Tuesday, April 12, 2016

ஸ்ரீலஸ்ரீதுர்கைச் சித்தர் அருளிய ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண பைரவ அஷ்டகம்!


கால தேவன் என்பது மஹா கால பைரவரின் மறுபெயர் ஆகும்;
அஷ்டபைரவர்களையும் விடவும் மிகவும் உயர்ந்த தெய்வீக சக்தி ஸ்ரீஸ்ரீஸ்ரீசொர்ண ஆகர்ஷண பைரவப் பெருமான்!

யார் கடந்த மூன்று பிறவிகளாக ஈசனை மட்டும் வழிபட்டு வந்தார்களோ,அவர்களும்;

யார் கடந்த மூன்று பிறவிகளுக்குள் ஒரே ஒரு பிறவியிலாவது சித்தர் ஒருவரிடம் சீடராக இருந்தாரோ அவர்களும்;
மட்டுமே இப்பிறவியில் பைரவ வழிபாட்டைத் தொடர்ந்து செய்ய முடியும் என்பது சிரஞ்சீவி சித்தர் காகபுஜண்டர் சித்தரின் வாக்கு ஆகும்;

அசைவம் சாப்பிடுவதும், மது அருந்துவதும்,புகை,போதைப் பொருட்களை பயன்படுத்துவதும் நம்மிடம் இருக்கும் கொஞ்ச நஞ்ச தெய்வீக முயற்சிகளையும் தகர்த்துவிடும்;சுலபமாக பிறரின் பொறாமை அல்லது கருமார்க்கத்தின்(மாந்திரீகம்) தாக்குதலுக்குள் வர வாய்ப்புக்கள் அதிகம்;

எனவே,யார் இவைகளை நிரந்தரமாகக் கைவிடுகிறார்களோ,அவர்கள் மட்டுமே இந்த அஷ்டகத்தை தினமும் பாடுவது நன்மை பயக்கும் விதமான பலனைத் தரும்;

தனம் தரும் வயிரவன் தளரடி பணிந்திடின்
 தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின்
  மகிழ்வுகள் வந்து விடும்
சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப் புன்னகை
  சிந்தையில் ஏற்றவனே
தனக்கிலையீடு யாருமே என்பான்
  தனமழை பெய்திடுவான்


வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான்
   வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட
   தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான்
   காவலாய் வந்திடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


முழுநிலவதனில் முறையோடு பூஜைகள்
   முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான்
   உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த்தாமரை மாலையை செபித்து
   முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தன மழை பெய்திடுவான்


நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான்
   நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான்
   தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான்
   வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கிலையீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்

பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான்
   பூரணன் யாவும் தனக்குள்ளே வைப்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை
   நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம்
    யாவையும் போக்கிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான்
   பொற்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில்
   மணியணிகலனாய் இருந்திடுவான்
நிழல்தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும்
   நின்மலன் நானென்பான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்


சதுர்முகன் ஆணவத்தலையினைக் கொய்தான்
   சத்தோடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான்
  புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான்
   பசும்பொன் இதுவென்றான்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தன மழை பெய்திடுவான்

ஜெய ஜெய வடுகநாதனே சரணம்
   வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம்
   ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ்த் தேவா
   செல்வங்கள் தந்திடுவாய்
தனக்கிலை யீடு யாருமே என்பான்
   தனமழை பெய்திடுவான்.




ஸ்ரீகாளிகாம்பாள் 108 போற்றி


அன்னையைச் சரணடைந்திருக்கும் ஒவ்வொருவரும் இந்த 108 போற்றியைப் பாடலாம்;ஸ்ரீகாளிகாம்பாளை குலதெய்வமாகக் கொண்டவர்களும் இதை தினமும் பாடலாம்/ஜபிக்கலாம்;


ராகு மஹாதிசை நடப்பில் உள்ளவர்கள்,கடுமையான சோகங்களை மட்டுமே இதுவரை தமது வாழ்க்கையில் பார்த்தவர்கள்,கண்ணீரை மட்டுமே தனது தினசரி வாழ்க்கையில் சந்தித்து வருபவர்கள் அதில் இருந்து மீள்வதற்கு ஸ்ரீகாளிகாம்பாள் 108 போற்றி கைகொடுக்கும்;


செய்யுமிவ் அர்ச்சனை சேர்ந்த துதியை
அம்மையே ஏற்று அருள்க அருள்கவே
சீரும் சிறப்பும் செல்வமும் பெற்று
வாழ்க பல்லாண்டு வாழ்க அருள்கவே


01.ஓம் அங்கையற்கண் அம்மையே போற்றி
02.ஓம் அகிலாண்ட நாயகியே போற்றி
03.ஓம் அருமறையின் வரம்பே போற்றி
04.ஓம் அறம் வளர்க்கும் அம்மையே போற்றி
05.ஓம் அரசிளங் குமரியே போற்றி
06.ஓம் அப்பர் பிணி மருந்தே போற்றி
07.ஓம் அமுத நாயகியே போற்றி
08.ஓம் அருந்தவ நாயகியே போற்றி
09.ஓம் அருள் நிறை அம்மையே போற்றி
10.ஓம் ஆலவாய்க்கரசியே போற்றி
11.ஓம் ஆறுமுகத்தின் அன்னையே போற்றி
12.ஓம் ஆதியின் பாதியே போற்றி
13.ஓம் ஆலால சுந்தரியே போற்றி
14.ஓம் ஆனந்த வல்லியே போற்றி
15.ஓம் இளவஞ்சிக் கொடியே போற்றி
16.ஓம் இமயத் தரசியே போற்றி
17.ஓம் இடபத் தோன் துணையே போற்றி
18.ஓம் ஈசுவரியே போற்றி
19.ஓம் உயிர் ஓவியமே போற்றி
20.ஓம் உலகம்மையே போற்றி
21.ஓம் ஊழ்வினைத் தீர்ப்பாய் போற்றி
22.ஓம் எண்திசையும் வென்றாய் போற்றி
23.ஓம் ஏகன் துணையே போற்றி
24.ஓம் ஐங்கரன் அன்னையே போற்றி
25.ஓம் ஐயம் தீர்ப்பாய் போற்றி
26.ஓம் ஒப்பிலர் அமுதே போற்றி
27.ஓம் ஓங்கார சுந்தரியே போற்றி
28.ஓம் கற்றோருக்கு இனியோய் போற்றி
29.ஓம் கல்லார்க்கு எளியோய் போற்றி
30.ஓம் கடம்பவன சுந்தரியே போற்றி
31.ஓம் கல்யாண சுந்தரியே போற்றி
32.ஓம் கனகமணிக் குன்றே போற்றி
33.ஓம் கற்பின் அரசியே போற்றி
34.ஓம் கருணை யூற்றே போற்றி
35.ஓம் கல்விக்கு வித்தே போற்றி
36.ஓம் கனகாம்பிகையே போற்றி
37.ஓம் கதிரொளிச் சுடரே போற்றி
38.ஓம் கற்பனை கடந்த கற்பகமே போற்றி
39.ஓம் காட்சிக்கினியோய் போற்றி
40.ஓம் காலம் வென்ற கற்பகமே போற்றி
41.ஓம் காமாட்சி அம்பிகையே போற்றி
42.ஓம் காளிகாம்பாள் அம்பிகையே போற்றி
43.ஓம் கிளியேந்திய கரத்தோய் போற்றி
44.ஓம் குலச்சிறை காத்தோய் போற்றி
45.ஓம் குற்றம் பொறுக்கும் குணமே போற்றி
46.ஓம் கூடற்கலாப மயிலே போற்றி
47.ஓம் கோலப் பசுங்கிளியே போற்றி
48.ஓம் சம்பந்தன் ஞானத்தாயே போற்றி
49.ஓம் சக்தி வடிவே போற்றி
50.ஓம் சங்கம் வளர்த்தாய் போற்றி
51. ஓம் சிவகாம சுந்தரியே போற்றி
52.ஓம் சித்தம் தெளிவிப்பாய் போற்றி
53.ஓம் சிவயோக நாயகியே போற்றி
54.ஓம் சிவானந்த வல்லியே போற்றி
55.ஓம் சிங்கார வல்லியே போற்றி
56.ஓம் செந்தமிழ்த் தாயே போற்றி
57.ஓம் செல்வத்துக் கரசியே போற்றி
58.ஓம் சேனைத் தலைவியே போற்றி
59.ஓம் சொக்கர் நாயகியே போற்றி
60.ஓம் சைவநெறி நிலைக்கச் செய்தோர் போற்றி
61.ஓம் ஞானாம்பிகையே போற்றி
62.ஓம் ஞானப் பூங்கோதையே போற்றி
63.ஓம் தமிழர் குலச்சுடரே போற்றி
64.ஓம் திருவுடையம்மையே போற்றி
65.ஓம் திசையெல்லாம் புரந்தாய் போற்றி
66.ஓம் திரிபுரசுந்தரியே போற்றி
67.ஓம் திருநிலை நாயகியே போற்றி
68.ஓம் தீந்தமிழ்ச் சுவையே போற்றி
69.ஓம் தெவிட்டாத தெள்ளமுதே போற்றி
70.ஓம் தென்னவன் செல்வியே போற்றி
71.ஓம் தேன்மொழி யம்மையே போற்றி
72.ஓம் தையல் நாயகியே போற்றி
73.ஓம் நற்கனியின் சுவையே போற்றி
74.ஓம் நற்றவத்தின் கொழுந்தே போற்றி
75.ஓம் நல்ல நாயகியே போற்றி
76.ஓம் நீலாம்பிகையே போற்றி
77.ஓம் நீதிக் கரசியே போற்றி
78.ஓம் பக்தர் தம் திலகமே போற்றி
79.ஓம் பழமறையின் குருத்தே போற்றி
80.ஓம் பரமானந்தப் பெருக்கே போற்றி
81.ஓம் பண்ணமைந்த சொல்லே போற்றி
82.ஓம் பவளவாய்க் கிளியே போற்றி
83.ஓம் பசுபதி நாயகியே போற்றி
84.ஓம் பாகம்பிரியா அம்மையே போற்றி
85.ஓம் பாண்டிமா தேவியின் தேவி போற்றி
86.ஓம் பார்வதி அம்மையே போற்றி
87.ஓம் பிறவிப்பிணி தீர்ப்பாய் போற்றி
88.ஓம் பெரிய நாயகியே போற்றி
89.ஓம் பொன்மயி லம்மையே போற்றி
90.ஓம் பொற்கொடி அன்னையே போற்றி
91.ஓம் மங்கள நாயகியே போற்றி
92.ஓம் மழலைக் கிளியே போற்றி
93.ஓம் மனோன் மணித் தாயே போற்றி
94.ஓம் மண்சுமந்தோன் மாணிக்கமே போற்றி
95.ஓம் மாயோன் தங்கையே போற்றி
96.ஓம் மாணிக்கவல்லியே போற்றி
97.ஓம் மீனவர் கோன் மகளே போற்றி
98.ஓம் மீனாட்சியம்மையே போற்றி
99.ஓம் முழு ஞானப் பெருக்கே போற்றி
100.ஓம் முக்கண் சுடர் விருந்தே போற்றி
101.ஓம் யாழ்மொழி யம்மையே போற்றி
102.ஓம் வடிவழ கம்மையே போற்றி
103.ஓம் வேலவனுக்கு வேல் தந்தோய் போற்றி
104.ஓம் வேத நாயகியே போற்றி
105.ஓம் செளந்தராம்பிகையே போற்றி
106.ஓம் வையகம் வாழ்விப்பாய் போற்றி
107.ஓம் அம்மையே அம்பிகையே போற்றி
108.ஓம் அங்கையற் கண்ணி அம்மையே போற்றி போற்றி



சாலியர்களின் முதல் குலதெய்வம் அரிய மாணிக்கவல்லி!!!


உசிலம்பட்டியில் இருந்து 12 கி.மீ தூரத்திலும்,பேரையூரில் இருந்து 22 கி.மீ.தொலைவிலும் அமைந்திருக்கும் சிற்றூர் மேலத்திருமாணிக்கம்;பேரையூரில் இருந்து 12 கி.மீ.தூரம் தேனி சாலையில் பயணித்தால் சின்னக்கட்டளை என்ற கிராமம் வரும்;அந்தக் கிராமத்தைக் கடந்ததும் மேற்கு நோக்கிச் செல்லும் சாலையில் 10 கி.மீ.தொலைவில் பயணித்தால் மேலத்திருமாணிக்கம் என்ற சிற்றூரை அடையலாம்;

1000 ஆண்டுகளுக்கும் மேலாக சாலிய சமுதாயம் தமிழ்நாட்டில் வாழ்ந்து வருகின்றது என்பதற்கு அன்னை அரியமாணிக்கவல்லியின் அருளாற்றலே ஆதாரம்!

எட்டு கைகளுடன் சாந்தமுகத்துடன் காட்சி தரும் அரிய மாணிக்கவல்லி, சிங்கத்தை தனது நந்தியாகக் கொண்டு வடக்கு நோக்கியவாறு அருள்புரிந்து கொண்டு அரசாட்சி புரிந்து வரும் அன்னையைத் தரிசித்தாலே பரவசம் உருவாகின்றது;

சிவ ஆலயங்களில் நந்தி அமைக்கப்பட்டிருக்கும்;சிவாலயத்தினுள் நுழைபவர்கள் யாராக இருந்தாலும்,நந்தியை வணங்கி முறைப்படி அவரிடம் சிவனைத் தரிசிக்க அனுமதி மானசீகமாகக் கேட்க வேண்டும்;அதன் பிறகே,சிவனை வழிபட மூலஸ்தானத்திற்கு முன்புறம் இருக்கும் அறைக்குள் நுழைய வேண்டும்;அதே போல,தமிழ்நாட்டில் வெகு சில அம்மன் ஆலயங்களில் மட்டுமே அம்மனின் எதிராக சிங்கம் அமைக்கப்பட்டிருக்கின்றது;அப்படி அமைக்கப்பட்டிருக்கும் ஆலயங்களில் ஒன்றுதான் மேலமாணிக்கம் அரியமாணிக்கவல்லி ஆலயம்! அதுவும் ஒரு சமுதாயத்தின் ஆலயமாக சாக்தவழிபாட்டு ஆலயம் அமைந்திருப்பது மிகவும் அரிதான ஒரு நிகழ்வு ஆகும்;


ஆலயத்தின் அருகில் மேற்கு நோக்கியவாறு  சப்த கன்னியர்களுக்கு நடுவே மஹாகால பைரவப் பெருமான் காட்சியளிப்பது உலக வரலாற்றில் வேறு எங்குமே இல்லாத அமைப்பாகும்;


ஆமாம்! சப்த கன்னியர்கள் ஒரு இடத்திலும்,கால பைரவப் பெருமான் வேறு ஒரு இடத்திலும் தான் ஆலயத்தில் இடம் பெறும்;ஆனால்,இந்த ஆலயத்தில் சைவ ஆகமங்களில் அதி ரகசியமான அமைப்பாக வராகியின் அருகில் மஹா காலபைரவப் பெருமான் ஸ்தாபிக்கப்பட்டிருக்கின்றார்;


ஆக,சாலியர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் முற்காலத்தில் சிவ உபாசனையுடன் வராகி உபாசனை செய்துள்ளனர் என்பது இதன் மூலம் தெரிகின்றது;

உலகின் மிகவும் பழமையான வழிபாடு சிவவழிபாடு ஆகும்;அந்த சிவ வழிபாடு உருவாகுவதற்கு பல கோடி ஆண்டுகளுக்கும் முன்பே உருவானது சாக்த வழிபாடு எனப்படும் ஸ்ரீவித்யா உபாசனை! அந்த ஸ்ரீவித்யா உபாசனையின் உயர்வானதும்,மிக எளியதும்,மிகவும் சக்தி வாய்ந்ததுமாக இருப்பது வராகி வழிபாடு ஆகும்;அந்த வராகிக்கு அரசாலை,மங்களமகாகாளி,ஆதி வராகி,ஆதியன்னை,குதிரைக்காரி என்று 1000 பெயர்கள் இருக்கின்றன;

எப்போது ஒரு சமுதாயம் தமது குலதெய்வத்தை வழிபடுவதைக் கைவிடுகின்றதோ,அப்போதே அவர்களின் வீழ்ச்சி துவங்குகின்றது என்றுதான் அர்த்தம்;

சுமாராக 300 ஆண்டுகளாக நமது அன்னை அரியமாணிக்கவல்லியை வழிபட மறந்துவிட்டோம்;எனவே,இதில் இருந்து மீள்வதற்கும் ஒரு வழி இருக்கின்றது;

மாதாந்த வெள்ளிக்கிழமையன்று காலை 9 மணிக்கே இங்கே வந்துவிடவேண்டும்;
108 எலுமிச்சைம்பழங்களை மாலையாக கோர்த்து,மஞ்சள் பொடி,அரகஜா,பன்னீர்,இளநீர்,தேங்காய்,நாட்டு வாழைப்பழங்கள்,பத்தி இவைகளுடன் இங்கே வரவேண்டும்;எலுமிச்சை சாதம் அன்னையின் முன்பாக சமைக்க வேண்டும்;அப்போது ஓம் ரீங் அரியமாணிக்கவல்லி,அரியமாணிக்கவல்லி என்று ஜபிக்க வேண்டும்;

சமைத்த எலுமிச்சை சாதத்தை அன்னைக்கு படையிட்டு,ஒவ்வொருவரின் பெயர்,நட்சத்திரம் சொல்லி அர்ச்சனை செய்ய வேண்டும்;நிறைவாக பெண்கள் குலவையிடவேண்டும்;படையல் இட்டதில் பாதியை எடுத்துக் கொண்டு அங்கே இருக்கும் அனைவருக்கும் பகிர்ந்து தரவேண்டும்;நாமும் சாப்பிட வேண்டும்;

இவளின் சன்னதியில் பெண்கள் தெற்கு நோக்கியவாறு நின்று கொண்டு ஓம் ரீங் அரியமாணிக்கவல்லி,அரியமாணிக்கவல்லி என்று 15 நிமிடம் வரை ஜபிக்கவேண்டும்;போதுமான நேரம் கிடைக்காதவர்கள் 12 முறை ஜபித்தாலும் போதும்;பிறகு,வராகியின் 12 பெயர்களை 12 முறை ஜபிக்க வேண்டும்;



அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)


ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகி
போத்ரிணீ
சிவை
வார்த்தாளி
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரி
அரிக்நி

இவைகள் தான் ஆதிவராகி என்ற மங்களமகாகாளி என்ற அரசாலை என்ற ப்ருகத்வராகி என்ற அரியமாணிக்கவல்லியின் அரிய பெயர்கள்;இந்தப் பெயர்களை தினமும் காலையில் 15 நிமிடமும்,இரவில் `15 நிமிடமும் ஜபித்து வருபவர்கள் சகல வளங்களும்,நலங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்வார்கள்;

இவர்களுக்கு எதிரான அனைத்து சதிகளும்,எதிர்ப்புகளும் முறியடிக்கப்படும்;


ஓம் ரீங் அரியமாணிக்கவல்லி அரியமாணிக்கவல்லி

மனிதக் கடிக்கு தமிழ் மருந்து


நாய் முதலான மிருகங்கள் மனிதனைக் கடித்தால்,அதற்கு சித்த மருத்துவம்,அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவம்,அரேபியாவில் உதித்து உலகம் முழுவதும் பரவியிருக்கும் யுனானி மருத்துவம்,சீனாவின் மருத்துவமுறையான அக்யூபஞ்சர் என சகல மருத்துவமுறைகளிலும் சிகிச்சையும்,மருந்துகளும் இருக்கின்றன;

ஆனால்,மனிதன் கடித்துவிட்டால்,அதற்குரிய மருத்துவம் இயற்கை மருத்துவத்தில் மட்டுமே இருக்கின்றது;

சிறு குழந்தைகள் விபரம் அறியாமல் கோபத்தில் கடித்து வைத்தாலும்,சண்டையின் போது எதிரி பற்களால் கடித்துவிட்டாலும் அது ஆபத்துமிக்கதாக மாறலாம்;பல் பட்ட இடங்களில் தொடர்ந்து வலியும்,துன்பமும் இருந்தால் மனிதக்கடி கொடியதாக இருப்பதாக உணரலாம்;

சில சமயங்களில் பல் பட்ட இடத்தில் சீழ் பிடிக்கவும் வாய்ப்புகள் இருக்கின்றன;இதற்கு மருத்துவசிகிச்சை எடுத்தே ஆகவேண்டும்;இல்லாவிடில் நிலைமை மோசமாகிவிடலாம்;

கொல்லன் கொணங்கிழங்கு என்ற ஒருவகைக் கிழங்கை அரைத்து பாலில் சாப்பிடுவார்கள்;வலி நீங்கும்வரை புளியும் காரமும் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும்;

நன்றி:தினத்தந்தி சிறுவர் தங்கமலர் பக்கம் 5,வெளியீடு 29.1.16


ஹரிஜன வாழ்க்கைக்கு தம்மை அர்ப்பணித்த பிராமணர்கள்!!!


சுதந்திரம் அடைவதற்கு முன்பு, தமிழ்நாட்டில் 42 க்கும் மேற்பட்ட பிராமண,ஐயர்,ஐயங்கார் குடும்பங்கள் ஹரிஜனங்களின் முன்னேற்றத்துக்காக அர்ப்பணித்துக் கொண்ட வரலாற்றை ஒரு புத்தகமாகவே தொகுத்து வெளியிட்டுள்ளனர்:அந்த புத்தகத்தின் பெயர்;தலித்துகளும் பிராமணர்களும்;எழுதியவர்: கே.சி.லட்சுமி நாராயணன்,மூத்த பத்திரிகையாளர்
கோபிச்செட்டிப்பாளையம் ஜி.எஸ்.லட்சுமண ஐயரின் தந்தை சீனுவாச ஐயர் மகாத்மா காந்திஜியின் கட்டளைப்படி தாழ்த்தப்பட்ட வகுப்பு மக்களை தமது இல்லத்திற்கு அழைத்து உபசரித்ததால் சாதிவிலக்கத்திற்கு ஆளானார்;(1940களில்)


லட்சுமண ஐயர் காந்திஜியின் நினைவாக ஹரிஜனசேவா நிலையத்திற்கு ஐந்தரை ஏக்கர் நிலத்தை நன்கொடையாக அளித்தவர்;லட்சுமண ஐயரின் சொத்தாக 300 ஏக்கர் இருந்தது;லட்சுமண ஐயரின் மனைவி லட்சுமி அம்மாள் தனது கணவரின் தீண்டாமை ஒழிப்பு பணிக்கு துணை நின்று கோபி மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்திற்காக எட்டு ஏக்கர் என்று தொடங்கி சமூக நன்மைக்காக தங்கள் நிலங்களைக் கொடுத்துவிட்டு,வெறும் 25 ஏக்கர் மட்டும் தங்களுடன் வைத்துக் கொண்ட பெருந்தகையாளர்;


தஞ்சைமாவட்டம் அம்மாப்பேட்டை வேங்கடராம ஐயர்,தீண்டாமை ஒழிப்புப் பணியில் தீவிரமாக ஈடுபட்டு,தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த பல மாணவர்கள் கல்வி கற்கவும்,வாழ்க்கையில் முன்னேறவும் உதவியவர்;இரண்டு முறை சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்;இவரை காமராஜரும்,ராஜாஜியும் பாராட்டியுள்ளனர்;


இவரைப் போன்றே எஸ்.என்.சோமையாஜீலு என்ற பிராமணர் சாதிக் கொள்கைக்கு சாவு மணி அடிப்பதே எனது கொள்கை என்று முழங்கியவர்;மனிதரில் பிறப்பினால் உயர்ந்தவர்,தாழ்ந்தவர் இல்லை என்று அவர் தேசிய மேடைகளில் முழங்கியவர்;தீண்டத்தகாதவர்களையும் கோவிலுக்குள் விடவேண்டுமென்று திருநெல்வேலி மாவட்டத்தில் ஆலயப் பிரவேசப் போராட்டத்தை நடத்தி வெற்றி கண்டவர் சோமையாஜீலு,


அதே போல் என்.எஸ்.வரதாச்சாரியார்;பெருமளவு வருமானம் தரக்கூடிய வக்கீல் தொழிலை விட்டுவிட்டு,சபர்மதி ஆஸ்ரமத்தில் பத்து ஆண்டுகள் தங்கி,விடுதலை இயக்கத்திற்காகவும்,தாழ்த்தப்பட்ட வகுப்புகளைச் சேர்ந்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பைப் பெற்றுத்தரவும் அவர் தன்னை தியாகம் செய்து கொண்டவர்;
பாபாசாகேப் பி.ஆர்.அம்பேத்கர் அவர்கள் ஹரிஜன மக்களின் ஒப்பற்ற பெருந்தலைவர்;தனது இளவயதில் ரமாபாய் என்ற அம்மையாரைத் திருமணம் செய்து கொண்டவர்;அந்த அம்மையார் நோய்வாய்ப்பட்டு இறந்த பிறகு,தனிமையில் வாழ்ந்தார்;


ஓய்வே இல்லாத பொதுப்பணிகளின் விளைவாக,நோய்வாய்ப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,அங்கே டாக்டர் சாரதா என்பவர் துணையாக இருந்தார்.அவர் தனது 56 வது வயதில் இந்த டாக்டர் சாரதாவை இரண்டாம் திருமணம் செய்து கொண்டார்.அந்த டாக்டர் சாரதாவும் பிராமண வகுப்பில் பிறந்தவர்தான் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்;


தீண்டத்தகாதவர்கள் என்று அலட்சியமாக ஒதுக்கப்பட்ட மக்களுக்கு கோவிலுக்குள் நுழைந்த இறைவனை கும்பிடும் உரிமையை 800 ஆண்டுகளுக்கு முன்பாகவே மகிழ்ச்சியுடன் வழங்கிய ராமானுஜர் ஹரிஜன பெருமக்களின் உண்மையான நண்பர்;


கோவிலுக்குள் ஹரிஜனங்கள் செல்லலாம் என்று சட்டம் இயற்றி,கோவில்களை அவர்களுக்காக திறந்துவிட்டவர் சி.பி.ராமசாமி ஐயர்.


தீண்டத்தகாதவர் என்று கூறப்பட்ட ஒருவருக்கு அன்றைய சென்னை மாகாணத்தில் முதன் முதலாக மந்திரி அளித்த ராஜாஜி ஹரிஜனங்களின் உண்மையான நண்பர்;


தாழ்த்தப்பட்ட வகுப்பில் பிறந்த ஒரு சிறுவனைத் தத்தெடுத்து,வளர்த்து ஆளாக்கி,உருவாக்கினவரும் உணவு விடுதிக்குள்ளே தாழ்த்தப்பட்டவர்கள் செல்லக்கூடாது என்று இருந்த காலத்தில்,ஹரிஜன ஓட்டல் பிரவேசத்தை நிகழ்த்திக் காட்டியவருமான பி.எஸ்.கிருஷ்ணசாமி ஐயங்கார் ஹரிஜனங்களின் உண்மையான நண்பர்;


மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்குள் முதன் முதலில் ஹரிஜன மக்களை அழைத்துச் சென்று ஆலயப் பிரவேச நிகழ்ச்சியை நடத்திக்காட்டியவர் மதுரை ஏ.வைத்திய நாத ஐயர்;இந்தச் சம்பவம் நிகழ்ந்து 80 ஆண்டுகள் ஆகின்றன;


திரைப்படங்களில்  ஹரிஜன மக்களுக்காக பாடல்கள் எழுதிய பாபநாசம் சிவன்,கொத்தமங்கலம் சுப்பு ஆகியோர் ஹரிஜனங்களின் நண்பர்கள்;


தலித் என்பது அரபுச்சொல்லாகும்;ஹரிஜன் என்பது நமது மொழிச்சொல்லாகும்;தலித் என்ற வார்த்தையை திரும்பத் திரும்பப் பயன்படுத்தி தேசிய அளவில் பிரபலப்படுத்தி,ஹரிஜன் என்ற வார்த்தையையே நம்மிடம் இருந்து மறைத்த கம்யூனிஸ்டுகள் ஹரிஜனங்களின் முன்னேற்றத்துக்கு இதைத் தவிர வேறு ஏதாவது செய்தார்களா?



நன்றி:வார்த்தாளி விஜயம்,பக்கம் 11,12,13;வெளியீடு பிப்ரவரி 2016

முழு யோகம் தரும் கேது காலம்!!!


ராகு காலம் நம் அனைவருக்கும் தெரியும்;ராகு காலத்தில் எந்த ஒரு சுபகாரியத்தையும் ஆரம்பிக்கக் கூடாது;அப்படி ஆரம்பித்தால்,அது வெற்றியைத் தராது;என்பது பல நூற்றாண்டுகளாக  நிரூபிக்கப்பட்ட ஜோதிட+ஆன்மீக உண்மை;


அதேசமயம்,ராகு மஹாதிசை ஒருவருக்கு நடைபெற்றால் அல்லது ராகுவுடன் ஒரு கிரகம் இணைந்திருந்து அந்தக் கிரகத்தில் திசை நடைபெற்றால் அல்லது ராகுவின் நட்சத்திரமான திருவாதிரை/சுவாதி/சதயம் நட்சத்திரங்களில் ஒரு கிரகம் நின்று திசை நடத்தினால் அவர்களுக்கு ராகு காலம் மிகுந்த யோகம் தரும் காலம் ஆகும்;(அனுபவம் பேசுகிறது);திருவாதிரை நட்சத்திரம் மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கும்;சுவாதி நட்சத்திரம் துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கும்;சதயம் நட்சத்திரம் கும்பராசியில் பிறந்தவர்களுக்கும் ராகு காலம் யோக காலமாகவே இருக்கிறது;


சிலருக்கு இராகு முதல் 9 ஆண்டுகள் கெடுதியையும்,அடுத்த 9 ஆண்டுகளில் நன்மையையும் தருவதும் உண்டு;
ராகு மஹாதிசை பலருக்கு கோடீஸ்வர யோகத்தைத் தருகின்றது;அப்படி மகத்தான செல்வ வளம் வரும் போது,ஒரு போதும் அந்த ராகு மஹாதிசை நடைபெறும் நபரின் பெயரில் சொத்துக்கள் வாங்கக் கூடாது;மீறினால்,ராகு மஹாதிசையின் இறுதி மூன்று ஆண்டுகளில் அனைத்தையும் இழக்க வைப்பார்;


ராகுவுக்கு நேர் எதிர்க் கிரகம் கேது;
ராகு தனது மஹாதிசை 18 வருடங்களில் முதல் பாதியான 9 ஆண்டுகளில்  யோகங்களை அள்ளிக் கொடுப்பார்;அடுத்த பாதியான 9 ஆண்டுகளில் அந்த யோகங்களை முழுமையாக அனுபவிக்க விடாமல் தடுக்கவும் செய்வார்;அதனால் தான் ராகு கொடுத்துக் கெடுப்பார் என்ற ஜோதிட அனுபவ உபதேசம் நமக்குக் கிடைத்திருக்கிறது;


கேது தனது மஹாதிசை 7 வருடங்களில் முதல் பாதியான மூன்றரை ஆண்டுகளில் அது இருக்கும் இடத்தைக் கெடுப்பார்;பைத்தியம்,மரண பயம்,பேய் மற்றும் பிசாசு தொல்லை அல்லது அனாவசியமான உயிர் பயத்தைத் தருவார்;அடுத்த மூன்றரை ஆண்டுகளில் அதற்கு எதிரான சூழ்நிலையைத் தருவார்;அதாவது,சித்தர் தொடர்பு,கோவில் வழிபாடு,இறைசக்தியின் அருளைப் பெறுதல்,ஞானமார்க்க ஈடுபாடு போன்றவைகளில் கொண்டு போய்விடுவார்;சிலருக்கு இது மாறியும் நடைபெறும்;முதல் மூன்றரை ஆண்டுகளுக்கு ஞான மார்க்க ஈடுபாடு,சித்தர்த் தொடர்பு என்று இருக்க வைத்துவிட்டு,அடுத்த மூன்றரை ஆண்டுகளில் பைத்தியமான மனநிலை,மரண பயம்,பேய் மற்றும் பிசாசு தொல்லையைத் தருவதும் உண்டு;ஜோதிட அனுபவத்தில் கண்டறிந்தது இது;


கிழமைகள் 7! ஆனால் கிரகங்களோ 9!!
ராகுவுக்கும்,கேதுவுக்கும் கிழமைகள் இல்லை;அதற்குப் பதிலாக ஒவ்வொரு நாளும் ஒரு முகூர்த்தநேரம் வரை(90 நிமிடங்கள்) ராகு காலம் செயல்படுகின்றது;இந்த ஒன்றரை மணி நேரத்தில் ஜோதிட ஞானம் உள்ளவர்கள்,எந்த ஒரு முக்கியமான காரியத்தையும் செய்ய மாட்டார்கள்;எப்படி ராகு விஷமான கிரகமோ,அதே போல ராகு காலமும் விஷத்தன்மை நிரம்பிய நேரமாக செயல்படுகின்றது;இந்த உண்மையை இந்துக்களாகிய நாம் கடந்த 20,00,000 ஆண்டுகளாக அனுபவத்தில் கண்டிருக்கின்றோம்;வெறும் 2016 ஆண்டுகள் வயதுடைய கிறிஸ்தவத்தால் இதைப் புரிந்து கொள்ள முடியுமா?


ஞாயிற்றுக்கிழமை ராகு காலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை

திங்கட்கிழமை ராகு காலம் காலை 7.30 முதல் 9 மணி வரை

செவ்வாய்க்கிழமை ராகுகாலம் மதியம் 3 முதல் 4.30 மணி வரை

புதன்கிழமை ராகு காலம் மதியம் 12 முதல் 1.30 மணி வரை

வியாழக்கிழமை ராகு காலம் மதியம் 1.30 முதல் 3 மணி வரை

வெள்ளிக்கிழமை ராகு காலை காலை 10.30 முதல் 12 மணி வரை

சனிக்கிழமை ராகு காலம் காலை 9 முதல் 10.30 மணி வரை
இதே போல,கேது காலம் என்று ஒன்று உண்டு;



கேது காலமும் ஒரு முகூர்த்தகாலம் வரை செயல்பட்டு வருகின்றது;ராகு காலம் முழு விஷ காலமாக இருப்பதால்,கேது காலம் முழு யோகம் தரும் மற்றும் சுபக்காரியங்களுக்கு ஏற்ற காலமாக இருக்கின்றது;

ஞாயிற்றுக்கிழமை கேது காலம் இரவு 10.30 முதல் 12 மணி வரை
திங்கட்கிழமை கேது காலம் மதியம் 1.30 முதல் 3 மணி வரை
செவ்வாய்க்கிழமை கேது காலம் இரவு 9 முதல் 10.30 மணி வரை
புதன்கிழமை கேது காலம் மாலை 6 முதல் 7.30 மணி வரை
வியாழக்கிழமை கேது காலம் இரவு 7.30 முதல் 9 மணி வரை
வெள்ளிக்கிழமை கேது காலம் மாலை 4.30 முதல் 6 மணி வரை
சனிக்கிழமை கேது காலம் மதியம் 3 முதல் 4.30 மணி வரை

கேது ஒரு சுபக்கிரகம் என்பது நம்மில் பலருக்குத் தெரியாது;உங்கள் வாழ்வில் முன்னேற்றம் அடைய கேது காலத்தைப் பயன்படுத்துங்கள்;சகல வெற்றிகளையும் அடையுங்கள்;

ராகு காலம் பிரபலமாக இருப்பதைப் போல,கேதுகாலமும் பிரமடையும் என்பதை தமிழ் மொழியின் தந்தையும்,சித்தர்களின் தலைவரும்,சித்த மருத்துவத்தின் தலைமை மருத்துவருமாகிய அகத்தியமகரிஷி தெரிவித்திருக்கின்றார்;

ராகு காலத்தில் இருந்து சரியாக 6 மணி நேரம் அதிகப்படுத்தினால் வருவது கேது காலம் என்பதை உணருங்கள்;

கேது காலத்தைக் கணித்து எழுதியவர்:திரு.எஸ்.எம்.நெப்போலியன்,ராயக்கோட்டை,
கிருஷ்ணகிரி மாவட்டம்;


நன்றி:பக்கம் 59,60;ஞானசிந்தாமணி,தாரண ,ஆடி 2004

Friday, April 8, 2016

கடன் தொல்லைகள் விலகிட பாட வேண்டிய பதிகம்!!


வேத வேள்வியை நிந்தனை செய்துழல்
ஆதம் இல்லி அமணொடு தேரரை
வாதில் வென்று அழிக்கத் திரு உள்ளமே
பாதி மாதுடன் ஆய பரமனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

வைதிகத்தின் வழி ஒழுகாத அக்
கைதவம் உடைக்கார் அமண் தேரரை
எய்தி வாது செயத் திரு உள்ளமே
மை திகழ் தரு மாமணி கண்டனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

மறை வழக்கம் இலாத மாபாவிகள்
பறிதலைக் கையர் பாய் உடுப்பார்களை
முறிய வாது செயத் திரு உள்ளமே
மறி உலாம் கையில் மா மழுவாளனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

அறுத்த அங்கம் ஆறு ஆயின நீர்மையைக்
கறுத்த ஆழ் அமண் கையர்கள் தம்மொடும்
செறுத்து வாது செயத் திரு உள்ளமே
முறித்த வாள் மதிக் கண்ணி முதல்வனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

அந்தணாளர் புரியும் அருமறை
சிந்த செய்யா அருகர் திறங்களைச்
சிந்த வாது செயத் திரு உள்ளமே
வெந்த நீறதணியும் விகிர்தனே
ஞாலம் நின்புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

வேட்டு வேள்வி செயும் பொருளை விளி
மூட்டு சிந்தை முருட்டமண் குண்டரை
ஓட்டி வாது செயத் திரு உள்ளமே
காட்டில் ஆனை உரித்த எம் கள்வனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

அழலதோம்பும் அரு மறையோர் திறம்
விழலதென்னும் அருகா திறத்திறம்
கழல் வாது செயத் திரு உள்ளமே
தழல் இலங்கு திரு உருச் சைவனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையு எம் ஆதியே

நீற்று மேனியர் ஆயினர் மேல் உற்ற
காற்றுக் கொள்ளவும் நில்லா அமணரைத்
தேற்றி வாது செயத் திரு உள்ளமே
ஆற்ற வாள் அரக்கற்கும் அருளினாய்
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

நீலமேனி அமணர் திறத்து நின்
சீலம் வாது செயத் திரு உள்ளமே
மாலும் நான்முகனும் காண்பரியது ஓர்
கோல மேனியதாகிய குன்றமே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

அன்று முப்புரம் செற்ற அழக நின்
துன்று பொற்கழல் பேணா அருகரைத்
தென்று வாது செயத் திரு உள்ளமே
கன்று சாக்கியர் காணாத் தலைவனே
ஞாலம் நின் புகழே மிக வேண்டும் தென்
ஆலவாயில் உறையும் எம் ஆதியே

கூடல் ஆலவாய்க் கோனை விடை கொண்டு
வாடல் மேனி அமணரை வாட்டிட
மாடக் காழிச் சம்பந்தன் மதித்த இப்
பாடல் வல்லவர் பாக்கியவாளரே


திருச்சிற்றம்பலம்