Wednesday, September 2, 2015

மூலிகைகளின் பெற்றோர்கள்


மூலிகைகளின் அப்பாவாக இருப்பது வில்வமும்,வில்வரகங்களும்!

மூலிகைகளின் அம்மாவாக இருப்பது
வேம்பும்,வேம்பு ரகங்களும்!!!

மனிதகுலத்தை உய்விக்க வந்திருப்பது சிவ அம்சமான வில்வமும்;சக்தி அம்சமான வேம்பும் என்பது இந்தச் செய்தியின் சூட்சும சாரம்!!!


ஓம் வராகி சிவசக்தி ஓம்

Monday, August 31, 2015

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியின் பெருமைகளில் முக்கியமானது


விருதுநகர் மாவட்டத்தில்,மேற்குத் தொடர்ச்சிமலையின் அடிவாரத்தில் அமைந்திருக்கும் ஊர் ஸ்ரீவில்லிபுத்தூர்.இந்த ஊரில் கைத்தறி நெசவாளர்கள் மூன்றில் ஒருபகுதியாக வாழ்ந்து வருகின்றனர்;ஊரை இரண்டாக மதுரை தேசிய துணை நெடுஞ்சாலை பிரிக்கிறது;அதன் குறுக்காக சிவகாசி,சாத்தூர் சாலை செல்கிறது;மதுரை சாலைக்கும்,சிவகாசி சாலைக்கும் இடைப்பட்ட ஸ்ரீவில்லிபுத்தூரின் கால் பங்குப் பகுதியில் 16 தெருக்களில் நெசவுத்தொழிலாளர்கள் வாழ்ந்து வருகின்றனர்;இந்த 16 தெருக்களிலும் தலா ஒரு ஜீவசமாதி இருக்கிறது;


ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் காவல் நிலையம் பேருந்து நிறுத்தத்தில் இறங்கி கிழக்குத் திசையில் சிவகாசி சாலை இருக்கிறது.இந்த சிவகாசி சாலை வழியாக நடந்து சென்றால் முதலில் ஆர்.சி.சர்ச் வரும்;அதற்கு அடுத்தபடியாக கனரா வங்கி,மெர்கண்டைல் வங்கி,கைகாட்டிகோவில் பஜாரைக் கடந்ததும் ஐந்து கடை பஜார் வரும்;அதைக் கடந்ததும்,தென்மேற்காகத் திரும்பினால் முதலியார்பட்டித் தெரு என்ற தெற்குப்பட்டித் தெருவை சென்றடையலாம்;

இந்த தெருவின் மையத்தில் வடக்கு நோக்கிய கோவில் ஆர்ச்சைப் பார்க்கலாம்;இதுதான் அன்னை பத்திரகாளி ஆலயத்தின் நுழைவாசல்;சுமார் 3000 குடும்பங்களின் குலதெய்வம் இந்த அன்னை;

ஒவ்வொரு ஆண்டும் வரும் சிவராத்திரி அன்று இரவு ஒரு பாட்டி வெறும் கையால் கொதிக்கும் நெய்யில் அப்பம் சுடுவார்;அதை அன்று இரவே அன்னை பத்திரகாளிக்கு படையல் போட்டு சிவராத்திரி பூஜை செய்து பக்தர்களுக்கு அன்றிரவே பகிர்ந்து கொடுப்பது ஆண்டாண்டு காலமாக இருந்து வரும் வழக்கம்!

இந்த ஆண்டு சிவராத்திரி 7.3.2016 திங்கட்கிழமையன்று வர இருக்கிறது.

சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த அன்னையின் அருளை வெளிப்படுத்திய சம்பவம் ஒன்றை எழுதுவதில் பெருமை கொள்கிறோம்;எமது வாழ்நாளில் 8.8.2004 முதல் பல நூறு சம்பவங்கள் மூலமாக அன்னை பத்திரகாளி அடியேனைப் பாதுகாத்து வந்தாள்;வழிநடத்தினாள்;அவளின் ஆசியில்லாமல் போயிருந்தால் அடியேன் வீணனாகப் போயிருப்பேன்;இன்றும் அன்னை பத்திரகாளி பலரது வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்த்துக் கொண்டிருக்கிறாள் என்பது உண்மை;

இந்தத் தெருவில் ஒரு பெண்ணை பக்கத்து கிராமத்தில் திருமணம் செய்து வைத்தனர்;அந்தப் பெண் கர்ப்பிணியானதும்,வளைகாப்பு வைத்து,திரும்ப தனது பெற்றோர்கள் வீட்டிற்கு வந்திருந்தாள்;அன்னை பத்திரகாளியின் அருளாற்றலை புரிந்து வைத்திருந்தாள்;எனவே,தனது கர்ப்ப காலம் முழுவதும் அன்னை பத்திரகாளியின் ஆலயத்திலேயே இருந்திருந்தாள்;

காலையில் உணவு உண்டதும்,அன்னை பத்திரகாளி ஆலயத்திற்கு வந்துவிடுவாள்;மதியம் கோவில் நடை சாத்தப்படும் வரை இருப்பாள்;மாலையில் கோவில் திறந்ததும் மீண்டும் கோவிலுக்கு வந்து,அன்னை பத்திரகாளியின் எதிரே அமர்ந்து அன்னை பத்திரகாளியைப் பார்த்துக் கொண்டே இருப்பாள்;பிரசவ தினம் வரும் வரை ஒரு நாள் கூட வராமல் இருந்ததில்லை;

பிரசவ தினத்தன்று உள்ளூரில் ஒரு மருத்துவமனையில் சேர்த்தார்கள்;மருத்துவரோ,இன்னும் 1 மணி நேரத்தில் சிசேரியன் செய்யப் போகிறோம் என்று தெரிவித்துவிட்டு,அடுத்த அறைக்குப்போய்விட்டார்;அந்த கர்ப்பிணிப் பெண் தனது அப்பாவை அழைத்தாள்;

உடனே,பத்திரகாளி கோவிலுக்குச் சென்று,மஞ்சள் காப்பு வாங்கி வரும் படி அனுப்பினாள்;அவரும் சில நிமிடங்களில் வாங்கிவந்துவிட்டார்;

அந்த மஞ்சள் காப்பை தனது நெற்றியில் பூசிவிட்டு,தனது வயிற்றின் மீது பூசினாள்;அப்படி வயிற்றில் பூசும் போது,
“அம்மா பத்திரகாளி,எனக்கு சுகப்பிரசவம் ஆகணும்;உன்னைத் தான் நம்பியிருக்கேன்” என்று வேண்டிக் கொண்டாள்;

ஒரு மணி நேரத்திற்குப் பிறகு,மருத்துவர் வந்தார்;சிசேரியனுக்குரிய பரிசோதனைகள் செய்யத்துவங்கினார்;முடிவில்,சிசேரியன் தேவையில்லை;என்பதை அறிவித்தார்;

அன்றைக்கே சுபமான லக்னத்தில் அந்த கர்ப்பிணிக்கு குழந்தை பிறந்தது;


அன்னை பத்திரகாளியின் கருணையே கருணை!!!


நாமும் அண்ணாமலையும்


யார் ஒருமுறை கூட அண்ணாமலைக்கு வந்ததில்லையோ,அவருக்கு இன்னும் பல ஆயிரம் பிறவிகள் இருக்கின்றன என்று அர்த்தம்;

யார் ஒருமுறை கூட அண்ணாமலை கிரிவலம் செல்லவில்லையோ,அவருக்குரிய கர்மவினைகள் அப்படியே இருக்கிறது(மனதிற்குள் ஆன்மீக மனோபாவம் மலரவில்லை) என்று அர்த்தம்;

யார் அண்ணாமலையாரை தரிசிக்கும் போது உடல் சிலிர்க்கவில்லையோ,அவர்கள் இன்னும் மனப்பூர்வமாக ஆன்மீக வாழ்க்கைக்குத் தயாராகவில்லை(தனது குறைகளைத் திருத்திக்கொள்ளத் தயாராகவில்லை) என்று அர்த்தம்;

அண்ணாமலை என்றோ அருணாச்சலம் என்றோ ஒருமுறை கூறினால் 3,00,000 முறை ஓம் நமசிவாய நமஹ என்று ஜபித்தமைக்குச் சமம் என்பது நம்மில் எத்தனை பேர்களுக்குத் தெரியும்;

பூமியில் சிவவழிபாடு செய்பவர்களின் எண்ணிக்கை குறைய,குறைய தண்ணீர்ப் பஞ்சம் உண்டாகும்;என்பது பன்னிருத்திருமுறைகள் தெரிவிக்கும் சிவரகசியம்;


ஓம் வராகி சிவசக்தி ஓம்

உணவுதியானம் செய்பவர்கள்


பசிக்காம சாப்பிடக்கூடாது;(காலையில் சாப்பிட்ட உணவு,ஜீரணித்தால் தான் மதியம் பசிக்கும்;அப்படி பசிக்காவிட்டால்,மதியம் சாப்பிடக் கூடாது;மதியம் சாப்பிட்ட உணவு ஜீரணம் ஆனால் தான் இரவு பசிக்கும்;)

எக்காரணம் கொண்டும் காலைச் சாப்பாட்டை ஒருபோதும் தவிர்க்கக் கூடாது;அப்படி ஒராண்டு வரை காலையில் சாப்பிடாமல் இருந்தால்,39 அல்லது 49 ஆம் வயது வரும் போது பக்கவாதம் வரும்;

பின்னிரவில் சாப்பிடக்கூடாது;(இரவு 7 மணிக்குள் சாப்பிட்டுவிடவும்;அதன் பிறகு சாப்பிட்டால்,ஜீரண மண்டலம் அதிக நேரம் எடுத்துக் கொள்ளும்;ஜீரணிக்க)


சாப்பிடுவதற்கு 30 நிமிடம் முன்பு ஏதாவது ஒரு பழத்தைச் சாப்பிடுவது ஜீரணமண்டலத்தை,சாப்பிடுவதற்குத் தயார் செய்யும்;


சாப்பிடுவதற்கு 30 நிமிடம் முன்பு தண்ணீர் (தாகம் எடுத்தால்) அருந்திக்கொள்ளலாம்;சாப்பிட்ட 30 நிமிடத்திற்குப் பின்னர் தண்ணீர் அருந்தலாம்;சாப்பிட்ட உடனே அருந்தப் படும் தண்ணீரானது,உண்ட உணவை நஞ்சாக்குகிறது;(சாணக்கியரின் அர்த்த சாஸ்திரம் சொல்லும் ஆரோக்கியக் குறிப்பு)

ஒவ்வொரு வேளை உணவிலும் பாதி காய்கறிகளும்,பாதி சோறும் இருப்பது நன்று;
மூன்று வேளையும் பழங்களை மட்டும் உணவாகச் சாப்பிடலாம்;(இப்படிச் சாப்பிட்டுத்தான் 80 வயது வரை நம்ம வீட்டுப் பெருசுகள் ஆரோக்கியமாக வாழ்ந்தனர்)


*மூன்று வேளைகளும் சாப்பிட ஏற்ற பழம் செவ்வாழை மட்டுமே!
வறுத்த காய்கறிகள்,வறுத்த சோறு ஒருபோதும் சாப்பிடவே கூடாது;(சைனீஸ் உணவுகள் சைனாக்காரனுக்குப் பொருந்தும்;நமக்குப்பொருந்துமா? ஏன் எது கிடைச்சாலும் தூக்கி உள்ளே போடுறீங்கப்பா!!!)

சாப்பிடும் நேரத்தில் செல்போனை அணைத்து வைப்பது ப்ரான்ஸ் நாட்டுப் பழக்கம்;இதைப் பின்பற்றலாமே!!
ஆமாம்! சாப்பிடும் போது பேசக் கூடாது;

சாப்பிடும் போது டிவி பார்க்கக்கூடாது;லேப்டாப்பும் தான்;
சாப்பிடும் போது வேகமாகச் சாப்பிடக் கூடாது;மென்று சாப்பிட வேண்டும்;சாப்பிடும் ஒவ்வொரு கவளத்திலும் நமது உமிழ்நீர் கலக்க வேண்டும்;அதுதான் ஆரோக்கியத்தின் அடிப்படை;
சாப்பிடும் போது மென்று சாப்பிடவேண்டும்;(மென்று சாப்பிட மெதுவாக சாப்பிட வேண்டும்;)

அசைவம் சாப்பிடுவது மாபெரும் தவறு;அது நமது ஆயுளைக் குறைக்கும்;

இந்த விதிகளைப் பின்பற்றுவோர் உணவுதியானம் செய்பவர்கள் என்று அர்த்தம்;

ஓம் வராகி சிவசக்தி ஓம்



ரத்தப் பிரிவுகளும்,உண்ண வேண்டிய உணவுகளும்



A Group ரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு பச்சைக்காய்கறிகள்,உளுந்தம்பருப்பு,பீன்ஸ்,பட்டாணி,
கொண்டைக் கடலை அதிகம் தேவைப்படும்;இவைகளை வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து உணவில் சேர்ப்பது அவசியம்;


 B Group ரத்த வகையைச் சேர்ந்தவர்களுக்கு மென்மையான சீரண மண்டலம் என்று நவீன மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன;இவர்கள் பால்,காபி,டீ ஒருபோதும் சேர்க்கக் கூடாது;பாலுக்குப் பதிலாக மோர் அருந்தலாம்;பழங்கள் நிறைய சாப்பிட வேண்டும்;மிதமான உணவுகள் (அசைவம் அனைத்தும்,புரோட்டா,சப்பாத்தி கடின உணவுகளே) சாப்பிட்டுப் பழகுவது நன்று;


AB Group ரத்த வகையில் பிறந்தவர்கள், மெதுவாகச் சீரணிக்கும் சீரண மண்டலத்துடன் பிறந்தவர்கள்;இவர்களுக்கு வயிற்றில் ஹைட்ரோ குளோரிக் அமிலம் கொஞ்சமே சுரக்கும்;எனவே இவர்கள் சாப்பிடும் எந்த உணவையும் மொக்கக்கூடாது;கொஞ்சமாகவே சாப்பிட வேண்டும்;இவர்களுக்கு சளித் தொல்லை உறவினரைப் போலவே தொற்றிக் கொள்ளும்;இவர்கள் தினமும் அதிகாலையில் மிதமான வென்னீரில் லெமன் கலந்து அருந்தி வருவது அவசியம்;நன்று;

O Group இல் பிறந்தவர்களுக்கு ஹைட்ரோகுளோரிக் அமிலம் அதிகம் சுரக்கும்;புரோட்டீன் உடலில் இராது;இதனால் இவர்கள் மாமிச உணவுகள் சாப்பிடுவதிலும்,திட உணவுகள் சாப்பிடுவதிலும் விருப்பமுள்ளவராக இருப்பார்;மாமிச உணவு உண்பதற்குப் பதிலாக,முளை கட்டிய தானியங்களை(முளை கட்டிய உளுந்து,முளை கட்டிய கொள்ளு)அதிகம் சாப்பிடுவது நன்று;

நன்றி:இயற்கை உணவு சார்ந்த மருத்துவ ஆராய்ச்சியாளரின் டேபிளில் இருந்து;


இயற்கை உணவு,இயற்கை உணவு பயிற்சி,இயற்கை உணவு பற்றிய விழிப்புணர்வு!!!



அலோபதி,யுனானி,சித்தா,ஆயுர்வேதம் என்று ஏராளமான வைத்திய முறைகள் இருந்தாலும் வீட்டில் இருக்கும் அல்லது வீட்டுக்கு அருகிலேயே கிடைக்கும் காய்கறிகள்,பலசரக்குகளைக் கொண்டே நமது நோய்களைக்குணப்படுத்திடமுடியும் என்று கடந்த 20,000 ஆண்டுகளாக இயற்கை மருத்துவம் நிரூபித்திருக்கிறது;

இது தொடர்பாக தினசரி,வார,மாத இதழ்களில் ஏராளமான கட்டுரைகள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன;ஆனால்,இதில் கூறப்படும் பொருட்கள்,தானியங்கள்,அரிசி வகைகள் எங்கே கிடைக்கும்? எப்படி இதைப் பயன்படுத்த வேண்டும்? எந்த மாதிரியான உடல் வாகு (வாத உடல்,பித்த உடல்,சிலேட்டும உடல்) அமைப்புள்ளவர்களுக்கு எந்த மாதிரியான உணவு வகைகளைச் சாப்பிட வேண்டும்? என்பது பற்றி தெரிவதில்லை;

அப்படித் தெரிந்து கொள்ள விரும்புவோர்,

இயற்கை உணவு வகைகளைத் தயாரிக்க விரும்புவோர்;

இயற்கை உணவு வகைகளுக்கு என்று ஒரு ஓட்டல் நடத்திட விரும்புவோர்,

இயற்கை உணவு வகைகளை விளைவிக்க விரும்புவோர்,

இயற்கை உணவுகளுக்குள் மறைந்திருக்கும் சித்தர் ரகசியங்களை அறிந்து கொள்ள விரும்புவோர்;

இதுவரை இயற்கை நலவாழ்வு பற்றி புத்தகத்தில் மட்டும்  படித்திருப்பவர்கள்,அதை நேரடியாக அறிந்து கொள்ள விரும்புவோர்,

ரசாயன உரங்களின் பக்கவிளைவுகளை அறிந்து,வீட்டிலேயே மாடித் தோட்டம் அமைக்க விரும்புவோர்,

 நமது குடும்பத்திற்கு மட்டும் இயற்கை உரங்களால் காய்கறிகள்,கீரைகள் அந்த மாடித்தோட்டத்தின் மூலமாகவே விளைவிக்க விரும்புவோர்,

செக்கில் ஆட்டப்படும் எண்ணெய் வகைகளை வாங்க விரும்புவோர்,விற்க விரும்புவோர்;

இயற்கை விளைபொருட்கள் மூலமாகவே நோய்களைக் குணப்படுத்திட விரும்புவோர்;

விளைநிலங்களில் மூலிகை அல்லது சிறுதானியங்கள் விளைவிக்க விரும்புவோர்;

தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் அவர்களுக்கு,

விருதுநகர் மாவட்டம்,சிவகாசி மாநகரம்,தலைமைத் தபால் நிலையம் அருகில் அமைந்திருக்கும் தாய் வழி இயற்கை உணவகத்திற்கு ஒருமுறை வருகை தருவது நன்று;


மேலே கூறப்பட்டிருக்கும் ஒவ்வொரு விஷயத்திற்கும் முழு பக்கபலமும் , வழிகாட்டிதலும் இவர்களிடம் கிடைத்துக் கொண்டே இருக்கிறது;


உலகமயமாக்கலால் அழிந்து வரும் இந்தியாவின் பாரம்பரியம்





1.1.1995 முதல் இந்தியாவும் உலகமயமாக்கல்,டங்கல் திட்டத்தில் கையெழுத்திட்டது;உலகில் இருக்கும் 220 நாடுகளில் 195 நாடுகள் கையெழுத்திட்டன;இந்த ஒப்பந்தப்படி,இந்த 195 நாடுகளுக்குள் யார் வேண்டுமானாலும்,எந்த பொருளை வேண்டுமானாலும்,எந்த நாட்டிலும் விற்கலாம்;வாங்கலாம்;அந்தந்த நாட்டு அரசுகள் இதைத் தடுக்க முடியாது;இதுதான் சொன்னது;ஆனால் செய்தது என்ன தெரியுமா?

பணக்காரன் மேலும் பணக்காரன் ஆவதற்கும்,ஏழை மேலும் மேலும் ஏழை ஆவதற்குமான வழிகள் திறக்கப்பட்டன;பொழுதுபோக்காக ஆரம்பிக்கப்பட்ட சேட்டிலைட் சேனல்கள் இன்று மக்களை கிறுக்காக்கிக் கொண்டிருக்கின்றன;(இந்தியாவில் எஃப் டிவியும்,அமெரிக்காவில் சன் டிவியும் ஒளிபரப்பாவதற்கு இதுவே காரணம்)

எல்லைகளில் இருக்கும் ராணுவத்திற்கு வேலையே இல்லாத அளவுக்கு ஜி 8 நாடுகளைச் சேர்ந்த பன்னாட்டு நிறுவனங்கள் உலகம் முழுவதும் பரவிவிட்டன;கொள்ளை லாபத்திற்கு நோயையோ அல்லது தரமற்ற பொருட்களையோ குவித்து நமது பர்ஸை நாகரீகமாகக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கின்றன;

இந்தியாவில் நெய்யப்படும் பட்டுச்சேலையை ரூ.600/-க்கு வாங்கும் கிழக்கு ஆசிய நாடுகள்,ரீ பேக் செய்து இந்தியாவுக்கே ரூ.8000/- க்கு விற்பனை செய்யும் அட்டகாசமும் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது;

மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் விளையும் அரிய மூலிகைகள் கிலோ ரூ.20/-க்குப் பிடுங்கப்படுகின்றன;அவை இந்தியத் துறைமுகத்தை அடையும் போது ரூ.100/-க்கு விலை உயருகிறது;மேல்நாட்டைச் சென்றடையும் போது ரூ.500/-ஆகி,அதில் இருந்து தயாராகும் அரிய மருந்து ரூ.19,000/-

(இதில் வெறும் 5 கிராம் தான் அந்த மூலிகை கலக்கப்பட்டிருக்கும்)5 கிராம் ரூ.19,000 எனில் 1000 கிராமுக்கு எத்தனை 19,000 ரூபாய்கள் என்று கணக்குப்போட்டுக் கொள்ளுங்கள்;ஒரு கட்டத்துக்கு மேல்,இந்தியாவில் விளையும் மூலிகைகளின் மருத்துவ குணங்களை ஆராய முடியாத வெளிநாட்டினர்,நமது நாட்டினருக்கு மட்டுமே உருவாக்கிய படிப்பே பயோ டெக்னாலஜி! ஏழாம் அறிவு திரைப்படத்தில் வருவது போல,நாம் ஏதாவது ஒரு நோய்க்கு மருந்து கண்டுபிடிக்க,அதை திருடிவதே இவர்களின் நோக்கம்;

நமது தேசத்தின் பெருமைகளைப்பற்றி அறியாத,நமது மக்களின் சுபாவத்தை உணராத,இந்தியாதான் உலகிற்கே வழிகாட்டும் எதிர்கால வல்லரசு என்பதை உணராத,மேல்நாடுகளின் மறைமுக மிரட்டலுக்கு மட்டும் அடிபணிந்த, தேசபக்தி இல்லாத பிரதமர்கள் நம்மை ஆண்டதால் வந்த வினை இது;

இந்தியா போன்ற கலப்புப் பொருளாதார நாடுகள் கூட முதலாளித்துவநாடாக மாறத் துவங்கியிருக்கின்றன;ஏற்கனவே,தொழிலாளித்துவம் உலக அரங்கில் தோல்வியடைந்துவிட்டது;அப்படி தோல்வியடைய 70 ஆண்டுகள் ஆயின;முதலாளித்துவம்,உலகமயமாக்கல்,தாராளமயமாக்கல் என்ற போர்வையில் வந்தாலும் வெறும் 15 ஆண்டுகளிலேயே படுதோல்வி யடைந்துவிட்டது;ஆனாலும்,அதன் பின்விளைவுகள் இன்று இந்தியாவாகிய நம் நாட்டில் ஏழைக்கும் பணக்காரர்களுக்கும் இடையே அதிக இடைவெளியை உருவாக்கிவிட்டது;

அன்பு,பாசம்,சமுதாய நலன் போன்றவைகளைக் கொண்ட மனிதர்கள் அருகிக் கொண்டே வரத் துவங்கிவிட்டனர்;

உலகமயமாக்கல்,தாரளமயமாக்கல் போன்றவைகளால் ஒரே நன்மை ரூ.5000/- என்று இருந்த மாதச் சம்பளம் ஒரேயடியாக ரூ.50,000/-ஆரம்பச் சம்பளம் என்று எகிறியது மட்டுமே! இந்தச் சம்பளமானது,நாடு முழுவதும் ஒரே சீராக கிடைத்திருந்தால்,இந்நேரம் வறுமை ஒழிந்திருக்கும்;அதுதான் நடைபெறவில்லை;