Friday, May 1, 2015

அவிட்ட நட்சத்தினர் வழிபட வேண்டிய சீர்காழி அஷ்டபைரவர்!!!




சீர்காழி பிரம்மபுரீஸ்வரர் கோவிலின் தெற்கு நுழைவுவாசலின் உள்புறத்தில் மேற்குத்திசையில் அஷ்ட பைரவ சன்னதி அமைந்திருக்கிறது.

அஷ்டபைரவ திருமேனிகள்(சிலைகள்) ஒரு விசாலமான அறையின் நான்கு சுவர்களில் இருக்கும் மாடல்களில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.இந்த அறை சட்டைநாதரின் பள்ளியறையாக நம்பப்படுகிறது.இந்த சன்னதியின் மேல் கட்டப்பட்ட சிறிய கோபுரத்தில் அஷ்ட பைரவர்கள் எட்டு திசையை நோக்கிய நிலையில் இருப்பதாக சுதை வேலைப்பாட்டு உருவங்களாக சித்தரிக்கப்பட்டுள்ளன.இந்த அறையில் ஒரு ஊஞ்சல் உண்டு.அதன் மேல் சட்டைநாதரின் படம் வைக்கப்பட்டுள்ளது.ஊஞ்சலுக்கு அடியில் முள் ஆணிகள் கொண்ட பாதக்குறடுகளும் காணப்படுகின்றன;இந்த சன்னதியில் சுக்கிரலிங்கம்,சுக்கிர விநாயகர் கருங்கல் விக்கிரகங்களாக கிழக்கு நோக்கி,மேல்புறம் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இந்த சன்னதியில் அஷ்டபைரவ அபிஷேகமும் வழிபாடும் நடைபெற்றுவருகின்றன;ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நடைபெறும் அஷ்டபைரவ பூஜையில் வடை,பாசிப்பருப்பு பாயாசம்,சுக்கு கலந்த வெல்லச் சர்க்கரை முதலியவை படைக்கப்படுகின்றன.பூஜையின் முடிவில் பக்தர்களுக்கு விநியோகம் செய்யப்படுகின்றன;பூஜையின் போது இந்த அஷ்டபைரவர் அறை முழுவதும் சாம்பிராணி புகை காட்டப்படுகிறது.அதன் பிறகு ஆண்கள் சட்டையில்லாமலும்,பெண்கள் தலையில் பூ சூடாமலும் இந்த அறையினுள் சென்று வழிபட அனுமதிக்கப்படுகிறது.

ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் இரவு 10 மணிக்கு சட்டைநாதரின் அம்சமாக விளங்கும் பத்ரலிங்கத்திற்கு அபிஷேகம் நடைபெறுகிறது.பிறகு,சட்டைநாதர் சன்னதியில் புனுகு சாத்தப்படுவதோடு வழிபாடு நிறைவடைகிறது.

அவிட்டநட்சத்திரத்தில் பிறந்தவர்கள்(அவிட்டம் 1,2 ஆம் பாதம் எனில் மகர ராசி,அவிட்டம் 3,4 ஆம் பாதம் எனில் கும்பராசி) இந்த ஆலயம் தவிர,சேலம் ஆத்தூரில் இருந்து 20 கி.மீ.தொலைவில் அமைந்திருக்கும் ஆறாகழூரில் அமைந்திருக்கும் ஸ்ரீகாமநாதீஸ்வரர் ஆலயத்தில் விளங்கும் அஷ்டபுஜ பைரவரையும் வழிபடலாம்.ஆறாகழூர் சின்னசேலத்திலிருந்து 4 கீ.மீ.தொலைவில் அமைந்திருக்கிறது.

அவிட்டத்தில் பிறந்தவர்கள் இந்த ஆலயத்தில் தனது ஜன்ம நட்சத்திரம் வரும் நாட்களில் வழிபட இப்பிறவியிலேயே முக்தியைப்பெறுவர்;நிறைய பூர்வபுண்ணியம் செய்தவர்கள் இப்பிறவியுடன் சிவகணமாகவோ,பைரவ கணமாகவோ மாறுவர்.

No comments:

Post a Comment