!


நன்றி:வழுவூர் வீரட்டேஸ்வரர் ஸ்தல புராணம் 1961 ஆம் ஆண்டு வெளியீடு