பெரும் செல்வ வளத்தைத் தரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் ஜபம்!!!
உங்கள் ஒவ்வொருவருடைய வாழ்க்கையையும் நவக்கிரகங்கள் இயக்குகின்றன;நவக்கிரகங்களை
பஞ்சபூதங்களும்,பஞ்சபூதங்களை 11 ஏகாதச ருத்ரர்களும்,11 ஏகாதச ருத்ரர்களை மஹாகால பைரவப்
பெருமானும் நிர்வாகித்து வருகின்றார்;மஹா கால பைரவர்,தனது தந்தையும்,குருவுமாகிய ஈசனின்
ஆணைப்படி,அவர் சார்பாக நிர்வகித்து வருகிறார்;
நாம் நம்முடைய அனைத்து கர்மாக்களையும் அனுபவித்து தான் தீர்க்க வேண்டும்
என்று விதி இருந்தால்,நம் ஒவ்வொருவருக்கும் இன்று முதல் 80,000 முதல் 26 கோடி பிறவிகள் எடுக்க வேண்டி இருக்கும்;
இருப்பினும் ஈசனாகிய அருணாச்சலேஸ்வரர் மிகுந்த கருணை மிக்கவர்;திருந்த
வேண்டும்,மனம் வருந்த வேண்டும் என்ற எண்ணமுள்ள பல கோடி மனிதர்கள் நமது ஆன்மீகத் தமிழ்நாட்டில்
பிறந்துள்ளார்கள்;
அவர்களில் யாரெல்லாம் இப்பிறவியில் மஹா கால பைரவ ஜபம் அல்லது அண்ணாமலை
கிரிவலம் செய்கிறார்களோ அவர்களுக்கு வெகு சீக்கிரமாக கர்மவினைகள் குறையத் துவங்கும்;தொடர்ந்து
மஹா கால பைரவ ஜபம் செய்து வருபவர்களுக்கு சில ஆண்டுகளுக்குப் பிறகு,தானே ஸ்ரீஸ்ரீஸ்ரீ
சொர்ண ஆகர்ஷண பைரவ ஜபம் தேடி வரும்;தொடர்ந்து
சில ஆண்டுகளுக்கு தேய்பிறை அஷ்டமி அன்று இப்படி ஜபித்து வருவதால்,அடுத்த சில ஆண்டுகளுக்குப்பிறகு
வளர்பிறைஅஷ்டமியின் மகிமைகளும்,அந்த நாளில் எந்த பைரவரை எப்படி ஜபிக்க வேண்டும் என்ற
வழிமுறையும் தேடிவரும் ;
இன்னும் தொடர்ந்து பைரவ ஜபம் செய்து வந்தால்,பைரவ ஜபம் பற்றிய பல அரிய
பெரிய ஜப ரகசியங்கள் நம்மைத் தேடி வரும்;அதில் ஒன்றுதான் பைரவரின் ஜனன திதியான அஷ்டமி
திதியும்,ஈசனின் ஜன்ம நட்சத்திரமான திருவாதிரை நட்சத்திரமும்!
இந்த இரண்டும் சேர்ந்து வரும் நாளில் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவ
மந்திரம் ஒன்றை 108 முறை ஜபித்தால்,வருமான அளவு அதிகரிக்கும்;இப்படிச் சேர்ந்து வரும்
நாட்கள் ஒரு ஆண்டில் இரண்டு அல்லது மூன்று முறை மட்டுமே வரும்;சில வருடங்களில் வராமலும்
இருப்பது உண்டு;எனவே,இன்று முதல் தினமும் 108 முறை வீதம்,ஓராண்டு வரை ஜபித்து வருவதாலும்
மகத்தான செல்வ வளத்தைப் பெறலாம்;
1.4.2020 புதன்கிழமை இரவு 10.25 வரை வளர்பிறை அஷ்டமி திதி இருக்கிறது;அன்று
மதியம் 2.41 வரை திருவாதிரை நட்சத்திரம் இருக்கின்றது;
இந்த நாளில் காலை சூரியம் உதயம் ஆனதில் இருந்து,மதியம் 2.41 வரையிலான
நேரத்தில் தொடர்ந்து 8 மணி நேரம் ஜபிக்கலாம்;அல்லது 3 மணி நேரத்திற்குள் 1008 முறை
ஜபிக்கலாம்;
9.10.2020 வெள்ளிக்கிழமை மதியம் 1.24 முதல் 10.10.2020 சனிக்கிழமை மதியம்
1.19 வரை தேய்பிறை அஷ்டமி திதி இருக்கிறது.9.10.2020 வெள்ளிக்கிழமை இரவு 8.58 வரை திருவாதிரை
இருக்கிறது.
9.10.2020 வெள்ளி மதியம் 1.24 முதல் இரவு 8.58 வரை ஜபிக்கலாம்;
21.3.2021 ஞாயிறு மாலை 4.22 முதல் மறுநாள் 22.3.2021 திங்கட்கிழமை விடிகாலை
5.32 வரை அஷ்டமியும்,திருவாதிரையும் சேர்ந்து வர இருக்கின்றது;இந்த நேரத்திற்குள் ஜபிக்கலாம்;
கண்டிப்பாக அசைவம்,மது இரண்டையும் கைவிட்டிருக்க வேண்டும்;
ஓம் பைரவாய பைரவக்சனாய குபேராய
தன தான்யாதிபதயே நமஹ
சொர்ணம் தனதான்யம் சம்ருத்மே ஸ்தாபய ஸ்வாஹா
தமிழ்நாடு,ஸ்ரீலங்காவில் எல்லா ஊர்களிலும் ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண
பைரவர் ஆலயம் அல்லது சன்னதி இல்லை;எனவே,உங்கள் ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில்
இருக்கும் கால பைரவர் சன்னதியில் தினமும் ஜபிக்கலாம்;உங்களுக்கு வசதிப்படும் நேரத்தில்
ஜபித்துவரலாம்.
வீட்டில் எனில்,ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் படம் இருக்க வேண்டும்;அவரை
வடக்கு நோக்கி வைக்க வேண்டும்;அவர் அருகில்,கிழக்கு நோக்கி ஒரு தூய விரிப்பின் மீது
அமர்ந்து கொள்ள வேண்டும்;உடலின் எந்த பகுதியும் தரையில் படாமல் அமர்ந்து கொள்ள வேண்டும்; சந்தன வாசம் வெளிப்படுத்தும் பத்தியை பொருத்தி
வைக்க வேண்டும்;பசு நெய் தீபம் ஏற்றி வைக்க
வேண்டும்;ஜபித்து முடித்ததும்,பத்தி,தீபத்தை அணைத்து வைக்க வேண்டும்;அந்த விரிப்பினை
வேறு எதற்கும் பயன்படுத்தக் கூடாது;ஒரு போதும் துவைக்கக்கூடாது;
நீங்கள் எப்படி வருமானம் பார்க்கிறீர்கள் என்பதை எப்படி எவரிடமும் சொல்லாமல்
இருக்கிறீர்களோ,அதே போல,இந்த செல்வ வளம் பெருக்கும் ஜப முறையையும் உங்களைச் சுற்றி
இருப்பவர்கள் அறியாதவாறு ஜபித்து வர வேண்டும்;அப்படிச் செய்தால் மட்டுமே பலிதம் ஆகும்;
வேறு எந்த தெய்வத்தை ஜபித்தாலும் செல்வ வளம் பெருக்கும் வரம் கிடைத்துவிடும்;ஸ்ரீஸ்ரீஸ்ரீ
சொர்ண ஆகர்ஷண பைரவரை தினமும் ஜபித்தால்,நமது கர்மவினைகள் படிப்படியாகக் குறையத் துவங்கும்;அது
குறையும் வேகத்திற்கு ஏற்றவாறு,வருமானம் அதிகரித்துக் கொண்டே செல்லும்;
No comments:
Post a Comment