Monday, May 4, 2015

மன்மத ஆண்டின்(13.4.15 முதல் 14.4.16 வரை) முழுமையான துவாதசி நாட்கள்!


நம் கர்மவினையை நீக்கும் வல்லமை (நாம் வாழ்ந்து வரும் கலியுகத்தில்) அன்னதானத்திற்கு மட்டுமே உண்டு என்பது ஆன்மீக ஆராய்ச்சியில் கிடைத்த அளப்பறிய உண்மை ஆகும்;
அன்னதானத்தை நாம் வாழ்ந்து வரும் ஊரில் இருக்கும் சிவாலயத்திலேயே செய்யலாம்;ஆனால்,தொடர்ந்து மாதம் தோறும் வரும் அமாவாசையன்று அன்னதானம் செய்து வந்தால் தான்,சிலபல ஆண்டுகளுக்குப் பிறகு அன்னதானத்திற்கான பலன் நம்மை வந்தடைகிறது;

செல்போனும்,கணினியும் நமது தினசரி வாழ்க்கையை படுவேகமாக்கிவிட்டது போலவே,நாமும் சீக்கிரம் நற்பலன் கள் கிட்ட வேண்டும் என்றே ஏங்குகிறோம்;அப்படிப்பட்ட ஏக்கங்கள் தீர அண்ணாமலையில் துவாதசி திதி வரும் நாட்களில் அன்னதானம் செய்தால் போதுமானது;குறைந்த பட்சம் 9 துவாதசி நாட்களும்,அதிகபட்சம் 36 துவாதசி நாட்களும் அன்னதானம் செய்வது அவசியம்.

சிவபுராணத்தில் அண்ணாமலையில் அன்னதானம் செய்தால் ஏற்படும் புண்ணியம் பற்றி விவரிக்கப்பட்டுள்ளது;
நமது சொந்த ஊரில் இருக்கும் பழமையான சிவாலயத்தில் ஒரு நாளுக்கு ஒரு லட்சம் பேர்கள் வீதம் ஒராண்டு வரை அன்னதானம் செய்தால் எவ்வளவு புண்ணியம் கிடைக்குமோ அதை விட அதிகபுண்ணியம் காசியில் ஒரு நாள் மட்டும் அன்னதானம் செய்தால் கிடைத்துவிடும்;அதுவும் காலையில் ஒரு சாது;மதியம் ஒரு சாது;இரவு ஒரு சாது என மூன்று பேர்களுக்கு அன்னதானம் செய்தாலே கிடைத்துவிடும்;

அன்னதானத்தை மனப்பூர்வமாகச் செய்ய வேண்டும்;அதே சமயம்,விளம்பரப்படுத்தாமல் செய்ய வேண்டும்;

அசைவ அன்னதானம் ஒரு போதும் செய்யக் கூடாது; 

   கட்டாய அன்னதானமும் ஒரு போதும் செய்யக் கூடாது;

நள்ளிரவு அன்னதானம் ஒருபோதும் செய்யக் கூடாது;

தரமான உணவுப் பொருட்கள் மூலம் செய்யப்பட்ட உணவையே தானமாகத் தர வேண்டும்;

சந்தர்ப்பம் இருந்தால் அஷ்டலிங்கங்களின் வாசலிலும் அன்னதானம் செய்யலாம்;

அண்ணாமலை ஆலயத்தில் இருந்து ஐந்து சதுர கி.மீ.க்குள் அன்னதானம் செய்யலாம்;

பவுர்ணமி தினங்களில் செய்யப்படும் அன்னதானத்தைவிடவும் பல கோடி மடங்கு உயர்ந்தது துவாதசி திதி அன்று செய்யப்படும் அன்னதானம்.!!!


30.4.15 வியாழன்

30.5.15 சனி

13.6.15 சனி

28.7.15 செவ்வாய்

11.8.15 செவ்வாய்

9.9.15 புதன்

9.10.15 வெள்ளி

24.10.15 சனி

22.12.15 செவ்வாய்

6.1.16 புதன்

5.2.16 வெள்ளி

19.2.16 வெள்ளி

4.4.16 திங்கள்


ஒம் அருணாச்சலாய நமஹ

No comments:

Post a Comment