ஆன்மீகக்கடல் ஆசிரியர் கை.வீரமுனி சுவாமிகள். .யின் அதிகாரபூர்வ வலைப்பூ இந்த மஹாவில்வம்;உங்களின் வாழ்க்கைச் சிக்கல்கள் தீர,ஜோதிட ரீதியாக ஆலோசனைகள் பெறவும், ஆன்மீகத் தேடல் உள்ளவர்கள் முறையான வழிகாட்டுதல் பெறவும் தொடர்பு கொள்க: வாட்ஸ் அப் எண்:+91 9092116990 செல் எண்:9629439499(இருப்பு:ஸ்ரீவில்லிபுத்தூர்=விருதுநகர் மாவட்டம்) மாதம் ஒருமுறை சென்னை,கோவையில் சந்திக்கலாம்!!!
Thursday, December 3, 2009
CHINA IS A GREAT DESIRE COUNTRY-1
இந்தியா, சீனா – உறவா, பகையா?
புதன், 2 டிசம்பர் 2009( 21:01 IST )
-->
FILEஇந்தியாவின் ஒரு மாநிலமாகத் திகழும் ஜம்மு-காஷ்மீரின் நிர்வாகத்தின் கீழுள்ள எல்லை மாவட்டமான லே பகுதியில் உள்ள டெம்சோக் என்ற கிராமத்தில் 8 கி.மீ. தூரத்திற்கு சாலை போடும் பணி நிறுத்தப்பட்டுள்ளது.காரணம்: அண்டை நாடான சீனா அப்பகுதியில் சாலை போடுவதற்கு ஆட்சேபம் தெரிவித்தது. ஆட்சேபம் தெரிவித்தது சீனா இராணுவம். இந்தியாவின் ஒரு பகுதியாகத் திகழும் ஒரு மாநிலத்தின், அந்த மாநிலத்தின் நிர்வாகத்தின் கீழ் வரும் ஒரு கிராமத்தில் சாலை அமைக்கும் பணிக்குச் சீனா எப்படி ஆட்சேபம் தெரிவிக்க முடியும்? என்று கேள்வி முதன்மையானது.இரண்டாவதாக, தனது ஆட்சேபனையை அண்டை நாடான இந்தியாவிற்கு தனது தூதரின் வாயிலாகச் சொல்லாமல், நேரடியாக ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் நிர்வாகத்திடம் கூறுகிறது. அந்த மாநில நிர்வாகமும் அதனை ஏற்று பணியை நிறுத்துகிறது என்றால்... ?இந்தியாவின் கட்டுப்பாட்டிற்குட்பட்ட அந்த எல்லைக் கிராமத்தில் இந்திய இராணுவமோ அல்லது இந்திய எல்லைக் காவற் படையோ (பார்டர் செக்யூரிடி ஃபோர்ஸ்) இல்லையே? இல்லையென்றால் ஏன் இல்லை? என்று கேள்வியும் முக்கியமானது.
FILEஇதையெல்லாம் விட, அங்கு சாலை போடுவதை நிறுத்தியது தொடர்பாக இதுவரை “அம்மாநில அரசிடமிருந்து எனக்கு எந்தத் தகவலும் வரவில்லை, அறிக்கை கேட்டிருக்கிறேன்” என்று உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் பதிலளித்திருப்பது, எல்லைப் பகுதியின் கட்டுப்பாடு எந்த அரசின் கீழ் உள்ளது என்ற கேள்வியையும் எழுப்புகிறது. எல்லாவற்றிற்கும் மேலாக, இப்பிரச்சனை குறித்து சீன அரசு என்ன கூறியுள்ளது என்று பார்த்தால்... அது நிச்சயம் அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. காரணம், சீன அயலுறவு அமைச்சகத்தின் பேச்சாளர் குவின் காங்க், “எல்லைப் பகுதியில் அமைதியையும் நிலைத்தன்மையையும் இந்தியா காப்பாற்றிட வேண்டும்” என்று கூறியுள்ளார். “தகராறுக்கு உட்பட்ட இந்தியப் பகுதியில்” என்று குறிப்பிட்டே செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசியுள்ள குவின் காங்க், “இரு நாடுகளும் இணைந்து முயற்சித்து எல்லைப் பிரச்சனைக்கு இறுதித் தீர்வு காண வேண்டு்ம்” என்று கூறியுள்ளதாக சீன கம்யூனிஸ்ட் கட்சியின் நாளிதழான ‘பீப்பிள்ஸ் டெய்லி’யின் இணையத் தளம் செய்தி வெளியிட்டுள்ளது.குவின் காங்க் கூறியுள்ளதை ஆழமாகப் பார்க்கும்போது, ஜம்மு-காஷ்மீரின் ஒரு அங்கமான லே பகுதியை ‘தகராறுக்கு உட்பட்ட பகுதி’யாக சீனா கருதுகிறது என்பதும், அப்பகுதியில், அப்பகுதியில் வாழும் மக்களுக்கு வசதியளிக்கும் முகமாகவோ அல்லது பாதுகாப்புக் காரணங்களுக்காகவோ எந்த கட்டுமானப் பணிகளை மேற்கொண்டாலும் அது இரு நாடுகளுக்கு இடையிலான அமைதிக்கும், நிலைத் தன்மைக்கும் எதிரான நடவடிக்கையாகச் சீனா கருதும் என்கிற எச்சரிக்கையும் கொண்டுள்ளது.13 சுற்றுப் பேச்சுவார்த்தை சாதித்தது என்ன? இரு நாடுகளுக்கும் இடையே எல்லையை வரையறை செய்த மெக்மோகன் கோட்டை சீனா ஏற்றுக் கொள்ளாததால் அதனை இரு நாடுகளுக்கும் இடையிலான ‘எல்லைப் பிரச்சனை’ என்று இந்தியா கூறிவருகிறது. ஆனால், ‘பகுதிப் பிரச்சனை’ (Territorial Dispute) என்றுதான் சீனா கூறுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment