செல்வ வளம் தரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஜபம்!!!
உங்களுடைய இந்த பிறவி துவங்கும் போதே உங்களுக்கு ஒரு நாளுக்கு இவ்வளவு
தான் வருமானம் கிடைக்க வேண்டும் என்று தலைவிதியாக எழுதப்பட்டிருக்கின்றது;அப்படி எழுதுவதற்குக்
காரணம்,நீங்கள் போன நான்கு ஜென்மங்களில் செய்த புண்ணியச் செயல்களின் தொகுப்புதான்!
சில குறிப்பிட்ட சேவைகளை இந்த பிறவியில் சிவாலயத்தில் தினமும் செய்து வந்தால்,அடுத்த
பிறவியில் இந்த பிறவியில் வாழ்ந்ததை விடவும் இன்னும் செல்வ வளத்துடனும்,செல்வாக்குடனும்
வாழ முடியும்;
உங்களுடைய இந்த பிறவியில் இதுவரை கிடைத்து வரும் தினக்கூலி அல்லது வாரச்
சம்பளம் அல்லது மாத வருமானம் இன்னும் அதிகரித்திட பல்வேறு வழிமுறைகள் ஆன்மீகத்தில்
இருக்கின்றன;தகுந்த உண்மையான குரு கிடைத்தாலும் அவரது உபதேசத்தை பின்பற்றி முன்னுக்கு
வரலாம்;
அல்லது
பின்வரும் முறைப்படி தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஜபம்
செய்து வருவதாலும் வருமானத்தை அதிகப்படுத்திட முடியும்;
நீங்கள் மூன்று விதமான கட்டுப்பாடுகளை கண்டிப்பாக பின்பற்றியே ஆக வேண்டும்;
வேண்டிய பொருட்கள்:
ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படம்
நாட்டுப் பசு நெய் மாதம் ஒரு கிலோ
தாமரைத் தண்டுத் திரி 30
மஞ்சள் அல்லது வெண்மை நிற விரிப்பு =புதியது
சந்தன பத்தி 30
இவைகள் ஒரு மாதத்திற்கு வரும்;இப்படி 36 மாதங்கள் வரை விடாப்பிடியாக
தினமும் அதிகாலையில் பின்வரும் மந்திரத்தை ஜபிக்க வேண்டும்;
வடக்கு நோக்கியவாறு ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவரை வைக்க வேண்டும்;கிழக்கு
நோக்கி அமர்ந்து கொள்ள வேண்டும்;விரிப்பின் மீது அமர வேண்டும்;பசு நெய்யில் தீபம் வடகிழக்குத் திசையில் ஏற்றிவிட்டு,சந்தன
வாசம் தரும் பத்தியை பொருத்த வேண்டும்;
ஓம் சொர்ணாகர்ஷண பைரவாய
தனதான்ய சம்பூர்ண சத்யப்ரதாபாயா
தாரித்ரிய விமோசனாயா
ஓம் ஆம் மவ்வும் சிவய நம
ஒரு நாளுக்கு ஒரு மணி நேரம் வீதம்,36 மாதங்கள் விடாமல் ப்ரம்ம முகூர்த்த
நேரத்தில் ஜபித்து வருவதால்,உங்கள் வருமானம் படிப்படியாக அதிகரிக்கும்;பொருளாதாரத்தில்
தன்னிறைவை எட்டிவிடுவீர்கள்:
துக்க வீடுகளுகளில் கலந்து
கொள்ளும் சூழ்நிலையில் 5 நாட்கள் மட்டும் ஜப முயற்சிக்கு விடுமுறை விட வேண்டும்;
பின் குறிப்பு:ஒரு நாளுக்கு ஒரு மணி நேரத்தை விடவும் குறைவான நேரம் ஜபித்தால், 36 மாதங்களில் பலன் கிடைக்காது;மிகவும் தாமதம் ஆகும்;
அசைவம்,மதுவைக் கைவிடாவிட்டால்,இந்த ஜபமுயற்சி வெற்றியைத் தரும் என்று எண்ணாதீர்கள்;
No comments:
Post a Comment