Friday, October 21, 2016

ஒரு மாதத்திற்கு பணச்சிக்கல்களைத் தீர்த்து,பணப்புழக்கத்தை அதிகரிக்கும் ஒரு நாள்(தேய்பிறை அஷ்டமியன்று ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர்) வழிபாடு!!!





ஐப்பசி மாத தேய்பிறை அஷ்டமி 23.10.16 ஞாயிற்றுக்கிழமை


 தேய்பிறை அஷ்டமியானது ஒவ்வொரு மாதமும் வருகிறது;  ஒரே நேரத்தில் ஈசனின் அருளையும்,அவரது அவதாரங்களில் முதன்மையான பைரவப் பெருமானின் அருளையும் பெறும் படியாக இந்தத் தேய்பிறை அஷ்டமி அமைந்திருக்கின்றது;


துலாம்,விருச்சிகம்,தனுசு,மேஷம்,சிம்மம் ராசியினர் சனியின் தாக்கத்தால் அவதிப்பட்டுக்கொண்டிருக்கின்றனர்;


துலாம் ராசியினர் 70% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
விருச்சிக ராசியினர் 100% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
தனுசு ராசியினர் 50% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
மேஷ ராசியினர் 40% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
சிம்ம ராசியினர் 25% அளவுக்கு 16.12.2014 முதல் மூன்று ஆண்டுகளுக்கும்
விருச்சிகச் சனியால கஷ்டப்பட்டுக்கொண்டும்,கண்ணீர்ச் சிந்திக் கொண்டும் இருக்கின்றனர்;இதில் பலர் தினசரி ஒருவேளை சாப்பிடக் கூட வழியில்லாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர்;



எனவே, வரும் தேய்பிறை அஷ்டமிக்கு அருகில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதிக்குச் சென்று வழிபடுவதன் மூலமாக ஒருமாதம்  வரை சனிபகவானின் தாக்கத்தில் இருந்து விடுபடுவார்கள்;



தமிழ்நாட்டில் இருக்கும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி அல்லது கோவில்களின் பட்டியல் இதோ:

1,அண்ணாமலை கோவிலின்  உள்பிரகாரத்தில்


2.அண்ணாமலையில் இருந்து காஞ்சி செல்லும் சாலையில்(காஞ்சிபுரம் அல்ல) பனிரெண்டாவது கி.மீ.தூரத்தில் அமைந்திருக்கும் காகா ஆஸ்ரமம்(கிராமம் பெரியகுளம்)


3.காஞ்சிபுரம் அருகில் இருக்கும் மோட்டூர் என்ற அழிபடைதாங்கி(இருபத்தைந்து கி.மீ.தூரத்துக்கு கரடுமுரடான சாலையில் ஆட்டோவில்  மட்டுமே பயணிக்கமுடியும்)

4.சென்னை கோயம்பேடு அருகில் இருக்கும் வானகரம்




5.ஐ.சி.எஃப் பேருந்து நிலையம் அருகில் இருக்கும் கமலவிநாயகர் ஆலயத்தினுள்(மாலை நேரத்தில் மட்டும் வழிபாடு செய்கிறார்கள்)


6.பள்ளிக்கரணை பஞ்சாயத்து போர்டு அருகில் இருக்கும் எஸ்.எஸ்.மஹால் திருமண மண்டப வளாகம்

7.சென்னை தாம்பரம் டூ வேலூர் செல்லும் பாதையில் அமைந்திருக்கும் படப்பையில் அருள்மிகு ஜெயதுர்காபீடம்(படப்பையில் இருந்து 3 கி.மீ.தூரம்)


8. சிதம்பரம்

9.திருச்சியில் இருந்து புதுக்கோட்டைக்குச் செல்லும் வழியில் இருக்கும் தபசுமலை

10.திருச்சி மலைக்கோட்டை அருகில் இருக்கும் பஜார்சாலை


11.திருச்சி உறையூரில் அமைந்திருக்கும் தான் தோன்றீஸ்வரர் ஆலய வளாகம்


12.காரைக்குடி அருகில் இருக்கும் இலுப்பைக்குடி(கொங்கணரின் ஜீவசமாதி இது)


13.பிள்ளையார்பட்டி அருகில் இருக்கும் வயிரவன் பட்டி(சுமார் ஆயிரத்து ஐநூறு ஆண்டுகள் பழமையான ஆலயம்!!!)


14.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,ரத்னவேல் முருகன் உடையார் திருக்கோவில்,ரத்தினசாமி நகர்,ஆர்.எம்.எஸ்.நகர் அருகில்,நஞ்சிக்கோட்டை சாலை,தஞ்சாவூர்-6


15.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் திருக்கோவில்,ஸ்ரீவரதராஜப்பெருமாள் திருக்கோவில் அருகில்,
புஞ்சைத் தோட்டக்குறிச்சி கிராமம்,சேங்கல்மலை,கரூர்.
(கரூரில் இருந்து சேலம் செல்லும் வழியில் மண்மங்கலம் இறங்கவும்;அங்கிருந்து விசாரித்துச் செல்லவும்;நடந்து செல்வதுமிகக்கடினம்)பூசாரி செல் எண்:92451 69455


16.ஸ்ரீஸ்ரீஸ்ரீவிஜய ஆனந்த கோலாகல சொர்ணாகர்ஷணபைரவர் திருக்கோவில்,ஞானமேடு,தவளக்குப்பம் அருகில்,பாண்டிச்சேரி.நிர்வாகி:திரு.முத்துக்குருக்கள்,ஸ்ரீசேஷாத்திரி சுவாமிகளின் சீடர்.
வழித்தடம்:பாண்டிச்சேரியில் இருந்து கடலூர் மற்றும் விழுப்புரம் செல்லும் சாலையில் இடையர்பாளையம் என்னும் நிறுத்தத்தில் இறங்கவும்.இங்கிருந்து ஒரு கி.மீ.தூரத்தில் இருக்கிறது.

17.அறந்தாங்கியில் இருந்து முப்பது கி.மீ.தூரத்தில் இருக்கும் பொன்பேத்தி,(இங்கே பவானீஸ்வரர் கோவிலில் பைரவசித்தர் நிறுவிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷணபைரவர் சன்னதி இருக்கிறது)


18.நாகப்பட்டிணம் நீலாயதாட்சியம்மன்  கோவிலுக்கு வடக்கே கட்டுமலை மீது சட்டநாதர் திருக்கோவில்


19.ஸ்ரீசெல்வவிநாயகர்  கோவில் வளாகம்,ஆர்.எஸ்.புரம் அருகில்,பூமார்க்கெட் பஸ் ஸ்டாப்,கோயம்புத்தூர்


20.அருள்மிகு காங்கீஸ்வரர் திருக்கோவில்,காங்கேயநல்லூர்,வேலூர் மாவட்டம்(பஸ் ரூட்:1,2 எனில் கல்யாணமண்டபம் நிறுத்தம்; 1G,2G எனில் காங்கேயநல்லூர்,ஆர்ச் அருகே இறங்கி நடந்து வர வேண்டும்)


21.மத்யகைலாஷ் கோவில்,கஸ்தூரிபாய்நகர் ரயில்வே ஸ்டேஷன்,அடையாறு,சென்னை(பேருந்து நிறுத்தம்:மத்தியகைலாஷ்)

22.வன்னிவேடு ஸ்ரீஅகஸ்தீஸ்வரர் திருக்கோவில்,வாலாஜாபேட்டை


23.சேலம் அருகில் இருக்கும் ஆறகழூர்

24.சென்னையில் செட்டியார் அகரம் பகுதியில் துண்டலம்,அண்ணாநகர் ஏரியாவில் செட்டியார் அகரம் பள்ளிக்கூடத்தெருவில் அமைந்திருக்கும் முருகன் கோவில்(பூசாரி விஜய்குருக்கள் செல் எண்;8754559182)

25.ஸ்ரீஸ்ரீஸ்ரீ சொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி, முருகன் கோவில் வளாகம்,துறையூர்.

                                                        26.26.ரெட் ஹில்ஸ்,சென்னையில் ஒரு ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் ஆலயம் இருக்கிறது.


27.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,பெரம்பூர் பழனி ஆண்டவர் முருகன் கோவில்,பழனி ஆண்டவர் கோவில் தெரு,பெரம்பூர்,சென்னை-11(அமைவிடம்:பெரம்பூர் பேருந்து நிலையம் & ரயில் நிலையம் அருகில்)

                                                          28.ஸ்ரீகனகதுர்கா ஆலயம்,காளமேகம் தெரு,மேற்கு முகப்பேர்,சென்னை=37 இல் தனி சன்னதியில் எழுந்தருளியிருக்கிறார்.
29.திண்டுக்கல் அருகே கரூர் சாலையில் பத்தாவது கி.மீ.தூரத்தில் இருக்கும் தாடிக்கொம்பு கிராமம் ஸ்ரீசவுந்தரராஜப்பெருமாள் திருக்கோவிலில் சக்திவாய்ந்த ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இருக்கிறது.தமிழ்நாட்டின் தெற்கே அமைந்திருக்கும் கடைசி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி இதுதான்.



30.ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதி,அருள்மிகு மாதேஸ்வரர் உடனுறை மாதேஸ்வரி திருக்கோவில்,மணப்பாக்கம்,சென்னை.

31.அர்த்தநாரீஸ்வரர் திருக்கோவில்,நங்கநல்லூர்,சென்னை.

32.ஸ்ரீஸ்ரீஸ்ரீSWARNAGARSHANA BAIRAVAR SANNATHI,SANEESWARAN KOVIL,Vithunni Street,NOORANI POST,PALAKKAD-678004,KERALA STATE

32.க்ஷேத்ரபாலர் சன்னதிக்கு அருகில்,பொன்னம்பலவாணேஸ்வரம்,கொழும்பு,இலங்கை

33.ஸ்ரீ ஆத்மநாதேக்ஷ்வரர் திருக்கோவில்,மேனாம்பேடு,அம்பத்தூர்,சென்னை(800 ஆண்டுகள் பழமையான ஆலயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் அருள்பாலித்து வருகின்றார்)

34.செல்வ விநாயகர் கோவில்,லாயிட்ஸ் காலனி,ராயப்பேட்டை,சென்னை 14.


இவைகள் தவிர மேலும் சில இடங்களில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவர் சன்னதிகள் அல்லது தனி ஆலயங்கள் இருக்கலாம்;இருந்தால் தகவல் தெரிவிக்கவும்;அடுத்த மாதம் தேய்பிறை அஷ்டமியைத் தெரிவிக்கும் போது,இந்தப் பட்டியலில் இணைத்துக் கொள்ளலாம்;

ஒருவேளை சனியின் தாக்கத்தால் இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் பின்வரும் மந்திரத்தை வீட்டில் அல்லது அருகில் அமைந்திருக்கும் சிவாலயத்தினுள் ஸ்ரீகால பைரவ சன்னதியில் ஜபிக்கலாம்;

ஓம் பைரவாய வித்மஹே
ஆகர்ஷ்ணாய தீமஹி
தன்னோஹ் சொர்ணாகர்ஷண பைரவப் ப்ரசோதயாத்

அல்லது


ஓம் ஸ்ரீம் மஹா சொர்ண பைரவாய நமஹ

அல்லது


*ஞாயிற்றுக்கிழமை அன்று குளிகை காலம்  மதியம் 3 மணி முதல் 4.30வரை இருக்கின்றது;2000% பலன் பெற இந்த சமயத்தில் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானின் அருளை அள்ளித் தரும் துர்கைச்சித்தர் அருளிய சொர்ண பைரவ அஷ்டகம் 33 முறை ஜபிக்கவும்;வீட்டிலேயே ஜபிக்கலாம்;அல்லது ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவர் சன்னதியின் முன்பாக அமர்ந்து மனதுக்குள் ஜபிக்கலாம்;

இந்த நேரத்தில் வழிபட இயலாதவர்கள்,ஞாயிற்றுக்கிழமை ராகு காலநேரமான மாலை 4.30 முதல் 6 மணிக்குள் வழிபடலாம்;

அடுத்த தேய்பிறை அஷ்டமி:சதுர்முகி வருடம்,கார்த்திகை மாதம் 21.11.16 திங்கட்கிழமை

வீட்டிலேயே தினமும் ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ணாகர்ஷண பைரவப் பெருமானை வழிபட விரும்புவோர் தொடர்பு கொள்ளவும்; வாட்ஸ் அப்: 9092116990



வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!

Thursday, October 20, 2016

உலகத்தை ஆள வரும் இந்தியன்!!!


உலகத்தின் மகத்தான பொருளாதார வல்லரசு நாடாக நமது பாரத நாடு கி.பி.1750 வரை முடிவடைந்த 20,000 ஆண்டுகள் வரை இருந்து வந்தது;ஒவ்வொரு 300 ஆண்டுகளும் பாரதம் உலகத்தின் முதல் பொருளாதார வல்லரசு நாடாக இருக்கும்;இரண்டாம் இடத்தில் சீனா இருக்கும்;அடுத்த 300 ஆண்டுகள் வரை சீனா முதலிடத்தை கைப்பற்றும்;இப்படியே 20,000 ஆண்டுகள் ஓடிவிட்டன;ஆதாரம்:The Rising and Falling of Great Powers(Oxford University Economics Department Publishing Book)

துருக்கியில் ஆட்டோமான் பேரரசு வீழ்ச்சி அடைந்தப் பின்னர்,ஐரோப்பாவுக்கும் பாரத நாட்டுக்கும் இடையிலான வர்த்தகத் தொடர்புகள் அறுபட்டுவிட்டன;இதனால்,ஐரோப்பா மிகவும் சிரமப்பட்டது;தேவையே கண்டுபிடிப்பின் தாய் என்ற பழமொழிக்கு ஏற்ப,ஐரோப்பிய அரசுகள் இந்தியாவுக்கு கடல் வழியைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டன;கொலம்பஸ் தான் சென்றடைந்த இடங்களை எல்லாம் இந்தியா என்று புளுகிக்கொண்டே இருந்தார்;அந்த புளுகலால் தான் இன்று மேற்கு இந்தியத் தீவுகள். . .ஓ! வெஸ்ட் இண்டீஸ் டீம் என்றால் நம் எல்லோருக்கும் கிரிக்கெட் ஞாபகத்திற்கு வரும்;கண்டுபிடிக்கப்பட்டது;மேற்கு இந்தியத் தீவுகளுக்கும் இந்தியாவுக்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை;


ஆப்ரிக்கக் கண்டத்தின் தென் கோடி முனையான நன்னம்பிக்கை முனையை வந்தடைந்தான் வாஸ்கோடகாமா.அங்கே அவன் பல மாதங்களாக குழப்பத்தில் இருந்தான்; இங்கிருந்து எப்படி இந்தியாவுக்கு செல்வது ? என்று.எனவே,அங்கே வந்த ஒவ்வொரு கப்பல் மாலுமியிடமும் விசாரித்துக் கொண்டே இருந்தான்;

 18 மாதங்களுக்குப் பிறகு,அவனுக்கு வழிகாட்டியது ஒரு கேரள வணிகக் கப்பல்!அப்போதே வணிகக் கப்பலின் ஆஸ்தான ஜோதிடர் கப்பல் கேப்டனுக்கு அறிவுறுத்தியும் அவன் கேட்கவில்லை;இந்த ஐரோப்பியனுக்கு கடல் வழிகாட்டினால்,அது நமது நாட்டிற்கே பெரும் ஆபத்தை விளைவித்துவிடும் என்று கெஞ்சியும் கேட்கவில்லை;அதன் பிறகு,கேரள மாநிலம் பட்ட பாட்டினை வரலாறு சொல்லும்;

வாஸ்கோடகாமாவின் வருகைக்குப் பிறகு,இந்தியாவுடன் வணிகம் செய்ய டச்சுக்காரர்கள்,போர்ச்சுக்கீசியர்கள்,ஆங்கிலேயர்கள்
பிரஞ்சுக்காரர்கள் வருகை புரிந்தார்கள்;இறுதியில் வென்றது கிறிஸ்தவ ஆங்கிலேயன் தான்;


கி.பி.1750 வாக்கில் இந்தியாவில் இருந்து ஸ்பின்னிங் டெக்னாலஜியை ஜப்பான் நாடு இறக்குமதி செய்தது;ஒவ்வொரு வைஸ்ராயும் இந்தியா முழுக்க இருப்புப் பாதை போட்டதே இந்தியாவின் செல்வ வளத்தைக் கொள்ளையடிக்கத்தான்;


கி.பி.1750 வரை உலக மொத்த உற்பத்தியில் இந்தியாவின் பங்களிப்பு 25% ஆகவும்,உலக ஏற்றுமதியில் 30% ஆகவும் இருந்து வந்தது;இரண்டு உலகப் போர்களில் இங்கிலாந்து கலந்து கொண்டது;இதனால் அதற்கு ஏராளமான செலவு ஏற்பட்டது;அந்தச் செலவை தமது காலனி ஆதிக்க நாடான இந்தியா மீது சுமத்தியது;சுதந்திரம் வாங்கிய 1947 இல் இந்தியாவின் உலக பொருளாதாரப் பங்களிப்பு வெறும் 2% ஆக சுருங்கிப்போனது;அந்த அளவுக்கு கிறிஸ்தவ இங்கிலாந்து இந்தியாவின் அனைத்து செல்வ வளங்களையும் கொள்ளையடித்துவிட்டே வெளியேறியது;

அது மட்டும் அல்ல;மெக்காலே கல்வித்திட்டத்தை நாடு முழுக்க நடைமுறைப்படுத்தியதன் மூலமாக,நாடு முழுவதும் இருந்த 6,00,000 திண்ணைப்பள்ளிக் கூடங்களை அழித்தது;உலகத்திலேயே தலைசிறந்த கல்வி முறையான குருகுலக் கல்வி முறையை நிர்மூலமாக்கியது;இதுதான் இந்தியர்களை ஆத்ம பலம் மிக்கவர்களாக வைத்திருந்தது;


சுதந்திரம் வாங்கியப் பின்னர்,நாட்டை எப்படி மறுசீரமைக்க வேண்டும் என்ற எண்ணம் எந்த ஒரு அரசியல் தலைவரிடமும் இல்லாமல் இருந்தது;ஒரு சில சீர்திருத்தவாதிகளிடம் மட்டும் திட்டங்கள் இருந்தன;அவர்களின் ஆலோசனைகளை பண்டிட் ஜவஹர்லால் நேரு புறக்கணித்தார்;இதனால்,கடந்த 60 ஆண்டுகளாக நமது நாட்டின் கல்வித்துறை,சுகாதாரத்துறை,வேளாண்மைத்துறை,வெளியுறவு
துறை,நீதித்துறை மற்றும் சில துறைகளில் இந்தியத்தன்மை இல்லாமல் போய்விட்டது;


தேசத்துரோகிகளால் அரசியல் கட்சி ஆரம்பிக்க முடிந்தது;என்.ஜி.ஓ ஆரம்பித்து நாட்டின் வளர்ச்சிக்குத் தேவையான திட்டங்களை எதிர்த்து அதை தடுத்து நிறுத்தவும் முடிந்தது;


மறுபக்கம்,இந்தியாவின் பாரம்பரியக் கலைகளான யோகா,ஜோதிடம்,சித்த மருத்துவம்,மூலிகைகள்,வழிபாட்டுமுறைகள்,ஆடைகள்,சமுதாய ஒற்றுமை,மறு பிறவி கோட்பாடு போன்றவைகள் மேல்நாட்டு விஞ்ஞானம் ஆராய்ச்சி செய்து ஒவ்வொன்றும் உண்மை என்பதை உணரத் துவங்கிவிட்டன;


இதனால்,இங்கிலாந்தில் British Association of Vedic Astrology(bava.org) என்றும்,அமெரிக்காவில் American Association of Vedic Astrology(aava.org)என்றும் அமைப்புகள் உருவாக்கி அரசுகளே ஆராயத்துவங்கி விட்டன;2006 வாக்கில் ஐரோப்பிய நாடுகள் ஒன்றிணைந்து சுவிட்சர்லாந்தில் 100 கோடி யூரோ செலவில் ஜோதிடத்திற்கும்,வானியலுக்கும் இடையிலான ஒற்றுமையை அறிவியல் பூர்வமாக கண்டறிய திட்டங்களைத் துவக்கிவிட்டன;


நெற்றியில் பொட்டு வைக்கும் பழக்கம் ப்ரான்ஸ் முழுக்க பரவிக் கொண்டிருக்கின்றது;


ஆஸ்திரேலியாவில் தயாராகும் இட்லி மற்றும் சட்னி தினமும் ஜெட் விமானத்தில் பறந்து லண்டன்வாசிகளின் வயிற்றை நிரப்புகின்றன;

அமெரிக்கா,கனடா,இங்கிலாந்து,நார்வே,சுவீடன்,ஜெர்மனி,பிஜித் தீவு,கானா,மலேஷியா,சிங்கப்பூர்,ஆஸ்திரேலியா
நியூசிலாந்து போன்ற நாடுகளில் அரசாங்கம் மற்றும் அரசியல் உயர்பதவிகளில் இந்தியர்கள் வெற்றி பெற ஆரம்பித்துவிட்டார்கள்;


தமிழ் மொழி மற்றும் சம்ஸ்க்ருத மொழி ஒவ்வொரு சர்வதேச பல்கலைக் கழகங்களிலும் தனித் துறையாக ஆரம்பிக்கப்பட்டுள்ளன;இதன் மூலமாக இரு மொழிகளிலும் இருக்கும் பழமையான இலக்கியங்களை உலகில் வாழும் அனைத்து நாட்டு மாணவ,மாணவிகளும் தமிழ் மொழியையும்,சம்ஸ்க்ருத மொழியையும் கற்க ஆரம்பித்துவிட்டார்கள்;


கீழை நாட்டுத் தத்துவங்கள் என்ற பட்டப்படிப்பினை எந்த ஒரு மேல்நாட்டினர் கற்கத் துவங்கினாலும்,அதன் முடிவாக அவர்கள் இந்தியாவில் குடியுரிமை பெற்று வாழும் அளவுக்கு அவர்களை ஈர்க்கத் துவங்கியிருக்கின்றது;


இந்தியாவைப் பற்றி ஆராய மேற்கு நாடுகள் இண்டாலஜி என்ற ஒரு துறையையே தமது பல்கலைக் கழகங்கள் ஆரம்பித்துள்ளன;
அமெரிக்க மக்கள்தொகை+இங்கிலாந்து மக்கள் தொகை இரண்டையும் கூட்டினால் எத்தனை கோடி வருமோ அதை விடவும் அதிகமானவர்கள் இந்தியாவில் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகப் பேச ஆரம்பித்துள்ளார்கள்;இதன் மூலமாக ஆங்கில மொழி சார்ந்த வர்த்தகம் இன்று இந்தியாவைச் சார்ந்து வாழ ஆரம்பித்திருக்கின்றது;


தஞ்சாவூர் சரபோஜிமஹால் நூலகத்தில் இருந்த பல முக்கியமான ஓலைச்சுவடிகளை இங்கிலாந்து,15.8.1947 க்கு முன்பே இரண்டு கப்பல்கள் மூலமாக அள்ளிக் கொண்டு சென்றுவிட்டது;அவைகளை இன்று வரையிலும் இங்கிலாந்து,.ஜெர்மனி,அமெரிக்கா அரசுகள் ஆராய்ந்து பலவிதமான நவீன போர்க்கருவிகள்,ஆயுதங்களைத் தயார் செய்துவருகின்றன;அவைகளில் ஒன்றுதான் ராடாரில் சிக்காத விமானம்!


மீதி இருக்கும் சரபோஜிமஹால் நூலத்தில் இருக்கும் ஒலைச்சுவடிகளில் என்னென்ன இருக்கின்றன என்பதை அறிய முயற்சி செய்யவில்லை;சம்ஸ்க்ருதத்தில் எம்.ஏ.,யும்,பி.டெக்கில் ஏரோநாட்டிக்கலும் யார் படித்து முடிக்கின்றார்களோ அவர்களால் போஜராஜ மஹாராஜா எழுதிய வைமானிகா சாஸ்திரத்தை முழுமையான அர்த்தத்துடன் வாசிக்க முடியும்;


சம்ஸ்க்ருதத்தில் பி.ஏ.யும்,எம்.எஸ்.ஸி மைக்ரோ பயாலஜி அல்லது பயோ டெக்கும் முடித்தவர்களால் மூலிகைகள் பற்றிய பலவிதமான ஆரோக்கிய குறிப்புகளை வெளிக்கொண்டு வரமுடியும்;


இங்கேதான் சம்ஸ்க்ருத மொழியை கற்கவிடாமல் செய்தததில் நாத்திகப்பிரச்சாரம் ஜெயித்துவிட்டதே! சம்ஸ்க்ருதத்தை எதிர்த்தால் தான் உண்மையான தமிழ் உணர்வுள்ளவன் என்ற மாயத் தோற்றம் தமிழ்நாடு முழுவதும் பரவிவிட்டது;நமது பண்பாட்டில் இருந்து நம்மை 6 தலைமுறைகளாக பிரித்த ஆங்கில மொழியில் பேசுவது அடிமைத்தனமாகத் தெரியவில்லை;இந்தியாவின் தாய்மொழி சம்ஸ்க்ருதம்,தந்தை மொழி தமிழ் என்று எவரும் ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை;


கி.பி.2100 ஆகும் போது இந்தியாவின் ஜனத்தொகை 700 கோடிகளாக இருக்கும் என்று ஒரு முன் கணிப்பு சொல்கின்றது;இதில் 250 கோடி பேர்கள் மட்டுமே இந்தியர்களாக இருப்பார்கள்;மீதி 450 கோடிப் பேர்கள் உலகம் முழுவதும் இருந்து இங்கே குடியேறியவர்களாக இருப்பார்கள்;


இந்தத் தகவல்கள் அனைத்தும் தினசரி செய்தித்தாள்கள்,கருத்தரங்குகள்,பயிற்சிமுகாம்கள்,தனிச் சுற்றுக்கு விடப்பட்ட மாத இதழ்களில் வெளிவந்த செய்திகளின் அடிப்படையில் தொகுப்பட்டவை;


இந்தியாவின் தலைமையை உலகம் ஏற்றுக் கொள்ளும் நாள் வெகுதூரத்தில் இல்லை;


ஜோதிடம்,சித்தமருத்துவம்,இயற்கை மருத்துவம்,யோகா,சரக்கலை,பஞ்சபட்சி சாஸ்திரம்,வர்மக்கலை,நியூரோதெரபி போன்ற கலைகளுக்கு அடுத்த 50 ஆண்டுகளுக்கு பயங்கர டிமாண்ட் உருவாகப் போகின்றது;நமது தலைமுறையை இதற்கு ஏற்றாற் போல தயார் செய்வோமா!!!


Tuesday, October 18, 2016

மகத்தான பாதுகாப்பையும்,வலிமையையும் தரும் மஹாவராகிஜபம்!!!



உலகம் தோன்றியது முதல் இன்றுவரையிலும் இருக்கும் வழிபாட்டுமுறைகள் இரண்டே இரண்டு மட்டும் தான்!

முதலாவது லலிதாம்பிகை வழிபாடு என்ற ஸ்ரீவித்யா உபாசனை;மற்றது சிவ வழிபாடு;மற்றவைகள் அனைத்தும் சில ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு உருவானவையே!

ஸ்ரீவித்யா உபாசனை என்பது மிகவும் பரந்துவிரிந்த ஆன்மீகக்கடல் போன்றது;இதன் ஆரம்பமுனைகளாக பலவகைகள் உள்ளன;அதில் முதன்மையானதும்,முக்கியமானதுமாக இருப்பதுதான் மஹாவராகி வழிபாடு!

லலிதாம்பிகை என்ற ராஜராஜேஸ்வரி என்ற லலிதா பரமேஸ்வரி என்ற திரிபுரசுந்தரி என்ற மனோன்மணி தான் சிவ கடவுள்களையும் இயக்கும் முழு முதல் பெண் சக்தி!
இவளது புருவ மத்தியில் இருந்து தோன்றியவள் தான் மஹாவராகி! (நமது புருவமத்தியில் சூட்சுமமாக இருந்து நம்மை வழிநடத்துவதும் இவளே!)

ராஜராஜேஸ்வரியின் படைகளை நடத்தும் தலைமைத் தளபதியாக இருப்பவள் தான் மஹாவராகி!

அதன் பிறகு,புதன் கிரகத்தின் ப்ராணதேவதையாக இருப்பவர் உன்மத்த பைரவர்;இவரது துணை சக்தியாக ஒரு வராகி சக்தியை மஹாவராகி தோற்றுவித்தாள்;இவர்கள் இருவரும்(உன்மத்த பைரவரும்,வராகியும்) நமது புத்தியில் நின்று நம்மை இயக்கிவருகின்றார்கள்;

நாம் செய்யும் செயல்களை எட்டுவகைகளாகப் பிரிக்கலாம்;இந்த எட்டு வகைச் செயல்கள் மூலமாக 64 வகையான பாவம் அல்லது புண்ணியத்தை நம் ஒவ்வொருவராலும் செய்ய முடியும்;எனவே தான் மனிதர்களின் வாழ்க்கையை நிர்ணயிக்க நவக்கிரகங்களை சதாசிவன் என்ற அண்ணாமலையார் படைத்தார்;நவக்கிரகங்களின் பிராணதேவதைகளாக அஷ்டபைரவர்களையும் ஆதியோகியான அருணாச்சலேஸ்வரர் தோற்றுவித்தார்;

அஷ்ட கர்மா என்பதுதான் மாந்திரீகம் ஆகும்;வசியம்,மோகனம்,ஸ்தம்பனம்,ஆகர்ஷணம்,
வித்வேஷணம்,பேதனம்,மாரணம் என்ற எட்டுவிதமான செயல்கள் தான் இவை!இந்த எட்டு செயல்களிலும் கைதேர்ந்தவர்கள் பாரத தேசம் முழுவதும் 100 பேர்கள் இருந்தால் அதிகமே! வசியம்,ஸ்தம்பனம் இந்த இரண்டையும் கற்றுக் கொண்டுதான் இன்று ஆன்மீக ஸேவை ஆற்றிட பலர் பொதுவாழ்க்கைக்கு வருகின்றார்கள்;


அஷ்ட கர்மாக்களை இயக்குவது அஷ்டபைரவர்களே! அஷ்ட பைரவர்களின் சூட்சும சக்திகளாக இருந்து அவர்களையே இயக்குவது அஷ்டவராகிகளே!!!

எந்த ஒரு கடவுளையும் முறைப்படி பூஜை,யாகம் என்று வழிபட்டால் அந்தக்கடவுள் பூஜை செய்தவருக்கு,பெரும் அளவில் பணம் செலவு செய்து யாகம் நடத்தியவருக்கு வரம் தந்துதான் ஆகவேண்டும்;அந்த மனிதன் நல்லவனா அல்லது அயோக்கியனா அல்லது சுயநலத்திற்குச் செய்தானா என்றெல்லாம் பார்க்க முடியாது;

ஆனால்,மஹாவராகியை அப்படி பூஜை,யாகம்,ஜபம் செய்து ஏமாற்றிவிட முடியாது;அன்னை மஹாவராகியை ஜபிக்க ஆரம்பித்த சில நாட்களிலேயே அவள் நமது மனதிற்குள் புகுந்து நாம் யார்? எதற்காக இன்று முதல் இவளை நினைத்து ஜபிக்க ஆரம்பிக்கின்றோம்? என்று கவனிப்பாள்;அப்போது நாம் யாருக்கும் மனதால் கூட தீங்கு நினைக்காமல் இருந்து பிறர் நமக்கு மகத்தான துரோகங்களும்,துயரங்களும் தந்து அதை எதிர்கொள்ளக் கூட முடியாமல் தவிப்பவர்களுக்கு ஒடோடி வந்து காப்பாள்!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!!

தன்னைச் சரணடைந்த தமது பக்தர்களை காப்பாற்றுவதற்காக எப்பேர்ப்பட்ட மந்திரவாதிகளையும் ஒழித்துக் கட்டத் தயங்கமாட்டாள்;அதுமட்டும் அல்ல;இதுவரை பிறர் தமது பக்தர்களுக்குச் செய்த துரோகம்,மாந்திரீகத் தீமைகள் என்னென்ன என்பதை தமது பக்தர்களுக்குப் புரியவைப்பாள்;சில காலம் விடாமல் ஜபித்து வரும் போது அதில் இருந்து மீட்டு நம்மை வளமோடும்,சுகத்தோடும் வாழ வைப்பாள்;

எனவே,பின்வரும் அன்னை மஹாவராகியின் 12 பெயர்களை காலையில் 108 முறையும்,இரவில் 108 முறையும்(45 நிமிடங்கள் ஜபித்தால் போதும்;எண்ண வேண்டாம்) ஜபித்துவருக!

ஓம் ரீங் வாத்தியார் ஐயா,வாத்தியார் ஐயா
பஞ்சமி
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரி
சமயசங்கேதா
வராகி
போத்ரிணி
சிவை
வார்த்தாளி
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரி
அரிக்நி

இவைகள் தான் அந்த 12 பெயர்கள்;

 தினமும்  ஜபித்துவந்தவர்களுக்கு அன்னை மஹாவராகி வரங்களை அள்ளிக் கொடுத்திருக்கின்றாள்;

பலரது நீண்டகால வாழ்க்கைச் சிக்கல்கள் தீர்ந்திருக்கின்றன;

பலர் மாந்திரீகத்தினால் பாதிக்கப்பட்டு வாழ்ந்து வந்தவர்கள் அனைவரும் அதில் இருந்து விடுபட்டுள்ளார்கள்;

விரிவாக எழுத அன்னை மஹாவராகி அனுமதிக்கவில்லை;

ஓம் அகத்தீசாய நமஹ


Sunday, October 16, 2016

நட்சத்திர ஆராதனைபவுர்ணமி(15.10.16) சிறப்புடன் நிறைவடைந்தது!













120 ஆண்டுகளுக்குப் பிறகு வந்த ஜன்ம நட்சத்திர ஆராதனை பவுர்ணமி விழா 15.10.16 சனிக்கிழமை அன்று விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையம் தாலுகா,சோழாபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்மிகு குழல்வாய்மொழி அம்பாள் சமேத விக்கிரபாண்டீஸ்வரர் திருக்கோவிலில் காலை 9 மணி முதல் இரவு 7 மணி வரை இனிதே நிறைவு பெற்றது;


தத்புருட சிவம்,சிவபூசைச் செல்வர்,செந்தமிழ் வேள்வி வித்தகர்,சிவ.கணேசன் சிவாச்சாரியார் அவர்கள் தலைமையில் சிவவேள்வியும்,திருமுறை ஓதுதலும் நடைபெற்றது;கலசங்கள் ஏந்தி சிவசக்தியை பக்தர்கள் வலம் வந்து,ஜன்ம நட்சத்திர மரக்கன்றுகளை தமிழ்நாடு முழுவதும் வந்திருந்த பக்தர்களில் தேர்வு செய்யப்பட்டவர்கள் நட்டார்கள்;(ஒரே நட்சத்திரத்தில் பலர் வந்திருந்தமையால்,அவர்களில் ஒருவர் வீதம் 20 நட்சத்திரக்காரர்கள் 20 பேர் தேர்வு செய்யப்பட்டார்கள்)


பஞ்சவாத்தியங்கள் முழங்க உச்சிக்கால பூசையும்,சாயரட்சை பூசையும் சிறப்பாக நடைபெற்றது;பாரத தேசம் முழுவதும் இருந்து பக்தர்கள் வருகை தந்திருந்தார்கள்;வர இயலாதவர்கள்,தமது பெயர்,ஜன்ம நட்சத்திரம்,வசிக்கும் ஊர் மற்றும் நிறுவனங்களின் பெயரை சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டியிருந்தார்கள்;தினப்பிரதோஷ நேரமான மாலை 4.30 முதல் 6 மணி வரையிலும் அவர்களுக்கும்,இந்த விழாவில் முன்பதிவு செய்துவிட்டு கலந்து கொண்டவர்களுக்கும் பெயர்,ஜன்ம நட்சத்திரம்,வசிக்கும் ஊர் சொல்லி அர்ச்சனை செய்யப்பட்டது;சிலருக்கு ஜன்ம நட்சத்திரமும்,ராசியும் தெரியாமல் இருந்தது;அவர்களது பெயரும்,வசிக்கும் ஊரும் சொல்லி அர்ச்சனை செய்யப்பட்டது;7 நட்சத்திரங்களுக்கு மட்டும் இந்த 15.10.16 தாராபலம் இல்லாத நாளாக இருந்தபடியால்,இந்த 7 நட்சத்திர மரக்கன்றுகள் மட்டும் வேறு ஒரு நாளில் நட முடிவு செய்யப்பட்டுள்ளது;

120 வருடங்களுக்குப் பிறகு வந்த இந்த ஜன்ம நட்சத்திர ஆராதனை விழாவின் கதிர்வீச்சு 16.10.16 முதல் அடுத்த 9 நாட்கள் வரை தினமும் 10% குறைந்து கொண்டே வரும்;இதில் ஒரு குறிப்பிட்ட நாளில் மட்டும் 7 நட்சத்திரங்களுக்கு மட்டும் தாராபலம் அதிகரிக்கும்;அந்த நாளில் மீதி 7 ஜன்ம நட்சத்திர மரக் கன்றுகள் நடப்படும்;


மதியமும்,இரவிலும் அன்னதானம் வழங்கப்பட்டது;நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை மஹாவில்வம் பவுண்டேசன் உறுப்பினர்களும்,தன்னார்வலர்களும் சிறப்பாக செய்திருந்தார்கள்;


ஓம் மஹாதேவசித்த குரு போற்றி! போற்றி!! போற்றி!!!

Thursday, October 13, 2016

120 வருடங்களுக்குப் பிறகு வர இருக்கும் நட்சத்திர ஆராதனை பவுர்ணமியில் கலந்து கொள்ள இருக்கும் அன்பர்களுக்கு..!



15.10.16 சனிக்கிழமையன்று வர இருக்கும் புரட்டாசி பவுர்ணமி அன்று விருதுநகர் மாவட்டம்,ராஜபாளையம் தாலுகா சோழாபுரம்(ராஜபாளையத்தில் இருந்து சங்கரன் கோவில் செல்லும் சாலையில் 8 வது கி.மீ தூரத்தில் இருப்பது) அருள்மிகு குழல்வாய்மொழி சமேத விக்கிரபாண்டீஸ்வரர் திருக்கோவிலில் ஜன்ம நட்சத்திர ஆராதனை பவுர்ணமி விழா காலை 8 மணி முதல் இரவு 7 மணி வரை நடைபெற இருக்கின்றது;

இதில் கலந்து கொள்ள விரும்புவோர்கள் பின்வரும் பூக்களைக்கொண்டு வர முயற்சி செய்யும் படி மஹாவில்வம் பவுண்டேஷன் அன்புடன் கேட்டுக் கொள்கின்றது;

அசுபதி    =சாமந்தி
பரணி     =முல்லை
கார்த்திகை =செவ்வரளி
ரோகிணி   =பாரிஜாதம்
மிருகசீரிடம்=ஜாதிப்பூ
திருவாதிரை=வில்வப் பூ
புனர்பூசம்  =மரிக்கொழுந்து
பூசம்     =பன்னீர்மலர்
ஆயில்யம் =செவ்வரளி
மகம்     =மல்லிகை
பூரம்     =தாமரை
உத்திரம்  =கதம்பம்
அஸ்தம்  =வெண் தாமரை
சித்திரை  =மந்தாரை
சுவாதி   =மஞ்சள் அரளி
விசாகம்  =இருவாட்சி
அனுஷம் =செம்முல்லை
கேட்டை =பன்னீர் ரோஜா
மூலம்   =வெண் சங்கு மலர்
பூராடம்  =விருட்சி
உத்திராடம் =சம்பங்கி
திருவோணம்=சிகப்பு ரோஜா
அவிட்டம் =செண்பகம்
சதயம்   =நீலோற்பலம்
பூரட்டாதி =வெள்ளை அரளி
உத்திரட்டாதி=நந்தியா வர்த்தம்
ரேவதி =செம்பருத்தி


குறைந்தது 250 கிராம் அல்லது ஒரு பாக்கெட் உதிரிப் பூக்களாக கொண்டு வரவேண்டும்;மாலையாக கட்டினாலும்,கண்டிப்பாக உதிரிப் பூக்கள் கொண்டு வரவேண்டும்;

உங்கள் பகுதியில் இப்பூக்கள் கிடைக்காமல் இருந்தாலோ அல்லது தாங்கள் புறப்படும் வரை தங்களின் ஜன்ம நட்சத்திர பூ கிடைக்காவிட்டாலோ வருந்தவேண்டாம்;

120 வருடங்களுக்குப் பிறகு வரும் இந்த அற்புத நாளில் நட்சத்திர மலர்களால்,ஜன்ம நட்சத்திர விருட்சங்களை ஆராதித்து நடுவதன் மூலமாக இதுவரை இருந்து வந்த அனைத்து கர்மவினைகளும் கரைந்து காணாமல் போய்விடும்;வளமான,நலமான மற்றும் சிறப்பான எதிர்காலம் இந்த நாளில் இந்த ஆலயத்திற்கு வருபவர்களுக்கு நிச்சயமாகக் கிட்டிவிடும்;


ஓம் மஹாதேவ சித்தகுரு போற்றி! போற்றி!! போற்றி!!!  

Monday, October 10, 2016

120 வருட நட்சத்திர ஆராதனை பவுர்ணமி நிகழ்ச்சி நிரல்!


15.10.16 சனிக்கிழமை அன்று வரும் புரட்டாசி பவுர்ணமிக்கு ஜன்ம நட்சத்திர ஆராதனை பவுர்ணமி என்று பெயர்;இந்த நாளில் விருதுநகர் மாவட்டம்,ராஜபாளயம் தாலுகா,சோழாபுரம் கிராமத்தில் அமைந்திருக்கும் அருள்நிறை குழல்வாய்மொழி அம்பாள் சமேத விக்கிரபாண்டீஸ்வரர் திருக்கோவிலில் ஜன்ம நட்சத்திர ஆராதனை பவுர்ணமி விழா நடைபெற இருக்கின்றது;

இங்கே,அருள்நிறை குழல்வாய்மொழி அம்பாள் சன்னதிக்கு அருகில் 1000 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு சித்தர் ஜீவசமாதியாகி உள்ளார்;இவரது பெயர் மஹாதேவசித்தர் !


இவரது அருளாணையின் படி இந்த ஜன்ம நட்சத்திர ஆராதனை பவுர்ணமி விழா நடைபெற இருக்கின்றது;யாரெல்லாம் இந்த விழாவில் கலந்து கொள்கின்றார்களோ,அவர்களுடைய அனைத்து கர்மவினைகளும் நீங்கிவிடும்;

இந்த விழாவில் கலந்து கொள்ள விரும்புவோர் தமது பெயர்,ஜன்ம நட்சத்திரம்,தற்போது வசிக்கும் ஊர் ஆகிய விபரங்களை 9629439499 என்ற எண்ணிற்கு எஸ்.எம்.எஸ்.அனுப்பி முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்;எந்த விதமான கட்டணங்களும் கிடையாது;சாதாரண எஸ்.எம்.எஸ்.அனுப்பும் படி வேண்டிக் கொள்கின்றோம்;


15.10.16 சனிக்கிழமை காலை 9 மணி முதல் 10 மணி வரை 1 ஆம் திருமுறை ஓதுதல்(ஐந்து முக ருத்ராட்சம் இரண்டு கொண்டு வருக;சைவத் திருமுறை ஒதும்போது இரு உள்ளங்கைகளிலும் தலா ஒரு ருத்ராட்சம் வைத்து கைகளை மடக்கி வைத்து பாடுவது மிகவும் நன்று;)


காலை 10.30 மணி முதல் 11.30 மணி வரை வேள்வி பூஜை


மதியம் 11.30 மணி முதல் 12  மணி வரை பஞ்சவாத்தியங்கள் முழங்க ஜன்ம நட்சத்திர மரக்கன்றுகள் நடுதல்

மதியம் 12 மணிக்கு உச்சிக்கால பூஜை


மதியம் 12.30 மணி முதல் 1.30 மணி வரை அன்னதானம் வழங்குதல்(தொலைதூர மாநிலங்களிலும்,அயல்நாடுகளிலும் வசிப்பவர்கள் அன்னதானத்தில் பங்கேற்கலாம்.இது தொடர்பாக மேலும் விபரம் அறிய வாட்ஸ் அப் எண்:9092116990 ஐ தொடர்பு கொள்ளவும்)

மதியம் 1.30 மணி முதல் மாலை 4 மணி வரை ஓய்வு

மாலை 4 மணி முதல் 5 மணி வரை சாயரட்சை பூஜை


மாலை 5 மணி முதல் 6 வரை திருமுறைப்பதிகங்கள் பாடுதல்
மாலை 6.30 முதல் 7.30 வரை இரவு அன்னதானத்துடன் நிகழ்ச்சிகள் நிறைவு பெறும்;

நிகழ்ச்சி நிறைவடைந்ததும்,வேறு எந்த கோவிலுக்கும் செல்லாமலும்,வேறு எவர் வீட்டிற்கும் செல்லாமலும் அவரவர் வீடுகளுக்குச் செல்வது அவசியம்;இதன் மூலமாக ஜன்ம நட்சத்திர ஆராதனை விழாவின் முழு சிவபுண்ணியமும் கலந்து கொள்பவர்களுக்கு கிட்டும்;


குறிப்பு:கோவிலுக்கு அருகில் எந்தவிதமான கடைகளும் கிடையாது;கிராமப்புறத்தில் இருக்கும் ஆலயம் என்பதால்,வருபவர்கள் அதற்கு ஏற்றாற்போல தயாராகி வருக!


கோவிலின் இருப்பிடம்:
தமிழ்நாட்டின் வடக்குப் பகுதியில் இருந்து வருபவர்களுக்கு:
மதுரை டூ ராஜபாளையம்
ராஜபாளையம் டூ சங்கரன் கோவில் சாலையில்(புதிய பேருந்து நிலையம் வழியாக) 8 கி.மீ.பயணித்தால் சோழாபுரம் கிராமத்தை அடையலாம்;


தமிழ்நாட்டின் தெற்கு மற்றும் கிழக்குப் பகுதியில் இருந்து வருபவர்களுக்கு:
சங்கரன் கோவில் வந்துவிடவேண்டும்;அங்கிருந்து ராஜபாளையம் செல்லும் சாலையில் கரிவலம் வந்த நல்லூர் கடந்து முறம்பு என்ற கிராமத்தை அடைய வேண்டும்;அங்கிருந்து ராஜபாளையம் சாலையில் ஒரு கி.மீ.தொலைவில் பாலத்திற்கு மேற்குப்புறம் ஆலயம் அமைந்திருக்கின்றது;

$இந்தியா முழுவதும் இருந்து இந்த அரிய நிகழ்ச்சியில் கலந்து கொள்ள ஏராளமான அன்பர்கள் முன்பதிவு செய்துள்ளார்கள்;அவர்கள் அனைவரையும் வருக! வருக! வருக!!! என்று மஹாவில்வம் பவுண்டேஷன் வரவேற்கின்றது;


ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் மஹாதேவாய நமஹ