Monday, December 28, 2009

2010 2010 இந்துதர்மத்தின் எழுச்சி துவங்கும் வருடம் 2010 2010


கி.பி.2010 ஆங்கிலப்புத்தாண்டு பற்றி ஒரு இந்துமத விளக்கம்

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என இம்மூன்றும் பிறந்தது ஓம் என்ற ஓம்கார மந்திரத்திலிருந்து! என இந்துதர்ம சாஸ்திரங்கள் தெரிவிக்கின்றன.

ஓம் என்பது அ + உ + ம என்பதன் சேர்க்கையாகும்.அகரம் என்பதன் எண் வடிவமே 1.
உகரத்தின் எண் வடிவமே 2.
மகரத்தின் எண் வடிவமே 0.
பிரணவ மந்திரத்தின் மூன்று புள்ளிகள் கூடிய எழுத்து ஃ.

அகரம் உகரம் மகரம் இம்மூன்றின் சேர்க்கையே ஓம்.இதன் எழுத்துக்கள் 1,2,0.இதை “இரண்டில் ஒன்று, இரண்டே ஒன்று, இரண்டும் ஒன்றே” என ஆன்மீக சூட்சுமரீதியாகவும் விரிவாக்கலாம்.
ஓஃங்கார ரீங்கார மூர்த்திக்கான விசேஷமான வழிபாட்டுச்சாதகக் காலமுமாயும் 2010 ஆம் ஆண்டு ஆகிறது.0,1,2 இம்மூன்று எண்களின் வெளிப்பாடாக 2010 பிறக்கிறது.
எனவே,கி.பி.2010 முதல் கி.பி.2012 வரை இருக்கும் காலமானது இந்துதர்மத்தின் உலகளாவிலான எழுச்சிக்காலமாக நாம் உணர இருக்கிறோம்.

இதுவரை நேர்மையாக வாழ்ந்தவர்கள் ரொம்பவே கஷ்டப்பட்டுக்கொண்டிருப்பார்கள்.பிராடுத்தனம் செய்தவர்கள்,செய்துவருபவர்கள் சகல வசதிகளுடன் வாழ்ந்துவருவார்கள்.
2010 2011 2012 க்குள் இந்த நிலை மாறப்போகிறது.
ஆமாம்! நீதி, நேர்மை, தர்மம் என வாழ்ந்து பலவிதமான சோதனைகள், அவமானங்கள்,சிரமப்பட்டவர்கள் இனி ஒஹோ வென வாழத்துவங்குவார்கள்.

பிராடுத்தனம்,பிக்காலித்தனம்,மொள்ளமாறித்தனம்,முடிச்சவிக்கித்தனம் செய்தவர்கள் அனைவரும் நேர்மை என்ற சுனாமியில் காணாமல்போகப்போகிறார்கள்.ஆம்! சித்தர்களின் ஆட்சி நமது பாரதத்தில் துவங்கப்போகிறது.

2010 ஆம் ஆண்டே வருக! நீதி நேர்மையை நிலைநாட்டுக!!!

1 comment:

  1. அற்புதமான பகிர்வு வாழ்த்துகள் நண்பரே !!!

    Word Verificationai இயன்றால் நீக்கி விடுங்கள் அனைவரும் பின்னோட்டம் இட எளிதாக அமையும் .


    என்றும் அன்புடன் ,
    சங்கர் ........................
    http://wwwrasigancom.blogspot.com/

    ReplyDelete