Thursday, February 18, 2010

ராகு காலம் எமகண்டம் என்றால் என்ன?

ராகு காலம், எமகண்டம்:

ராகு காலத்தில் நல்ல காரியங்கள் தொடங்கக்கூடாது. எமகண்டத்தில் கெட்டகாரியங்கள் செய்யக்கூடாது. என்பது ஜோதிட சாஸ்திர விதி!

ராகு காலத்தில் இறை வழிபாடு, தங்க நகை வாங்குதல்,பட்டு ஆடைகள் வாங்குதல்,திருமணம் அல்லது வீடு வாங்கிட பேச்சை ஆரம்பித்தல், சொத்துக்கள் வாங்குதல்,புதிய நிறுவனம் ஆரம்பித்தல் கூடாது.இதை மீறிச்செய்தால் அந்த காரியங்கள் வெற்றி பெறாது.
ஏனெனில்,ஜோதிடப்படி நவக்கிரகங்களுக்கு தலா ஒரு நாள் ஒதுக்கப்பட்டுள்ளன.அவையே ஞாயிறு,திங்கள்,செவ்வாய்,புதன்,வியாழன்,வெள்ளி,சனி.ஆனால்,ராகு கேதுக்களுக்கு என தனிக்கிழமைகள் ஒதுக்கப்படவில்லை.

இவற்றில் ஒரு நாளில் ஒன்றரை மணி நேரத்தை ராகு பகவான் ஆளுகிறார்.
மேலே சொன்னவை எல்லா மனிதர்களுக்கும் பொருந்தும்.ஒரே ஒரு விதிவிலக்கு என்ன வெனில்,ராகு திசை நடக்கும் ஜாதகர்களுக்கும்,திருவாதிரை,சுவாதி, சதயம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் மேலே சொன்ன விதிகள் பொருந்தாது.
இவர்கள் ராகு காலத்தில் சுப காரியங்கள் செய்யலாம்.காதலிக்கத் தொடங்க(!?!), திருமணப்பேச்சு எடுக்க, சொத்துக்கள் வாங்கிட, புதிய நிறுவனங்கள் வாங்கிட,பங்குச் சந்தையில் முதலீடு செய்ய,மியூச்சுவல் பண்டில் முதலீடு செய்ய, பட்டு ஆடைகள்,செல்போன்,வாகனங்கள் என எதையும் வாங்கிட மிக நன்று.

எமகண்டத்தில் கெட்டது செய்யக்கூடாது.அதென்ன கெட்டது. . . நமக்குப்பிடிக்காத நமது சக ஊழியரைப்பற்றி இன்னொரு ஊழியரிடம் போட்டுக்கொடுப்பது,மேலதிகாரியிடம் போட்டுக்கொடுப்பது,
அப்புறம் இங்கு அச்சில் ஏற்ற முடியாத சகல கெட்ட காரியங்களையும் செய்ய ஆரம்பிக்கக்கூடாது.

யார் எப்படிச் சாப்பிட வேண்டும்?இந்து சாஸ்திர விதிமுறை


நாம் எந்த திசையை நோக்கி அமர்ந்து சாப்பிட வேண்டும்?

கிழக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் கல்வி வளரும்.
மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் செல்வம் பெருகும்.
வடக்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் நோய் வரும்;வந்து நோய் வளர்ந்துகொண்டே இருக்கும்.
தெற்கு நோக்கி அமர்ந்து சாப்பிட்டால் அழியாதப்புகழ் நமக்கு ஏற்படும்.

இவையெல்லாம் நமது வீட்டில் சாப்பிடும்போது பின்பற்ற வேண்டிய விதிமுறைகள்.
நண்பர்,உறவினர் வீடுகளில் மேற்கு நோக்கி அமர்ந்து சாப்பிடக்கூடாது.அப்படிச் சாப்பிட்டால் மறு நாளிலிருந்தே அவருக்கும் நமக்கும் பகையாகிவிடும்.

ஹோட்டல்கள்,மோட்டல்கள்,மெஸ்களில் சாப்பிட இந்த விதிகள் பொருந்தாது.வடக்கு நோக்கிச் சாப்பிடாமல் இருந்தால் போதுமானது.

கடக மற்றும் மகர ராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட ஆறுதல்


கடகராசிக்காரர்களுக்கு ஒரு ஜோதிட ஆறுதல்

தன்னுடைய தெளிவான மனநிலையை நம்பியே தனது வாழ்க்கையை சிறப்பாக அமைத்துக்கொள்ளும் கடக ராசிக்காரர்களே!

சென்ற 26.6.2009 ஆம் தேதியுடன் தங்களுக்கு ஏழரைச்சனி நீங்கிவிட்டது.ஆனாலும்,ஒரு நிலையான வேலை அல்லது வருமானம் இல்லாமல் அல்லாடிக்கொண்டிருப்பீர்கள்.இந்நிலையானது 2010 ஆம் ஆண்டு தீபாவளி வரை தொடரும்.இதுவரை ஏதாவது ஒரு வழிமுறையில் தங்களுக்கு வருமானம் வந்துகொண்டே இருக்கும்.ஆனால்,உங்களது வாழ்க்கைப்பயணத்தை சுலபமாகக் கொண்டு செலுத்தக்கூடியதாக இராது.

2010 ஆம் ஆண்டு தீபாவளிக்குப்பிறகு,தங்களது கல்வித்தகுதி,வேலைத்திறன்,திறமை, சமார்த்தியம், தனி சாமர்த்தியம் இவற்றைப்பொறுத்து மிகச்சிறந்த வேலை அல்லது தொழில் அமைந்துவிடும்.அப்படி அமைந்த பின்னர்,தாங்களே நினைத்தாலும் அந்த வேலை அல்லது தொழிலை விட்டு விலக முடியாது.

இதே நிலைதான்,அஷ்டமச்சனி நிறைவடைந்த மகர ராசிக்காரர்களுக்கும்!!!

இலங்கையில் அழியும் சைவம்:அடைக்கல திட்டம்



அழியும் சைவம்... அடைக்கல திட்டம்!



இலங்கையில் போர் முடிந்தாலும், ஈழத் தமிழனின் சோகம் தீரவில்லை. தமிழர்களின் கோயில்கள் எல்லாம் தரை யோடு தரையாக சிதிலமாகிக் கிடக்கின்றன. இந்நிலையில், அவர்களைப் பலமுனைகளிலும் மதமாற்றம் செய்யும் முயற்சிகளும் அதிவேகம் பிடிக்க... 'அதைத் தடுத்து நிறுத்த, இலங்கையில் தமிழர்கள் வசிக்கும் பகுதிகளில் திருமுறை வேள்விகளை நடத்தத் திட்டமிட்டுள்ளனர் ஆன்மிகவாதிகள் சிலர்..!' என்றொரு செய்தி வந்தது. இது என்ன புது சோதனை என்று விசாரித்தோம்.







தமிழ்நாட்டின் காஞ்சி மடத்தோடு சேர்ந்து அகில இலங்கை இந்து மாமன்றம், இந்திய இலங்கை தமிழர் கூட்டமைப்பு ஆகியவைதான் இந்தப் பணியில் குதித்திருக்கின்றன.



முதலில் அகில இலங்கை இந்து மாமன்ற உதவிச் செயலாளர் கார்த்திகேயனிடம்



பேசினோம். ''உக்கிரமான போர் முடிந்து, மக்கள் மீள் குடியேறி வரும் சூழலிலும் ஏகக் குழப்பங்கள்! இங்குள்ள இந்துக்கள் பெரும்பாலும் சைவர்களே. அவர்களுக்கு நம்பிக்கை ஊட்ட இலங்கையில் எதுவுமே இல்லை. 'திக்கற்றவர்க்கு தெய்வமே துணை' என்பார்கள். ஆனால், எல்லா கோயில் களுமே இடிக்கப்பட்டு விட்டன. அதனால், சைவர்களான தமிழர்கள் எங்கு போவதென்று தெரியாமல் குழப்பமுற்று இருக்கின்றனர். அதனால் மாற்று மதத்தினர், எம் மக்களை மதம் மாற்றத் துடிக்கின்றனர். எம் மக்கள் அவர் களின் சூழ்ச்சிக்கு முழுதும் இரையாகிவிடுவார்களோ என்று அச்சமாயிருக்கிறது. அதற்காக என்ன செய்யலாம் என்று யோசித்தபோதுதான் 'திருமுறை வேள்விகள் செயல் திட்டம்' என்பதை வடிவமைத்தோம்!'' என்றார்.



இந்திய-இலங்கை தமிழர் கூட்டமைப்பின் தலைவரும், 'காந் தளகம்' பதிப்பகத்தின் ஒருங்கிணைப்பாளருமான சச்சிதானந்தம் நம்மிடம், ''இலங்கைத் தமிழர் பூமியில் இப்போது, தமிழும் இல்லை; அவர்கள் மதமான சைவமும் இல்லை. எங்களுக்கு சமயம் என்றால் சைவம்தான், கோயில் என்றால் சிதம்பரம்தான். பல நூறு ஆண்டுகளாக ஈழமும், தமிழகமும்தான் தமிழ் வளர்த்த இடங்கள், சைவத்தைப் போற்றிய இடங்கள். அப்படிதொல்பெருமை கொண்ட எம் ஈழத்தில் இன்று சைவத்தை அழித்தொழிக்கும் வேலைகள் முழுமூச்சில் நடந்துவருகின்றன. மீள்குடியமரும் தமிழர் பகுதிகளில் நுழையும் என்.ஜி.ஓ-க்கள், மதமாற்ற வேலைகளில் மும்முரமாக இறங்கியுள்ளனர். 'உங்கள் மதம் உங்களைக் காப்பாற்றவில்லையே, உங்கள் தாய்நாடு உங்களைக் காப்பாற்றவில்லையே... இந்தோனேஷியாவில் கிழக்கு தீமோர் மக்கள் கிறிஸ்துவத்தை மேற்கொண்டதால்தான் அவர்களைப் பிரித்து, தனி நாடாக்க முடிந்தது. இப்பவும்கூட உங்கள் தாய்நாடு போராட்டத்தை கிறிஸ்துவ நாடுகள் மட்டும்தானே ஆதரித்தது?' என்றெல்லாம் சொல்லியே கிறிஸ்துவ மதத்தின்பால் ஈர்க்கிறார்கள்.



இஸ்லாமியர்களும் அவ்வாறே செய லாற்றுகிறார்கள். மட்டக்களப்பில் தமிழர் பெருவாரியாக வசித்த பகுதி ஒன்றின் பெயர், இப்போது 'சதாம் உசைன் நகர்.' இன்னொரு இடம், 'அயத்துல்லா நகர்.' வேறொரு இடத்தில் சவூதி மன்னர் பைசலின் பெயரில் நகர் உருவாகிவிட்டது. அங்கிருந்த கோயில்கள், பள்ளிவாசல்களாக மாறிக் கொண்டுள்ளன!



புத்த மதத்தினரும் தங்கள் வேலையைக் காட்டு கிறார்கள். அங்கு பாதுகாப்புக்கு இருக்கும் படைவீரர்கள் தங்கள் வழிபாட்டுக்கு என்று சொல்லி, ஒரு புத்தர் சிலையை வைத்து, 'இது புத்தர் நடமாடிய நாடு, அவரது பொருள்கள் புழங்கிய இடம்' என்றெல்லாம் சொல்லி, மனதை மாற்றுகிறார்கள். அநாதைகளாக, ஆதரவற்று நிற்கும் எம் தமிழர்களை இப்படி மூன்று மதத்தினரும் முக்கோண நெருக்கடி கொடுத்து, முற்றிலுமாக இந்து மதத்தில் இருந்தும் சைவத்தில் இருந்தும் வெளியேற்றுகின்றனர். எங்களின் வறுமையைப் பயன்படுத்தி, நல்ல உணவும், கை நிறையப் பணமும் கொடுத்து முகம் நிறைய கள்ளச் சிரிப்புடன் வரும் மாற்று மதத்தினரிடம், எம் மக்கள் மந்தைகளாக சாய்ந்து கொண்டிருக்கிறார்கள்! இதை தடுக்கும் முதல் கடமையும் பொறுப்பும் அதே சைவமும் தமிழும் தழைத்தோங்கும் தமிழகத்துக்குத்தானே உண்டு?'' என்று ஆவேசமாகக் கேட்டார் சச்சிதானந்தம்.



அவர் இதுகுறித்து, இங்குள்ள ஆன்மிகப் பெரியவர்களிடம் பல நாட்கள் கலந்து பேசி, திட்ட மிட்டதில்... 'இலங்கையில் திருமுறை வேள்விகளும், சொற்பொழிவுகளும் நடத்தி, தமிழக சைவர்களும் தங்களோடு இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையை ஊட்டுவது..!' என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.



இதைத் தொடர்ந்து, இலங்கையில் அறுவடைக்காலம் முடியும் சித்திரையில் வேள்விகள் நடக்குமாம். இதற்காக கோவையை சேர்ந்த திருமுறை ஓதுவாரான கங்காதர் ஓதுவார் தலைமையில் 15 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. அதில் துறவிகள், ஓதுவார்கள், தொண்டர்கள் ஆகியோர் தலா ஐந்து பேர்! இவர்கள் இலங்கைக்குச் சென்று தமிழர்கள் வசிக்கும் அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை, வவுனியா, புத்தகளம், மன்னார், கிளிநொச்சி, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், மாத்தளை, கேகாலை, கண்டி, நுவரெலியா, பதுளை ஆகிய பகுதிகள் உள்ளடங்கிய 14 மாவட்டங்களில் திருமுறை வேள்விகளை நடத்த உள்ளார்கள்.



மொத்தம் 150 இடங்களைத் தேர்ந்தெடுத்து, ஒவ்வொரு இடத்திலும் ஒருநாள் தங்கி, காலையில் திருமுறை வேள்வி களையும், மாலையில் சைவப் பெருமை சொல்லும் சொற் பொழிவுகளை நிகழ்த்தவும் திட்டமிட்டிருக்கிறார்கள். இதனை இலங்கையில் முன்னின்று வழிநடத்தப்போகும், உள்ளூர் அமைப்புகளை ஒருங் கிணைக்கும் பணியை அகில இலங்கை இந்து மாமன்றம் செய்து வருகிறது. தமிழகத்தில் வேள்விக் குழுவினரை தயார் செய்யவும், செலவுகளையும் காஞ்சி சங்கராச்சாரியார் ஏற்றுக் கொண்டுள்ளாராம்.



காஞ்சி மடத்தைதொடர்பு கொண்டபோது, மடத்துக்கு நெருக்கமானவரும் கும்ப கோணத்தை சேர்ந்தவருமான குருமூர்த்தி நம்மிடம், ''சைவத் தையும் தமிழையும் இணைத்து வளர்த்ததில் காஞ்சி மடம் உள்ளிட்ட ஆன்மிக மடாலயங்களின் பங்கு பெரிது. இப்போது இலங்கையில் நடக்கும் சமய அழித்தொழிப்பை தடுக்க... பெரியவர் உணர்ந்திருக்கிறார். இந்தத் திட்டம் உருவானதுமே ஆதரித்து, அதற்கான எல்லாவற்றையும் தாமே ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார். ஆதரவற்றோர்களாக அங்கே கலங்குகிறவர்களுக்கு, இந்த திருமுறை வேள்விகள் மிகப்பெரும் ஆதரவு காட்டும்! இந்தக் குழுவில் செல்லப்போகிறவர்களின் ஒப்புதல் பெறப்பட்டு, அவர்களுக்கான பாஸ்போர்ட், விசா ஏற்பாடுகள் நடைபெறுகிறது. இதற்கான எல்லா உதவிகளையும் மடம் செய்து கொடுக்கும்!'' என்றார் குருமூர்த்தி.



தங்கள் கனவான 'ஈழம்' உருவாகத்தான்தாய்நாடான தமிழகம் உதவவில்லை. தங்களின் 'சமயம் அழிவதையாவது தடுக்கும் முயற்சியில் ஈடுபட முன்வந்துள்ளதே!' என்று மகிழ்வுடன் இதை வரவேற்கக் காத்திருக்கிறார்கள், ஈழத் தமிழர்கள்!

Tuesday, February 16, 2010

நேரடியாக ஜோதிடம் கற்றுக்கொள்ள விருப்பமா?


விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் ஜோதிடம் கற்றுக்கொள்ள ஒரு அரிய வாய்ப்பு

ஜோதிடம் ஒரு முழுமையான அறிவியல் என்பதை நமது ஆன்மீகக்கடலை அடிக்கடி வாசிக்கும் வாசகர்கள் உணர்ந்திருப்பீர்கள்.
நீங்கள் விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்தவராக இருந்தால், ராஜபாளையம் வந்து ஜோதிடம் கற்றுக்கொள்ளலாம்.கல்வித்தகுதி தமிழ் எழுத படிக்கத் தெரிந்திருந்தால் போதுமானது.வயது 15 வயது முதல்.
ஜோதிடம் கற்றுக்கொள்ள கால அளவு ஆறு மாதங்கள்.
ஒரு நாளுக்கு ஒன்றரை மணி நேரங்கள்.

ஆறாம் மாத முடிவில் நீங்கள் ஒரு முழுமையான ஜோதிடராக உருவெடுத்திருப்பீர்கள்.

கட்டணமும் பயிற்சி இடமும் உங்களுக்கு மின் அஞ்சலில் தெரிவிக்கப்படும்.மேலும் விபரங்களுக்கு, உங்களது பெயர்,(பிறந்த தேதியும் பிறந்த நேரமும்,பிறந்த ஊர்),செல் எண்,ஊர் இவற்றை aanmigakkadal@gmail.com என்ற மின் அஞ்சலுக்கு அனுப்பவும்.

விருதுநகர் மாவட்டத்தைத் தவிர, பிற மாவட்டங்கள்,மாநகரங்களைச் சேர்ந்தவர்களுக்கு வார இறுதி (சனி மற்றும் ஞாயிறு) வகுப்புக்களும் உண்டு.அப்படி வருபவர்கள் தங்கும் இடம் அவர்களே ஏற்பாடு செய்து கொள்ள வேண்டும்.

வகுப்புக்கள் மாசி மகத்தன்று துவங்குகின்றன.
இது வரை ஆன்மீகக்கடலின் அமைப்பு மூலமாக ஜோதிடம் பயின்றுள்ளவர்கள் அவரவர் ஊர்களில் ஜோதிடம் பார்க்கத்துவங்கி ஓராண்டு ஆகின்றன.


அவர்கள் மிகச் சிறப்பாக செயல்பட்டுவருவதால்,இதை நமது ஆன்மீகக்கடல் மூலமாக விரிவு படுத்தியுள்ளோம்.

அஞ்சல் வழி வகுப்புக்கள் கிடையாது.மொழி, மாந்திரீகம்,வைத்தியம்,ஜோதிடம்,சிற்பம்,சமையல் போன்றவை நேருக்கு நேராக பயின்றால் அது மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.


Monday, February 15, 2010

ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மாளின் அதிசயம்


ஸ்ரீவில்லிபுத்தூர்: ஸ்ரீவில்லிபுத்தூர் பத்திரகாளியம்மன் கோவிலில், சிவராத்திரியையொட்டி 76 வயதான மூதாட்டி, கொதிக்கிற நெய்யில் கைவிட்டு அப்பம் சுடும் நிகழ்ச்சி நடந்தது. சிவராத்திரியையொட்டி, ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதி மக்கள் நேற்று முன் தினம் தங்கள் குலதெய்வங்களுக்கும் சிறப்பு வழிபாடு செய்து வழிபட்டனர். ஸ்ரீவி., முதலியார் பட்டி தெரு பத்திரகாளியம்மன் கோவிலில் பத்திரகாளி அம்மனுக்கு சிறப்பு அலங்காரமும், சிறப்பு வழிபாடுகளும் நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, கொதிக்கும் நெய்யில் கையினால் அப்பம் சுடும் நிகழ்ச்சி நள்ளிரவு 12 மணிக்கு நடந்தது. இதில், அம்மனுக்கு சார்த்தப்பட்ட புடவையை அணிந்து, ஸ்ரீவி., ஊரணி பட்டியை சேர்ந்த 76 வயதான முத்தம்மாள் 90 நாள்கள் விரதமிருந்தார். பின், கோவில் வளாகத்தில் அடுப்பு மூட்டி, சட்டியில் நெய் ஊற்றி, அப்பம் சுடும் பணியில் ஈடுபட்டார்
முத்தம்மாளுக்கு பக்தர்கள் மாவை பிசைந்து கொடுக்க, அவர் கொதிக்கிற நெய்யில் போட்டார். பின், கரண்டி பயன்படுத்தாமல் கையால் அப்பத்தை புரட்டி, வேக வைத்தார். அப்பம் வெந்தவுடன் அவற்றை மீண்டும் கையால் வெளியில் எடுத்தார். அவருக்கு உதவியாக கோவில் பூசாரிகள் சுந்தரமகாலிங்கம், இருளப்பன், முருகன் இருந்தனர். தொடர்ந்து, 25 பெட்டி அப்பத்தை, தன் கையால் கொதிக்கிற நெய்யில் போட்டு எடுத்தது பக்தர்களை பரவசத்தில் ஆழ்த்தியது. இந்நிகழ்ச்சியை காண, பக்கத்து கிராமங்களிலும் இருந்தும் ஏராளமானோர் வந்திருந்தனர். கையால் சுட்ட அப்பம் பத்திரகாளியம்மனுக்கு படையலிட்டு, பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.
நன்றி:தினமலர் 14/2/2010

உங்கள் ராசிக்கேற்ற தோசை மதுரையில் அறிமுகம்


ராசிக்கேற்ற தோசைகள் மதுரையில் அறிமுகம்

மதுரை மாநகரில் உள்ள டெம்பிள் சிட்டி உணவகத்தின் உரிமையாளர் குமார் அவர்களும்,பிரபல மதுரை ஜோதிடர் சித்திரகுப்தனும் இணைந்து அவரவர் பிறந்த ராசிக்கேற்ற தோசை வகைகளை 14.2.2010 அன்று சாதாரண தோசையின் விலையிலேயே அறிமுகம் செய்துள்ளார்.

உதாரணமாக,மேஷம்,விருச்சிகம் ராசிக்காரர்கள் கோபக்காரர்களாகவும், கடகம்,கன்னி ராசிக்காரர்கள் பரம அமைதியாகவும் செயல்படுபவர்களாக இருப்பர்.இந்நிலையில்,12 ராசிக்காரர்களின் தன்மைக்கேற்றவாறு தோசைகளை அறிமுகம் செய்துள்ளார் டெம்பிள் சிட்டி ஹோட்டல் உரிமையாளர்.நன்றி:தினமலர் 14.2.2010