இந்தியா, சீனா – உறவா, பகையா?
புதன், 2 டிசம்பர் 2009( 20:51 IST )
-->
“தகராறுக்கு உட்பட்ட பகுதியில் பயணம் மேற்கொள்ள தலாய் லாமாவை அனுமதித்ததன் மூலம் சீனத்திற்கு இரட்டை அவமரியாதை செய்துள்ளது இந்தியா” என்று கூறிவிட்டு, “1962ஆம் ஆண்டு கற்ற பாடத்தை இந்தியா மறந்திருக்கலாம், அதே போன்ற தவறான பாதையில்தான் இந்தியா இப்போதும் செல்கிறது” என்று ஒரு ‘ஸ்காலர்’ கூறியதாக கட்டுரை வெளியிட்டிருந்தது. ஆனால் இதையெல்லாம் மத்திய அரசு ‘பெரிதாக’ காட்டிக்கொள்ளவில்லை .ஆனால், இந்தியாவை ஒரு அச்சுறுத்தலாகவே சீன மக்கள் கருதுவதாக ஒரு கருத்துக் கணிப்பு நடத்தியுள்ளது பீபிள்ஸ் டெய்லி. அதில் பங்கேற்றவர்களில் 90 விழுக்காட்டினர் சீனத்திற்கு இந்தியா ஒரு அச்சுறுத்தல்தான் என்று கருதுகிறார்கள் என்று கூறி ஒரு செய்தியையே வெளியிட்டுள்ளது.!அதுமட்டுமல்ல, நமக்குத் தெரியாத பல விவரங்களை அது தனது நாட்டு மக்களுக்குத் தெரிவிக்கிறது. கடந்த ஜூன் மாதம் 11ஆம் தேதி அன்று அளித்த ஒரு செய்தியில், இந்தியா 60,000 படையினரை சீன எல்லைக்கு அனுப்பியுள்ளது என்று கூறுவிட்டு, “இது எதிர்காலத்தில் எழக்கூடிய சவால்களைச் சந்திப்பதற்கே” என்று ஆளுநர் ஜே.ஜே. சிங் கூறியதையும் சுட்டிக்காட்டியுள்ளது.
FILEதலாய் லாமா அருணாச்சல பிரதேசம் சென்றுபோது, அவருடைய பயணத்திற்கு பாதுகாப்பு அளிக்கும் முறையில் அதி நவீன ஏவுகணையான பிரம்மோஸ் ஏவுகணைகளை சீன எல்லையை நோக்கி இந்தியா நிறுத்தியுள்ளது என்ற செய்தியும் பீபிள்ஸ் டெய்லியில் வெளியிடப்பட்டிருந்தது. சீன அரசின் பிரச்சார ஊடகங்களாகத் திகழும் இந்த இணையத் தளங்களில் வந்த செய்திகளை இந்திய அரசு மறுக்கவில்லை என்பதால் இவையாவும் உண்மையாக இருக்குமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது. ஆக, இரண்டு நாடுகளின் பிரதமர்கள் சந்தித்துக் கொண்டபோது, நீடித்த நல்லுறவு என்று பேசினாலும், எதார்த்தத்தில் நிலை வேறாகவுள்ளது புலனாகிறது. இரண்டு அரசுகளும் இரண்டு முகங்களைக் கொண்டுள்ளன, காட்டுகின்றன.
தகவல் ஆதாரம்:தமிழ் வெப்துனியா 3.12.2009 www.tamil.webdunia.com/newsworld/news/currentaffairs/0912/02/1091202105_1
No comments:
Post a Comment