Monday, February 22, 2016

சம்மர் கோர்ஸ்களில் எப்படி,எதைத் தேர்ந்தெடுப்பது?

பள்ளி,கல்லூரி படிக்கும் மாணவ,மாணவிகளுக்கு ஆண்டு விடுமுறை(இந்தியாவில்,குறிப்பாக தமிழ்நாட்டில்!) துவங்கிவிட்டது.வீட்டில் இவர்களின் அட்டகாசம் தாங்காமல் எதாவது ஒரு  சம்மர் கோர்ஸை சேர்த்துவிட்டால் போதும் என்று ஒதுங்கிவிடுவது மாபெரும் தவறு.ஏனெனில்,இதே குழந்தைகள் தான் நமது முதுமைக்காலத்தில் நம்மைப் பராமரிக்கப்போகிறவர்கள்.இல்லையா? இந்த குழந்தைகளுக்காகத் தான் நாம் சம்பாதிக்கிறோம்.ஆனாலும் ஒருவித சோர்வினால் நமது குழந்தைகளின் சேஷ்டைகளால் பொறுமையிழந்து வீட்டைவிட்டு எங்காவது போய்விட்டு வந்தால் போதும் என்ற அளவுக்கு எரிச்சல் படுகிறோம்.(நாம் படும் கஷ்டத்தை நமது  குழந்தையும் படக்கூடாது என நினைக்கிறோம்.அப்படி கஷ்டப்படாமல் இருக்க வேண்டுமெனில்,இந்த வழிமுறையை கண்டிப்பாக நிறைவேற்றுங்கள்.அடுத்த சில வருடங்களில் உங்கள் குழந்தை பலவிதமான திறமைகளுடன் தயாராகிவிடும்)


இப்போதெல்லாம் முதல் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளையும் ஸ்போக்கன் இங்கிலீஷில் சேர்க்கின்றனர்.இப்படி சேர்க்கப்படும் குழந்தைகளில் மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் அதாவது ஆங்கில மீடியத்தை எடுத்துப் படிக்கும் குழந்தைகளும் அடக்கம்.(சிரிப்பு வருகிறதா? நிஜம்தான்.)

ஐந்தாம் வகுப்பு வரை எந்த குழந்தையும் தாய்மொழியை நன்றாகப் படிக்கவும்,எழுதவும் கற்கும் மனநிலையில் இருக்கும்.நாம் என்ன செய்கிறோம்? ஒன்றாம் வகுப்பிலிருந்தே ஆங்கில மீடியத்தில் சேர்த்துவிடுகிறோம்.அந்த குழந்தையோ பாவம்.தாய் மொழியான தமிழும் புரியாமலும்,ஆங்கிலமும் புரியாமல் தவிக்கும்.அந்த தவிப்பு நமக்குப் புரியுமா?தமிழ்நாட்டில் தமிழே தெரியாமல் இரண்டு தலைமுறைகள் உருவாகிவிட்டன.இந்தப் பெருமைக்குச் சொந்தக்காரர் தமிழறிஞர் என்று தனக்குத்தானே பட்டம் சூட்டிக்கொள்பவரே!

 நன்றாக தமிழ் பேசுதல்,நன்றாக தமிழில் எழுதுதல்,நன்றாக தமிழில் புரிந்துகொள்ளுதல் இந்த மூன்றுமே ஒரு குழந்தையின் ஆளுமைத்திறனை மேம்படுத்தும்.படைப்பாற்றலை வெளிப்படுத்திட உதவும்.எதிர்காலத்தில் தனது துறையைத் தேர்ந்தெடுக்கவும்,அதில் ஏற்படும் போட்டியை சிறப்பாக எதிர்கொள்ளவும் உதவும்.

எனவே,ஏழாம் வகுப்பு முடிக்கும்போது முதல் ஒன்பதாம் வகுப்பு முடிக்கும் முன்பாக முதலில் இரண்டு மாதங்களுக்குக்குறையாமல் தட்டச்சு எனப்படும் டைப்ரைட்டிங் (ஆங்கிலம்) பயிற்சிக்கு அனுப்ப வேண்டும். பிழையின்றியும்,வேகமாகவும் தட்டச்சு செய்யும்(டைப் அடிக்கும்) திறமை இன்றைய அனைத்து மாணவ,மாணவிகளுக்கும் தேவைப்படுகிறது.இந்தத் திறமையே கணிப்பொறி கற்கும்போது பிறரை விடவும் சுலபமாக கணிப்பொறி கற்க பக்கபலமாக இருக்கிறது.

வேகமாக தட்டச்சு செய்யக் கற்றுக்கொள்ளாமல்,கணினி கற்றுக்கொள்ளும் போது ஆள்காட்டி விரலால் ஆங்கிலத்தின் 26 எழுத்துக்களையும் தேடித் தேடி டைப் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்படுகிறது.இப்படி கணினியில் பணிபுரிபவர்கள்,ஒரு சிறுவேலையையும்(கணினியில்) அதிக நேரம் எடுத்து முடிப்பார்கள்.இதன் மூலமாக போட்டி நிறைந்த இந்த உலகில் அவர்களால் சிறிதும் பிரகாசிக்க முடியாது.

தட்டச்சு முடித்தபின்னர்,ஸ்போக்கன் இங்கிலீஷ் குறைந்தது ஒரு நாளுக்கு ஒரு வருடம் என கற்றுக்கொள்வது அவசியம் ஆகும்.ஏனெனில்,முழு ஆண்டு விடுமுறையில் (ஒரு மாதம் அல்லது இரண்டு மாதம்) மட்டும் ஸ்போக்கன் இங்கிலீஷ் கற்பதால் அவர்களுக்கு சரளமாக ஆங்கிலம் பேசக் கூடிய நிலை உருவாகாது;குறைந்தது 100 மணிநேரம் அதிகபட்சம் 500 மணி நேரம் வரை தினமும் ஆங்கிலம் பேசக்கூடிய பயிற்சி இருந்தால் மட்டுமே இன்றைய போட்டி நிறைந்த உலகில் தாக்குப்பிடிக்கமுடியும்.

கூடுதல் பயிற்சியாக ஸ்போக்கன் ஹிந்தி அல்லது வேறு வெளிநாட்டுமொழி ஒன்றையும் கற்பது அவசியம்.இதில் ஸ்பானிஷ்,ஜப்பான்/கொரியன் மொழியாக இருப்பது நல்லது.மேலும் கண்டிப்பாக யோகா  பயில்வது அவசியம்.
தவிர,இவைகளை எட்டாம் வகுப்பு அல்லது ஒன்பதாம் வகுப்பு முடிவதற்குள் முடித்துவிட்டால்,பத்தாம் வகுப்புக்குப் பிறகு, பாலிடெக்னிக் எனப்படும் தொழில்நுட்பப்படிப்பு(டிப்ளமோ) அல்லது ஐ.டி.ஐ.எனப்படும் தொழில்பயிற்சி அல்லது பனிரெண்டாம் வகுப்புக்குப் பிறகு எந்த ஒரு பட்டப்படிப்பிலும் சேரும்போது ஆங்கிலமும்,கணினியும் எளிதாக பயன்படுத்த முடியும்.



முதலில் டைப்ரைட்டிங்,இரண்டாவது ஸ்போகன் இங்கிலீஷ் முடித்தபின்னரே கணிப்பொறிப்பயிற்சியில் நமது குழந்தைகளைச் சேர்க்க வேண்டும்.இப்படி வரிசைக்கிரமமாகச் சேர்ப்பதன்மூலமாக நமது குழந்தை பிற குழந்தைகளை விடவும் தனது தனித்திறமையை வெகு இலகுவாக வளர்த்துக்கொள்ளமுடியும். இரண்டு மாத டைப்ரைட்டிங் பயிற்சியால் கணினியின் கீ போர்டை சுலபமாகவும்,வேகமாகவும் கையாளத்தயாராகிவிடும்;ஒரு வருட ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சியானது கணினியில்  இருக்கும் எந்த ஒரு வார்த்தையையும் சுலபமாக புரிந்து கொள்ள உதவும்.கணினிப் பயிற்சியில் முதலில் எம்.எஸ்.ஆபிஸ்தான் கற்க வேண்டும்.

அதன்பிறகு படம் வரையும் திறமை இருப்பவர்கள் டி.டி.பியும்,கற்பனைத்திறன் உள்ளவர்கள் அனிமேஷனும் கற்கலாம்;

கணிதத்திறன் இருப்பவர்கள் டேலியை பயிலலாம்;
என் ஜினியரிங் படிப்புக்குச் செல்பவர்கள் க்யேடு கற்கச் செல்லலாம்;

சாஃப்ட்வேர் டிகிரிக்கு படிக்கச் செல்பவர்கள் எல்லா கணினி படிப்புகளும் பயிலலாம்;

நமது வீட்டில் இருக்கும் சைக்கிள்,டூவீலர்,ஃபேன் போன்றவைகளைத் தானாகவே பிரித்து மீண்டும் ஒன்று சேர்ப்பவர்களை டிப்ளமோவில் மெக்கானிக்கல்,ஆட்டோமொமைல் போன்றவைகளுக்கும்,கணினி பயிற்சி மையங்களில் கம்யூட்டர் ஹார்டுவேர் பயிலவும் அனுப்பலாம்.(கணினி பயிற்சி மையங்களில் பிராண்டடு மையங்களைத்தேர்ந்தெடுக்காமல் இருப்பது நல்லது)

ஒன்பதாம் வகுப்பு முடித்தது முதல் கல்லூரிப்படிப்பு முடிக்கும் வரையிலும் தினமும் தினசரிச் செய்தித்தாள் படிப்பதை ஒரு பழக்கமாக்கிக்கொள்ள பயில வேண்டும்.இந்த பயிற்சியே பட்டப்படிப்பு முடிக்கும்போது உங்கள் குழந்தையை கேம்பஸ் இண்டர்வியூவில் குரூப் டிஸ்கஸனில் ஜெயிக்க வைக்கும்.இதைத் தவிர வேறு எந்த ஒரு குறுக்கு வழியும் ஜெயிக்க வைக்க உதவாது;ஒரு வேளை ரெக்கமண்டேஷனில் வேலையில் சேர்ந்தாலும் வேலையைச் செய்ய முடியாமல் திணறுவார் உங்கள் பட்டதாரி மகனும் மகளும்!!!


உங்கள் மகன்/ள் ஐ.ஏ.எஸ் படிப்பில் ஒரே தடவையில் ஜெயிக்க வேண்டுமெனில்,ஒன்பதாம் வகுப்பு முடித்தது முதல் தினமும் இரண்டு மணி நேரம் வரையிலும் பேப்பர் படித்தல்,உலக அரசியல்,உலக வரலாறு,உலக நடப்புகளின் மாறுதல்களை அறிந்துகொண்டே வர வேண்டும்.

இந்த வழிமுறையே போட்டி நிறைந்த இந்த காலத்தில்,உலகமயமாக்கலுக்கு ஏற்ப உங்கள் மகன்/மகளைத் தயார் செய்யும்.இதுவே சாஃப்ட் ஸ்கில் என்பது!!!

(நடைமுறையில் நமது தமிழ்நாட்டில் பி.ஈ., அல்லது பி.டெக் முடித்து வேலைக்கு மாநகரங்களுக்குச் சென்ற பின்னரே ஸ்போகன் இங்கிலீஷின் முக்கியத்துவத்தை உணருகின்றனர்.பலர் டைப்ரைட்டிங்கிற்குச் செல்வதே இல்லை;95% இருந்தும் சென்னை ,கோவையில் வேலை தேடுபவர்கள் இருக்கின்றனர்.காரணம் ஸ்போகன் இங்கிலீஷில் அக்கறையின்மையுடன் இருப்பதே!)                           

பாரதம் சிலிர்த்தெழுகிறது;வறுமையும்,வேலையின்மையும் குறையத் துவங்குகிறது = பாகம் 3




+2வில் தொழிற்கல்வி பாடத்தினைப் படித்தவர்கள் தொழில் நுட்ப உயர்கல்வி வரை பயில வழிவகை செய்யப்படும் வகையில் திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, மேலை நாடுகளில் பெரிய பதவிகளில் உள்ளவர்களும் பெரும் பணக்காரர்களும் தங்கள் வீட்டு பராமரிப்பு வேலைகளையும்,பழுது பார்ப்பு வேலைகளையும் தாங்களே செய்து கொள்கின்றனர்;அதனை அவர்கள் பெருமையுடன் செய்கின்றனர்;

ஆனால்,நம் நாட்டில் இதை கேவலமாக நினைப்பதால்,வீட்டில் ஏற்படும் சாதாரணப் பழுதுகளுக்கும் வெளி ஆட்களை எதிர்பார்க்க வேண்டியுள்ளது.இதனால்,கீழ் நிலை பணிகளுக்கு நிறைய ஆட்களை தயார் செய்ய வேண்டியுள்ளது.அதனால்,உயர் நிலை தொழில் நுட்பத்தைக் கற்றவர்கள் குறைவாக இருக்கிறது,இந்நிலைக்கு முற்றுப்புள்ளி வைத்து,சாதாரணர்களுக்கும்,சிறு தொழில் நுட்பப் பயிற்சி அளிக்க கொள்கையில் வழி வகுக்கப்பட்டுள்ளது.


இந்தத் திட்டத்தினை நடைமுறைப்படுத்த பஞ்சாப் முதல்வர் பாதல் அவர்கள் தலைமையில் அமைக்கப்பட்ட உபகுழு தொழில் கல்வியை எட்டாம் வகுப்பில் இருந்து அறிமுகப்படுத்தவும் இந்தப் பணியில் தனியார் துறையின் பங்களிப்பை அதிகப்படுத்தவும்,பயிற்சிகளை மாநிலம்,மாவட்டம் மற்றும் வட்டம் ஆகிய 3 நிலைகளில் செயல்படுத்தவும் பாரதிய ஜனதா கட்சி ஆளும் சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ளது போல தொழில் திறன் பெறும் உரிமைச்சட்டத்தினை இயற்றிடவும் பரிந்துரை செய்துள்ளது.

தனி நபர் முன்னேற்றமே நாட்டின் முன்னேற்றம் என்ற கருத்தில் மிகுந்த நம்பிக்கையுடைய மத்திய அரசு, இத்திட்டத்தை அதற்கேற்றாற் போல வகுத்திருந்தாலும் தனி நபர் முன்னேற்றம் என்பது ஊதியத்திற்கு வேலை செய்ய ஒரு தொழிலைக் கற்றுக் கொள்வது மட்டுமல்ல;கற்ற திறனை சுய தொழில் ஆரம்பிக்கவும் பயன்படுத்தப் படவேண்டும் என்பதிலும் மத்திய அரசு கவனமாக உள்ளது.

சுய தொழிலுக்கான திறனை வளர்த்துக்  கொள்ளுதல்,அந்தத் திறனின் அடிப்படையில் சுயதொழிலை ஆரம்பிக்க மத்திய அரசு ஆரம்பித்துள்ள முத்ரா வங்கியைப் பயன்படுத்திக் கொள்ளுதல் என இரண்டு அம்சங்களும் இணையும் போது நம் இளைஞர்கள்,இளம் பெண்களின் வளர்ச்சி ராக்கெட் வேகத்தில் அமையும் என்பது உறுதி.

திறன் மேம்பாட்டுக் கொள்கை அமலாக்கம் என்பது 3 வழிகளில் அமையும்.பள்ளியில் இருந்தும்,கல்லூரியில் இருந்தும் படித்துவிட்டு fresher ஆக வெளிவருபவர்களுக்கு என ஒரு வகைப் பயிற்சியளிக்கப்படும்.இதற்காக Labour Market Information System மூலம் நாட்டில் வேலைவாய்ப்புச் சந்தையில் புதிதாக வருபவர்கள் எண்ணிக்கை மற்றும் எதிர்காலத்தில் இருக்கக் கூடிய தொழில்களின்  போக்கு,அதற்குத் தேவையான திறன் கள்,தொழிலாளர்களின் எண்ணிக்கை ஆகியவற்றினைப் பற்றிய புள்ளிவிவரங்களை உலக மட்டம்,தேசிய மட்டம்,மாநில மட்டம் என வகைப்படுத்தி ஆய்வு செய்து அளிக்கும் அறிக்கைகள் உதவும்.

அடுத்ததாக,மாறிவரும் சூழ்நிலையில் வழக்கொழிந்து போன தொழில் நுட்பங்களில் திறன் படைத்தவர்களை புதுத் திறன் களை கற்றுக் கொள்ள வாய்ப்பு அளிக்கப்படும்.

இவ்வாறு திறன் பெற்றவர்கள் வேலையில் சேரும் பொருட்டு தேசிய அளவில் ஒரே சீரான முறையில் சான்றிதழ் வழங்கப்படும்.
முக்கியமாக +2வில் தொழிற்கல்வியை ஊக்கப்படுத்துவதாக இக்கொள்கை அமையும்.

தொழிற்பயிற்சி பெறுபவர்கள் வேலையில் சேர்கிறார்களா? என்பதை கண்காணிக்கும் வகையில் இந்தத் திட்டம் அமைந்திடும்;மேலும் பிரதம மந்திரியினால் நேரடியாக ஒரு அலுவலர் ஒவ்வொரு மாவட்டத்திலும் நியமிக்கப்படுவர்;அவ்வாறு நியமிக்கப்பட்டு,திட்ட அமலாக்கம் கண்காணிக்கப்படப் போவதாலும் இந்தத் திட்டம் மோடிஜி அவர்களது ஆட்சியில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு,பாரதம் உலகத்தின் தொழில் திறன் தலைநகராகும் கனவு வெகு விரைவில் நனவாகும்;


நன்றி:சுதேசிச் செய்தி,பக்கங்கள் 8,9,10,வெளியீடு செப்டம்பர் 2015

பாரதம் சிலிர்த்தெழுகிறது;வறுமையும்,வேலையின்மையும் குறையத் துவங்குகிறது=பாகம் 2


ஒரு இளைஞர் தனது தொழில்திறனை மேம்படுத்திக் கொள்ள அரசாங்கத்தின் நிறுவனத்தையோ அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தையோ அணுகலாம்;அவ்வாறு பயிற்சி அளிப்பதற்கு மத்திய அரசு அந்நிறுவனத்திற்கு நிதியுதவி அளிக்கும்.இது காங்கிரஸ் ஆட்சியில் கொண்டு வரப்பட்ட நடைமுறை;

அப்பயிற்சி நிறுவனங்கள் தங்களிடம் பயிற்சி பெற்றவர்களுள் 50% பேர்களுக்கு வேலைவாய்ப்பு பெற்றுத் தர வேண்டும் என்பதும் ஒரு நிபந்தனையாக இருந்தது;

ஊழலில் திளைத்தவர்கள் போலியாக ஒரு பயிற்சி நிறுவனத்தை துவக்கி ஒன்றுக்கு பத்தாக அரசாங்கத்திடம் இருந்து கட்டணம் வசூலித்து பயிற்சி பெற்றவர்களில் 50% பேர்களுக்கு தங்களுடன் ஒத்துழைக்கும்,வேலையளிக்கும் நிறுவனத்தில் சொற்ப சம்பளத்தில் ஒரு வேலை வாங்கிக் கொடுத்து அரசினை ஏமாற்றிவிடலாம்;பயிற்சி பெற்றவர்களும் சொற்ப சம்பளத்திற்கு தாக்குப்பிடிக்க முடியாமல் வேலையை விட்டுவிடுவார்கள்;அடுத்த பேட்சில் பயிற்சி பெறுபவர்களை பணியமர்த்த வேறு ஒரு நிறுவனத்தைத் தேட வேண்டாமே! இப்படியாக பயிற்சி நிறுவனங்கள் அரசு நிதியை கபளீகரம் செய்து வந்தன.(தற்போதைய பொறியியல் கல்லூரிகளும் தமது மாணவ,மாணவிகளை இப்படித்தான் பயன்படுத்தி வருகின்றன)

ஆனால்,மோடி அரசு இதில் ஒரு மாற்றத்தைக் கொண்டு வந்துள்ளது.அதாவது பயிற்சி பெற்றவர் ஒரு வருடத்திற்கு மேல் ஒரு நிறுவனத்தில் தொடர்ந்து பணிபுரிந்து வந்தால்,ஒவ்வொரு ஆண்டும் பயிற்சி நிறுவனத்திற்கு அரசு ஊக்கத் தொகை அளிக்கும்.அதே போல்,பயிற்சி பெற்றவர் ரூ.15,000/-க்கு மேலான சம்பளத்தில் பணியில் அமர்ந்தாலும் பயிற்சி நிறுவனத்திற்கு ஊக்கத் தொகை உண்டு.இதனால்,போலி பயிற்சி நிறுவனங்கள் அறவே இல்லாத நிலை உருவாகும்.இவாறு தீர்க்கமான சிந்தனையுடன் இக்கொள்கை வகுக்கப்பட்டு உள்ளது.

எந்த ஒரு பயிற்சியும் அதன் பாடத்திட்டத்தையும் மதிப்பீடு முறையைச் சார்ந்தே சிறப்பானதாக அமையும்.மத்திய அரசின் திறன் மேம்பாட்டுக் கொள்கை – 2015 இல்,பயிற்சிக்கான பாடத்திட்டத்திற்கும் மதிப்பீட்டு முறைக்கும் மிகவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டு உள்ளது.தேசிய தொழிற்திறன் தகுதி கட்டமைப்பு என்ற அமைப்பின் மூலம் 11 ஆம் வகுப்பில் இருந்து உயர்த் தொழில் நுட்பக் கல்வி நிலை வரையிலான தொழிற்கல்விப் பாடத்திட்டங்கள் 5 நிலைகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு நிலைக்கும் உலகத் தரம் வாய்ந்த பாடத்திட்டங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.

நம் நாட்டு மக்களிடையே +2 வில் தொழிற்கல்வி பாடத்தினை படிப்பவர்கள் பற்றி ஒரு கீழான எண்ணம் நிலவுகிறது.அதனால்,தொழில் நுட்ப உயர்கல்வியாக பொறியியல் பட்டப்படிப்பு படிக்க நினைப்பவர்கள் +2வில் குரூப் 1,குரூப் 2 பாடப்பிரிவுகளில் படித்துவிட்டு பொறியியல் பட்டப்படிப்பு படிக்கச் செல்கின்றனர்;+2 வில் தொழில் கல்வியைப் பாடமாகப் படித்தவர்களுள் பெரும்பாலானவர்கள் பொறியியல் பட்டப்படிப்பு படிக்கச் செல்வதில்லை.இந்த நிலையை உடைத்திட திறன் மேம்பாட்டுக் கொள்கை 2015 இல் வழி வகை செய்துள்ளது.


மூன்றாம் பாகம் தொடரும் . . .

பாரதம் சிலிர்த்தெழுகிறது;வறுமையும் வேலையின்மையும் குறையத் துவங்குகிறது!!!=பாகம் 1


ஒரு நாட்டின் வளர்ச்சியில் தொழில் வளம் மிக முக்கியப் பங்காற்றுகிறது.தொழில் வளம் பெருக,உற்பத்தி பெருக வேண்டும்.உற்பத்தி பெருக திறமையான தொழிலாளர்கள் அவசியம்;

திறமையான தொழிலாளிகள் பரம்பரை பரம்பரையாக தம் குலத் தொழிலை கற்று அறிந்தவர்களாக இருந்து வந்தார்கள்;இந்நிலை, கிறிஸ்தவ ஆங்கிலேயர்கள் நம் நாட்டை அடிமைப்படுத்தும் வரை இருந்து வந்தது;

ஆனால்,அவர்களின் ஆதிக்கம் ஆரம்பித்தவுடன் நம் நாட்டுத் தொழில் நுட்பங்களையும்,தொழிலாளர்களின் தொழில் திறனையும் சிறுமைப்படுத்த ஆரம்பித்தனர்.இதனால்,நம் நாட்டு கைவினைஞசர்கள் தம் தன்னம்பிக்கையை இழந்தனர்;தத்தம் குஅல்த் தொழிலைச் செய்வதையே கேவலமாக கருதினர்;(இந்த மனோபாவத்தை இவர்களிடம் நாடு முழுக்க உருவாக்கிட கிறிஸ்தவ ஆங்கிலேயனுக்கு 200 ஆண்டுகள் ஆயின)அதன் விளைவால்,அவர்களது சந்ததியினருக்கு தம் குலத் தொழிலை கற்றுத் தர கூச்சப்பட்டனர்;

இதனால்,தலைமுறை தலைமுறையாக் நாம் கற்றறிந்த தொழிற்திறன் இரண்டு நூற்றாண்டுகளில் அழிந்து போனது;(அந்த அழிவின் மீதுதான் ஊழலும்,லஞ்சமும்,தரமற்ற பொருட்களை உற்பத்தி செய்வதும் வளரத் துவங்கின)


அதன் பலனாக,பாரதம் சுதந்திரம் அடைந்த போது,தொழிற்கல்வியை நாம் கற்க அந்நியரின் உதவியை நாட வேண்டிய நிர்ப்பந்தம் உண்டானது;

தொடர்ந்து இந்த நாட்டை ஆண்டு வந்த காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு சுதேசிய சித்தாந்தங்கள் புரிந்திருக்கவில்லை என்பதால் தொழில் திறன் மேம்பாடு,தொழில் முனைவு என்பதில் எல்லாம் எவ்வித முன்னேற்றமும் இல்லாமல் இருந்தது.அந்நியர்களின் கொள்கைகளையே தம் கொள்கையாக காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசு ஏற்றுக் கொண்டு வந்தது.

இவர்களுடைய சிந்தனைப் போக்கின் விளைவாகத்தான் ராஜாஜி அவர்கள் கொண்டு வந்த ‘குலக்கல்வித்திட்டத்திற்கு’ கடும் எதிர்ப்பு எழுந்து,அந்தத் திட்டமே கைவிடப்படவேண்டியதாகிவிட்டது.

ஆனால்,மக்களிடம் இருந்து எழுந்த தலைவரான நரேந்திர மோடிஜி அவர்களது தெளிவான சுதேசி சிந்தனை விளைவாக ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு தொழிற்திறனுடைய, கைவினைஞர்களால் எவ்வாறு நம் பாரதநாடு உலகின் மிகப் பெரிய பணக்கார நாடாக இருந்ததோ அதே நிலைக்கு பாரதத்தினை உயர்த்திட மத்திய அரசு தொழிற்திறன் மேம்பாட்டுக் கொள்கை 2015 என்ற கொள்கையை வகுத்துள்ளது.
இக்கொள்கையில் வழக்கமாக மோடி அரசு நிர்வாக நடவடிக்கைகளில் காணப்படும் “மோடி டச்” நிறையவே காணப்படுகிறது.

இக்கொள்கை பலனை எதிர்நோக்கிய திட்டமாக திறன் மேம்பாட்டுத் திட்டத்தை காண்கிறது.

நன்றி:சுதேசிச் செய்தி,பக்கங்கள் 7,8 வெளியீடு      செப்டம்பர் 2015

இரண்டாம் பாகம் தொடரும். . .

Saturday, February 20, 2016

பக்தியால் நமக்கு வர இருக்கும் சோதனைகள்,அவமானங்கள்,துன்பங்களை 90% குறைக்க முடியும்!


96 கோடி தடவை ராமா என்ற பெயரை தனது வாழ்நாள் முழுவதும் ஜபித்தவர்,தனது 97 வது வயதில் ஸ்ரீராமச்சந்திர மூர்த்தி,சீதாதேவி,லட்சுமணன்,அனுமன் சமேதமாக தரிசனம் செய்தார்;

26 கோடி தடவை சிவாய நம,சிவாய நம என்று ஜபிக்க வேண்டும்;அதன் பிறகு, செம்பைப் பார்த்தால், அது தங்கமாக மாறிவடும்;என்ற இந்த  சிவரகசியத்தை
நமக்கு சித்தர்களின் தலைவரும்,தமிழ் மொழியின் தந்தையுமாகிய அகத்திய மகரிஷி நமக்கு போதித்திருக்கிறார்;

சில குறிப்பிட்ட சிவமந்திரங்களை அண்ணாமலை கிரிவலத்தின் போது மட்டும் ஜபித்து அண்ணாமலையாரை தரிசித்தவர்களும் நம்மிடையே இந்தக் காலத்திலும் வாழ்ந்து வருகின்றனர்;


பலர் பல முற்பிறவிகளில் அன்னை அரசாலை(வராகி)யை வழிபட்டுள்ளனர்;அவர்கள் இப்பிறவியில் சில நாட்கள் அன்னையைச் சரணடைந்ததன் மூலமாக இப்பிறவியில் இது வரை இருந்து வந்த வறுமை,வேதனைகள்,அவமானங்கள் நீங்கி சுகமாக வாழ்ந்துவருகின்றனர்;

26.2.2016 வெள்ளிக்கிழமையன்று விருச்சிகராசிக்குள் செவ்வாய் பெயர்ச்சி ஆகப் போகிறார்;(45 நாட்களுக்கு ஒருமுறை ஒரு ராசியைக் கடக்கும் இவர் தற்போது ஆறரை மாதமாக தனது விருச்சிகராசியில் இருக்கப் போகிறார்)ஆகி 19.9.2016 வரை விருச்சிகச்சனியுடன் சேர்ந்து இருக்கப் போவதால்,12 ராசிக்காரர்களுக்கும் மனத்தடுமாற்றம்,திடீர் ஆவேசம்,திடீர் தற்கொலை எண்ணம்,கோபமான மன நிலையில் வாகனத்தை ஒட்டிச்செல்வது என்று நடைபெற இருக்கிறது;

ஏற்கனவே,100 நாட்களுக்கும் மேலாக அன்னை அரசாலை(வராகி)யை வழிபட்டு வருபவர்களுக்கு இந்த ஆறரை மாதங்கள் பெரிய அளவு துன்பங்கள் வராது;அன்னை அரசாலை(வராகி)யின் கருணை மனத்தினால் நிம்மதியாக இந்த கால கட்டத்தைக் கடந்துவிடுவீர்கள்:

மற்றவர்கள் இந்த மறுபதிவினை வாசித்தப் பின்னராவது, அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடைவது நன்று;எதற்காக இதை மீண்டும் நினைவூட்டுகிறோம்?

எது கோடீஸ்வர வாழ்க்கை தெரியுமா?
கடன் இல்லாமல்,நோய் நொடி இல்லாமல்,தினசரி வாழ்க்கை அமைதியாகவும்,நிம்மதியாகவும்  ஓடிக்கொண்டிருந்தால்,அதுவே கோடீஸ்வர வாழ்க்கை;

அசைவம் தவிர்த்துவிட்டு,இந்த மந்திர ஜபத்தை ஜபிப்பது அவசியம்;மது அருந்துவதையும் கைவிடவும்;


அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)


ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகீ
போத்ரிணி
சிவா
வார்த்தாளீ
மஹாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்னீ

அன்னை அரசாலை(வராகி) சிவனும்,சக்தியும் இணைந்த வடிவமே! எனவே,அன்னையை வழிபடுவதன் மூலமாக ஒரே சமயத்தில் சிவனையும்,சக்தியையும் ஒருங்கே வழிபடுவதற்குச் சமம்;சிவலிங்கம் என்பது சிவசக்தி கலப்பே! சிவலிங்க வழிபாட்டிற்கு இணையானது அன்னை அரசாலை(வராகி) மந்திர ஜபம்!

கடலுக்குள் மூழ்கிக் கிடந்த பூமியை வராக அவதாரம் எடுத்து தனது கொம்புகளால் தூக்கி நிறுத்தியவர் மஹாவிஷ்ணு;அப்படி தூக்கி நிறுத்தும் சக்தியை அன்னை அரசாலை(வராகி)யிடம் இருந்து பெற்றவர் மஹாவிஷ்ணு;அவரது பத்து அவதாரங்களில் ஒன்றுதான் வராஹ அவதாரம்;எனவே.அன்னை அரசாலை(வராகி)யை வழிபடுவது வைஷ்ணவ வழிபாட்டிற்கும் இணையானது;

வராகி மாலையில் 32வது பாடலில் முதல் வரியைக் கவனியுங்கள்;சிவஞானபோதகி என்று வரும்;ஈசனைப் பற்றி அறிய ஏராளமான நூல்கள் உள்ளன;அவைகளில் முதன்மையானது சிவஞான போதம்!

இந்த சிவஞானபோதத்தை மனிதர்களுக்கு புரியும் விதமாக போதிக்கும் ஆசிரியை,குரு அன்னை அரசாலை மட்டுமே!


ஓம் வராகி சிவசக்தி ஓம்

Monday, February 15, 2016

நமது கர்மவினைகளை கரைத்துவிடும் தேய்பிறை பஞ்சமிகள்!


உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் அனைத்தையும் நிர்வகித்து வருபவர் கால தேவன் என்று அழைக்கப்படும் மஹா காலபைரவப் பெருமான்;அவருக்கு அப்படி நிர்வகிக்கும் சக்தியை அருளிக் கொண்டிருப்பது அன்னை அரசாலை(வராகி)!!!

அரசாலை என்பது வராகியின் 1000 திருநாமங்களில் ஒன்று;





அரசாலை அம்மன் என்பது பள்ளூர் என்ற இடத்தில் வராகியின் பெயர் ஆகும்;காஞ்சிபுரத்திற்கும்,அரக்கோணத்திற்கும் நடுவே அமைந்திருக்கும் சிற்றூர் பள்ளூர் ஆகும்;இங்கே அரசாலையம்மனாக அன்னை வராகி அருளாட்சி புரிந்து கொண்டிருக்கிறாள்;


தொடர்ந்து 16 தேய்பிறை பஞ்சமி இரவுகளில் 1 மணி நேரம் வரை அன்னை அரசாலை(வராகி)யை வீட்டிலேயே வழிபட்டு வந்தால்,அன்னையின் கருணையால் நமது அனைத்து முற்பிறவி கர்மவினைகளும் கரைந்து காணாமல் போய்விடும்;


எப்படி அன்னை அரசாலை(வராகி)யை வழிபடுவது?
பின் வரும் அன்னையின் பெயர்களை வீட்டில் ஜபிப்பதுதான்;


அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)

ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

சந்தர்ப்பமும்,பூர்வபுண்ணியமும் இருந்தால் இந்த 16 தேய்பிறை பஞ்சமி நாட்களிலும் மாலை 6 மணிக்கு மேல் இரவு 11 மணிக்குள் அருகில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் 1 மணி நேரம் ஜபிக்கலாம்;


27.2.16 சனி
28.3.16 திங்கள்
26.4.16 செவ்வாய்
26.5.16 வியாழன்
9.6.16 வியாழன்
24.6.16 வெள்ளி
24.7.16 வெள்ளி
22.8.16 திங்கள்
20.9.16 செவ்வாய்
19.10.16 புதன்
18.11.16 வெள்ளி
18.12.16 ஞாயிறு
16.1.17 திங்கள்
15.2.17 புதன்
17.3.17 வெள்ளி


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!


பணக்கஷ்டம்,வர்த்தக வீழ்ச்சியைத் தீர்த்து எழுச்சியைத் தரும் மாடம்பாக்கம் அருள்மிகு தேனுகாம்பாள் சமேத ஸ்ரீதேனுபுரீஸ்வரர்!!!


மாசி மகத்தில் இருந்து ஒவ்வொரு மாதமும் வரும் மகம் நட்சத்திர நாளில் இங்கே அமைந்திருக்கும் அருள்மிகு தேனுபுரீஸ்வரருக்கு பசும்பாலால் அபிஷேகம் செய்ய வேண்டும்;(பாக்கெட் பால் கண்டிப்பாக தவிர்க்கவும்)அதுவும் கறந்த பாலை இளஞ்சூடு ஆறுவதற்குள் அபிஷேகம் செய்ய வேண்டும்;இன்றைக்கு இருக்கும் சூழ்நிலையில் இதை நடைமுறைப்படுத்துவது கடினமே! இருப்பினும் முயற்சி செய்யவும்;

அபிஷேகம் செய்த பின்னர்,மீதி வாங்கி வைத்திருக்கும் பாலை இங்கே அந்த சமயத்தில் வரும் சிறுவர்,சிறுமியர்க்கு தானம் செய்ய வேண்டும்;இப்படி தொடர்ந்து 12 மகம் நட்சத்திர நாளில் குரு ஒரையில் அல்லது சந்திர ஒரையில் செய்து வரவேண்டும்;இதன் மூலமாக,தொழிலில் பெருத்த நஷ்டம் அடைந்தவர்கள் படிப்படியாக மீண்டு பழைய நிலையை எட்டுவர்;மிகுந்த கடன் தொல்லையால் அவதிப்படுபவர்கள் அதில் இருந்து மீள்வதற்கு எதிர்பாராத உதவிகள் கிட்டிட ஸ்ரீதேனுபுரீஸ்வரர் அருள்புரிவார்;

மகம் நட்சத்திர நாளில் இப்படி காராம்பசுவின் பாலால் அபிஷேகம் செய்ய இயலாதவர்கள்,அதற்குப் பதிலாக தசமி திதி வரும் நாளில் செய்யலாம்;தொடர்ந்து 12 தசமி(தேய்பிறை தசமி திதியில் மட்டும்) நாட்களில் குரு ஒரை அல்லது சந்திர ஒரையில் செய்ய வேண்டும்;

அதுவும் இயலாதவர்கள் ரோகிணி நட்சத்திரம் நிற்கும் நாட்களில் இந்த அபிஷேகம் செய்யலாம்;12 ரோகிணி நட்சத்திர நாட்களில் தொடர்ந்து செய்து வருவதன் மூலமாக காரியத்தடைகள் விலகும்;தொழிலில் வளர்ச்சி உருவாகும்;தீராத மற்றும் நீண்டகாலக் கடன் தீர வழிகள் திறக்கும்;

இங்கே ஒரே ஒரு சிவலிங்கத்திற்குச் செய்யப்படும் அபிஷேகமானது,ஒரு கோடி சிவலிங்கத்திற்குச் செய்யப்படும் அபிஷேகமாக மாறுகின்றது;

ஆதிசிவனுக்கு முதன் முதலில் வாகனமாக நந்தி ஆனது பிரபஞ்சத்திலேயே இங்கேதான்;

தேனுபுரீஸ்வரர் என்ற பெயரில் சென்னை மாடம்பாக்கத்தில் அமைந்திருக்கும் ஆலயம் அமைந்திருக்கின்றது;இதே போல,கும்பகோணம் பட்டீஸ்வரத்திலும் இதே பெயரில் ஈசன் அருள்பாலித்து வருகிறார்;

எங்கெல்லாம் தேனுபுரீஸ்வரர் என்ற பெயருடன் ஈசன் அருள் பாலித்து வருகிறாரோ,அங்கெல்லாம் ஐஸ்வர்ய அருட்கடாட்ச சக்தி நிரம்பியிருக்கிறது;இந்த ஐஸ்வர்ய அருளைப் பெற விரும்புவோர்,அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிட்டிருக்க வேண்டும்;

தினமும் ஒரு மணி நேரம் வீட்டில் சிவ வழிபாடு செய்து வரவேண்டும்;

அல்லது 

தினமும் சிவாலயம் செல்ல வேண்டும்;

அல்லது 

தினமும் காலையில் ஒரு மணி நேரமும்,இரவில் ஒரு மணி நேரமும் வீட்டில் சிவசிவ என்று 1008 நாட்கள் ஜபித்துக் கொண்டு வந்திருக்க வேண்டும்;

இதில் ஏதாவது ஒன்றைச் செய்திருந்தால் ஈசனின் அருட்கடாட்சம் சுலபமாகக் கிட்டும்;



ஓம் அகத்தீசாய நமஹ