Tuesday, December 27, 2011

தேசபக்திநிறைந்த ஒரு நுகர்வோர் நலன் அமைப்பு(இது ஒரு தன்னார்வ தொண்டு அமைப்பு)




மத்திய அரசின் தவறான பொருளாதார,தாராளமயமாக்கல்,உலகமயமாக்கல்(அமெரிக்கமயமாக்கல்) கொள்கைகளால் விலைவாசி தினமும் உயர்ந்துகொண்டே இருக்கிறது.இதைக் கண்டித்தும்,உலகமயமாக்கலை இந்தியாவில் தடுத்து நிறுத்தக்கோரியும் பேரணி நடத்தி ஜனாதிபதி பிரதீபா பாட்டீலிடம் கோரிக்கை மனு அளித்தது அகில பாரத க்ரஹாக் பஞ்சாயத்து.(ஏ.பி.ஜி.பி)!
இதன் சாதனைகள்:
·       சென்னை எழும்பூர் சேலம் இடையே இரவு ரயிலினை அதிவேக ரயில் என்ற நிலையிலிருந்து(சூப்பர் பாஸ்ட்),விரைவு ரயில்(எக்ஸ்பிரஸ்) என மாற்றக்கோரி, பயணிகளிடம் கையெழுத்து இயக்கம் நடத்தி ரயில்வே நிர்வாகத்திடம் அளித்தது.இதன் மூலம் மேல்வகுப்பு பயணிக்கு ரூ.30/-ம்,இதர பயணிகளுக்கு ரூ.20/-ம் பயணக்கட்டணம் குறைக்கப்பட்டது. சூப்பர் பாஸ்ட் என்ற பெயரில் வேகம் குறைந்த ரயிலுக்கு அதிக கட்டணம் பெற்றது இதன் மூலம் தடுக்கப்பட்டது.மேலும் பயண நேரமும்,புறப்படும் நேரமும் பயணிகளின் வசதிக்கேற்ப மாற்றியமைக்கப்பட்டது.
·       திருச்சி சென்னை இடையே இயக்கப்படும் சோழன் எக்ஸ்பிரஸ் 1.5.11  லிருந்து தாம்பரம் ரயில் நிலையத்தில் நிற்காது எனக்கூறி தாம்பரத்திற்கு முன்பதிவு செய்வதை நிறுத்திவிட்டது.
நுகர்வோரின் கோரிக்கையை ஏற்று திருச்சி,தஞ்சை,தாம்பரம் ரயில் நிலையங்களில் இருந்து பயணிகளிடம் கையெழுத்து பெற்று,தென்னக ரயில்வே பொது மேலாளரிடம் அளித்ததன் விளைவாக,1.5.11 லிருந்து எப்போதும் போல் தாம்பரத்தில் சோழன் எக்ஸ்பிரஸ் நின்று செல்கிறது.இது ஏ.பி.ஜி.பி.யின் இரண்டாவது சாதனை ஆகும்.

·       ஒரே தடத்தில் பலவித தடப்பலகை பேருந்துகள், ஒரே தூரப் பயணத்திற்கு பலவகை பயணக்கட்டணங்களை வசூலித்து வந்தது சென்னை மாநகர போக்குவரத்துக்கழகம்.
 இந்த அவலநிலையை அகற்றுவதற்காக சென்னை ஏ.பி.ஜி.பி. தொண்டர்கள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் மாபெரும் கையெழுத்து இயக்கம் நடத்தி,ஆயிரக்கணக்கான பயணிகளிடம் கையெழுத்துக்களைப் பெற்று,தமிழக அரசின் போக்குவரத்து அமைச்சரிடம் கோரிக்கை மனு அளித்ததன் பேரில் ஏ.பி.ஜி.பி.யின் கோரிக்கை நிறைவேறியது.
அதன் காரணமாக,சாதாரண பேருந்துகளாக ஓடிக்கொண்டிருந்த 698 பேருந்துகளுடன் மேலும் 610 சாதாரண பேருந்துகளை இணைத்து,மொத்தம் 1308 சாதாரணக் கட்டணப்பேருந்துகளை இயக்கத் துவங்கியுள்ளது சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம்.

·       சங்கடத்தையும்,குழப்பத்தையும் ஏற்படுத்திய பலவகை பேருந்து கட்டணம்,திருத்தி அமைக்கப்பட்டு நான்கே நான்கு வகை பேருந்து கட்டணமுறையை நடைமுறைக்குக் கொண்டுவந்தது தமிழக அரசு.இது நுகர்வோர் நலனுக்காக ஏ.பி.ஜி.பி. செயல்பட்டதற்கு கிடைத்த இன்னொரு வெற்றி!!
·        தரநிர்ணயம் செய்யப்படாத தராசுகளும்,எடைக்கற்களும் கொண்டு தி.நகர்,மாம்பலம் காய்கறி மார்க்கெட்டுகளில் நுகர்வோர் ஏமாற்றப்பட்டு வந்தனர்.ஏ.பி.ஜி.பி.யின் தொண்டர் கோதண்டபாணியின் சீரிய முயற்சியால்,முறைகேடாக வியாபாரம் செய்து வந்தவர்களிடம் இருந்து 62 எடைக்கருவிகளையும்,பலப்பல எடைக்கற்களையும் அரசு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தனியொரு நுகர்வோரின் விழிப்புணர்வுக்குக் கிடைத்த வெற்றியாகும்.


நுகர்வோரின் நலனுக்காக துவக்கப்பட்ட தன்னார்வ தொண்டு அமைப்பு அகில பாரத க்ரஹாக் பஞ்சாயத்து ஆகும்.இது 1974 இல் பதிவு செய்யப்பட்டது.
30 மாநிலங்களில்,153 மாவட்டங்களில், 486 மையங்களுடன் கிளைபரப்பியுள்ள ஏ.பி.ஜி.பி.,1986 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்கள் அமலாக்கத்திற்கு மூலகாரணமாக இருந்து வருகிறது.தமிழ்நாட்டிலும் இந்த அமைப்பு செயல்பட்டுவருகிறது.இந்த அமைப்பினை தங்கள் பகுதியில் துவக்கிட விரும்புவோர்,பின்வரும் அலைபேசி எண்களில் தொடர்பு கொள்ளலாம்.
90435 17840, 99527 47525
மின் அஞ்சல்:grahakh.tnadu@gmail.com

நமஸ்தே!!
ஓம்சிவசிவஓம் 

Monday, December 26, 2011

நாகப்பட்டிணத்தில் மூன்று சித்தர்களின் ஜீவசமாதிகள்






டெல்டா மாவட்டங்கள் என்று அழைக்கப்படும் தஞ்சாவூர்,திருவாரூர்,நாகப்பட்டிணம் மாவட்டத்து ஆன்மீகவாதிகளுக்கு ஒரே ஊரில் 3 சித்தர்கள் இருந்து அருள்பாலித்து வருவது தெரிந்த விஷயமே! இனி இந்த விஷயம் உலகம் முழுவதும் பரவவே இந்தப் பதிவு.
நாகப்பட்டிணம் மாநகரில் நீலாய தாட்சிணியம்மன் கோவிலுக்குள்ளே அழுகண்ணி சித்தரின் ஜீவசமாதி இருக்கிறது.


நாகப்பட்டிணம் சுனாமிப்பாலத்தைக் கடந்து சுமார் 3 கி.மீ.தூரத்தில் வடக்குப் பொய்கை நல்லூர் என்னும் கிராமம் இருக்கிறது.இங்கே கோரக்கரின் ஜீவசமாதி அமைந்திருக்கிறது.நாகப்பட்டிணத்து அன்பர்களின் முயற்சியால் அருமையான பராமரிப்பும்,தினமும் மதியம் 12 மணிக்கு அன்னதானமும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.விருப்பமுள்ள பக்தர்கள்,சித்தர்களைத் தேடி ஆன்மீகப்பயணம் செல்பவர்களுக்கு கோரக்கர் சூட்சுமமாக வழிகாட்டுவார்;அன்னதானத்தில் பங்கேற்கவிரும்புவோர் இந்த கோரக்கரின் ஜீவசமாதியைத் தொடர்புகொள்ளலாம்.

பெரும்பாலான சித்தர்களின் ஜீவசமாதிகள் சிவாலயங்களில் இருக்கும்போது கோரக்கர் மட்டும் இங்கே இருந்து அருள என்ன காரணம்? சில வருடங்களில் இந்த தெய்வீக ரகசியம் வெளிப்பட்டுவிடும்.ஏனெனில்,சித்தர்கள் இந்தியாவை மையமாகக் கொண்டு 72,000 ஆண்டுகள் பூமியை ஆளப்போகிறார்கள்.எனவே,சித்த சக்திகள் வெளிப்படும் காலம் கனிந்துவிட்டது.

அங்கிருந்து சுமார் 10 கி.மீ.தூரம் சென்றால் எட்டுக்குடி என்னும் கிராமத்தை அடையலாம்.அங்கே வான்மீகி சித்தரின் ஜீவ சமாதி அமைந்திருக்கிறது.

ஒவ்வொரு அமாவாசையன்று மதியம் 11.30 முதல் 12.30 வரையிலான நேரத்தை அபிஜித் நேரம் என்பர்;இந்த நேரத்தில் இந்த ஜீவசமாதிகளில் ஏதாவது ஒரு இடத்திற்கு விரதத்தோடு செல்ல வேண்டும்;அவ்வாறு சென்று,மஞ்சள் துண்டினை இந்த ஜீவசமாதிகளின் முன்பாக விரித்து,நெற்றியில் விபூதி பூசி,இரு கைகளிலும் ருத்ராட்சங்களை வைத்து,ஓம்சிவசிவஓம் ஜபித்து வருவோம்;
.


ஒன்று:ஒவ்வொரு அமாவாசை அன்றும் காலை 11.30 முதல் ஒரு மணி நேரம் வீதம் 12 அமாவாசைகளுக்கு இந்த ஜீவசமாதிகளில் ஓம்சிவசிவஓம் ஜபிக்கவேண்டும்.

இரண்டு:ஏதாவது ஒரு அமாவாசையன்று காலை 11.30 முதல் ஒரு மணி நேரம் வரை இந்த ஜீவசமாதிகளில் ஓம்சிவசிவஓம் ஜபித்துவிட்டு,அன்று முதல் தினமும் ஒரு மணி நேரம் ஓம்சிவசிவஓம் வீட்டில்/குடியிருக்கும் இடத்தில் ஜபித்துவர வேண்டும்.இவ்வாறு ஒரு வருடம் வரை ஓம்சிவசிவஓம் ஜபித்து வந்தால்,எப்பேர்ப்பட்ட சிரமங்கள்,கஷ்டங்கள்,கர்மவினைகளும் தீர்ந்துவிடும்;செக் செய்து பார்ப்போமா?





ஓம்சிவசிவஓம்


Saturday, December 24, 2011

உடல் எடை குறைப்பு பற்றிய ரகசியங்கள்

FOR GOOD READING, CLICK ON THIS IMAGE & AGAIN CLICK ONCE
உணவு மூலம் எடுத்துகொள்ளப்படும் கலோரி தான் நம் உடல் எடைக்கு காரணம்.தினமும் ஆயிரம் முதல் ஆயிரத்தி ஐநூறு கலோரீஸ் வரை எடுத்துக்கொண்டால் பதினைந்து கிலோ எடையை இரண்டு முதல் மூன்று மாதங்களில்

குறைத்துகொள்ளமுடியும். எவ்வளவுதான் உடற்பயிற்சி செய்தாலும் கலோரி கட்டுப்பாடு இல்லாமல் உடல் எடை குறைப்பு சாத்தியம் இல்லை.

Friday, December 23, 2011

எங்கும் அழிவுகளை ஏற்படுத்தும் பொறாமை உணர்ச்சி



உலகத்தில் எந்த இரண்டு மனிதருக்கும் ஒரே மாதிரியான பதவி,புகழ்,அந்தஸ்து,கவுரவம்,சொத்துக்கள்,மனைவி,குணம் என்று எதுவுமே அமைவதில்லை;இருந்தபோதிலும்,இவன்/இவள் நல்லாயிருக்காளே! இவளை/னைப் போல நாம் நல்லா இல்லையே? என்ற எண்ணமே பொறாமை உணர்ச்சிக்கு ஆரம்ப ஆதாரம் ஆகும்.
ஜோதிடப்படி, ஒருவரின்  பிறந்த ஜாதகத்தில் கடக ராசியில் செவ்வாய் இருந்தால் அவரின் இயல்பு குணமாக பொறாமை உணர்ச்சி இருக்கத் தான் செய்யும்.30 வயதுக்கு மேல்,இந்த உணர்ச்சியை திறமையாக மறைக்கப் பழகிக்கொள்வார்.ஐ.டி.துறையில் இந்த பொறாமை சர்வ சாதாரணமாக உணரலாம். ஒருவரின் திறமைக்குரிய அங்கீகாரத்தைப்  பெற முடியாமல் தடுப்பதையே முழு நேரவேலையாக இந்த ‘பொறாமை’ செய்ய வைக்கும்.தன்னைத் தவிர எல்லோருமே மிகவும் வசதியாகவும்,சகல சவுபாக்கியத்தோடும்,அந்தஸ்தோடும் இருப்பதாக எப்போதும் கற்பனை செய்து கொண்டே இருப்பர்.பல இரவுகள் இவருக்கு தூக்கமே இராது.


இதைத் தவிர,நமது பெற்றோர்களின் சுபாவமாக இந்த பொறாமை இருந்து,நாம் சிந்திக்கும் திறனில்லாமலிருந்தாலும்,நமக்கும் இதே பொறாமை வந்துவிடும்.இப்படி வரும்போது,நமது ஜாதகத்தில் உள்ள ராசிக்கட்டத்தில் கடகத்தில் செவ்வாய் இருக்க வேண்டிய அவசியமில்லை;


எனது அனுபவப்படி,தமிழ்நாட்டில் இருக்கும் பெரும்பாலான கிராமங்களில் குடும்ப சுபாவமாக இந்த பொறாமை இருக்கத்தான் செய்கிறது.அதே சமயம்,தகுதி இருக்கிறதோ,இல்லையோ தகுதிக்கு மீறிய புகழுக்கும்,பெருமைக்கும் ஆசைப்படுவதும்,அதற்காக என்ன தில்லாலங்கடி வேலை செய்வதை கிராமத்தினர் செய்வதையே வழக்கமாக்கிக் கொண்டிருக்கின்றனர்.(இதிலும் விதிவிலக்கு உண்டு.கோபப்படாதீர்கள் கிராமத்து வாசகர்களே!)


இதற்கு பலவிதமான பரிகாரங்கள் இருக்கின்றன.அவற்றில் ஒன்று முருகக்கடவுளுக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களுக்கு அன்னதானம்,பானக தானம்(மோர் அல்லது குடிநீர் பாட்டில்) ஒவ்வொரு ஆண்டும் செய்து வர வேண்டும்.இவ்வாறு 12 ஆண்டுகள் செய்து வர இந்த பொறாமை உணர்ச்சி நம்மை விட்டு அகன்றுவிடும்.
ஜோதிட மருத்துவப்படி,ஒருவரது பிறந்த ஜாதகத்தில் கடகத்தில் செவ்வாய் இருக்கப்பிறந்திருந்தால்,அவரது ரத்தத்தில் சிகப்பணுக்களின் உயிர்த்தன்மை சராசரியை விடவும்,குறைவாகவே இருக்கும்.30 வயதுகளைத் தாண்டும்போது,இவர்களுக்கு ரத்தத்தில் நோய் உருவாகும்.இதற்கும் இதே பரிகாரம்தான்.

இதைத் தவிர, 18 செவ்வாய்க்கிழமைகளுக்கு திரு அண்ணாமலைக்குச் சென்று காலை 6  மணிக்குள் விரதமிருந்து(எதுவும் சாப்பிடாமல்! அவ்வப்போது தண்ணீர் /பால் அருந்தலாம்) கிரிவலம் புறப்பட வேண்டும்.அஷ்ட லிங்கங்களின் வாசலிலும் அன்னதானம் ஒன்பது பேர்களுக்குக் குறையாமல் செய்ய வேண்டும்; மாலை 5 மணிக்குள் கிரிவலத்தை முடிக்க வேண்டும்.அப்படி முடித்ததும்,கிழக்குக் கோபுர வாசலிலும் அன்னதானம் செய்ய வேண்டும்.

அதன் பிறகு,அண்ணாமலையார் கோவிலுக்குள் இருக்கும் முருகக்கடவுள் சன்னதியில் தனது பெயருக்கு மட்டும் அர்ச்சனை செய்துவிட்டு,அங்கேயே தான் கொண்டு வந்த உணவை சாப்பிட வேண்டும்.முடியாதவர்கள்,முருகக்கடவுள் சன்னதியில் பிரசாதத்தை வாங்கிவிட்டு அறைக்குச் சென்று சாப்பிட்டு விரதத்தை முடிக்க வேண்டும்.இந்த 18 செவ்வாய்க்கிழமைகளில் ஏதாவது ஒரு செவ்வாய்க்கிழமையன்று மட்டுமே இவ்வாறு பிரசாதம் கிடைக்கும் எதார்த்தமான/தற்செயலான பாக்கியம் கிடைக்கும்.

உலக அரசியலை எடுத்துக் கொண்டால்,இனி உலக அரசியலும்,பொருளாதாரமும் ஐரோப்பாவையும்,அமெரிக்காவையும் சுற்றிச் சுழலாது;இந்தியாவையும்,நம்ம பங்காளி சீனாவையுமே சுற்றிச் சுழலப்போகிறது.அப்படி நடக்கும் முன்பாகவே, சீனாவானது இந்தியாவை ஒழித்துக்கட்ட துடிக்கிறது.தான் மட்டுமே உலகின் ஒரே வல்லரசாக பரிணமிக்க வேண்டும் என்று தவிக்கிறது.

யார் வம்பு தும்புக்கும் போகாத அப்பிராணி இந்தியாவை வம்புக்கு இழுக்கிறது.இதற்கு காரணம் என்ன? சீனாவின் பொறாமையே!எவ்வளவு அடிச்சாலும் தாங்குறாண்டா,இவன் ரொம்ப நல்லவன் என்ற வசனம் உலக அரசியலில் சிறிதும் எடுபடாது என்பதை எப்போதுதான் நமது வெளியுறவுத்துறைக்கும்,பாதுகாப்பு கொள்கை வடிவமைப்புஅதிகாரிகளுக்கும் புரியப்போகிறதோ?
யார் மனதில் பலவீனமான எண்ணங்கள் தோன்றுமோ,அவரே பொறாமைப்படுவார் என்கிறது உளவியல்.

பொறாமைப்படுபவர்களிடம் நமது பெருமைகளை,சாதனைகளை ஒருபோதும் சொல்லக்கூடாது;சொன்னால்,கூட இருந்தே நமது வளர்ச்சியை மேலும் வளரவிடாமல் தடுத்துவிடுவர்;நமது கஷ்டங்களையும் சொல்லக்கூடாது;சொன்னால்,அதை நம்பமாட்டார்கள்;அல்லது நமது எளிமையை/சாதனையை மேலும் இழிவுபடுத்தப் பார்ப்பார்கள்.

சில சமயம் இம்மாதிரியான பொறாமைபிடித்தவர்களிடம் லூசு,அரைக்கிறுக்கு என்ற பெயரை நாம் பெற்றால் மட்டுமே நமது வளர்ச்சி ஒரே சீராக இருக்கும்.இவர்களை திருத்த முயன்று நாமும் பொறாமை பிடித்தவர்களாகிவிடுவோம்.எச்சரிக்கை!


பெரும்பாலும் நெருங்கிய நண்பர்கள்/நண்பிகள்; அடிக்கடி பழகும் உறவினர்களே நம்மிடம் பொறாமைப்படுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்ளுங்கள்.


எப்போது நீங்கள் எவராலும் எட்டமுடியாத அளவுக்கு செல்வ வளம்,செல்வாக்கு,அந்தஸ்து போன்றவைகளை பெறுகிறீர்களோ,அப்போது உங்களின் அனைத்து சாதனைகளையும் எல்லோரிடமும்,எப்போதும் பகிர்ந்து கொள்ளலாம்.ஏனெனில்,அப்போது உங்களை எவராலும் நெருங்க முடியாது.

மேலும் விபரமறிய: நீங்களும் முதல்வராகலாம் என்னும் புத்தகத்தை வாங்கிப் படியுங்கள்;வெளியீடு:நக்கீரன் பப்ளிகேஷன்ஸ்.விலை ரூ.225/= (இந்த புத்தகம் வெளிவரும்போது ரூ.90/-மட்டுமே! பிறகு ரூ.190/-ஆனது.தற்போது இதன் விலை ரூ.225/-எல்லாவிதமான தந்திரங்களையும் புட்டு புட்டு வைக்கிறது.உங்கள் துறையில் நீங்கள் முதலிடம் பிடிக்க விரும்பினால்,இந்த புத்தகத்தை நூறு தடவை வாசிக்கவும்.இதைப் பின்பற்றுபவர்கள்,பிறரின் நரித்தனங்களிலிருந்தும்,பொறாமையிலிருந்தும் தப்பித்துவிடமுடியும்.இன்றைய வேகமான வாழ்க்கைக்கு இதுவே நமக்கு ஒரு வாழ்க்கை கீதை!!!)

ஓம்சிவசிவஓம்

வேண்டியதை தரும் காவல் தெய்வம்



வேண்டியதை உள்ளன்புடன் கேட்டால் தரும் காவல் தெய்வம் இது.சனி பாதிப்பு உள்ளவர்கள் , குடும்ப பிரச்னை உள்ளவர்கள் , வாழ்கையில் விரக்தி உடையவர்கள் ஆகியோர் மனம் உருகி வேண்டினால் கேட்டதை தரும் உக்கிர தெய்வம்.

குஞ்சு மாடசாமி -- இதன் பெயர்.

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் கோபுரத்திலிருந்து பழைய வெங்கடேஸ்வரா தியேட்டர் (ஸ்ரீவில்லிபுத்தூர் தேர் அருகே) போகும் பாதையில் உள்ளது. நேரம் உள்ளவர்கள் நேரில் தரிசிக்கலாம். இயலாதவர்கள் இப்படியே உள்ளன்புடன் கும்பிட்டு வேண்டிக்கொள்ளலாம்.

Wednesday, December 21, 2011

விஞ்ஞான அர்த்தமுள்ள இந்துமதம்: செயற்கைக்கோள்களை ஸ்தம்பிக்க வைக்கும் சனிபகவான்:ஆன்மீகக்கடலின் ஆரம்ப கால பதிவு



சுமார் பத்தாண்டுக்கு முன்பு,அமெரிக்கா அனுப்பிய சில உளவு செயற்கைக் கோள்கள் பூமியைச் சுற்றி வரும்போது,அவை பூமியின் ஒரு குறிப்பிட்ட இடத்தைக் கடக்கும்போது மட்டும் 3 விநாடிகள் வரை ஸ்தம்பித்து நின்றுவிடுகின்றன.(இயற்பியல் விதிப்படி, வட்டமாகவோ,நீள் வட்டமாகவோ சுற்றும் ஒரு பொருள் திடீரென ஒருபோதும் நிற்காது.அப்படி நின்றால்,அது வெடித்துவிடும்). 3 விநாடிகளுக்குப் பிறகு ,அவை வழக்கம் போல பூமியை சுற்றி வருகின்றன.
இந்த சம்பவத்தினை அறிந்த  (உலகின் பல நாடுகளைப் பகைத்துக் கொண்ட) அமெரிக்காவுக்கு பயம் வந்துவிட்டது;யாராவது நம்மை விட லேட்டஸ்ட் டெக்னாலஜி கண்டுபிடித்துவிட்டார்களோ?  என்ற எண்ணத்தில்,இது தொடர்பாக பல்வேறு ஆராய்ச்சிகளை மேற்கொண்டது.தனி செயற்கைக் கோளையே ஏவி,ஆராய்ச்சி செய்தது.
அமெரிக்காவின் உளவு செயற்கைக்கோள்கள்,பூமியின் எந்த இடத்தைக் கடக்கும்போது இவ்வாறு 3 விநாடிகள் ஸ்தம்பிக்கிறது என்பதை முதலில் கண்டுபிடித்தது;அந்த இடம் பூமியில் அறிவாற்றல் மிகுந்த சமுதாயம் வாழும் இந்தியாவில்,உலகின் மூத்த இனமான தமிழினம் வாழும் தமிழ்நாட்டின் ஒரு பகுதியான (அட பாண்டிச்சேரியின் தாய் மொழி தமிழ்தானே!)திருநள்ளாறு என்பதை அறிந்து ஆச்சரியப்பட்டதோடு,மேலும் சந்தேகப்பட்டது.ஒருவேளை இந்தியா ஏதேனும் ரகசிய ஆராய்ச்சியின் மூலமாக விண்வெளியில் தன்னை மிஞ்சிவிடுமோ? என்றெல்லாம் பயந்து,மேலும் ஆய்வுகளை மேற்கொண்டது.
அந்த ஆய்வுகளின் விளைவாக,சனிக்கிரகத்திலிருந்து விநாடி தோறும் திருநள்ளாறு அருள்மிகு ஸ்ரீதர்ப்பணேஸ்வரர் கோவிலில் இருக்கும் சனிபகவான் சன்னிதியில் இருக்கும் சனிபகவான் சிலையின் மீது கண்ணுக்குத் தெரியாத கருநீலக்கதிர்கள் பாய்ந்து கொண்டே இருக்கின்றன.ஒவ்வொரு சனிப்பெயர்ச்சியின் போது,இந்த கருநீலக்கதிர்களின் அடர்த்தி  பல மடங்கு அதிகரிக்கிறது.சனிப்பெயர்ச்சியை மையமாகக் கொண்ட 45 நாட்களுக்கு இந்த அடர்த்தி அதிகமாக இருக்கிறது என்பதையும் கண்டறிந்தது.இந்த ஆய்வின் முடிவில்,அமெரிக்காவின் விண்வெளி அமைப்பான நாசா விஞ்ஞானிகள்,பல கருவிகளைக் கொண்டு திருநள்ளாறுக்கு நேரடியாக வருகை தந்து இந்த ஆச்சரியமான அதிசயத்தை உறுதிபடுத்திக்கொண்டனர்.அக்காலத்தில் ஜீனியர் விகடனில் தொடர்ந்து நான்கு இதழ்களில் இது தொடர்பான கட்டுரைகள் வெளிவந்தன.
நமது ஆன்மீகக்கடல் வலைப்பூவை வாசித்து,யாரோ தமிழ் வார இதழ்களுக்குச் சொல்ல,அவற்றில் இந்த பதிவு வெளிவந்திருக்கிறது.
இப்போது சொல்லுங்கள்: யார் அதிமேதாவிகள் இந்துக்களாகிய நமது முன்னோர்களா? இல்லை வெறும் மிரட்டலை ஆயுதமாகக் கொண்டு உலகை ஆட்டிப்படைக்கும் அமெரிக்கா முதலான வல்லரசுகளா?
ஓம்சிவசிவஓம்

கதைதான் இந்துவின் கண்ணைத் துடைக்க!



ஐரோப்பாவில் கோடிக்கணக்கில் பிணங்கள் விழுந்த ‘உலக மகா யுத்தங்களும்’ , முஸ்லீம் & கிறிஸ்தவ சிலுவைப் போர்களும் ஜிஹாத்களும்,குறிப்பாக கிறிஸ்தவ ஹிட்லர் யூதர்கள் மீது நடத்திய இன அழிவுக் கொடூரமும்,சீன ரஷ்ய கம்யூனிஸ கசாப்புகளும் மனித குலத்திற்கு ஒரு வேலை வைத்தன.(முடிந்தவரைக்கும்) பிணப்பட்டியல் தயாரிப்பதுதான் அந்த வேலை!

பாரதத்தில் இந்த வேலை நடப்பதேயில்லை என்று பிரஞ்சுப்பத்திரிகையாளரும்,இந்துத்துவ ஆதரவாளருமான பிரான்ஷ்வா கொத்தியே போன்றவர்கள் ஆதங்கப்படலாம்.இந்தியாவின் ஆங்கில எழுத்தாளர் குஷ்வந்த்சிங் அதுபோல ஏதோ ஒன்றை செய்து புண்ணியம் கட்டிக்கொண்டார்; Train to Pakistan என்ற ஆங்கில புனைக் கதை வாயிலாக நிறைய இந்துக்களின் பிணங்கள் பாகிஸ்தானிலிருந்து வந்ததையும் சுவடு தெரியாமல் அவற்றை மண்ணில் புதைத்தும்,சட்லஜ் நதி வெள்ளத்தில் தள்ளியும் அரசியல் தலைமை சுதந்திர பாரத இந்துக்களை உண்மை தெரியாத அசடுகள் ஆக்கும் விபரீத முயற்சியில் இறங்கியதையும் வெகு சன்னமான கதைப்போர்வை போர்த்தி வழங்கியிருக்கிறார் குஷ்வந்த்சிங்!

அகண்ட இந்து ராஷ்டிரம் சிதைந்தபிறகும், பல பத்தாயிரம் மக்கள் ஜிகாதிகளின் குண்டு வெடிப்புகளால்,காஷ்மீரக் ‘களையெடுப்பால்’ பிணமான பிறகு அவரது அந்த ரயில்  கதையை இன்று தமிழாக்கி வெளியிட்டுள்ளது கிழக்கு பதிப்பகம்.
எனவே,நூலின் பின் அட்டை விளம்பர வாசகம்,
“எழுதப்பட்டு 60 ஆண்டுகள் கழித்தும் இன்னும் வலுவாக நம்முன் நிற்கிறது இந்தக் கதை”
என்று சுட்டிக்காட்டுவது வெகு பொருத்தம்.
என்ன நோக்கத்துக்காக இந்தியாவின் காங்கிரஸ்இஸ்லாமியர்களை தாஜா செய்கிறது என்பதற்கான காரணங்களை இந்த நூலை வாசித்ததும் புரிந்து கொள்ளலாம்.
நூல்:பாகிஸ்தான் போகும் ரயில்
நூலாக்கம்:குஷ்வந்த் சிங்
தமிழாக்கம்:ராமன் ராஜா
வெளியிட்டோர்:கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்:272
விலை:ரூ.200/-