தனது திருநடனத்தால் உலகத்தை இயக்கிக் கொண்டிருக்கும் இறைவன் திருக்கையிலாய மலையில் தனது தேவியுடன் வீற்றிருந்தார்.அப்போது இறைவனைத் தாங்கிக் கொண்டிருந்த நந்தியெம்பெருமான், ‘சுவாமி! தாங்கள் தற்போது வீற்றிருக்கும் இத்திருக்கையிலாயமலைக்கு ஒப்பான தலம் வேறு எங்கும் உள்ளதா?’ என்று கேட்டார்.
அதற்கு இறைவன்(சிவபெருமான்) “உத்திரகையிலாயம்,மத்திய கைலாயம்,தட்சிண கையிலாயம் என்று 3 தலங்கள் உள்ளன.இம்மூன்றுக்கும் சமமான சிறப்புடைய ஆலயம் என்று போற்றப்படும் ஒரே திருத்தலம் தட்சிண கையிலாயம் என்று போற்றப்படும் திருப்பேரூரே” என்று அருளினார்.
இதை அம்மையப்பனுக்கு அருகில் இருந்து செவிமடுத்துக் கொண்டு இருந்த முருகக் கடவுள் நாரதரிடம் தெரிவித்தார்.உடனே,பெரும் ஆவல் கொண்ட நாரதரும் வெள்ளங்கிரி மலைகு வந்தார்.வந்து பட்டீஸ்வரரை தரிசித்தார்.
பிறகு காஞ்சி நதிக்கரையில் ஒரு லிங்கத்தை பிரதிஷ்டை செய்து,தீர்த்ததையும் உருவாக்கினார்.(அவர் வழிபட்ட திருக்கோவில் பட்டீஸ்வரர் ஆலயத்திற்கு அருகில் இருக்கிறது)நாரதர் வழிபட்டதால் இந்த கோவில் நாரதீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறது.இந்த ஆலயம் மோட்சம் அளிக்கக்கூடியதாக இருப்பதால் இங்கே வீற்றிருக்கும் பைரவப் பெருமானுக்கு நாய் வாகனம் இல்லை;இவருக்கு ஞானபைரவர் என்று பெயர்.
கோயம்புத்தூரில் இருந்து சிறுவாணி செல்லும் சாலையில் 6 கி.மீ.தொலைவில் பேரூர் அமைந்திருக்கிறது.
அசுபதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் தமது ஜன்ம நட்சத்திரம் வரும் நாளில் இங்கே வந்து,ராகு காலத்திற்கு முந்தைய முகூர்த்தத்தில்(90 நிமிடம்) மூலவருக்கும்,அம்பாளுக்கும் அபிஷேகம் செய்ய வேண்டும்.ராகு காலம் துவங்கியதும் ஞான பைரவருக்கு அபிஷேகம் செய்ய வேண்டும்.அசுபதி நட்சத்திரக்காரர்கள் பலர் கூட்டாகச் சேர்ந்தும் அபிஷேகம் செய்யலாம்;அவ்வாறு ஞான பைரவருக்கு அபிஷேகம் செய்யும் போது ஸ்ரீகால பைரவர் 1008 போற்றியைப் பாடுவது நன்று.
இதைச் செய்ய விரும்புவோர்,அசுபதி நட்சத்திரம் வரும் நாளில் ராகு காலத்தில் இந்த ஆலய வளாகத்தில் அமர்ந்து ஞான பைரவப் பெருமானை நினைத்தவாறு ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ என்று ஜபிக்கலாம்.இப்படி தொடர்ந்து 12 அசுபதி நட்சத்திர நாட்களுக்கு ஜபித்து வந்தால்,கடுமையான சிரமங்கள் நீங்கி வளமான வாழ்க்கையை ஞான பைரவப் பெருமான் அருளுவார்.
No comments:
Post a Comment