Monday, December 24, 2018

கால நிர்ணயம் செய்யும் அருட்கடல்: பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர்!





உங்களை தாங்கமுடியாத கஷ்டங்கள்,அவமானங்கள்,துயரங்கள் விடாமல் துரத்துகின்றது என்றால் நீங்கள் ஏழரைச்சனியை அனுபவித்துக் கொண்டிருக்கின்றீர்கள் என்று அர்த்தம்;
ஆமாம்!

கடந்த ஐந்து முற்பிறவிகளில் செய்த தீவினைகளின் தொகுப்பினை இப்பிறவியில் ஏழரைச்சனி காலத்தில் தான் அனுபவிக்க வேண்டும்;


உங்களுக்கு ஏழரைச்சனி இல்லாத காலகட்டத்திலும்,உங்கள் ஜனன ஜாதகப்படி லக்னத்திற்கு பாதகம் தரும் திசைகள்(லக்னத்திற்கு 3 ஆம் இடத்தின் கிரக திசை,6 ஆம் இடத்தின் கிரக திசை,8 ஆம் இடத்தின் கிரக திசை,12 ஆம் இடத்தின் கிரக திசை அல்லது இந்த இடங்களிலும் நிற்கும் கிரகத்தின் திசை அல்லது இந்த இடங்களின் அதிபதிக்குரிய கிரகங்களுடன் சேர்ந்த கிரக திசைகள்) வந்தால் நீங்கள் வேதனை,கடன்,அரசாங்க கோபம்,அவமானம் போன்றவைகளை அடைய வேண்டும்;

பலருக்கு 40 முதல் 60 ஆண்டுகள் வரையிலும் துன்பங்களும்,துயரங்களும் துரத்திக் கொண்டே இருக்கின்றன;எத்தனையோ பரிகாரங்கள்,பூஜைகள்,யாகங்கள்,எந்திரங்கள்,தானங்கள் செய்து விடிவு கிட்டவில்லை என்றால் தாங்கள் முற்பிறவிகள் மூன்றில் அடாத செயல்கள் செய்துள்ளீர்கள் என்றுதான் அர்த்தம்;


விதிக்கப்பட்ட கர்மங்களுக்கு கட்டுப்பட்டவன் தான் மனிதன் என்பது பழமொழி;அதில் இருந்து மீண்டுவிட வழிமுறைகள் உண்டு;சரியான பரிகாரம் அல்லது ஆலயம் செல்லாதவரையிலும் அல்லது குறிப்பிட்ட காலம் வரை தினமும் மந்திர ஜபம் மற்றும் அன்னதானம் செய்யாதவரையிலும் துயரங்கள் துரத்திக் கொண்டே தான் இருக்கும்;

நம் ஒவ்வொருவரையும் நவக்கிரகங்கள் இயக்குகின்றன;நாம் பிறக்கும் போது வானில் நவக்கிரகங்களின் அமைவைப் பொறுத்து நாம் பிறவி எடுக்கின்றோம்;இந்த அமைவைத் தீர்மானிப்பது நமது முற்பிறவிகள் ஐந்தின் கர்மவினைகளின் தொகுப்புதான்!
நவக்கிரகங்களின் இயக்கத்தைக் கட்டுப்படுத்துவது காலதேவன் என்ற மஹாகால பைரவப் பெருமான்!


பூமி முழுவதும் இருக்கும் அனைத்து கால பைரவப் பெருமான் சன்னதிகளுக்கும் சூட்சுமமாக தெய்வீக ஆற்றல் அருட்கடல்:(அருள்மிகு என்பதற்குப் பதிலாக அருட்கடல்)பைரவேஸ்வரி சமேத பைரவேஸ்வரர் ஆலயம்,சோழாபுரம்,கும்பகோணம் தாலுகா ஆகும்;


கிர்லியன் கேமிராவை சோவியத் ரஷ்யா கண்டுபிடித்தது;இதன் விலை ரூ.40 லட்சம்.இதைக் கொண்டு ஒரு சிவாலயத்தை ஆராய்ந்தார்கள்:ஒவ்வொரு நாளும் அதிகாலை முதல் இரவு ஆலயத்தை மூடும் வரை ஆராய்ந்ததில் ஆச்சரியமான அதிசயங்கள் வெளிப்பட்டன;


விண்வெளியில் இருந்து காஸ்மிக் கதிர்களுடன் கூடிய தெய்வீக சக்தியானது கோவில் கொடிமரம் வழியாக கோவிலுக்குள் அருவியாகப் பாய்கின்றது;கொடிமரத்தில் இருந்து கோவிலின் க்ஷேத்திரபாலர் என்று அழைக்கப்படும் காலபைரவப் பெருமானின் அறையில் நிரம்புகின்றது;அங்கிருந்து கோவிலில் உள்ள மூலவருக்கும்,அம்பாள் சன்னதிக்கும் ஒளிப்பாதையாகப் பயணிக்கின்றது;மூலவர் மற்றும் அம்பாள் சன்னதியில் இருந்து கோவில் முழுவதும் பரவுகின்றது;

ப்ரம்ம முகூர்த்த நேரத்திலும்,அந்தி மாலை நேரமான மாலை 4.30 முதல் 6 மணி வரையிலான நேரத்திலும் இந்த தெய்வீக ஆற்றலின் அளவு பலமடங்கு அதிகரிக்கின்றது;
விண்வெளியில் ஒரு டெலஸ்கோப்பில் இதே கிர்லியன் கேமிராவை வைத்து ஒட்டு மொத்த பாரத நாட்டையும்,ஒட்டு மொத்த தமிழ்நாட்டையும் ஆராய்ந்தார்கள்;


உலகம் முழுவதும் இருக்கும் அனைத்து ஆலயங்களில் இருக்கும் மஹாகால பைரவப் பெருமானின் சன்னதிகளுக்கும் அதிகாலை 3 முதல் 4.30க்குள் கும்பகோணம் அருகில் இருக்கும் சோழாபுரம் ஆலயத்தில் இருந்து காஸ்மிக் கதிர்களுடன் கூடிய தெய்வீகப் பேராற்றல் பாய்கின்றது;

சுமார் 4 லட்சம் பக்கங்கள் கொண்ட இந்த ஆய்வு முடிவுகள் சிலபல சர்வதேச அரசியல் மற்றும் ஆன்மீகக் காரணங்களுக்காக வெளியிடப்படவில்லை;இருந்த போதிலும் இதன் ப்ராஜக்ட்டில் இருந்த ஒரு தமிழ் விஞ்ஞானியால் நமக்கு சிறிது தெரிந்துள்ளது;


ப்ரபஞ்சத்தில் ஏதோவெகு தூரத்தில் இருந்து ஒரு ஒளிவெள்ளம் ஒவ்வொரு தேய்பிறை அஷ்டமி அன்றும் இந்த ஆலயத்தின் மீது விழுகின்றது;(இந்த ஆலயத்தினை மையப்படுத்தி 14000 சதுர அடிகளுக்குப்பரவுகின்றது)

    இந்த ஒளிவெள்ளத்தில் அப்போது ஊடாக யாரெல்லாம் வருகின்றார்களோ,அவர்களின் ஆத்மக் கசடுகள் கரைகின்றன;ஆறு ஆண்டுகள் வரை யார் இந்த ஆலயத்திற்கு தொடர்ந்து தேய்பிறை அஷ்டமி நாளில் வருகின்றார்களோ,அவர்கள் முழு பரிசுத்தமடைகின்றார்கள்;சில பல தெய்வீக சக்திகளைப் பெறுகின்றார்கள்:

ஓம் சத்குரு ஸ்ரீவேங்கடராம சுவாமிகளின் திருவடிகளே சரணம்
ஓம் இடியாப்ப சித்தர் நமஹ
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment