உங்கள் வாழ்க்கையில் இதுவரை நீங்கள் பட்ட
சிரமங்கள்,அவமானங்கள்,ஏக்கங்கள் நிறைவேறாமல் இருப்பதற்கு உங்கள் முற்பிறப்பு
கர்மவினைகள் தான் காரணமாக அமைந்திருக்கின்றன;
ஆனால்,எப்போது திருந்தவேண்டும்,மனம் வருந்த வேண்டும் என்ற எண்ணம்
உண்டானதோ அப்போதே உங்களுக்கு குருவருள் கிட்டப் போகின்றது என்று அர்த்தம்;
மாதா,பிதா,குரு,தெய்வம் என்பது பழமொழி மட்டும் அல்ல;நம்மைப்
பெற்றவர்கள் மாதாவும்,பிதாவும்;ஆனால்,குருவின் அருள் கிட்டினால் மட்டுமே திரு
(கடவுள்) வின் அருள் கிட்டும்;
உங்களுடைய குரு எந்த சித்தராக இருந்தாலும் சரி;எந்த மஹானாக
இருந்தாலும் சரி;எந்த துறவியாக இருந்தாலும் சரி;
இந்த ப்ரபஞ்சத்தில் மனிதப் பிறவி எடுத்த ஆதி மூல முதல் குரு
அகத்தியர் மட்டுமே! அகத்திற்குள்(மனதிற்குள்) இருக்கும் ஈசனை எப்படி தேடிக்
கண்டுபிடிப்பது? என்பதை பல கோடி யுகங்களுக்கு முன்பே கண்டுபிடித்தவர்;அவர் தமிழ் மொழியின்
தாயகமான நமது தமிழ்நாட்டில் 1008 சிவாலயங்களை உருவாக்கி இருக்கின்றார்;
ஒவ்வொரு சிவாலயத்திலும் 12 ஆண்டுகள் தினமும் பூஜை
செய்திருக்கின்றார்;12 ஆண்டுகள் என்பது பூமி ஆண்டுகள் அல்ல; 12 தேவ ஆண்டுகள்!!! பூமி ஆண்டுகள் கணக்கில்
16,00,000 ஆண்டுகள் வருகின்றது; அதில் கீழே கொடுக்கப்பட்டிருக்கும் ஆலயங்கள்
புனர்நிர்மாணத்திற்காக காத்துக் கொண்டு இருக்கின்றன;
அகத்தியரின் அருளைப் பெற விரும்புவோரும்
அகத்தியர் உதயமான ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களும்
ஈசனின் அருளைப் பெற விரும்புவோரும்
சித்தர் ஒருவரின் தரிசனத்தைப் பெற விரும்புவோரும் கீழே இருக்கும்
எதாவது ஒரு கோவிலின் திருப்பணியில் கலந்து கொள்ளலாம்;இந்த கட்டுரை 14.12.2018
அன்று எழுதப்பட்டது;அதற்குள் இந்த ஆலயங்களில் ஏதாவது ஒன்றில் திருப்பணிகள்
நிறைவடைந்துவிட்டால்,பிற ஆலயங்களில் திருப்பணிக்கு உங்களால் ஆன பொருள் உதவியை
நேரில் சென்று செய்யும் படி வேண்டுகின்றோம்;
இதனால்,அகத்தியரின் அருளும்,இந்த ஆலயங்களில் அருளாட்சி புரிந்து
கொண்டு இருக்கும் அகத்தீஸ்வரரின் ஆசிகளும் பூரணமாகக் கிட்டிவிடும்;
1.அருள்மிகு அஞ்சனாட்சி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவி,சோமூர்,கரூர்
மாவட்டம்.
மிகவும் பாழடைந்து இருக்கின்றது;
2.அருள்மிகு சொர்ணாம்பிகை சமேத
அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பழையபாளையம்,துவரங்குறிச்சி அருகில்(வேறு அருகு
ஊர்கள்:செவல்பட்டி,மேலூர்)திருப்பணிக்கு காத்துக் கொண்டு இருக்கின்றது; 1.9.2018
3.அருள்மிகு அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பரதூர் (முற்காலத்தில் பரத்வாஜ
மகரிஷியின் ஆஸ்ரமம் இங்கே இருந்துள்ளது)சேத்தியாத்தோப்பு,கடலூர் மாவட்டம்.(திருப்பணிக்காக
காத்துக் கொண்டு இருக்கின்றது)1.9.2018
4.அருள்மிகு
ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் திருக்கோவில்,பென்னலூர்,ஸ்ரீபெரும்புதூர் தாலுகா(2017
முதல் புனரமைப்பு ஆரம்பம்)
5.அருள்மிகு அகிலாண்டேஸ்வரி சமேத அகத்தீஸ்வரர் ஆலயம்,மேலையூர்,பூம்புகார் அருகில்(மயிலாடுதுறை டூ பூம்புகார் சாலையில் மயிலாடுதுறையில் இருந்து 19 வது கி மீ) மேலையூரில் சீனிவாசா மேல்நிலைப்பள்ளிக்கு பின்புறம் காவிரிக் கரையோரம் அமைந்திருக்கின்றது;
No comments:
Post a Comment