ஒவ்வொரு தமிழ் ஆண்டும் வரும் மாசி மாதத்து சிவராத்திரியே மஹாசிவராத்திரி எனப்படும்.இந்த நன்னாளில் மட்டும் இரவில்,நமது வீட்டில் ஒருமுறை ஓம்சிவசிவஓம் ஜபித்தாலே,பத்தாயிரம் தடவை ஓம்சிவசிவஓம் ஜபித்தமைக்கான பலன்களைப் பெறலாம்.பழமையான ஆலயங்களில் அல்லது மலைமீதிருக்கும் ஆலயங்களில் அல்லது பழமையான ஜீவசமாதிகளில் ஒரே ஒருமுறை ஓம்சிவசிவஓம் ஜபித்தால் ஒரு லட்சம் தடவை ஜபித்தமைக்கான பலன்களைப் பெறலாம்.
அதுவும் நமது குலதெய்வக்கோவில் வளாகம் அல்லது சித்தர்களின் ஜிவசமாதிகளில் சிவராத்திரி இரவில் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,நமது ஜப ஆற்றலால் நமது குலதெய்வத்தின் சக்தி பலகோடி மடங்கு அதிகரிக்கும்;நமது ஆத்மபலமும் அதிகரிக்கும்.குலதெய்வம் தெரியாதவர்கள் அருகில் இருக்கும் சித்தர்களின் ஜீவசமாதியில் ஜபிப்பது நல்லது.
இந்த நந்தன வருடம்,சிவராத்திரி மாசி 26 ஆம் நாள் ஞாயிற்றுக்கிழமை(10/3/13) அன்று இரவு வருகிறது.இந்த நாளில் நள்ளிரவு 12 மணி முதல் 3 மணி வரையிலும் நமது குல தெய்வக்கோவில் வளாகம் அல்லது சித்தர் ஜீவசமாதி அல்லது சதுரகிரி அல்லது அண்ணாமலை கிரிவலப்பாதை அல்லது காசி அல்லது திருக்கையிலாயம் அல்லது நமது வீட்டு பூஜையறையில் கிழக்கு நோக்கி அமரவேண்டும்;ஒரு மஞ்சள்துண்டை விரித்து,அதற்குள்ளாக அமர்ந்து கொள்ள வேண்டும்;இருகைகளிலும் தலா ஒரு ஐந்துமுக ருத்ராட்சத்தை வைத்துக்கொண்டு,கைகளை மடக்கிக் கொள்ள வேண்டும்;முதலில் நமது குலதெய்வத்தை நினைக்க வேண்டும்.(உதாரணமாக,ஓம் முனீஸ்வராய நமஹ என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்);
பிறகு,ஓம் கணபதியே நமஹ என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்;பிறகு,நமது இஷ்டதெய்வத்தை நினைத்துக் கொள்ள வேண்டும்;
(ஓம் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவாய நமஹ என்று ஒருமுறை ஜபிக்க வேண்டும்) பிறகு ஓம்சிவசிவஓம் ,ஓம்சிவசிவஓம் என்று வேகமாக ஒப்பிப்பது அல்லாமல்,மெதுவாக ஜபிக்க வேண்டும்.ஜபத்தின் முடிவில்
ஓம் அருணாச்சலாய நமஹ
ஓம் அகத்தீசாய நமஹ
ஓம் நந்தீசாய நமஹ
ஓம் திருமூலதேவாய நமஹ
ஒம் கருவூர் தேவாய நமஹ
ஓம் ராமலிங்க தேவாய நமஹ
ஓம் காகாசிவமே நமஹ
என்று ஜபித்துவிட்டு,ஜபத்தை முடிக்க வேண்டும்.ஒருவேளை இந்த மூன்றுமணி நேரமும் ஜபிக்க முடியாவிட்டால்,10/3/13 ஞாயிறு நள்ளிரவு 12 முதல் 12.30 வரையிலும்,1 முதல் 1.30 வரையிலும், 2 முதல் 2.30 வரையிலும் ஜபிக்க வேண்டும்.இவ்வாறு,ஜபித்து முடித்தப்பின்னர்,கோவில் பிரசாதமாக அபிஷேகத் தீர்த்தம் அல்லது (சித்தர் ஜீவசமாதி எனில்) கொண்டு வந்திருக்கும் இளநீரை அருந்த வேண்டும்.
இந்த நாளில் மட்டும், நள்ளிரவு நேரத்தில் விண்வெளியில் இருந்து ஆல்பா,பீட்டா,காமாக் கதிர்கள் பூமியில் இருக்கும் புனித இடங்களை நோக்கிப் பாயும்;இந்தக்கதிர்களுக்கு அறிவியல் பூர்வமான சுபாவங்கள் இருந்தாலும்,அதைவிட அபூர்வமான ஆன்மீக பேராற்றல்களும் இருக்கின்றன; பாராசைக்காலஜி கற்றவர்களிடம் கேட்டால் மணிக்கணக்காக இது தொடர்பான விளக்கங்களை அளிப்பார்கள்;அவ்வாறு பாயும் போது மேலே கூறிய வழிமுறைப்படி ஓம்சிவசிவஓம் ஜபித்தால்,சதாசிவனின் அருளாற்றல் முழுமையாகக் கிட்டும்.சிவராத்திரி முடிந்த மூன்று நாட்களுக்கு 14/3/13 வரை யாரிடமும்,எக்காரணம் கொண்டும் கோபப்படாமல் இருந்தால் நிச்சயமாக உங்களது ஓம்சிவசிவஓம் ஜப ஆற்றலானது உங்களது உடலையும் ஊடுருவிச் சென்று ஆத்மாவுக்குள் நிரம்பிவிடும்.
ஓம்சிவசிவஓம்
iya sorna bairavar valipadu seybavargalum seyalama
ReplyDeleteஇந்த ஒரு நாள் மட்டும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் வழிபாட்டுக்கு விடுப்பு விட்டுவிட்டு,ஓம்சிவசிவஓம் ஜபிக்கலாம்.வாழ்த்துக்கள்!!!
ReplyDelete