Monday, December 24, 2018

ஓலைச்சுவடிகளில் இருந்து உதயமான ரேடாரில் சிக்காத விமானம்!!!


ரேடார் தத்துவம் என்ன? அதில் இருந்து புறப்படும் மின் காந்த அலைகள் குறிப்பிட்ட கி.மீ.தூரம் பரவும்;அந்த கி.மீ.தூரத்திற்குள் எந்த விமானம் பறந்தாலும்,அந்த மின் காந்த அலை அந்த விமானத்தின் மேல்பகுதியின் மீது பட்டு திரும்பும்;அப்படித் திரும்புவதைக் கொண்டே அந்த விமானம் எந்த ரகம்;எத்தனை கி.மீ.தொலைவில் பறக்கிறது? எத்தனை கி.மீ/மணி வேகத்தில் எந்தத் திசையில் பறக்கிறது என்பதை ரேடார் சொல்லிவிடும்;


ரேடாரில் சிக்காத விமானத்தை அமெரிக்கா மட்டும் வைத்திருக்கிறது;அது என்ன அமெரிக்காவின் சொந்த அறிவாற்றலில் உதயமானதா? நிச்சயமாக இல்லை;

ரேடாரில் சிக்காத விமானத்தின் மேல் பகுதியில்(வெளிப்புறத்தில்) ஒரு சிறப்பான ரசாயன பூச்சினை (special Chemical coating)பூசியுள்ளனர்;ரேடாரில் இருந்து புறப்படும் மின் காந்த அலைகளை அது உறிஞ்சிவிடும்;இதனால்,ரேடாரின் செயல்பாட்டுக்குள் வராது;இந்தத் தொழில் நுட்பத்தை பல பத்துஆண்டுகளாக வைமானிகா சாஸ்திரத்தினை ஆராய்ந்து கண்டறிந்துள்ளனர்;


வைமானிகா சாஸ்திரம் போஜராஜா மஹாராஜா பல நூற்றாண்டுகளுக்கு முன்பு எழுதிய இன்றைய ஏரோநாட்டிகல் ஸ்ட்ரக்சரிங்க் டெக்னாலஜி! இதன் ஒரு பிரதி இன்று அமெரிக்காவிடம் இருக்கிறது;

இது மட்டுமா இருக்கின்றது? 

பல ஆயிரக்கணக்கான ஓலைச்சுவடிகளை 1947க்கு முன்பாகவே சில கப்பல்களில் நமது நாட்டில் இருந்து அள்ளிச் சென்றது இங்கிலாந்து;அதைபின்னர் அமெரிக்காவுக்கு கொஞ்சமும்,ஜெர்மனிக்கு கொஞ்சமும் கொடுத்து கூட்டாக ஆராய்ச்சி செய்வதாகக் கேள்வி;














No comments:

Post a Comment