தேவையான பொருட்கள்:ஆன்மீகக்கடல் இணையம் மூலமாக வாங்கப்பட்ட ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவர் புகைப்படம்,இரண்டு எவர்சில்வர்/தாமிர கிண்ணங்கள்,தாமரை நூல் திரி,பாக்கெட்டில் அடைக்கப்படாத நெய் ஒரு கிலோ,சந்தனபத்தி பாக்கெட்,கால் கிலோ சந்தனம்,செவ்வரளி உதிரிப்பூக்கள் அல்லது வில்வ இலைகள்,ஒருபோதும் அசைவம் சாப்பிடாத மன உறுதி.
ஆன்மீகக்கடல் மூலமாக வாங்கிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் புகைப்படத்தை பிரேம் செய்து உங்கள் வீட்டில் தெற்குப்பக்கச் சுவற்றில் வடக்கு நோக்கி வைக்கவும்.பீடம் அமைத்து வைப்பது இன்னும் சிறப்பு.ஏனெனில்,நவக்கிரகங்களுக்கு உயிரூட்டி,இயக்கிக்கொண்டிருக்கும் சூரியனின் பிராண தேவதையாக ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் இருக்கிறார்.மேலே கூறிய பொருட்களை இவருக்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
யார் ஜீவகாருண்யம் எனப்படும் அசைவம் சாப்பிடுவதை நிரந்தரமாகக் கைவிடுகிறார்களோ,அவர்கள் மட்டுமே ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாடு செய்யத் தகுதியானவர்கள் ஆவர்.பல குடும்பங்களில் அசைவ உணவை சிறுபிராயத்திலிருந்தேபழக்கியிருப்பார்கள்;இருப்பினும்,நிரந்தரமாக அசைவ உணவைக் கைவிட்டு,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் வழிபாட்டினை பின்பற்றி வருவதால் பொருளாதாரம் மற்றும் பணம் சார்ந்த பிரச்னைகள் அடியோடு நீங்கிவிடும்.
ஒரு பவுர்ணமி நாளன்று இரவு ஏழு மணியளவில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் படத்தின் முன்பாக நெய்தீபம்,தாமரை நூலில் ஏற்ற வேண்டும்;பிறகு,நமது வலது கையில் இருக்கும் மோதிரவிரல் நுனியால் சந்தனத்தை ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் நெற்றி,ஸ்ரீசொர்ணதாதேவியின் நெற்றி,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் பாதம்,சூலாயுதத்தின் மையப்பகுதி,பொற்கலசம் இவைகளில் வைக்க வேண்டும்;குங்குமம் வைக்கலாகாது;இவ்வாறு வைத்து விட்டு,ஒரு மஞ்சள் பட்டுத் துண்டின் மீது கிழக்கு நோக்கி அமர வேண்டும்.செல்போன்,அழைப்புமணி,வானொலி,தொலைக்காட்சி குறுக்கீடுகள் இல்லாமல் முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும்.
பின்னர்,உங்கள் குலதெய்வத்தை நினைத்து ஒருமுறை வேண்ட வேண்டும்;(உதாரணமாக ஓம் முனீஸ்வராய நமஹ) அதற்குப்பிறகு,ஓம் கணபதியே நமஹ என்று ஒருமுறை ஜபித்துவிட்டு,பின்வரும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவ அஷ்டகத்தை 27 முறை ஜபிக்க வேண்டும்;பாடக் கூடாது.ஒவ்வொரு முறையும் ஜபித்து முடித்ததும்,ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவரின் போட்டோ மீது செவ்வரளி பூ (அல்லது வில்வதளம்)ஒன்றைத் தூவ வேண்டும்.27 முறை இவ்வாறு ஜபித்து முடித்தப்பின்னர்,ஓம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவாய போற்றி போற்றி போற்றி என்று மூன்றுமுறை வாய்விட்டுச் சொல்ல வேண்டும்/மனதுக்குள்ளும் ஜபிக்கலாம்.
ஸ்ரீதுர்கைச் சித்தர் அருளிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவ அஷ்டகம்
தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின்
தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின்
மகிழ்வுகள் வந்து விடும்
சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப்புன்னகை
சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லையீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்
வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
காவலாய் வந்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
முழுநிலவதனில் முறையோடு பூசைகள்
முடித்திட அருளிடுவான்
உழுவதவன் விதைப்பான் உடமைகள் காப்பான்
உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை செபித்து
முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
தன மழை பெய்திடுவான்
நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான்
நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்
தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான்
வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்
பூரணன் யாவும் தனக்குள்ளே வைப்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை
நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
யாவையும் போக்கிடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில்
மணியணிகலனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும்
நின்மலன் நானென்பான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான்
சத்தோடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்
புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
பசும்பொன் இதுவென்றான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
ஜெய ஜெய வடுகநாதனே சரணம்
வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம்
ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா
செல்வங்களைத் தந்திடுவாய்
தனக்கில்லை யீடு யாருமே என்பான்
தனமழை பெய்திடுவான்
இவ்வாறு தொடர்ந்து ஒன்பது பவுர்ணமிகள் வழிபாடு செய்ய வேண்டும்.ஒன்பதாவது பவுர்ணமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவருக்கு படையலாக அவல் பாயாசம் தயார் செய்து படையலிட வேண்டும்.வழிபாட்டின் முடிவாக அவல் பாயாசத்தை பாதி எடுத்து நம் குடும்ப உறுப்பினர்களுக்கு மட்டும் பகிர்ந்து கொள்ள வற்றாத செல்வச் செழிப்பை அடையலாம்.
இப்படிக்கு:= எனது ஆன்மீககுரு அவர்களின் ஆசியாலும்,உபதேசத்தாலும் உங்களுக்கு வழிகாட்டும் ஜோதிட முனி கை.வீரமுனி,ஸ்ரீவில்லிபுத்தூர்.
arumai arumai
ReplyDelete