Tuesday, December 29, 2015

காஞ்சிப் பரமாச்சாரியாரின் உபதேசம்


“நவீன ஸயன்ஸின் அபிவிருத்தியினால் எல்லா சவுகர்யங்களையும் செய்து கொண்டு ஆனந்தமாக வாழலாம்;மதமும்,அனுஷ்டானமும் எதற்கு வேண்டும்?” என்று சிலர் கேட்கிறார்கள்;ஸயன்ஸினால் பல சவுகரிய சாதனங்களை உண்டாக்க முடிவது உண்மையே; ஆனால்,இதனால் ஆனந்தம் வந்துவிட்டதா என்பது தான் கேள்வி;

ஆனந்தம் என்பது மனதிருப்தியை,உள்ள நிறைவைக் குறித்த விஷயம்;சவுகரிய வாழ்வுக்கு இதெல்லாம் தேவை.இன்னமும் தேவைகள் இருக்கின்றன என்ற அடிப்படையில் ஓயாமல் திரவியங்களைச் சேகரித்துக் கொண்டிருப்பதில் மக்கள் அதிருப்தியா அடைந்து வருகிறார்கள்?
ஏற்கனவே இருந்த திருப்தியும் போய்விட்டதைப் பார்க்கிறோம்.அதோடு இதில் போட்டா போட்டி,வர்க்க பேதம்,துவேஷம் எல்லாமும் வளர்ந்துவிட்டன;மனுஷ்யனின் ஆசையை பூர்த்தி செய்வது முடியாத காரியம்;ஆசைகளைக் குறைத்துக் கொண்டாலே உண்மையான ஆனந்தம் காண முடியும்.இதற்கு வழிகாட்டுவது மதம் தான்;ஆனபடியால்,ஸயன்ஸ் அபிவிருத்தி ஆகியிருப்பதாலேயே மதத்தின் தேவையும் அதிகமாயிருக்கிறது எனலாம்;

லெளகீக,விஞ்ஞான அபிவிருத்தியால் ஆத்மசாந்தி காணமுடியவில்லை என்று அமெரிக்கா,ருஷ்யா ஆகிய இரு தேசங்களும் நிதரிசனமாகக் காட்டுகின்றன;முதலில் ஸ்புட்னிக் செய்து உலகைச் சுற்றவிட்ட நாடு ருஷியா;அது கம்யூனிஸ நாடு;அங்கு மத போதனை கிடையாது;இருந்தாலும் டெக்னாலஜி அபிவிருத்தி மட்டும் அந்த நாட்டுக்கு உள்ள நிறைவை அளிக்கவில்லை;அதனால் தான் நமது மகாபாரதத்தை ருஷிய மொழியில் மொழி பெயர்த்துத் தங்கள் பள்ளிகளில் அவர்கள் போதிக்க ஏற்பாடு செய்திருக்கிறார்கள்;அமெரிக்க மக்களுக்கு ஆத்ம சந்துஷ்டி(Emotional Satisfation) இல்லாததாலேயே அவர்கள் யோகம்,வேதாந்தம்,சங்கீர்த்தனம் இவற்றில் திரும்பியிருக்கிறார்கள்;ஸயன்ஸில் மிக முன்னேறிய தேசங்கள் நம் பாரத தேசத்தின் பக்கம் திரும்பிப் பயனடைய முயலும்போது, நாமே நமது புராதன தர்மத்தை மறந்து வெறும் இந்திரிய சவுக்கியத்தில்(fashion,amazing,complete enjoy) இறங்கினால் அது ரொம்பவும் பரிதாபமானது;

நம் தேசத்தில் லெளகீக ஆசையும்,நாஸ்தீகமும்,தெய்வ நிந்தனையும் தலைதூக்கினால் கூட,ஜீவசக்தி வாய்ந்த நம்முடைய ஸநாதன தர்மத்துக்கு எந்நாளும் அழிவு வராது என்று நம்பலாம்;அப்படி அழிவு வராமல் காப்பது நம்முடைய கடமை.

‘காப்பது’ என்றால் என்ன செய்ய வேண்டும்? 

நாஸ்திகர்களோடு,மத நம்பிக்கையில்லாதவர்களோடு சண்டை போடுவதா? இல்லை;ஹிந்து மதம் சண்டையின் மூலம் தன்னை வளர்த்துக் கொண்டதாகச் சரித்திரமே கிடையாது;

ஸ்ரீமகாவராகி மங்கள ஆரத்திப் பாடல்


ஜெய் ஜெகதீஸ்வரியே! அம்மா அகிலாண்டேஸ்வரியே!
அம்மா அகிலாண்டேஸ்வரியே!!
அண்ட சராசரம் அன்புடன் படைத்தாய்;
அண்ட சராசரம் அன்புடன் படைத்தாய்;
அன்புடன் எழுந்தருள்வாய்
ஓம் லலிதாம்பிகைத் தாயே!!

செல்வச் செழிப்பினைத் தந்தருள்வாயே
ஸ்ரீபரமேஸ்வரி, அம்மா ஸ்ரீபரமேஸ்வரி
தண்டினியாய் வந்து பகை விரட்டிடுவாய்
தண்டினியாய் வந்து பகை விரட்டிடுவாய்
அம்மா வராகமுகி
ஓம் லலிதாம்பிகைத் தாயே!!

உயிரினை வளர்க்கும் உடல் நலம் காக்க
மாரியாய் எழுந்தருள்வாய்
அம்மா மாரியாய் எழுந்தருள்வாய்
ஆத்மா நீ என்றறிந்திடச் செய்வாய்
ஸ்ரீகாமேஸ்வரி
ஓம் லலிதாம்பிகைத் தாயே!!

இப்படைத் தோற்கின் எப்படை வெல்லும்
தலைமை ஏற்றிடுவாய்,அம்மா தலைமை ஏற்றிடுவாய்
மங்கள ஆரத்தி ஏற்பாய்
மங்கள ஆரத்தி ஏற்பாய்
மங்கள ரூபிணியே
ஓம் லலிதாம்பிகைத் தாயே!!

வாராகி வாராகி ஓம்
க்ஷம் வாராகி வாராகி வாராகி ஓம்
வாராகி வாராகி ஓம் க்ஷம்
வாராகி வாராகி ஓம் க்ஷம்
வாராகி வாராகி ஓம்
ஓம் லலிதாம்பிகைத் தாயே!!!


Thursday, December 24, 2015

அன்னை அரசாலை(வராகி)யின் அருளை பெற நாம் செய்ய வேண்டியது என்ன?


அலைபேசியும்,இணையமும் நமது தினசரி வாழ்க்கையை படுவேகமாக மாற்றிவிட்டன;நம் ஒவ்வொருவருக்கும் குடும்பப் பொறுப்பு,வேலை/பணிப்பொறுப்பு/தொழில் பொறுப்பு என்ற சுமைகளுடன் சொந்த ஆன்மீக லட்சியத்தை அடையும் பொறுப்பு என்று ஏராளமான சுமைகளை மனதுக்குள் சுமந்து கொண்டு தான் தினசரி வாழ்க்கை ஓடிக்கொண்டிருக்கின்றது;

இந்த சூழ்நிலையில் உடனடி உணவு,உடனடி வேலை என்று நமது வாழ்க்கைப் பயணம் மாறிவிட்டதால்,உடனடி பலன் கிடைக்க வேண்டும் என்ற மனோபாவமும் நம்மிடையே பரவி விட்டது;இதற்கு பேராசை என்று சொல்வது சரியா?

உடனடியாக அல்லது மிகவும் குறுகிய காலத்திற்குள் வரங்களை அள்ளித் தருபவர்கள் பைரவரும்,வராகியும் ,லட்சுமி நரசிம்மரும் மட்டுமே!

முறைப்படி மந்திரஜபம் ஜபித்தாலே இவர்களின் அருள் கிட்டிவிடும்;இன்னும் விரைவாக கிட்டிட நாம் செய்ய வேண்டியது பின்வரும் ஆலயங்கள் உங்கள் ஊருக்கு அருகில் இருக்கலாம்;அல்லது இந்த ஊரில் நீங்கள் வசிக்கலாம்;இந்த ஆலயங்களில் காலையில் 6 மணிக்குள்ளாகவும்,மாலை 6 மணிக்கு மேல் இரவு 10 மணிக்குள்ளாகவும் அன்னை அரசாலை(வராகி)யின் 12 பெயர்கள் மற்றும் வராகி மாலை(வராகி பரணி)யை ஜபிப்பது நன்று;

தேய்பிறை பஞ்சமி மற்றும் பவுர்ணமி நாட்களில் இவைகளை ஐந்து அல்லது ஐந்தின் மடங்குகளில் ஜபிப்பது அவசியம்;

இந்த ஆலயங்களைத் தவிர,நமது ஊர்களில் இருக்கும் பழமையான ஆலயங்களிலும் ஜபிக்கலாம்;உள்ளூரில் வசிப்பவர்கள் தினமும் வசிக்கலாம்;தற்போது மார்கழி மாதம் என்பதால் அதிகாலையிலும் ஜபிக்கலாம்;

இந்த பூமியில் நாம் கேள்விப்படும் அனைத்து பெண் தெய்வங்களும் அன்னை அரசாலை(வராகி)யின் அம்சங்களே!சிவனும்,பார்வதியும் இணைந்த ஒரே வடிவம் அரசாலை(வராகி);மஹாவிஷ்ணுவின் வராக அவதாரமும் அன்னை அரசாலை(வராகி)யே!

1.காசி
2.திருவிடந்தை(சென்னையில் இருந்து மகாபலிபுரம் செல்லும் சாலையில் 45 வது கி.மீ.தொலைவில்) அருள்மிகு லட்சுமி வராகப் பெருமாள்+கோமளவல்லித் தாயார் ஆலயம்
3.அரியலூர் ஆலந்துறையார் ஆலயம்(இங்குள்ள போர்க்காளி அன்னை அரசாலையே!)
4.செங்கண்மால் அருள்மிகு செங்கண்மாலீஸ்வரர்+பெரிய நாயகி( சென்னையில் இருந்து திருப்போரூர் செல்லும் வழியில் கேளம்பாக்கத்தை அடுத்துள்ளது)
5.திருப்பன்றிக்கோடு,கன்னியாக்குமரி மாவட்டம்
6.அரித்துவாரமங்கலம் அருள்மிகு பாதாளவரதர்+அலங்காரவல்லித் தாயார்
7.குளித்தலை அருள்மிகு கடம்பவனேஸ்வரர்+பாலகுஜாம்பாள்(கடம்பவன நாதர்+மற்றிலா முலையாள்)
8.தஞ்சை பிரகதீஸ்வரர்(அன்னையின் பெயர் பிருகத் வராகி)
9.உத்திரகோசமங்கை(ராமநாதபுரம் மாவட்டம்)
10.பள்ளூர் அரசாலை(காஞ்சிபுரம் டூ அரக்கோணம் சாலையில் 15 வது கி.மீ.)
11.அண்ணாமலை(அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன்)
12.காளஹஸ்தி அருள்மிகு காளஹஸ்திநாதர் என்ற குடுமிநாதர்
13.ஸ்ரீமுஷ்ணம் அருள்மிகு ஸ்ரீவராகப் பெருமாள் ஆலயத்தில் பூவராகர்!
14.திருமலை திருப்பதியில் ஆதிவராகர்
15.ஸ்ரீவில்லிபுத்தூர் அருள்மிகு வைத்தியநா
தசுவாமி+சிவகாமி அம்பாள்
16.காஞ்சிபுரம் அன்னை சன்னதிகள் அனைத்தும்
17.கும்பகோணம் அன்னை சன்னதிகள் அனைத்தும்
18.திருச்சி திருஆனைக்கா அகிலாண்டேசுவரி
19.பழைய சமயபுரம்
20.இருக்கன் குடி
21.கன்னியாக்குமரி அம்மன் கோவில்

இந்த ஆலயங்களில் சிவம் அல்லது பெருமாள் சன்னதியின் முன்பாக 15 நிமிடமும்,அம்பாள்/தாயாரின் சன்னதி முன்பாக 15 நிமிடமும் தினமும் ஜபிக்க வேண்டும்;செல் போனை இந்த சமயத்தில் அணைத்து வைக்கவும்;



வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

செல்வ வளத்தை அள்ளித் தரும் ஸ்ரீஅரசாலை(சொர்ண வராகி) வழிபாடு!!!


தொடர்ந்து 27 பவுர்ணமி நாட்களில் இரவு 7 மணி முதல் 8 மணி வரை அல்லது இரவு 9 மணி முதல் 10 மணி வரை ஸ்ரீஅரசாலையை வழிபட்டால்,மகத்தான செல்வ வளம் நம்மைத் தேடி வரும் என்பதை எமது குருவின் உபதேசத்தின் பெயரில் உங்களுக்குத் தெரிவிக்கின்றோம்;

நம்மில் பலர் தினசரி அன்னை அரசாலையின் 12 பெயர்களை ஜபித்து வருகிறோம் அல்லவா?

அவர்கள் அனைவருமே 16 தேய்பிறை பஞ்சமி நாட்களில் இரவு ஒரு மணிநேரம் தொடர்ந்து இந்த 12 பெயர்களை வீட்டில் அல்லது அருகில் இருக்கும் ஆலயத்தில் ஜபித்து வரலாம்;ஆரம்பநிலையில் இருப்பவர்களுக்கு இந்த 12 பெயர் ஜபமே செல்வ வளத்தை,வேலை வாய்ப்பைத் தந்துவிடும்;

சிலருக்கு திருமணத் தடை இருக்கும்;அது நீங்கிவிடும்;
சிலருக்கு வராக்கடன் இருக்கும்;அது திரும்பக் கிடைத்துவிடும்;
சிலருக்கு ஊரெல்லாம் கடன் வாங்கியிருப்பர்;அவர்களுக்கு அந்தக் கடன் களை தீர்க்கும் சந்தர்ப்பம் அமையத் துவங்கும்;
சிலருக்கு திருமணம் ஆகி,பல ஆண்டுகள் ஆகியிருக்கும்;ஆனால்,குழந்தை இல்லையே? என்ற ஏக்கம் இருக்கும்;அன்னை அரசாலை(வராகி)யின் 12பெயர்களை ஜபிக்க ஆரம்பித்ததும்,அந்த குறை நீங்கியிருக்கும்;
குறைந்த பட்சம் 108 நாட்கள் தொடர்ந்து ஜபித்திருந்தால் இவைகளெல்லாம் நடைபெற்றிருக்கும்;

சிலருக்கு 200 நாட்கள்,300 நாட்கள் ஆகியிருந்தாலும் ஒன்றுமே நடக்காமல் விரக்தி மனப்பான்மைக்குத் தள்ளியிருக்கும்;அவர்கள் ஜாதகப்படி கடுமையான கர்மவினைகள் இருக்கின்றன என்று புரிந்து கொள்ளலாம்;

அப்படிப் பட்டவர்கள் தினமும் அன்னை அரசாலையின் 12 பெயர்களை தொடர்ந்து ஜபித்து வரவேண்டும்;மேலும்,ஒவ்வொரு தேய்பிறை பஞ்சமி இரவிலும் ஒருமணி நேரம் வீட்டில் அல்லது அருகில் இருக்கும் ஆலயத்தில் ஜபிக்க வேண்டும்;

கூடவே,ஒவ்வொரு பவுர்ணமி இரவன்றும் அன்னையின் 12 பெயர்களை ஒரு மணி நேரம் ஜபிக்க வேண்டும்;

தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு தவிர்த்து உலகின் பல ஆலயங்கள்,மடங்கள்,ஆசிரமங்கள்,சத்சங்கங்களில் பவுர்ணமி பூஜை நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன;அங்கே ஒரு மணி நேரம் அன்னை அரசாலை(வரா
கி)யின் 12பெயர்களை ஜபிப்பது நன்று;

தொடர்ந்து 27 பவுர்ணமி இரவுகள் இப்படி அன்னை அரசாலை(வராகி)யை வழிபட வேண்டும்;இதில் முதல் 9 பவுர்ணமிகள் வழிபாடு செய்துகொண்டிருக்கும் போதே,எம்மை நேரில் சந்திப்பது அவசியம்;அதன் மூலமாக ஸ்ரீசொர்ண வராகி வழிபாட்டுமுறையை தங்களுக்கு போதிக்கும் சந்தர்ப்பத்தை அன்னை அரசாலை(வராகி) அருளுவாள்;தொலைதூரங்களில் இருப்பவர்கள் மின் அஞ்சல் மூலமாக தொடர்பு கொள்வது அவசியம்;

பவுர்ணமி நாட்களின் பட்டியல் இதோ:இந்த நாட்களின் இரவில் அன்னை அரசாலை(வராகி)யை வழிபடவும்:

24.12.2015 வியாழன்
23.1.2016 சனி
21.2.2016 ஞாயிறு இரவு 11.5 முதல் 22.2.2016 திங்கள் இரவு 11.57 வரை;
22.3.2016 செவ்வாய்
21.4.2016 வியாழன்
20.5.2016 வெள்ளி நள்ளிரவு 1.33 முதல் 21.5.2016 சனி பின்னிரவு(ஞாயிறு விடிகாலை)3.17 வரை;
18.6.2016 சனி
19.7.2016 செவ்வாய்
16.8.2016 செவ்வாய்
15.9.2016 வியாழன் வியாழன் இரவு 2.58 முதல் 16.9.2016 வெள்ளி இரவு 1.16 வரை;
14.10.2016 வெள்ளி
13.11.2016 ஞாயிறு
12.12.2016 திங்கள்
10.1.2017 செவ்வாய்
9.2.2017 வியாழன்
11.3.2017 சனி
9.4.2017 ஞாயிறு
இதில் 17 பௌர்ணமிகளைக் குறிப்பிட்டிருக்கின்றோம்;அடுத்த பவுர்ணமி நாட்களை டிசம்பர் 2016 இல் வெளியிடுவோம்;

இனி எப்போதும் மனிதப் பிறவி வேண்டாம் என்ற நோக்கத்தில் தான் நம்மில் பலர் இங்கே பிறந்திருக்கின்றோம்;ஆனால்,அந்த நோக்கத்தை நோக்கிச் செல்லவிடாமல் நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த கர்மாக்கள் தடுக்கின்றன;இது புரியாமல் நம்மில் பலர் இறைசக்தியை திட்டிக்கொண்டும்,சபித்துக் கொண்டும் இருக்கின்றோம்;இப்படி செய்யலாமா?

பதிலாக,பிறப்பற்ற முக்தியை அடைய முதலில் நாம் ஒவ்வொருவரும் பொருளாதாரத் தன்னிறைவை எட்டுவோம்;அப்படி எட்டுவதற்கு குறைந்த பட்சம் 3 ஆண்டுகளும்,அதிகபட்சம் சிலபல ஆண்டுகளும் ஆகும்;அதன் பிறகு இறைசக்தியுடன் கலப்பதற்குரிய சூட்சும வழிமுறைகள் நம்மைத் தேடிவரும்;

அன்னை அரசாலை(வராகி)யின் கருணைக்குப் பாத்திரமானால் இவை அனைத்தும் நடைபெற்றே தீரும்;

இந்த பவுர்ணமியில் இருந்தே அன்னை அரசாலையை வழிபடத் துவங்குவோம்!


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்!!!

Tuesday, December 22, 2015

அன்னை அரசாலை(வராகி)யைச் சரணடையும் வழிமுறை


தினமும் காலை(4.30 முதல் 6 மணி என்றே இதுவரை எழுதியிருந்தோம்;குளிர்காலம் துவங்கிவிட்டது அல்லவா?ஏப்ரல் 14 வரை 5 முதல் 7 மணி வரை) 15 நிமிடம் அன்னையின் 12 பெயர்களை ஜபிக்க வேண்டும்;

இரவில் அதே போல 15 நிமிடம் அன்னை அரசாலை(வராகி)யின் பெயரை ஜபிக்க வேண்டும்;முதல் 30 நாட்கள் மட்டும் தான் 15 நிமிடம் ஜபிக்க வேண்டும்;

31 வது நாளில் இருந்து 60 வது நாள் வரை தினமும் காலையில் 30 நிமிடமும்;இரவில் 30 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;

61 வது நாளில் இருந்து 90 வது நாள் வரை காலையில் 45 நிமிடமும்;இரவில் 45 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;

91 வது நாளில் இருந்து (ஜபிக்க ஆரம்பித்த நாளில் இருந்து=கணக்கிற்கு) 3 ஆம் ஆண்டு வரையிலும் தினமும் காலையில் 1 மணி நேரமும்;இரவில் 1 மணி நேரமும் அன்னை அரசாலை(வராகி)யின் 12 பெயர்களை ஜபித்து வர வேண்டும்;


இப்படி ஜபிக்கத் தேவையான தகுதிகள்:
1.அசைவம்,மது அறவே தவிர்க்க வேண்டும்;மீன்,முட்டை,முட்டை உணவுகள்,புரோட்டா இவைகளும் முழு அசைவமே!
2.வயது 18 நிரம்பியிருக்க வேண்டும்;
3.இந்த மந்திர ஜபத்தை எவ்வளவுக்கு எவ்வளவு ரகசியமாக தினமும் ஜபிக்கிறீர்களோ,அவ்வளவுக்கு அவ்வளவு அளவற்ற நன்மைகள் தங்களைத் தேடி ஓடி வரும்;
4.இந்த மந்திர ஜபத்திற்கு குரு உபதேசம் அவசியம் இல்லை;



அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)

ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமயசங்கேதா
வராகீ
போத்ரிணீ
சிவை
வார்த்தாளீ
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

இவைகளே அன்னை அரசாலை(வராகி)யின் 12 பெயர்கள்!


அன்னை அரசாலை(வராகி)யே நமது பாரதமாதா என்பது நம்மில் பெரும்பாலானவர்களுக்குத் தெரியாத ரகசியம்!!!

ஏன் இலவசமாக ஜோதிடப்பலன் கள் சொல்லக் கூடாது தெரியுமா?


கலையை காசாக்கத் தெரியாதவர்களுக்கு,தட்சிணா தேவியின் சாபம் பீடிக்கும்;
செருப்பு தைப்பது ஒரு கலை;
முடிவெட்டுவது ஒரு கலை;
விவசாய நிலத்தில் களை எடுப்பதும் ஒரு கலை;(நீங்களோ,நானோ களை எடுத்துக்க மாட்டோம்)
சைக்கிளுக்கு பஞ்சர் பார்ப்பதும் ஒரு கலை;
இளநீர் சீவித்தருவதும் ஒரு கலை;
கூட்டம் கூட்டுவது ஒரு கலை;
கோவிலில் பூஜை செய்வதும் ஒரு கலை;
கோவிலில் அல்லது வீட்டுப் பூஜையறையில் பாடுவது ஒரு கலை;
பாட்டு இயற்றுவது(எழுதுவது) ஒரு கலை;
கதை சொல்வது ஒரு கலை;(இந்தக் கலையின் தாயகம் நமது தமிழ்நாடுதான்!)
அதே போல ஜோதிடம் கணித்து எதிர்காலம் சொல்வதும் ஒரு கலை;
கலையை காசாக்கத் தெரியாதவர்கள்(ஜோதிடம் பார்ப்பதும் ஒரு தொழிலே!) தட்சிணைக்குரிய சக்தியாகிய தட்சிணாதேவியின் சாபத்திற்கு ஆளாவார்கள்;இதனால் அடுத்து வரும் பிறவிகளில் ஜோதிடத்தில் பிரபலம் ஆக முடியாது;ஆனால்,அதில் பிறரைவிடவும் ரொம்ப திறமைசாலியாக இருப்பார்கள்;அதை வெளிப்படுத்திட சந்தர்ப்பம் கிடைக்காது;

இதற்குப் பரிகாரம் என்னவெனில்,இப்பிறவியில் ஒரு ஜாதகம் பார்த்தாலும் அதற்கு தட்சிணை வாங்குவது மட்டுமே!

திருவனந்தபுரத்தில் ஒரு அம்மையார் வாழ்ந்துவந்தார்;அவருக்கு அவரது 37 ஆம் வயதில் ஒரு மகானின் ஆசி(அவரது ஜாதகப்படி) கிடைத்தது;அந்த ஆசியால் அருள்வாக்கு சொல்லும் ஆற்றல் உருவானது;எதிர்காலத்தில் நடக்க இருக்கும் சம்பவங்களை துல்லியமாக சொல்லும் திறன் உருவானது;இதை எப்படி குறுகிய காலத்தில் பிரபலப்படுத்த?

ஒரு மாதம் மட்டும் இலவசமாக அருள்வாக்கு சொல்ல முடிவெடுத்தார்;

ஆனால்,பொதுமக்களின் மனோபாவம் வெறும் 16 நாளுடன் இலவசமாக பார்க்கும் ஆர்வத்தையே பொசுக்கிவிட்டது;
ஆமாம்! இலவசம் என்பதால் ஒரு அம்மையாரிடம் கேட்கக் கூடாத தமது அந்தரங்க சந்தேகங்களுக்கு விடை தேட ஆரம்பித்துவிட்டனர்;

எனவே,ஜாதகம் பார்ப்பதற்கு கண்டிப்பாக தட்சிணை வாங்குவது அவசியம்;

இப்படிக்கு

27 வருட ஜோதிட ஆராய்ச்சியாளர்;ஜோதிடப் பயிற்சியாளர்,ஜோதிட எழுத்தாளர்,கலையுலக ஜோதிடர் கை.வீரமுனி . . .ஸ்ரீவில்லிபுத்தூர். 9092116990  9364231011

Monday, December 21, 2015

பலபிறவிக் கர்மாக்களை அழிக்கும் அன்னைஅரசாலை(வராகி) வழிபாடு!


யாரெல்லாம் இப்பிறவி முழுவதும் வயதுக்குரிய மெச்சூரிட்டி இல்லையோ,அவர்கள் அனைவருமே 84,00,000 பிறவிகள் எடுத்துவிட்டு இப்பிறவியில் மனிதராகப் பிறந்துள்ளார்கள் என்று அர்த்தம்;

பல முறை மனிதப் பிறவி எடுத்தவர்களே ஜோதிடர்களாக,பிரபல தொழிலதிபர்களாக,சக மனிதர்களை பார்த்தவுடனே புரிந்துகொள்ளும் திறனுள்ளவர்களாக (திரைப்பட இயக்குநர்,பஞ்சாயத்து போருட் தலைவர்,அரசியல் கட்சியில் முக்கியப் பதவி,வங்கி அதிகாரி,காவல்துறை அதிகாரி,கோடிகளைக் கொண்டு வியாபாரம் செய்பவர்கள்,ஜவுளிக்கடை விற்பனையாளர்,கள்ளக் கடத்தல் தலைவர்கள்,மருத்துவர்கள்,பேருந்து ஓட்டுனர்கள்,ஆசிரியர்கள்,உடற்பயிற்சி ஆசான்கள்,யோகா மாஸ்டர்கள்,ரெய்கி மாஸ்டர்கள்,பெட்டிக்கடை நடத்துபவர்கள்,கோவில் பூசாரிகள்) இருக்கின்றார்கள்:இதை நீங்கள் நம்பாவிட்டாலும்,உண்மைகள் எப்போதுமே உண்மைகள் தான்!

விநாயகர் உபாசனை,முருக உபாசனை,சிவ உபாசனை,ஆஞ்சனேய உபாசனை,ஹயக்ரீவர் உபாசனை,குபேர உபாசனை,லக்ஷ்மீ நரசிம்மர் உபாசனை,பைரவ உபாசனை,காளி உபாசனை,நீல சரஸ்வதி உபாசனை,துர்கை உபாசனை,நவக்கிரக உபாசனை,சித்தர்கள் உபாசனை,துறவிகள் உபாசனை,மகான் உபாசனை,பிரம்மா உபாசனை,குலதெய்வ உபாசனை என்று எத்தனை இருந்தாலும், மீண்டும் இந்த பூமியில் பிறக்காமல் இருக்க வேண்டும் என்ற முடிவுக்கு யார் வருவார்கள் தெரியுமா?

ஸ்ரீவித்யா உபாசனை செய்பவர்கள் தான்!

அது எப்படி?

நம்மை நவக்கிரகங்கள் இயக்குகின்றன;நமது கடந்த ஐந்து பிறவிகளில் நாம் செய்த பாவ புண்ணியச் செயல்களுக்கு ஏற்ப யோகங்களையும்,அவமானங்களையும்,பணச் சிக்கல்களையும் அனுபவிக்கவே பிறந்திருக்கிறோம்;கஷ்டம் தாங்கமுடியாத போது கடவுளை கண்டமேனிக்குத் திட்டுகிறோம்;கடவுளுக்கு வேறு வேலையே கிடையாதா?(குணங்களைக் கடந்தவர் ஈசன்/கடவுள் என்று சொல்வது இதற்குத்தான்;அவருக்கு பழிவாங்குவது தெரியாது)
இந்த நவக்கிரகங்கள் பஞ்சபூதங்களின் குறிப்பிட்டச் சேர்க்கைகளால் செயல்படுகின்றன;

இந்த பஞ்சபூதங்களினை இயக்குவது பிரம்மா,விஷ்ணு,ருத்ரன் என்ற மும்மூர்த்திகளே!

இந்த மும்மூர்த்திகளுக்கு சக்தியளிப்பது இவர்களின் மனைவிகளான கலைவாணி,மகாலட்சுமி,ருத்ரி;
இவர்களுக்கும் மேலே இருப்பவர்கள் 11 ருத்ரர்கள்;
இவர்களையும் இயக்குபவர்கள் ஐந்து விதமான சிவபெருமான் கள்:

இவர்கள் அனைவரையும் கட்டுப்படுத்துவது அண்ணாமலையார்!!!
அண்ணாமலைக்கும் சக்தியளிப்பது தான் அன்னை அரசாலை என்ற வராகி!

வராகி யார் தெரியுமா?

உலகம்,உயிர்கள்,பிரபஞ்சம் என்று அனைத்தையும் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ராஜராஜேஸ்வரி என்ற வாலை என்ற திரிபுரசுந்தரி என்ற மனோன்மணியின் படைத்தளபதி!

அன்னை அரசாலை என்பது வராகியின் 1000 பெயர்களில் ஒன்று;

அரசாலையை 10 வயது முதல் 100 வயது வரை யார் வேண்டுமானாலும் வழிபடலாம்;இரண்டு கட்டுப்பாடுகளை தொடர்ந்து பின்பற்றினால் வழிபாடு வெற்றிபெறும்;

முதல் கட்டுப்பாடு: அசைவம்(முட்டை,புரோட்டா மற்றும் அனைத்துவிதமான அசைவ உணவுகளும்) ஒரு போதும் சாப்பிடக் கூடாது;

இரண்டாவது கட்டுப்பாடு:இந்த வழிபாடு செய்வதை நமது வீட்டில் இருப்பவர்களிடம் மட்டும் தெரிவித்தால் போதும்;ஒரு போதும் பிறரிடம் காட்டிக் கொள்ளக் கூடாது;(ஏன் காட்டிக் கொள்ள கூடாது? இதற்கான விளக்கம் நாம் எப்போது நேரில் சந்திக்கிறோமோ அப்போது விவரிப்போம்)

நமது அன்னை அரசாலை(வராகி)யை வழிபட ஏற்ற நாள் எது?
ஒரு வருடத்தில் 365 நாட்களுமே ஏற்றதுதான்;

தினமும் காலை(அதிகாலை 4.30 முதல் 6க்குள்)யில் 15 நிமிடமும்,இரவில்(மாலை 6 மணிக்கு மேல் நள்ளிரவு 11 மணிக்குள்) 15 நிமிடமும் பின் வரும் 12 பெயர்களை ஜபிக்க வேண்டும்;



 பின்வரும் 12 பெயர்களை ஜபிக்க ஆரம்பிக்க வேண்டும்;ஒருபோதும் வாய்விட்டுச் சொல்லக்கூடாது;



அரசாலையின் அருளைப் பெற்றுத்தரும் வராகி சித்தரின் பெயருடன்(பெயரைச் சேர்த்தால் 13 பெயர்கள்!!!)


ஓம் ரீங் வாத்தியாரைய்யா வாத்தியாரைய்யா
பஞ்சமீ
தண்டநாதா
சங்கேதா
சமேஸ்வரீ
சமய சங்கேதா
வராகி
போத்ரிணி
சிவை
வார்த்தாளீ
மகாசேனா
ஆக்ஞாசக்ரேஸ்வரீ
அரிக்நீ

ஒரு மாதம் ஆனதும்,காலையில் 30 நிமிடமும்,இரவில் 30 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;
இரண்டு மாதம் ஆனதும் காலையில் 45 நிமிடமும்,இரவில் 45 நிமிடமும் ஜபிக்க வேண்டும்;
மூன்றாவது மாதம் ஆனதில் இருந்து நமது ஆயுள் முழுக்கவும் காலையில் ஒரு மணி நேரமும்,இரவில் ஒரு மணி நேரமும் ஜபிக்க வேண்டும்;

அன்னை அரசாலை(வராகி)யின் அருள் சீக்கிரம் கிட்டிட பின் வரும் நாட்களில்(தேய்பிறை பஞ்சமி இரவு) அதிக நேரம் ஜபிக்க வேண்டும்;அவ்வளவுதான்;

முதல் மாதம் முழுக்கவும் இருவேளை 15 நிமிடம் ஜபிப்பீர்கள் அல்லவா? இந்த நாளில் மட்டும் உங்களால் முடிந்தவரையிலும் 15 நிமிடத்தைவிடவும் அதிகமான நேரம் ஜபிக்க வேண்டும்;அதுவும் இரவில் மட்டும் தான் இப்படி ஜபிக்க வேண்டும்;

எப்படி ஜபிக்க வேண்டும்?
வீட்டுப் பூஜை அறையில் மஞ்சள் துண்டு விரித்து(புதியதாக வாங்கிக் கொள்ளவும்)செம்புத் தட்டில் பச்சரிசியைப்பரப்பி அதன் மீது 2 விளக்குகள் ஏற்ற வேண்டும்;இரண்டில் ஒன்றில் நெய் நிரப்பி,தாமரைத் தண்டுத் திரியாலும்,மற்றதில் இலுப்பை எண்ணெயில் பஞ்சுத்திரியாலும் விளக்குகள் கிழக்கு நோக்கி தீபம் ஏற்றிடவேண்டும்;

அன்னை அரசாலை(வராகி) வடக்கு நோக்கி இருப்பதாக கற்பனை செய்து கொள்ள வேண்டும்;

இந்த மன்மத ஆண்டின் தேய்பிறை பஞ்சமீ நாட்கள்;மற்றும் அடுத்த ஆண்டின்(துர்முகி) நாட்களும்!!!

29.12.2015 செவ்வாய்
28.1.2015 வியாழன்
27.2.2016 சனி
28.3.2016 திங்கள்
26.4.2016 செவ்வாய்
26.5.2016 வியாழன்
9.6.2016 வியாழன்
24.6.2016 வெள்ளி
24.7.2016 ஞாயிறு
22.8.2016 திங்கள்
20.9.2016 செவ்வாய்
19.10.2016 புதன்
18.11.2016 வெள்ளி
17.12.2016 சனி
16.1.2017 திங்கள்
15.2.2017 புதன்
16.3.2017 வியாழன் இரவு 12.58 முதல் 17.3.2017 வெள்ளி நள்ளிரவு 2.36 வரை(இந்த இரண்டு நாட்களிலும் இரவு நேரத்தில் ஜபிக்கலாம்;வியாழக்கிழமை இரவு 1 மணிக்குப் பிறகு ஜபிக்க வேண்டும்)

மற்ற நாட்களில் மாலை 6 மணிக்குப் பிறகு எப்போது உங்களுக்கு வசதியோ அப்போது இரவில் ஜபிக்கலாம்;

தொடர்ந்து அன்னை அரசாலை(வராகி)யை வழிபடுபவர்கள்,ஒருமுறை எம்மை நேரில் சந்திப்பது அவசியம்;

சரி! எப்போது இந்த வழிபாட்டை(ஜபத்தை) ஆரம்பிப்பது?
இன்றை விட சிறந்த நாள் உண்டா! இன்று இரவிலேயே ஆரம்பிக்கலாம்;

அன்னை அரசாலை(வராகி) அருள் புரிய காத்திருக்கிறாள்;அவளைச் சரணடைவோம்;அருள் பெறுவோம்;


தொடர்ந்து 16 தேய்பிறை பஞ்சமியில் வழிபட்டு நமது பிறவிகளின் எண்ணிக்கையையும்,இப்பிறவிகளின் கர்மாக்களையும் காணாமல் போகச் செய்வோம்;


வாழ்க பைரவ அறமுடன்;வளர்க வராகி அருளுடன்;