Sunday, July 31, 2016

அன்னை ஆதிவராகி(அரசாலை)யின் வடிவங்கள்


அன்னை வராகி, இராமநாதபுரம் அருகில் அமைந்திருக்கும் உத்திரகோசமங்கை என்ற சிற்றூரில்(ராமநாதபுரம் டூ தூத்துக்குடி சாலையில் 18 வது கி.மீ) ஆதி வராகி என்ற மங்கள மகா காளியாக அருளாட்சி புரிந்துவருகிறாள்;இந்த அன்னை சுயம்புவாக உருவானதால்,சக்தி பலமடங்கு அதிகம்;


தஞ்சாவூர் பிரகதீஸ்வரர் ஆலயத்தில் ப்ருகத் வராகியாக விவசாயத்தை வளமாக்கும் அன்னையாக ஆட்சி புரிந்து வருகிறாள்;


காஞ்சிபுரத்திற்கும்,அரக்கோணத்திற்கும் நடுவில் பள்ளூர் என்ற கிராமத்தில் அரசாலை என்ற பெயரில் இந்தப் பிரபஞ்சத்தை ஆண்டு வருகிறாள்;


திருச்சி திருவானைக்கா அருள்மிகு ஜம்புலிங்கேஸ்வரர் ஆலயத்தில் அகிலாண்டேஸ்வரியாக அன்னை வராகி அருள்மழை பொழிந்து வருகிறாள்;


மதுரை மீனாட்சியும் அன்னையே!


காசி விசாலாட்சியும் அன்னை வராகியே!


பூமியில் இருக்கும் அனைத்து உக்கிரபெண் தெய்வங்களும் அன்னை வார்த்தாளியின் ஆவரணதெய்வங்களே!!!


7.8.2016 ஞாயிற்றுக்கிழமை அன்று ஆடி மாத வளர்பிறை பஞ்சமி திதி வருகின்றது;இந்த நாள் தான் ராஜராஜேஸ்வரியின் புருவ மத்தியில் இருந்து அன்னை வராகி தோன்றிய நாள்;

இந்த நாளில் மேலே தெரிவிக்கப்பட்டிருக்கும் ஆலயங்களில் ஒன்றிற்குச் சென்று,அன்னை வராகியின் 12 பெயர்களை அன்று முழுவதும் ஜபிக்க வேண்டும்;இதன் மூலமாக அன்னையின் செல்லப் பிள்ளையாக மாறும் பாக்கியம் நமக்குக் கிட்டும்;

ஓம் ரீங் வாத்தியார் ஐயா,வாத்தியார் ஐயா
பஞ்சமி
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரி
சமயசங்கேதா
வராகி
போத்ரிணி
சிவை
வார்த்தாளி
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரி
அரிக்னி

இந்த 12 பெயர்களை இந்த நன்னாளன்று முழுவதும் ஜபிப்பது அவசியம்;அன்னை வராகியைச் சரணடைய விரும்புவோர் இந்த நாளில் அன்னையை வழிபட ஆரம்பிக்கலாம்;எப்படி வழிபடுவது?

இந்த 12 பெயர்களை ஜபிப்பதுதான்;

இந்த ஆலயங்களுக்குச் செல்ல இயலாதவர்கள் அருகில் இருக்கும் சிவாலயம் அல்லது அம்பாள் ஆலயத்திற்குச் சென்று ஜபிக்கலாம்;

இன்று முழுவதும் ஜபிக்க இயலாதவர்கள் காலையில் ஒரு மணி நேரமும்,இரவில் ஒரு மணி நேரமும் ஜபிக்கலாம்;
ஆலயம் செல்ல கூட இயலாதவர்கள் வீட்டில் இரவில் ஒரு மணி நேரம் ஜபிக்கலாம்;

தொலைதூர தேசங்களில் வாழ்ந்துவரும் தமிழர்கள் அவரவர் வீட்டு பூஜை அறைகளில் ஜபிக்கலாம்;

சென்னையில் வசிப்பவர்கள் திருவொற்றியூர் வடிவுடையம்மாள் ஆலயத்தில் ஜபிக்கலாம்;ஏனெனில்,இங்கேதான் அருட்பிரகாசம் ராமலிங்க வள்ளலார் 38 ஆண்டுகள் ஒரு நாள் கூடவிடாமல் அன்னையை வழிபட்டு ஒளி உடல் பெற்றார்!!!



ஓம் வராகி சிவசக்தி ஓம்

வராகி அவதாரங்களில் முதன்மையான வராகி சக்திகள்:அஸ்வாரூடாதேவி & சம்பத்கரி வராகி!!!


ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவியாக பிரபஞ்ச அன்னை வராகி இருக்கின்றாள்;இவளது படையில் இருக்கும் குதிரைப்படைத்தளபதியாக இருப்பவள் வராகியின் 64 அவதாரங்களில் ஒருத்தியான குதிரைக்காரி என்ற அஸ்வாரூடா இருக்கின்றாள்;இவளது படையில் இருக்கும் யானைப்படையின் தலைவியாக சம்பத்கரி வராகி இருக்கின்றாள்;

நமது ஐம்புலன்களையும் அடக்கி ஆள்பவள் இவள்;இவளை உபாசித்தால்,அரசாங்கம்,அரசுகள்,அதிகாரத்தில் இருப்பவர்கள் அனைவரும் நமக்கு கட்டுப்பட்டவர்களாக இருப்பார்கள்;நம்முடைய மனதில் உருவாகும் தேவையற்ற மற்றும் மித மிஞ்சிய சிற்றின்ப ஆசைகளை முழுமையாகக் கட்டுப்படுத்திட இந்த அன்னையைச் சரணடைவது மட்டுமே பிரபஞ்சத்தின் ஒரே வழி! (வேறு வழி இல்லை;)மேலும்,நான் என்ற அகங்காரம் அழியவும் இந்த அன்னை வழிபாடு அவசியம்;

எதிரிகளின் தீரவே தீராத,திருந்தவே திருந்தாத திமிரை அடக்கிட விரும்புவோர் சம்பத்கரி வராகியை வழிபடவேண்டும்;

இவையெல்லாம் முறையான தீட்சை பெற்றே வழிபடவேண்டிய வராகி வடிவங்கள்;

தஞ்சை பெரிய கோவிலுக்குள் இருந்து கொண்டு தமிழ்நாட்டையே ஆண்டுவருபவள் ப்ருஹத் வராகி;இந்த அன்னையை முறைப்படி யார் வழிபட்டு வருகின்றார்களோ அவர்கள் இந்த பூமியில் மனிதர்கள் வசிக்கும் அனைத்துப் பகுதிகளையும் வெற்றி கொள்வார்கள்;இந்த அன்னையை முறைப்படி வழிபட்டதால் தான் ராஜராஜசோழனின் படைகள் உலகத்தில் மூன்றில் இரண்டு பகுதியை கைப்பற்றி உலகத்தின் மிகப் பெரிய அரசாங்கத்தை உருவாக்கியது;இவரது சோழ சாம்ராஜ்ஜியம் இன்றைய இந்தியா முழுவதும்,பங்களாதேஷ்,திபத்,சீனா முழுவதும்,ஜப்பான்,மலேஷியா,சிங்கப்பூர்,ஹாங்காங்,கொரியத் தீபகற்பம்,பிலிப்பைன்ஸ் மற்றும் ஆஸ்திரேலியா,ஸ்ரீலங்கா முழுவதும் பரவியிருந்தது;

உலகத்தை முதன் முதலில் ஜெயித்தது அலெக்ஸாண்டர் என்பது திட்டமிட்ட பொய்;அலெக்ஸாண்டர் கைப்பற்றிய நிலப்பரப்பு,ராஜராஜசோழனின் சாம்ராஜ்ஜியத்தில் 100 இல் ஒரு பங்கு கூட கிடையாது என்பதுதான் உண்மை;

ஓம் ஹ்ரீம் மஹா பைரவாய நமஹ
ஓம் ஹ்ரீம் மஹா வராகி நமஹ

ஓம் வராகி சிவசக்தி ஓம்






அன்னை அரசாலையின் பெருமைகள்!!!


உங்களை நியாயமற்ற முறையில் எதிர்க்கும் எதிரிகளையும்,அவர்கள் உங்களுக்குச் செய்யும் இடையூறுகளையும்(பில்லி,ஏவல்,சூனியம்,மாந்திரீகம்,பேயை ஏவுதல்,பிசாசை அனுப்புதல்,மாந்திரீக ஏவலின் உச்சமான காஷ்மோராவை ஏவுதல்) நீங்கள் பதிலடி கொடுக்காமலேயே,பக்தியின் மூலமாகவே பதிலடி கொடுக்க வேண்டுமா? அன்னை அரசாலை என்ற வாராகி(தமிழில் வராகி)யை மனப்பூர்வமாகச் சரணடைந்தால் போதும்;அவர்களையும்,அவர்களின் ரகசிய பக்கபலத்தையும் இருந்த இடம் தெரியாமல் ஆக்கிவிடுவாள் பிரபஞ்ச அன்னை அரசாலை என்ற வராகி!!!


ஆனால் நீங்கள் நியாயத்திற்கும் தர்மத்திற்கும் எதிரான,உங்களுக்கு எதிரான நல்ல மனிதர்களை அழிக்க இந்த அன்னையை பிரார்த்திக்கக்கூடாது;அப்படிச் செய்தால்,இந்த பிரபஞ்ச அன்னையை ஏமாற்றிட முடியாது;ஒருபோதும் வரம் தரமாட்டாள்;


நீங்கள் நல்லவராக இருக்க வேண்டும்;உங்கள் எதிரிகள் நியாயமற்ற அநீதியாளர்களாக இருக்க வேண்டும்;அவர்களை அழிப்பதற்கே அன்னை தன் அருளை உங்களுக்கு வாரி வழங்குவாள்; உங்களுக்கு அதிக சக்திவாய்ந்த சூட்சும பாதுகாப்பை அன்னை வழங்குவாள்;


கழுகுகளிடமிருந்து தன் குஞ்சுகளைக் காக்க பெட்டைக் கோழி எப்படி ஆக்ரோஷமாகப் பாய்ந்து பருந்தை துரத்தி அடிக்கிறது!!!
அப்படித்தான் இந்த பிரபஞ்ச அன்னை அரசாலையும் தன் அன்புக் குழந்தைகளான பக்தர்களைக் காக்க எதிரிகள் என்னும் வல்லூறுகளைத் தாக்கி அழித்து காப்பாற்றுகிறாள்;


அன்னை அரசாலை(வராகி)யை உபாசிப்பவர்கள் அன்னையிடம் சரணடைந்தால் போதும்;நமது கோரிக்கை எதுவாக இருந்தாலும் படிப்படியாக நிறைவேறிவிடும்;


திருமணத் தடை,கல்வித்தடை,கடன் தொல்லை,நோய் உபாதை,சொத்துப் பிரச்சினை, ஆன்மீகத்தில் முன்னேற விரும்பியும் தகுந்த குரு கிடைக்காமை,நீண்டகாலமாக குழந்தையின்மை,நீண்டகாலமாக சோகத்தை மட்டுமே வாழ்க்கையாகக் கொண்டிருத்தல்,தொழிலில் முன்னேற்றமின்மை,வேலையில் அக்கறையின்மை முதலான சகல தினசரி வாழ்வியல் சிக்கல்களையும் தீர்க்க அன்னை அரசாலையைச் சரணடைவோம்;

அன்னை அரசாலை(வராகி)யை தொடர்ந்து வழிபடுபவர்களின் வாக்கு வன்மையை அதிகரிப்பாள்;கர்வம் பிடித்தவர்களை பலம் குன்றிப் போகச் செய்வாள்;பிறப்பும்,இறப்பும் அற்ற இந்த அன்னை ப்ராஞப்தம்,சஞ்சிதம்,ஆகாம்யம் ஆகிய மூன்று கர்மங்களையும் தனது ஒரே மூச்சுக்காற்றினால் வீசித் தள்ளுபவள்;


நியாயமற்றவர்களை பாரபட்சமின்றித் தண்டிப்பாள்;
ராஜராஜேஸ்வரியின் படைத்தலைவியாக இருக்க இவள் ஒருத்திக்கே வல்லமை உண்டு;ஆளுமை உண்டு;


அவளது வேகமும்,கம்பீரமும் அவள் குதிரை மீது வரும் போது தெரியும்;அவள் தண்டனையின் உக்கிரம் அவள் கையில் உலக்கை கொண்டு வரும் போது தெரியும்;
தன்னிடம் அடைக்கலம் பெற்றவர்களை அவள் என்றுமே காப்பாற்றாமல் விட்டதில்லை;


தூய மனம்,குற்றமற்ற நடத்தை,நிஜமான பக்தி இவற்றைக் கொண்டவர்களையே அவள் தனது பக்தர்களாக ஏற்பாள்;
வெறும் பூஜைகளாலும்,தீப தூபங்களாலும் அவளை ஏமாற்ற முடியாது;


நீங்கள் அவளுக்கு எப்போதும் பிரியமானவராக இருங்கள்;
அவள் அருள் தானாகவே உங்களுக்கு வந்து அடையும்;உங்கள் இடையூறுகள் நீங்கும்;எதிரிகள் வீழ்வார்கள்;உங்கள் வாழ்க்கை முழுவதும் அவள் அருள் நிலைத்திருக்கும்;


வாழ்க பைரவ அறமுடன்; வளர்க வராகி அருளுடன்!!!


அடுத்த மன்வந்திரம் பற்றி காகபுஜண்டரின் நாடிவாக்கு!!


நமது இந்துக் காலக்கணக்கீடுதான் உலகின் தொன்மையான காலக்கணக்கீடு;இதை அடுத்த நூற்றாண்டில் அறிவியல்பூர்வமான உண்மை என்பதை நவீன வானவியல் கண்டுபிடிக்கும்;அதன் பிறகு தற்போதைய கிரிகேரியன் காலண்டர் வழக்கொழிந்து போகும்;

க்ருதயுகம் 17,28,000 ஆண்டுகளைக் கொண்டது;
திரோதாயுகம் 12,96,000 ஆண்டுகளை உடையது;
துவாபரயுகம் 8,64,000 ஆண்டுகளைக் கொண்டிருக்கிறது;
நாம் வாழும் கலியுகத்தின் ஆயுள் 4,32,000 ஆண்டுகள் ஆகும்;நாம் கலியுகாதி 5116 ஆம் ஆண்டில் வாழ்ந்து கொண்டிருக்கிறது;

இந்த நான்கு யுகங்களும் சேர்ந்தது ஒரு சதுர்யுகம் ஆகும்;நான்கு சதுர்யுகம் சேர்ந்தது ஒரு மஹாயுகம் ஆகும்;24 மஹாயுகங்கள் சேர்ந்தது ஒரு மன்வந்திரம் ஆகும்;நாம் இப்போது வைவஸ்த மன்வந்திர காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம்;இந்த வைவஸ்த மன்வந்திரத்தின் காலம் 19,05,06,932 ஆண்டுகள் ஆகும்.

இந்த மன்வந்திரம் நிறைவானப் பின்னர்,ஸீர்ய ஸாவர்ண்ய மன்வந்திரம் ஆரம்பமாகும்;அப்போது பூமியின் அச்சு 23 1 / 2 டிகிரி சாய்ந்து இருக்காது;28 டிகிரி சாய்ந்து இருக்கும்;இதனால் பூமியின் துருவம் மாறிவிடும்;சூரியனுக்கும் சனிக்கும் இடையே பல புதிய கிரகங்கள் தோன்றும்;சந்திரனின் சலனமும் முற்றிலும் மாறிவிடும்;சில மலைகள் பூமிக்குள் புதைந்துவிடும்;சில புதிய மலைகள் தோன்றும்;நட்சத்திர ஆரம்பம் அசுவினிக்குப் பதிலாக கேட்டையில் இருந்து பின்புறமாக எண்ணப்படும்;ஒரு மாதத்திற்கு 33 நாட்கள் வீதம் 10 மாதங்கள் இருக்கும்.



இந்த ஆச்சரியமான உண்மைகள் காகபுஜண்டர் நாடியில் இருக்கின்றன;ஆதாரம்:ஜோதிட அரசு,மாத இதழ்,பக்கம்4, 5;வெளியீடு ஏப்ரல் 2015

ஸ்ரீ துர்கா தேவியின் நாமாவளிகள்

ராகு மஹாதிசை நடப்பில் இருப்பவர்கள்
மற்றும்
ராகுவின் நட்சத்திரங்களான திருவாதிரை/சுவாதி/.சதயம் நட்சத்திரங்களில் ஒன்றில் பிறந்தவர்கள்
மற்றும்
திருமணம் ஆகி ஏதோ ஒரு காரணத்தால் பிரிந்து வாழும் தம்பதியரில் யாராவது ஒருவராவது இந்த துதியை தினமும் வரும் ராகு கால நேரத்தில் கடைசி 30 நிமிடங்களில் துர்கை சன்னதியில் ஜபித்து வரவேண்டும்;

இதன் மூலமாக அவர்களுடைய நீண்டகால துக்கங்கள்,சோகங்கள் படிப்படியாக மறையத் துவங்கும்;

அசைவம்,மது இரண்டையும் கைவிட்டவர்களுக்கே இறைவரம் கிட்டும்;துர்கையை வழிபட்டால்,ராகுவின் உக்கிரம் தணியும்;

கணினி,செல்போன்,செயற்கைக்கோள்,மல்டிலெவல் மார்கெட்டிங்,சட்டபூர்வமான சூதாட்டம்,கமிஷன் தொழில்கள்,விதவை போன்றவை ராகுவின் அம்சத்தைப்பிரதிபலிப்பவை;

ஓம் ஸ்ரீ ஆதிசக்தி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீஆதி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ ஆஸீரி துர்கையே போற்றி
ஒம் ஸ்ரீ உக்ர சண்டா துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ கல்யாணி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ காளிகை துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ கரிஷ்டா துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ காத்யாயனி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ குமாரி துர்கையே போற்றி
ஒம் ஸ்ரீ கூஷ்மாண்டா துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ சசி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ சண்டிகா துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ சபரீ துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ சாந்தி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ சுபத்ரா துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ சூலினி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ தீபதுர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ பிரம்மசாரிணி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ மூல துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ ரோகிணி துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ லவண துர்கையே போற்றி
ஓம் ஸ்ரீ வனதுர்கையே போற்றி
ஓம் ஜ்வாலா துர்கையே போற்றி
ஓம் சந்தியா துர்கையே போற்றி

----------------------------------------------------------------------------------------------------------------------
18 கைகள் உடைய துர்கை இருப்பதை நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம்;
18,000 கைகள் கொண்ட பிரம்ம்ம்மாண்டமான துர்கை தேவி இருக்கின்றாள்;இந்த அன்னையை பூமியில் ஸ்தாபிக்க ஆசைப்படுவதும் ஒரு மகத்தான புண்ணியமே!'

ஓம் அகத்தீசாய நமஹ

Saturday, July 30, 2016

சிம்மகுருவும் ஆடி அமாவாசை அற்புதமும்


சூரியன் கடகராசியைக் கடக்கும் மாதம் ஆடிமாதம் என்று ஜோதிடப்படி அழைக்கப்படுகின்றது;இதையேதான் வானியல் ஆராய்ச்சிகளும் உறுதிபடுத்துகின்றன;

வானமண்டலத்தை 12 பாகங்களாகப் பிரித்து,ஒவ்வொன்றிற்கும் பெயர் சூட்டி அதுவே ராசிகளாக ஜோதிடத்தில் இருக்கின்றன;மேஷம்,ரிஷபம்,மிதுனம்,கடகம்,சிம்மம்,கன்னி,
துலாம்,விருச்சிகம்,தனுசு,மகரம்,கும்பம்,மீனம் என்று 12 ராசிகள் ஜோதிடப்படி மட்டும் ராசிகள் அல்ல;வானியல் ஆராய்ச்சிகளின் படியும் உண்மை! இவைகளை அமெரிக்க விண்வெளி அமைப்பான நாசா ஒப்புக் கொண்டால்,உலக அளவில் கிறிஸ்தவத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுவிடும் என்பதால் ஜோதிடம் என்பது மூடநம்பிக்கையாகவும்,வானியல் என்பது அறிவியல் துறையாகவும் திட்டமிட்டு பிரிக்கப்பட்டுள்ளது;


நீங்கள் ஆயில்யம் நட்சத்திரத்தில் பிறந்தவர் என்று வைத்துக்கொள்வோம்;நீங்கள் கடகராசி மண்டலத்தில் இருக்கும் ஆயில்யம் நட்சத்திர உலகத்தில் இருந்து இந்த பூமிக்கு அனுப்பப் பட்ட பிரதிநிதி என்று அர்த்தம்;இந்த வரிகளுக்குள் புதைந்திருக்கும் தெய்வீக,ஆன்மீக,ரசவாத உண்மையை தாங்கள் உணர்வுபூர்வமாக உணரவேண்டும் என்றால் அதற்கு ஒரே ஒரு வழி தான் உண்டு;

அது

உங்களுடைய வாழ்நாளில்,அதுவும் இப்பிறவி நிறைவடைவதற்குள் அண்ணாமலையை 1008 முறை கிரிவலம் வந்துவிடவேண்டும்;அவ்வாறு வந்துவிட்டால்,உங்களுடைய சற்குரு உங்களைத் தேடிவருவார்;

குரு என்பவர் ஒவ்வொரு மனிதனுக்கும் முக்கியம்;அதைவிடவும் 1000 கோடி மடங்கு முக்கியமானவர் சற்குரு!

ஒவ்வொரு நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கும் சற்குருநாதர்கள் இருக்கின்றார்கள்;இவர்கள் ஒவ்வொருவருடைய வயதும் பல ஆயிரம் ஆண்டுகள்! ஒவ்வொரு காலத்திற்கு ஏற்றவாறும் இவர்கள் தமது நடையுடைபாவனையை மாற்றிக் கொண்டு அந்தந்த காலகட்டத்திற்கு ஏற்றவாறு நவீன மனிதத் தோற்றத்தில் தான் இருப்பார்கள்;

இவர்களின் பிறப்பைப் பற்றியும் ஜோதிடக் கலைதான் தெரிவிக்கின்றது;தமிழ் வருடங்கள் 60! இந்த 60 ஆண்டுகளில் இந்த பூமியில் பிறக்கும் கோடிக்கணக்கான மனிதர்களில் இரண்டே இரண்டு மனிதர்கள் மட்டும் பல ஆயிரக்கணக்கான வயது ஆயுளுடன் பிறக்கின்றார்கள்;மாசி மாதத்தில் வரும் கும்ப லக்னம் அல்லது பங்குனி மாதத்தில் வரும் கும்ப லக்னத்தில் பிறக்கின்றார்கள்;இவர்களுக்கு கும்பலக்னத்தில் குரு இருக்கும்;அல்லது மீன லக்னத்தில் குரு இருக்கும்;இதற்கு மேல் சித்தர் பெருமக்கள் தெரிவிக்கவில்லை;


நமது சற்குரு நம்மைத் தேடிவந்துவிட்டால்,இதுவரை நாம் எத்தனை மனிதப் பிறவிகள் எடுத்தோமோ,அத்தனை மனிதப்பிறப்பு கர்மவினைகளும் மலையளவு அல்லது கடலளவு இருக்கும்;அவைகள் அனைத்தையும் தனது ஒரே ஒரு உபதேசத்தின் மூலமாக நிர்மூலமாக்கி,நம்மை புதுப்பிறவி எடுக்க வைத்துவிடுவார்;அல்லது இந்தப் பிறவியோடு நமக்கு முக்தி கிடைக்க வைத்துவிடுவார்;(ஏனெனில்,நம்மில் பலர் 2,00,000 முறை இந்த பூமியில் திரும்பத் திரும்பப் பிறந்திருக்கின்றோம்;சிலர் 1 கோடி முறை மனிதப் பிறவி எடுத்துள்ளோம்;)இந்த சித்தர்கள் ரகசியத்தை நமக்கு தெரிவிப்பவர் தமிழ் மொழியின் தந்தையும்,ஜோதிடக்கலை,சித்தமருத்துவம்,யோகக்கலையின் ஆதிகுருவுமான அகத்தியமகரிஷி அவர்கள் நமக்கு உபதேசமாகத் தெரிவித்துள்ளார்;அவருக்கு நாம் நமது ஆத்மார்த்தமான ஆயிரம் கோடி நன்றிகளைத் தெரிவித்துக் கொள்ளவேண்டும்;


இந்த 1008 முறை கிரிவலத்தை துவக்கிட ஏற்ற சிறந்த நாள் ஆடி அமாவாசை நாள் மட்டுமே! ஒவ்வொரு ஆடி அமாவாசையும் சிறந்த நாளாக இருந்தாலும்,இந்த சதுர்முக வருடம் வரும் ஆடி அமாவாசைக்கு பல சிறப்புகள் உள்ளன;இந்த வருடம் வரும் ஆடி அமாவாசையானது ஆடி 18 அன்று வருமாறு அமைந்திருக்கின்றது;அதே நாளில் சிம்மத்தில் இருக்கும் குருவானவர் கன்னிக்குப் பெயர்ச்சி ஆகின்றார்;


குரு ஒரு ராசியை கடக்க ஒரு வருடம் எடுத்துக் கொள்கின்றார்;கடந்த ஓராண்டாக குரு சிம்மத்தில் இருக்கின்றார்;சிம்மத்தில் குரு இருக்க,வரும் ஆடி அமாவாசையன்று அண்ணாமலை கிரிவலத்தை துவக்கிட ஏற்ற காலம் ஆகும்;12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிம்மகுருவும் ஆடி அமாவாசையும் சேர்ந்து வரும்;

இந்த வருடம் ஆடி அமாவாசைத்திதியானது 1.8.16 திங்கட்கிழமை நள்ளிரவு 3.48 முதல் 2.8.16 செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 3.10 வரை அமைந்திருக்கின்றது;


முதல் நாளே நமது குலதெய்வத்திடம் மனப்பூர்வமாக வேண்டிக் கொள்ள வேண்டும்;ஆடி அமாவாசையன்று துவங்கும் இந்த அண்ணாமலை கிரிவலம் இப்பிறவி நிறைவடைவதற்குள் 1008 முறை வலம் வரவேண்டும் என்று வேண்டிக் கொள்ள வேண்டும்;
ஒரு நாளுக்கு ஒரு முறை வீதம் 1008 முறை கிரிவலம் செல்ல விரும்பினால்,தொடர்ந்து 3 ஆண்டுகள் அண்ணாமலையில் தங்கவேண்டும்:இது நம்மைப் போன்றவர்களுக்கு சாத்தியமா?


எனவே,வாரம் ஒருமுறை அல்லது மாதம் இரண்டு நாட்கள் அண்ணாமலை கிரிவலம் வந்தால்,அவரவர் பூர்வஜன்ம கர்மாக்கள் படி அடுத்த ஐந்து முதல் பத்து ஆண்டுகளில் 1008 முறை அருணாச்சலத்தை வலம் வந்துவிட முடியும்;


இதிலும் சில சூட்சுமங்களை கும்பமுனி நமக்குத் தெரிவித்திருக்கின்றார்;
108 அமாவாசை நாட்கள்
108 விசாக நட்சத்திர நாட்கள்
108 நமது பிறந்த நட்சத்திர நாட்கள்
108 கார்த்திகை மாத பவுர்ணமி
108 திருவாதிரை நட்சத்திர நாட்கள்
108 தேய்பிறை சிவராத்திரி நாட்கள்
108 பிரதோஷ நாட்கள்
108 திங்கட்கிழமை நாட்கள்
108 தேய்பிறை அஷ்டமி நாட்கள்
108 பஞ்சமி நாட்கள் ஆக மொத்தம் 1080 நாட்கள் வலம் வரத் திட்டமிட்டு செயல்படுவதன் மூலமாக இப்பிறவியிலேயே நமது சற்குருவின் அருட்பார்வைக்குள் வந்துவிடலாம்;

முதல் முறையாக அண்ணாமலை கிரிவலம் வர செய்யும் முயற்சியே பெருமுயற்சியாக இருக்கும்;ஒரு வருடத்தில்(ஒருவருடம் என்பது சித்திரை 1 முதல் பங்குனி 30 வரையிலான கால அளவு) குறைந்த பட்சம் 12 முறை கிரிவலம் வந்துவிட்டால்,அதன் பிறகு அண்ணாமலையின் அருமை பெருமைகளை உணர்ந்து கொள்ளலாம்;இமயமலையை விடவும் 400 கோடி வருடங்கள் பழமையானது அருணாச்சலம் என்ற அண்ணாமலை;இதன் அருமை பெருமைகளை உணர்ந்தமையால் தான் நமது முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி,நமது கிழக்கு எல்லைப்புற மாநிலத்திற்கு அருணாச்சலப் பிரதேசம் என்று பெயர் வைத்தார்;


முதல் பத்து வருடங்களில் வருடத்திற்கு 10 முறை வீதம் 100 முறை கிரிவலம் வந்துவிட்டாலே நமது கர்மச்சுமைகளில் 80% கரைந்து காணாமல் போய்விடும்;கடந்த ஐந்து முற்பிறவிகளில் நாம் சேமித்த கர்மச்சுமைகளில் இருந்துதான் 80% கரையும்;

அதற்கு முந்தைய 1,98,995 பிறவிகளில் செய்த கர்மாக்களை யார் கரைப்பது?


நம்மால் மட்டுமோ

அல்லது

நமது குருவானாக இருப்பவரால் நமது கர்மச்சுமையை சுமக்க முடியாது;அவர் இதை வாங்கவும் மாட்டார்;

அல்லது

நமது கர்மச்சுமையை வேறு யாரும் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்;

நமது ஜன்ம நட்சத்திரத்துக்குரிய சற்குருவால் மட்டுமே நம்மை பரிசுத்த ஆத்மாவாக மாற்றிவிடமுடியும்;

1008 முறை அண்ணாமலை கிரிவலத்தை நிறைவு செய்யும் வரை அண்ணாமலையாரையே நமது சற்குருவாக ஏற்று அடிக்கடி கிரிவலம் வரவேண்டும்;


தற்போதைய காலகட்டத்தில் அண்ணாமலையைச் சுற்றிலும் வாழும் திருக்கோவிலூர்,வேலூர்,காட்பாடி,ஆம்பூர்,விழுப்புரம்,
திண்டிவனம்,பாண்டிச்சேரி,சேலம்,சென்னை பகுதி மக்களுக்கு மிகவும் சுலபமான வாய்ப்பு;மிகவும் குறைந்த மணிநேரங்களில் அண்ணாமலையை வந்தடைய முடியும்;


முயற்சிப்போமா?


ஓம் அகத்தீசாய நமஹ

ஓம் அருணாச்சலாய நமஹ

Friday, July 15, 2016

உங்கள் கடனைத் தீர்க்க உதவும் மைத்ர முகூர்த்தநேரம் 2016 டூ 2017


கலியுகத்தில் மனிதராகப் பிறந்த ஒவ்வொருவருமே கடன் அல்லது நோய் அல்லது எதிரி அல்லது நிம்மதியின்மை=இவைகளில் ஏதாவது ஒன்றில் சிக்க வேண்டும் என்பது பூர்வகர்மவிதியாகும்;தகுந்த குருவை கண்டறிந்து அவரைச் சரணடைந்தாலோ அல்லது தினமும்/வாரம் ஒருமுறை குலதெய்வ வழிபாடு செய்வதன் மூலமாகவோ இவைகளில் இருந்து சிக்காமல் வாழவும் முடியும்.

ஒருபோதும் பிறருக்கு நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ தொந்தரவு தராமல் இருப்பவர்களுக்கு பெரிய சிக்கல்கள் வராது;அப்படி இருக்கப் பழகுவது கொஞ்சம் சிரமம் தான்;

2009 ஆம் வருடம் முதல் வருடம் தோறும் மைத்ரமுகூர்த்தம் நேரத்தை கணித்து வெளியிட்டுவருகிறோம்;இந்த நேரத்தில் நாம் வாங்கிய கடனில் அசலில் ஒரு பகுதியைத் திருப்பித் தர வேண்டும்;அப்படி ஒருமுறை செய்தால் நமதுகடன் எவ்வளவு பெரிய தொகையாக இருந்தாலும் அந்தக் கடன் தீர்ந்துவிடும்;

உதாரணமாக மாரிமுத்து என்பவரிடம் நீங்கள் ரூ.1,00,000/-கடன் வாங்கி இருக்கிறீர்கள்;கடன் வாங்கி 6 ஆண்டுகள் ஆகிவிட்டன;இப்போது என்ன நினைப்பீர்கள்? இந்த 6 ஆண்டுகளாக நாம் கொடுத்த வட்டித்தொகையை நினைத்து பிரமித்துப் போவீர்கள்;ஆனால்,கடனை அடைக்க வழியே தெரியாது;இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நேரத்தில் ரூ.1000/-அளவுக்காவது பணத்தைக் கொண்டு போய் மாரிமுத்துவிடம் கொடுத்து,இந்தப் பணத்தை அசலில் வரவு வைத்துக் கொள்ளுங்கள்;என்று வேண்ட வேண்டும்;அவரும் அவரது வரவு செலவு ஏட்டில் வரவு வைக்க வேண்டும்;அப்படி ஒரே ஒரு முறை செய்தாலே அதன் பிறகு மீதி ரூ.99,000/-கடன் வெகு விரைவில் தீர்ந்துவிடும்;

கடந்த ஐந்து ஆண்டுகளில் இப்படி ஏராளமானவர்களின் கடன் கள் இந்த மைத்ரமுகூர்த்தத்தைப் பயன்படுத்தியதால் தீர்ந்தது.இங்கே கொடுக்கப்பட்டிருக்கும் நேரம் இந்தியாவின் தென் மாநிலங்கள்,ஸ்ரீலங்கா,மாலத்தீவு,அந்தமான் தீவுகள் வரை வாழ்பவர்களுக்கு மட்டுமே பொருந்தும்.

அயல்நாடுகளில் வசிப்பவர்கள் இந்தியாவில் கடனை தீர்க்க விரும்பினால்,இந்திய நேரத்தில் அயல்நாட்டில் இருந்து பணத்தை அனுப்பலாம்;
வங்கிக் கடன் வாங்கியிருப்பவர்களும் இந்த நேரத்தைப் பயன்படுத்தலாம்;

கந்துவட்டி வாங்குபவர்களுக்கு இது பொருந்தாது;

15.7.16 வெள்ளி மதியம் 2 முதல் 4 வரை
26.7.16 செவ்வாய் இரவு 12.40 முதல் 2.40 வரை
12.8.16 வெள்ளி மதியம் 2.24 முதல் மாலை 4.24 வரை
22.8.16 திங்கள் இரவு 10.24 முதல் 12.24 வரை
8.9.16 வியாழன் காலை 10.36 முதல் 12.36 வரை
19.9.16 திங்கள் இரவு 8.08 முதல் 10.08 வரை
5.10.16 புதன் காலை 8.40 முதல் 10.40 வரை
6.10.16 வியாழன் காலை 8.44 முதல் 10.20 வரை
16.10.16 ஞாயிறு மாலை 6 முதல் இரவு 8 வரை
2.11.16 புதன் காலை 7 முதல் 9 வரை
13.11.16 ஞாயிறு மாலை 4.12 முதல் 6.12 வரை
26.11.16 சனி காலை 10.40 முதல் 12.40 வரை
26.11.16 மாலை 4.40 முதல் 6.40 வரை
26.11.16 இரவு 10.40 முதல் 12.40 வரை
29.11.16 செவ்வாய் காலை 6.52 முதல் 7.52 வரை
10.12.16 சனி மதியம் 2.24 முதல் 4.24 வரை
25.12.16 ஞாயிறு காலை 5.20 முதல் 7.20 வரை
26.12.16 திங்கள் காலை 5.24 முதல் 7.24 வரை
27.12.16 செவ்வாய் காலை 5.28 முதல் 7.28 வரை
6.1.17 வெள்ளி  மதியம் 1.14 முதல் 3.14 வரை
3.2.17 வெள்ளி காலை 10.40 முதல் 12.40 வரை
18.2.17 சனி இரவு 10.24 முதல் 12.24 வரை
2.3.17 வியாழன் காலை 8.52 முதல் 10.52 வரை
25.3.17 சனி காலை 7.44 முதல் 9.44 வரை
25.3.17 சனி மதியம் 1.44 முதல் 3.44 வரை
25.3.17 சனி இரவு 7.44 முதல் 9.44 வரை
30.3.17 வியாழன் காலை 7.04 முதல் 9.04 வரை

இப்படிக்கு கை அருணமுனி. . .ஸ்ரீவில்லிபுத்தூர் 9092116990   9364231011